யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/11/18

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் 9 கருணை மதிப்பெண் வழங்க வல்லுநர் குழுவுக்கு உத்தரவு

TNPSC குரூப் 2 தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள்! தவறை ஒப்புக்கொண்டது
கடந்த 11ம் தேதி தமிழகம் முழுவதும் 6 லட்சம் மாணவர்கள் எழுதிய குரூப் 2 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு வினாத்தாளில் தவறான விடைகள் இருப்பதாக புகார் எழுந்தது. தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடைகள் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

இதனை அடுத்து ஆறு கேள்விகளுக்கும் 9 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டியும் என கோரிக்கை எழுந்திருந்தது. TNPSC இது எங்கள் தவறு இல்லை என்றும் வினாத்தாள் தயாரித்த வல்லுநர் குழுவின் தவறு எனவும் கூறி வந்தது.

இந்நிலையில் ஆறு கேள்விகளுக்கும் 9 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்ணாக வழங்க வல்லுநர் குழுவிற்கு TNPSC உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக