யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/9/16

CCE - GRADE FORM

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழையதிட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர்சங்கங்கள் வலியுறுத்தல்.

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் நேற்று பிற்பகல் சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. 
குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சாந்தா ஷீலா நாயர் கூட்டத்துக்குதலைமை வகித்தார். தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.தலைமை செயலக ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடுஅரசு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் தலா மூன்று நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும் தனித்தனியாக அழைக்கப்பட்டு அவர்களின்கருத்துக்களை குழு தலைவர் சாந்தா ஷீலா நாயர் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் பற்றி தலைமை செயலக சங்க தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி, ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஓய்வூதியம் முக்கியமானது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த பாதுகாப்பும் இல்லை.மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் 1-4-2003 முதல் பழைய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 2004ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோன்று, மாநில அரசும் 10 சதவீதம் தனது பங்காக ஓய்வூதிய நிதிக்கு அளிக்கும். இந்த நிதி பங்கு சந்தையில் முதலீடு செய்து, அந்த முதலீடுகளில் கிடைக்கும் வருவாயில் பணியாளர்கள் ஓய்வுபெறும்போது, அவர்களுக்கு பங்குகளின் நிதி நிலைமைக்கேற்ப ஓய்வூதியம் வழங்குதுதான் புதிய ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டம் முற்றிலும் அரசு ஊழியர்களுக்கு எதிரானது ஆகும். மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமேஇந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் இது அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது. பிடிக்கும் பணம் பங்கு மார்க்கெட்டில் போடப்படுவதால் பணத்துக்கு பாதுகாப்பு கிடையாது. தேவையானபோது பணத்தை எடுக்க முடியாது. கடந்த 12 ஆண்டுகளில், பணியில் இருந்தபோது இறந்தவர்கள் ஒருவருக்கு கூட போட்ட பணம் திரும்ப கிடைக்கவில்லை. அதனால், புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பழைய ஓய்வூதியம் சாத்தியமில்லை வல்லுநர் குழுவினர் கைவிரிப்பு?

2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், இதனால் எந்த பலனும் இல்லை, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று 12 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதையடுத்து, தற்போது வல்லுநர் குழு அமைத்து, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் தமிழக அரசு நேற்று ஆலோசனை கேட்டது. 10க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தனித்தனியாக வல்லுநர் குழுவினரை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

வல்லுநர் குழுவினர் தெரிவித்த கருத்து குறித்து சில அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “நாங்கள் சொன்ன கருத்தை வல்லுநர் குழுவினர் கேட்டுக் கொண்டனர். அரசு தரப்பில் கூறும்போது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் தமிழக அரசுக்கு வரி உள்படகிடைக்கும் அனைத்து வருவாயையும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மக்களுக்கு எந்த திட்டத்தையும் செய்ய முடியாது. அதனால் அதிகபட்சமாக தமிழக அரசால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் அரசு ஊழியர்களுக்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதாக தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டுக்கான ‘சென்டா ஒலிம்பியாட்’ போட்டி - விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்.

ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையிலான ‘சென்டா ஒலிம்பியாட்’ போட்டி நாடு முழுவதும் 22 நகரங்களில் டிசம்பர் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளது. போட்டிகளை ‘தி இந்து’ நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் இணைந்து வழங்குகின்றன.
இதுகுறித்து சென்டர் ஃபார் டீச்சர் அக்ரெடியேஷன் (சென்டா) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரம்யா கூறியதாவது:5,000-க்கும் மேற்பட்டோர்..‘சென்டா டீச்சிங் புரொஃபஷ் னல்ஸ் ஒலிம்பியாட்- 2016’ என்பது ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான போட்டி. ஆசிரியர்களின் திறமையை வெளிப்படுத்தவும், மேம்படுத்த வும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 300 நகரங்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப் போட்டிகளில் கலந்துகொள்ள பதிவு செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, 2-வது ஆண்டாக நாடு முழுவதும் 22 நகரங்களில் வரும் டிசம்பர் 3-ம் தேதி 2016-ம் ஆண்டுக்கான போட்டிகள் நடக்க உள்ளன. போட்டிகளை ‘தி இந்து’ நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் போட்டி நடக்கும்.மொத்தம் 13 பிரிவுகளில் போட்டி நடைபெறும். இதில் ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை என தங்கள் விருப்பத்துக்கேற்ப ஆசிரியர்கள் போட்டிப் பாடப் பிரிவைதேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு துபாயில் 2017-ல் நடக்க உள்ள உலக கல்வி, திறன்மேம்பாட்டு மாநாட் டில் பங்கேற்க வார்கே அறக் கட்டளை சார்பில் வாய்ப்பு அளிக் கப்படும். ஒவ்வொரு மாநிலத்தி லும் முதலிடம் பெறுபவர்களின் விவரங்கள் ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகும். இதுதவிர, வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு சென்ட் ரல் ஸ்கொயர் அறக்கட்டளை சார்பில் வெளியாக உள்ள புத்தகத்தில் எழுதும் வாய்ப்பும், ஹெச்டி பாரேக் அறக்கட்டளை மூலம் 50 பேருக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு...
கணினி மூலம் போட்டி நடத்தப்படும். தேர்வு செய்துள்ள பாடம், பாடம் நடத்தும் விதம் உள்ளிட்டவை தொடர்பாக ‘ஆப்ஜெக்டிவ்’ வகை கேள்விகள் இடம்பெறும். போட்டி குறித்தகூடுதல் விவரங்கள், முன்பதிவு தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (www.tpo-india.org) தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

விடுமுறை அளித்த பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'

அரசின் அனுமதி பெறாமல், பள்ளிகளுக்கு தன்னிச்சையாக விடுமுறை அளித்த, தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப,பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.காவிரி பிரச்னை தொடர்பாக, நேற்று நடந்த முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு, சில தனியார் பள்ளிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர்.
அதனால், சேலம், நாமக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாகை போன்ற சில மாவட்டங்களில், தனியார் நர்சரி பள்ளிகள் செயல்படவில்லை.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற முக்கிய மாவட்டங்களில், பெரும்பாலான பள்ளி,கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு நடந்ததால், மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கின.

இந்நிலையில், தன்னிச்சையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த பள்ளி நிர்வாகத்தினருக்கும், சங்கத்தினருக்கும் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி: தமிழக அரசு அழைப்பு.

யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் உதவித் தொகையுடன் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

2016ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், முதன்மைத் தேர்வுக்காக மாணவர் / மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் எண். 163/1, பி.எஸ். குமாராசாமி ராஜா சாலை, சென்னை – 28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மூன்று அலுவலக வேலை நாட்களில் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று சேர்க்கை நடைபெறும். முதன்மை தேர்வுக்கான பயிற்சிக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மொத்தம் 225 (SC-92, SC(A)-18, ST-03, MBC-40, BC-54, BC(M)-07, DA-07 மற்றும் OC-04)மாணக்கர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ / மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பயிற்சி வகுப்புகள், மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பித்து முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் வரை நடைபெறும். பயிற்சிக் காலத்தில் கட்டணமில்லா விடுதி வசதி உண்டு, இப்பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000/- உதவித் தொகை தமிழக அரசால் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
முதல்வர்
அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம், சென்னை – 28.
தொலைபேசி எண் : 044 / 24261475

பழைய ஓய்வூதியத் திட்டமே மீண்டும் தேவை: நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென, தமிழக அரசின் நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை

பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான இந்த வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலகச் சங்கம் தனது கருத்தை முதலாவதாகப் பதிவு செய்தது.
சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் வெங்கடேசன், இணைச் செயலாளர் மோகனவள்ளி, இணைச் செயலாளர் ஹரி சங்கர், பொருளாளர் மகேந்திரன் தலைமையிலான குழு நிபுணர் குழுவிடம் மனு அளித்தது.
பல்வேறு பிரிவினரின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு ஒய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த நலத் திட்டங்களை எல்லாம் செயல்படுத்திவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஏற்கனவே பெற்று வந்த ஒய்வூதியத்தை, 1.4.2003 முதல் புதியதாகப் பணியில் சேர்பவர்களுக்கு வழங்க இயலாது என்பது முற்றிலும் சமூகப் பாதுகாப்பிற்கு எதிரானது. அரசு ஊழியருக்கு முற்றிலும் கேடு விளைவிக்கும் திட்டமான பங்களிப்புடன் கூடிய புதிய ஒய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஒய்வூதிய திட்டத்தினையே நடைமுறைப்படுத்த

வேண்டும் என்று தலைமைச் செயலக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளன.
வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கிய கருத்து கேட்புக் கூட்டம் மாலை 5.30 வரை நடைபெற்றது.

TRB: விரிவுரையாளர் பணிக்கு நாளை போட்டி எழுத்துத் தேர்வு.

ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (செப்.17) நடைபெற உள்ளது.
டிஆர்பி சார்பில், 
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள முதுநிலை, இளநிலை விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, சென்னை மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 2,443 பேர் பங்கேற்று தேர்வெழுத உள்ளனர்.
செல்லிடப்பேசி, மின்னணு கணக்கிடும் கருவி, மின்னணு கடிகாரம் ஆகிய சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு வர அனுமதி கிடையாது.
டிஆர்பி-யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டில் புகைப்படம் பதியவில்லையெனில், இணைப்புத்தாளில் புகைப்படம் ஒட்டி முழுமையாகப் பூர்த்தி செய்தோ அல்லது 2 புகைப்படங்களையோ எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே தேர்வர்கள் மையத்துக்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

17/9/16

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்க சில வழிகள்

சரணாலயங்கள் அமைந்துள்ள மாநிலங்கள்

கோள்கள் பற்றிய சில தகவல்கள1

கோடை காலத்தில் அதிகரிக்கும் எண்ணெய் பசை சருமத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது

கொய்யாப்பழம்

கைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்

கேழ்வரகு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

குடியரசு தலைவர்கள் பற்றிய சில தகவல்கள்

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள்

குடல் புண் _அல்சர்_

கல்வி என்றால் என்ன?

கம்யூனிஸ்ட்கள1

கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்