யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/1/18

NAS Test 2017 - Rank of District :

இடைநிலை ஆசிரியர்களுக்கான சிறப்பு படி CM cell:

CPS பிடித்தம் உள்ளவர்களுக்கு...! CPS AMOUNT TO INCOM TAX CALCULATION:

இந்த ஆண்டு CPS பிடித்தம் 50,000 க்கு மேலே இருந்தால், உதாரணமாக ரூ. 65,000 என வைத்துக் கொண்டால், ரூ. 50,000 CPS தொகையை80 CCD  ( 1 B )  பிரிவிலும்,மீதித் தொகை ரூ. 15,000/= ஐ80 C ( அதிக பட்ச சேமிப்பு ரூ. 1,50,000 ) பிரிவிலும்கழித்துக் கொள்ளலாம்.CPS பிடித்தம் உள்ளவர்களுக்கு...

INCOME TAX CALCULATION | 2017 - 2018 நிதியாண்டு வருமான வரி செய்திகள்:

ரூ 2,50,000 வரை வரி இல்லை

💥 ரூ 2,50,001 முதல் 5,00,000 வரை - 5%

💥 ரூ 5,00,001 முதல் 10,00,000 வரை - 20%  + ரூ12500

💥 அனைத்து பிரிவுகளில் உள்ள இனங்களை கழித்து பின்னர் வரும் ஆண்டு நிகர வரி வருமானம் (net taxable income) 3,50,000க்கு கீழ் இருந்தால் பிரிவு 87A கீழ் செலுத்த வேண்டிய வரியில் ரூ.2500 கழித்துக் கொள்ளலாம்.

💥 80C+ 80CCC+ 80CCD பிரிவுகளில் ரூ 1,50,000 வரை கழித்துக் கொள்ளலாம்

💥 80CCD (1B) படி CPS ரூ.50,000 வரை தனியாக கழித்துக் கொள்ளலாம்

💥 ( 80C 1,50,000 +CPS 50,000)

💥 1.4.1999,க்கு பிறகு பெறப்பட்ட வீட்டுகடன் வட்டி ரூ 2,00,000 கழித்துக் கொள்ளலாம்.

(18.01.2018 முதல் 25.01.2018 வரை -1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் புதிதாக மாணவர்களை விவரங்களை பதிவேற்ற இயலும்)


18/1/18

IGNOU -B.ED Entrance Test September 2017 Results published held on 24.09.2017

உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை தேசிய அளவைவிட தமிழகத்தில் அதிகம்.!!!

பிச்சைக்காரர்களைப் பிடித்துக் கொடுத்தால் ரூ 500 பரிசு என காவல்துறை அறிவிப்பு,

ஹைதராபாதில் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த தெலுங்கானா அரசு நடவடிக்கை எடுத்துவரும்
நிலையில், பிச்சைக்காரரைப் பிடித்துக் கொடுத்தால் 500 ரூபாய் பரிசு என காவல்துறை அறிவித்தது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் சிக்கியதால் சன்சல்குடா, சாரபள்ளி சிறைகள் நிரம்பி வழிகின்றன.*

*✍சிறையில் அவர்களை தனித்தனியே அடைத்து வைத்திருப்பதாகவும், பிச்சைக்காரர்களின் குடும்பத்தினர் தலையிட்டு சிலரை விடுவித்துச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.*

*✍இரண்டாவது முறையாக பிச்சைக்காரர்கள் சிக்கினால் அவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்று எச்சரித்து போலீசார் பலரை விரட்டி விடுகின்றனர். ஆரோக்கியத்துடன் உள்ள பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*

ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறை ஒரு நாள் பயிற்சி!!!

தமிழகத்தில், ஐந்தாம் வகுப்புக்கு, எளிய படைப்பாற்றல்கல்வி முறை, ஆறு முதல், 
எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில், பாடங்கள் வரைபடம் வாயிலாக, கற்பிக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், படைப்பாற்றல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி வழங்க, அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, ஒரே கட்டமாகவும், ஆறு முதல் எட்டு வரையிலான ஆசிரியர்களுக்கு, இரு கட்டங்களாகவும் பயிற்சி நடத்தப்படுகிறது.

இதை, ஜன., 25க்குள் நடத்தி முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி சுற்றுலாவுக்குகட்டுப்பாடு விதிப்பு!!

உயரதிகாரிகளின் முன்அனுமதியின்றி, ஆபத்தான இடங்களுக்கு
மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லக்கூடாது; விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,’ என, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், அரையாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில், ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களை, கல்வி சுற்றுலாஅழைத்து செல்வது வழக்கம்.ஒவ்வொரு ஆண்டும் இது வழக்கமாக நடைபெறும் என்ற போதும், மாணவர் பாதுகாப்பு கருதி, பல்வேறு உத்தரவுகளை கல்வித்துறை, அவ்வப்போது பிறப்பிக்கும்.சில தினங்களுக்கு முன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் மூலம் தலைமைஆசிரியருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,’பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் எனில், அந்த இடம், நாட்கள் உள்ளிட்ட விவரங்களை, உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, அனுமதி பெற வேண்டும்.

குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கும், இடம் பற்றி முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாணவியரை, பெண் ஆசிரியர்களுடன் அழைத்து செல்ல வேண்டும். ஆபத்தான, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்லக்கூடாது,’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 9 துணை கலெக்டர்கள் மாற்றம்!!!

நாடு முழுவதும் வாகனங்களில் ஏப்ரல் 1 முதல் ஜி.பி.எஸ் கட்டாயம் : மத்திய அரசு

டெல்லி : நாடு முழுவதும் பேருந்துகள், வாடகை கார்கள் உள்ளிட்ட
வாகனங்களில் ஏப்ரல் 1 முதல் ஜி.பி.எஸ் கட்டாயம் பொறுத்த வேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு!!

*நடந்து முடிந்த பார்லி. குளிர்கால கூட்டத்தொடரில்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளம் உயர்த்துவதற்கான மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இ்ந்நிலையில் நீதிபதிகளுக்கு இணையாக தலைமை தேர்தல் ஆணையர்களுக்கும் சம்பளம் உயர்த்துவதற்கான மசோதா வரும் 29-ம் தேதி பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் 10 லட்சம் பேருக்கு சிறப்பு பயிற்சி -அமைச்ர் செங்கோட்டையன் பேட்டி!!!

அலுவலகப் பணிக்கு செல்லும் ஆசிரியர்களால் அரசுப்பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிப்பு!!!

ஐடியா - வோடஃபோன் இணைந்து சேவை!!!

ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து வருகிற 
ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் சேவை வழங்கவுள்ளன.

இந்தியாவின் தொலைத் தொடர்புச் சந்தையில் ஏர்டெலைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கும் வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்து சேவை வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நீண்ட காலமாகவே இருந்து வந்த நிலையில், இவ்விரு நிறுவனங்கள் இணைந்து ஏப்ரல் மாதம் முதல் சேவை வழங்கவுள்ளன. இவ்விரு நிறுவனங்கள் இணைந்து புதிதாக உருவாகும் நிறுவனமானது உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாகவும், இந்திய அளவில் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாகவும் திகழும். 4 கோடி வாடிக்கையாளர்களுடன், இந்தியாவின் நெட்வொர்க் வாடிக்கையாளர் சந்தையில் 35 சதவிகிதப் பங்கையும், வருவாய் அடிப்படையில் 41 சதவிகித சந்தைப் பங்கையும் இப்புதிய நிறுவனம் கொண்டிருக்கும்.

இந்த இணைப்பு நடவடிக்கைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. 2016 செப்டம்பர் மாதத்தில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நெட்வொர்க் நிறுவனம் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்த பிறகு கடுமையான போட்டி நிலவி வருகிறது. துவக்கத்தில் இலவசமாகவும் பின்னர் குறைந்த கட்டணத்திலும் டேட்டா உள்ளிட்ட சலுகைகளை ஜியோ வழங்கி வருவதால் அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஜியோவுக்குப் போட்டியாகப் பிற நிறுவனங்களும் கட்டணச் சலுகைகளை அறிவித்து வருவதால் அந்நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இச்சூழலைச் சமாளிக்கவே ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இணைய முடிவெடுத்தன என்பது நினைவுகூரத்தக்கது.

ராணுவக்கல்லூரியில் சேர மாணவர்களுக்கு வாய்ப்பு; மார்ச் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பில் சேர்வதற்கு (ஆண்கள் மட்டும்) வருகிற 31-3-2018க்குள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 1-1-2019 அன்று 11½ வயதுக்கு குறையாமலும் 13 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். அதாவது 2-1-2006க்கு முன்னரும் 1-7-2007க்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. மாணவர்கள் 1-1-2019ல் இக்கல்லூரியில் சேரும்போது 7-ம் வகுப்பு படிப்பவராக அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.


1-6-2018 அன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை ஆங்கில தேர்வும், அன்று பிற்பகல் 2 மணிமுதல் 3-30 மணி வரை கணித தேர்வும் நடைபெறும். 2-6-2018 அன்று காலை 10 மணிமுதல் 11 மணிவரை பொது அறிவு தேர்வு நடைபெறும். (மேற்கண்ட கணிதம் மற்றும் பொது அறிவு தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். எழுத்து தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு நேர்முக தேர்வு 4-10-2018 அன்று நடைபெறும். புதுச்சேரி மாணவர்களுக்கு தேர்வு மையம் குறித்த தகவல் இணை இயக்குனர் அலுவலக தேர்வு பிரிவால் அஞ்சல் வழி மூலம் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது www.ri-mc.gov.in என்ற வலைதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை புதுவை அண்ணா நகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்துக்கு வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மேற்கண்ட தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார்.

DEE - Swatch Bharath Mission - Sanitation - competition -reg Director Proceedings & Govt Letter:

அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:

அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பள்ளி வகுப்பறைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
முதல் கட்டமாக ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டிஜிட்டல் போர்டு நிறுவப்படும்.

இந்தத் திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூகநிதிப் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, பள்ளியின் ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் இடைநிற்றலைத் தடுப்பதற்காக, மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடைகள், பாடப் புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை தொடர்ந்து வழங்கப்படும்.

அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பான குடிநீர் வசதியும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்படும்.


அனைத்து மாணவர்களின் வருகையைப் பதிவுசெய்ய, பயோ மெட்ரிக் முறை கொண்டுவர ஆலோசனை நடைபெற்றது.


மாணவர்களின் கற்றல் முறையை எளிமைப்படுத்தவும், செயல்முறைக் கல்வியை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


தற்போது 9ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் தொழில்சார் கல்வி முறை, இனி ஆரம்பப் பள்ளி வகுப்பிலேயே அறிமுகப்படுத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


முக்கிய அறிவிப்பாக, அனைத்துப் பள்ளிகளிலும் பாலர் பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இடைநிற்றலைக் குறைக்க அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் விரைவில் ஆதார் கார்டு வழங்கப்படும் என மத்திய கல்வி ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி - நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017-ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 001062/எப்/ஜி/எச்/17 நாள்: 17.01.2018

இறுதி கற்பிப்பு மான்ய பட்டியல் சரிபார்த்தல்  நடைபெறும் நாட்கள்

23.01.2018 முதல் 25.01.2018 முடிய

29.01.2018 முதல்  31.01.2018 முடிய
மற்றும் 01.02.2018

மொத்தம் 7 நாட்கள்