யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/9/17

பாதுகாப்பு வேண்டும்: பிரதமருக்கு மாணவிகள் கடிதம்!!!

பல்கலை வளாகத்துக்குள் பாதுகாப்பு வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பனாரஸ் 
இந்து பல்கலைக்கழகத்தின் மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதைக் கண்டித்து கடந்த 23ஆம் தேதி பிரதமர் மோடி வாரணாசிக்குச் சென்றிருந்தபோது பாதுகாப்பு இல்லை எனக் கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமான மாணவ - மாணவியர் காயம் அடைந்தனர். மேலும் சில மாணவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு வேண்டி மாணவிகள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதாவது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் பேச வாய்ப்பு, பெண்களுக்குப் பாதுகாப்பு, நிர்வாகத்தின் ஆதரவு, ஆண் பெண் சமத்துவம் ஆகிய அடிப்படைத் தேவைகள்தான் எங்களுக்கு வேண்டும். ஆனால், அது தவிர பெண்கள்மீது லத்தி - சார்ஜ், கண்ணீர்ப்புகை மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசுதல், பல்கலைக்கழக வளாகத்தை எரித்தல் மற்றும் 144ஆவது பிரிவுகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை நடைபெறுகிறது. இதை எதையும் நாங்கள் விரும்பவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “நாங்கள் எங்கள் துணைவேந்தரிடம் பேச விரும்புகிறோம். அவரிடம் பேச இரு நாள்களாகச் சாலையில் அமர்ந்திருக்கிறோம். ஆனால், அவர் எங்களிடம் பேச தயாராக இல்லை என்று தெரிகிறது. மோடி ஜி இதுபற்றி உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூட நினைக்க முடியாது. ஏனெனில் சம்பவத்தின்போது நீங்கள் உங்கள் தொகுதியில் இருந்துள்ளீர்கள். இந்தச் சம்பவம் உங்கள் கவனத்துக்கு வரவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ஒரு மாணவி தெரிவித்திருக்கிறார்.

“எங்களுடைய கோரிக்கை எளிமை மற்றும் நேரடியானது. அதாவது துணைவேந்தர் எங்களைச் சந்தித்து பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உறுதியளித்திருந்தால் எதிர் நடவடிக்கைகள் தேவைப்பட்டிருக்காது. நாங்கள் பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்திருக்கிறோம், வன்முறையைச் சந்திக்க அல்ல” என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக