யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/1/17

10 ரூபாய் நாணயங்கள் எப்படி இருந்தாலும் செல்லபடியாகும் - ரிசர்வ் வங்கி

தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவித்துள்ளது.

டெல்லி: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 10 ரூபாய்
நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. அவை பல்வேறு வடிவங்களில் இருப்பதால் போலி நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாக ஒருவித அச்சம் பரவியது. இது குறித்து பலமுறை ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் பழையது, புதியது என எந்த வடிவத்தில் இருந்தாலும் செல்லும் என்று மீண்டும் அறிவித்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளைவிட நாணயங்கள் நீண்ட காலத்திற்குப் புழக்கத்திலிருக்கும் என்பதால் ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவை வெளியிடப்படுகின்றன. கடந்த 2010 ஜூலை 15 ஆம் தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் அந்த குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டன. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலிருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். மேலும் இத்தகைய நாணயங்கள் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.

எனவேபொதுமக்கள் இதுகுறித்து வரும் வதந்திகளை புறக்கணித்து, 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பெட்டிக்கடைகள், சிறு வியாபாரிகள் தான் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுத்து வருகின்றனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி அதிக அளவில் பத்து ரூபாய் நாணயங்களை மக்களுக்கு வழங்கியது. இப்போது அவற்றை செலவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருவதால் மீண்டும் மீண்டும் ரிசர்வ் வங்கி மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக