யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/18

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடையை போல் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் சீருடை வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

 ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

 ஒன்றாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடையை ேபான்றே அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் சீருடை வழங்கப்படும்.தனியார் பங்களிப்பு நிதி மூலம் 122 பள்ளிகளில்ஸ்மார்ட்  வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.

புதிதாக தொடங்கப்பட உள்ளஎல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் ஆங்கில வழி கல்வி கற்றுத்தரப்படும்.  கோபி அருகே உள்ள கொளப்பலூரில் அரசு சார்பில் புதிய டெக்ஸ்டைல் பார்க் அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டப்படும். கோபி தொகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் 1,840 வீடு கட்டப்பட்டு வருகிறது. மேலும் 2,800 வீடு  கட்ட ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக