யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/1/17

TNPSC., உறுப்பின நியமன ரத்து : உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள், 11 பேர் நியமனம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. பதவி இழந்த, 11 பேரும், மேல்முறையீடு செய்துள்ளனர்.
இம்மனுக்கள், நாளை, தலைமை நீதிபதி அடங்கிய, 'பெஞ்ச்' முன், விசாரணைக்கு வருகின்றன.

டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக, 11 பேரை நியமித்து, தமிழக அரசு, 2016 ஜனவரியில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - எம்.பி.,யான இளங்கோவன், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை தலைவர், வழக்கறிஞர் கே.பாலு, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' 11 பேரது நியமனங்களையும் ரத்து செய்து, 2016 டிச., 22ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது; 11 பேரும், தனித்தனியாகவும் மேல்முறையீடு செய்துள்ளனர்.


மனு : இம்மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர், நீதிபதிகள் ரமணா, சந்திரசூட் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நாளை விசாரணைக்கு வருகின்றன. இளங்கோவன் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகிறார். தமிழக அரசு தரப்பிலும், 11 பேர் சார்பிலும், டில்லி மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்ய, உயர் நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரவரம்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள, இந்த பதவி யில் நியமிக்கப்பட்டவர்களை, ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி தான் நீக்க முடியும் என, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக, சட்டத்தில் எந்த விதிமுறையும் இல்லாத போது, விண்ணப்பங்களை வரவழைத்து தான் நியமிக்க வேண்டும் என்ற நடைமுறை தேவையா; மாவட்ட நீதிபதியாக இருந்தவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்பதற்காக, அவர் தகுதியற்றவராக அல்லது வேறு பதவிக்கு பொருத்தமற்ற

வராகி விடுவாரா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.


'நோட்டீஸ்' : தற்போது, உறுப்பினர்கள் பதவி பெருமளவு காலியாக இருப்பதால், தேர்வாணையத்தின் செயல்பாடு, தேர்வு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும் என, கோரப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்படுமா; உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்படுமா என்பது நாளை தெரிய வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக