யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/1/17

அண்ணாமலை பல்கலையில் சும்மா இருக்கும் 1,080 பேர்

அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், அண்ணாமலை பல்கலையில், 1,080 பேராசிரியர்கள் வேலையே இல்லாமல், சம்பளம் பெறுவதாகவும், அதனால், மாதம், 20 கோடி ரூபாய் வீணாவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலை, 2013 முதல், தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கே சம்பளம் வழங்க முடியாமல், நிதி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அரசின் நிதியில் நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய நிலையில், மாதம் தோறும், 50 கோடி ரூபாய் வரை, பேராசிரியர் கள், ஊழியர்கள் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, கூடுதலாக இருந்த பேராசிரியர்கள், 367 பேர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், பல்கலையின் பல்வேறு துறைகளில், 1,080 பேராசிரியர்கள் கூடுதலாக, வேலையின்றி இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல், பல்கலையின் பல்வேறு துறைகள் மற்றும் கல்லுாரிகளில், 4,722 ஊழியர்கள், கூடுதலாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களுக்காக, மாதம் தோறும், 19.52 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் தலைமையிலான குழு, ஆய்வு நடத்தி வருகிறது. விரைவில், சும்மா இருக்கும் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர், மற்ற கல்லுாரிகளுக்கு மாற்றப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக