யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/1/17

பணம் எடுக்கும் கட்டுப்பாடு மார்ச்சில் நீக்கம்!

வங்கிகளிலும் ஏ.டி.எம்-களிலும் மக்கள் பணம் எடுப்பதற்கு விதிக்கப்படிருக்கும் கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாத இறுதியில்
தளர்த்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  நாட்டில் கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கள்ள நோட்டுகளை ஒழித்துக்கட்டவும் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாதவைகளாக பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டன. இந்நோட்டுகளை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, அவை அடிக்கடி மாற்றப்பட்டும் வந்தன.

கடைசியாக, ரிசர்வ் வங்கி விதித்திருந்த கட்டுப்பாட்டின்படி, ஒரு நாளைக்கு ஏ.டி.எம்-களிலிருந்து 10,000 ரூபாய் மட்டுமே அதிகபட்சமாக எடுக்க முடியும் என்று அறிவித்திருந்தது. முன்னதாக ஒரு நாளில் 2,500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்றும், பின்னர் இந்த வரம்பை 4,500 ரூபாயாக உயர்த்தியது என்பதும் நினைவுகூரத்தக்கது. மேலும், தற்போது ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.24,000 மட்டுமே எடுக்க இயலும்.


இந்நிலையில், பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா வங்கியின் நிர்வாக இயக்குநரான ஆர்.கே.குப்தா கூறுகையில், “என்னைப் பொருத்தவரையில் நோட்டுகள் எடுப்பதற்கான வரம்புகள் பிப்ரவரி மாத முடிவிலோ அல்லது மார்ச் மாத மத்தியிலோ நீக்கப்படும். இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக