யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/3/17

லஞ்சம் வாங்கினால் பணி நீக்கம்; கேரள அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

திருவனந்தபுரம் : 'லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கேரள
அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. அரசு துறைகளில், லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு உள்ளதாக, அம் மாநில உள்துறை அமைச்சர் ஜலீல் கூறினார்.

அவர்கூறியதாவது: மக்களுக்கு இலவச சேவை செய்வதாக, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கருதுகின்றனர். மக்கள் அளிக்கும் வரிப் பணத்தில், சம்பளம் பெறுபவர்கள் தான் அவர்கள் என்பதை மறந்து விடுகின்றனர்.

அதனால் தான், வேலை பார்ப்பதற்கு லஞ்சம் கேட்கின்றனர்; இதை ஒழிப்பது தான் அரசின் லட்சியம். லஞ்ச ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்து கண்துடைப்பு ஏற்படுத்தும் முறை மீது நம்பிக்கை இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனே பணியில் இருந்து நீக்கிவிட முடிவு செய்துள்ளோம்.


அரசுஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஜாதி மற்றும் மதம் தடையாக இருக்காது. இதை எல்லாம் முன்வைத்து, குற்றவாளிகளை காப்பாற்ற நினைத்தால், அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக