யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/10/16

நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை கோரி ஆன்லைன் விண்ணப்பம்!

தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடுமப அட்டை கோரி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது விநியோகத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:


கடந்த சில வருடங்களாக புதிய குடும்ப அட்டைகள் வழங்க இயலாத நிலையில் உள்தாள் ஒட்டப்பட்டு பொருட்கள் வழங்கப் படுகின்றன.இவ்வாறு கால நீட்டிப்பு செய்யப் பட்ட குடும்ப அட்டை கள் மூலம் டிசம்பர் மாதம் வரை மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.

இனி கையடக்கமான புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்க அரசு திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரி மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்க அனைத்து ரேஷன் கடை களிலும் நவீன எலக்ட்ரானிக் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதற்குரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து விண் ணப்பிக்க வேண்டும்.

பொது விநியோகத்துறை அதிகாரிகள் வீடுகளில் கள ஆய்வு செய்து, புதிய குடும்ப அட்டை 2 மாதத்தில் வழங்கப்படும். குடும்ப அட்டை வழங்கும் போது ஒரிஜினல் சான்று கள் சேகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பான பணிகளும் இனி ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும்

டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி: ட்ராய் அறிவிப்பு.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி என்று, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.


ஜியோ வழங்கும் இலவச அழைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று, இந்திய தொலைத்தொடர்பு சேவை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ட்ராய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: - தொலைத்தொடர்புச் சேவை விதிமுறைகளை மீறும் வகையில் ஜியோ செயல்படுவதால், அதனை 90 நாள் சலுகை அறிவிப்பு என்ற காலத்தை கடந்து, அனுமதிக்க முடியாது.

ஜியோ நிறுவனம், தனது 4ஜி இலவச சேவைகளை நீட்டிப்பதற்கான பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், டிராய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

710 (210 BTs AND 500 PGs) POST PAY AUTHORIZATION




சி.பி.எஸ்.இ வகுத்துள்ள விதிகள் அனைத்தும் மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் ?

தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவர் நீதிபதி சிங்காரவேலு ஓய்வு பெற்று 10 மாதங்களாகியும் புதிய தலைவரை நியமிப்பதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. புதிய தலைவரை நியமிப்பதில் தாமதம் அரசு நிர்வாக முடக்கத்தையே உணர்த்துகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.


108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு அழைப்பு

பெரியார் மன்றத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு, பி.எஸ்ஸி நர்சிங், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் அல்லது செவிலியர் படிப்புகள், மருந்தாளுநர், பரிசோதனை நுட்புநர் உள்ளிட்ட படிப்புகளை முடித்த ஆண், பெண் இரு பாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.


எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், மனிதவளத் துறை நேர்முகம் ஆகியவற்றின்படி தேர்வு செய்யப்படுவோருக்கு 50 நாள்கள் முழுமையான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுப் படியாக ரூ. 100 வழங்கப்படும்.

ஓட்டுநர் பணியிடத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தவறியவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் 23 முதல் 35 வயதுக்கு மிகாத ஆண்கள் தேர்வு செய்யப்படுவர். 162.5 செ.மீ. உயரம், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தகுதிகளைக் கொண்டோர் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். மாத ஊதியம் ரூ. 11,100. தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றைக்கே பணிநியமன ஆணை வழங்கப்படும்.

முகாமில் பங்கேற்க வருவதற்கான படிகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 73974 44158, 73977 24804 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மீண்டும் போர்டு தேர்வு முறை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு, 2010ல் நீக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்துவது குறைந்துள்ளது.
அதே நேரத்தில், மாணவர்களின் கல்வித்திறன் குறைந்து வருவதாக பெற்றோரும், கல்வியாளர்களும் கூறி வந்தனர். இது தொடர்பாக, பல்வேறு தரப்பிடமிருந்து மத்திய அரசு கருத்து கேட்டது. '10ம் வகுப்புக்கு, பொது தேர்வை மீண்டும் அறிமுகம் செய்யலாம்' என, பலர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம், 25ல் டில்லியில் நடக்க உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த கூட்டத்துக்கு பின், 10ம் வகுப்புக்கு, பொது தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து, பிரகாஷ் ஜாவடேகர் அறிவிப்பார் என, எதிர் பார்க்கப்படுகிறது. வரும், 2018 முதல் பொதுத்தேர்வு நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிற வங்கி ஏ.டி.எம்., பயன்படுத்தாதீங்க!'

கோல்கட்டா: 'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு காரணம் கருதி, பிற வங்கி ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்' என, அந்த வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
வெளிநாட்டு மோசடி பேர்வழிகளின் கைவரிசையால், எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சில வங்கி வாடிக்கையாளர்களின், 'டெபிட்' கார்டுகளில் தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களின், 6.5 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மற்ற பொதுத் துறை வங்கிகளும், தங்கள், வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளை முடக்கி உள்ளன. அந்த வகையில், மொத்தம், 32 லட்சம் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, 'பின்' நம்பரை உடனடியாக மாற்றுமாறு, சில தனியார் வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எனினும், நாட்டில் பயன்பாட்டில் உள்ள மொத்த கார்டுகளில், 0.5 சதவீத கார்டுகளின் தகவல்கள் மட்டுமே திருடப்பட்டு உள்ளதாகவும், 99.5 சதவீத கார்டுகளின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், வங்கிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளன. இந்நிலையில், 'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பிற வங்கி, ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்; பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே, இந்த அறிவுரை வழங்கப்படுகிறது; வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்' என, அந்த வங்கியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மவுனம்! ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்தில் ஆர்.பி.ஐ. புலனாய்வு செய்யாததால் வாடிக்கையாளர்கள் கோபம்

சென்னை:பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த, 32 லட்சத்திற்கும் அதிகமான, ஏ.டி.எம்., கார்டு தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப் பட்டது குறித்து, ரிசர்வ் வங்கி மவுனம் காப்பது, 

வங்கி வாடிக்கையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம், சில வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் இருந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் பணம் எடுக்கப்பட்டதாக, புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் விசாரணை மேற்கொண்டது. 


அதில், யெஸ் பேங்கிற்கு, பணப் பட்டுவாடா சேவைகளை மேற்கொண்டு வரும், ஹிட்டாச்சி 
பேமன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின், 'சர்வர்' மூலம், வங்கி வாடிக்கையாளர்களின், ஏ.டி.எம்., கார்டு, ரகசிய, 'பின்' எண் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. 

யெஸ் பேங்கின், ஏ.டி.எம்.,மை பயன்படுத்திய, பிற வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களும் திருடப்பட்டு உள்ளன. இந்த வகையில், 19 வங்கிகளைச் சேர்ந்த, 32 லட்சம், ஏ.டி.எம்., கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. அவற்றில், 26 லட்சம், 'மாஸ்டர், விசா' கார்டுகள்; ஆறு லட்சம், 'ரூபே' கார்டுகள். திருடப் பட்ட, ஏ.டி.எம்., கார்டு விபரங்கள் மூலம், 641 வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆறு லட்சம், 'டெபிட்' கார்டுகளின் தகவல்கள் திருடப் பட்டதாக கூறியுள்ளது. அந்த கணக்கு களை உடனடியாக முடக்கி, வாடிக்கையாளர் களுக்கு புதிய கார்டுகள் வழங்குவதாக தெரிவித்து உள்ளது. 

தனியார் துறையைச் சேர்ந்த, ஆக்சிஸ் பேங்க், சில லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு, 'பின்' எண்களை மாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது. இதே போல, பல வங்கிகள், வாடிக்கையாளர் களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை அனுப்பியுள்ளன. 

இந்நிலையில், ஏ.டி.எம்., கார்டு தகவல் திருட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகளை,மாஸ்டர், விசா, ரூபே கார்டு நிறுவனங்கள் இணைந்து மேற் கொண்டு வருவதாக, என்.பி.சி.ஐ., தெரிவித்து உள்ளது.

ஆனால், இந்திய வங்கி வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் நடைபெற்றுள்ள தகவல் திருட்டு குறித்து, அனைத்து வங்கிகளை யும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரிசர்வ் வங்கி, எதுவும் கூறாமல் மவுனம் காப்பது,வங்கி வாடிக்கையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

'பலவங்கிகள், ஏ.டி.எம்., கார்டு தகவல் திருட்டு குறித்து, அதிகாரபூர்வமான எண்ணிக்கையை வெளியிடவில்லை. அவை வெளியானால், தகவல்கள் திருடப்பட்ட, ஏ.டி.எம்., கார்டுகளின் எண்ணிக்கை, மேலும் அதிகமாக இருக்கும்' என, வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


கண்காணிக்க வேண்டும்


ஏ.டி.எம்., கார்டு விபரம் திருடு போகும் சம்பவங் கள், வளர்ந்த நாடுகளிலும் நடக்கின்றன. இது, ஒரு குற்ற செயல்.வங்கிகளை நம்பி தான், வாடிக்கையாளர்கள் பணம், டெபாசிட் செய் கின்றனர். ஏ.டி.எம்., கார்டு விபரம் திருடு போவதால், வாடிக்கையாளர்கள், வங்கி மீது வைத்துள்ள நம்பிக்கையை இழப்பர். வங்கி களில், பணத்தை தொடர்ந்து டெபாசிட் செய்ய மாட்டர் என்பதால், அவற்றின் லாபமும் குறையும். 

எனவே, வாடிக்கையாளரின் விபரங்களை பாதுகாப்பதில், வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவற்றை, வங்கிகள் முறையாக செய்கின்றனவா என்பதை, ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் இணைந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். 

ஷியாம் சேகர் பொருளாதார நிபுணர்


விபரம் கேட்பு


ஏ.டி.எம்., கார்டு தகவல் திருடு குறித்த அனைத்து விபரங்களையும் வழங்குமாறு, மத்திய நிதி அமைச்சகம், அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இணையதளத்தில் கட்டண விபரம் : இன்ஜி., கல்லூரிகளுக்கு உத்தரவு

இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சுயநிதி பல்கலைகள், பாட வாரியான கட்டண விபரத்தை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.நாட்டில் பல மாநிலங்களில், இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி வசதிகள் இல்லை.
இந்த மாநில மாணவர்கள், மற்ற மாநில கல்லுாரி மற்றும் பல்கலைகளில் சேர்கின் றனர். சில நேரங்களில், படிப்பில் சேர வரும் மாணவர்களை, கட்டணம் தொடர்பான, அடிப்படையில்லாத காரணங்களை கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இது குறித்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், தொழில் நுட்பக் கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் உத்தரவு படி, அனைத்து கல்லுாரிகளும், முக்கிய பாடவாரியாக, மாணவர்களின் கட்டண பட்டியலை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அதே போல், சுயநிதி பல்கலைகளுக்கும், மத்திய அரசின் சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது

பொம்மலாட்டம் ஆடும் ஆசிரியர்கள் : அடிப்படை கல்விக்கு 'டாட்டா!'

அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் போன்ற நடனப் பயிற்சிகள் தரப்படுவதால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை கல்வியை வலுப்படுத்த வேண்டிய, எஸ்.எஸ்.ஏ., என்ற, மாநில திட்ட அமைப்பு, மத்திய அரசிடம் பெறும், பல கோடி ரூபாய் நிதியில், ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகளை அளிக்கிறது.
இதற்காக வரும் ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து செலவு, உபசாரம், விடுமுறை என, சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. சென்னையில், இரு நாட்களாக, நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் கற்பித்தல் பயிற்சி நடந்தது. பொம்மலாட்ட பயிற்சி முடித்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கும் முன், அடுத்த பயிற்சிக்கு அழைக்கப்படுகின்றனர். 'மாணவர்களுக்கு உதவாத, இது போன்ற ஆட்டம் காட்டும் பயிற்சி களை வைத்தே, பல ஆசிரியர்கள் பள்ளிகளில் இருப்பதில்லை' என, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., பாடம் நடத்துகிறது. பாடம் கற்க வேண்டிய மாணவர்களோ, வகுப்புகளில், ஆசிரியர்கள் இன்றி தடுமாறுகின்றனர் என, கல்வியாளர்கள் குமுறுகின்றனர்.
இது குறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறுகையில், 'பாடங்களை முறையாக நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். பின், இது போன்ற நடனங்களை கற்று தரலாம்.
'எஸ்.எஸ்.ஏ., நடத்தும் மதிப்பீட்டு தேர்வில், மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். அதன் பின்னும், இது போன்ற பயிற்சிகள் கைகொடுக்க வில்லை என்பதை, அவர்கள் உணரவில்லை' என்றனர். 

உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ணயித்தது அரசு

சென்னை: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான, கல்வி தகுதியை நிர்ணயம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. 'ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு முன் மற்றும் பின் பெறும் உயர்கல்வி தகுதிகளுக்கு ஏற்ப, இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம்' என, அரசு ஆணை உள்ளது. அதே போல், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க, அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

l உடற்கல்வி ஆசிரியர்கள், பி.பி.எட்., - பி.பி.எஸ்., - பி.எம்.எஸ்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு, முதலாவது ஊக்க ஊதிய உயர்வும், முதுகலை பட்டம் பெற்றால், இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும்l இந்த படிப்புகளை முடிந்து, உடற்கல்வி ஆசிரியர்களாக உள்ளோர், முதுகலை பட்டம் பெற்றால், முதலாவது ஊக்க ஊதிய உயர்வும், எம்.பில்., அல்லது பிஎச்.டி., படித்தால், இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும்l முதுகலை பட்டம் பெற்று, உடற்கல்வி ஆசிரியராக உள்ளோர், எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றால், தலா, ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும்.மேலும், யோகா டிப்ளமோ படிப்பு, உடற்கல்விக்கான படிப்பில் சேர்க்கப்பட்டு, ஊக்க ஊதியம் பெறும் வகையில், அரசாணை ெவளியிடப்பட்டு உள்ளது.

தீபாவளிக்கு முன் சம்பளம் : ஆசிரியர்கள் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை கொண்டாட, பொதுத்துறை ஊழியர்களுக்கு, போனஸ் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பண்டிகை முன்பணம் என்ற பெயரில், 5,000 ரூபாய் தரப்படும். இந்த ஆண்டு, பெரும்பாலான மாவட்டங்களில், முன்பணத்திற்கான விண்ணப்பமே பெறப்படவில்லை.
இந்நிலையில், தீபாவளி, 29ல் வருகிறது. எனவே, இம்மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர், சாமி.சத்திய மூர்த்தி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.

அரசு ஊழியர் அகவிலைப்படி தீபாவளிக்கு முன் அறிவிப்பு?

ஆண்டு அகவிலைப்படி உயர்வு, தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுமா' என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள், ஜூலையில் அமலுக்கு வந்தன; ஜனவரியிலிருந்து கணக்கிடப்பட்டு, பணப்பலன்கள் வழங்கப்பட்டன.
இதே போல், தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும், சம்பள குழு நியமிக்கப்பட வேண்டும்; ஆனால் இல்லை. ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலையில், 5 - 7 சதவீதத்திற்குள், அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். இந்த ஆண்டு, ஜனவரியில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது; ஜூலைக்கான உயர்வு இன்னும் வரவில்லை. தீபாவளி பண்டிகைக்கு முன், அறிவிப்பு வருமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இன்ஜி., கல்லூரி பேராசிரியர் பணிக்கு இன்று தேர்வு

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு, இன்று நடக்கிறது.அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடிகிறது. தேர்வுக்கு, 48 ஆயிரத்து, 286 பேர் விண்ணப்பித்தனர்; 2,336 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன; மீதமுள்ள, 45 ஆயிரத்து, 950 பேர், இன்று தேர்வில் பங்கேற்கின்றனர். 

தமிழகம் முழுவதும், 11 மாவட்டங்களில், 113 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு, 2014ம் ஆண்டு அறிவிக்கைபடி விண்ணப்பித்த பலருக்கு, 'ஹால் டிக்கெட்' வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஆனால், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தவிர, மற்ற அனைவருக்கும், ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் நிதி முறைகேடுக்கு முற்றுப்புள்ளி

தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., செலவுகளை, ஆன்லைன் முறையில் மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளில், மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்க்க, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம், 2009ல் அமலுக்கு வந்தது.
திட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும், ஆன்லைன் கணக்குக்கு மாற்றவும், மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, மத்திய அரசு நிதித் துறையின், பி.எப்.எம்.எஸ்., என்ற, பொது நிதி மேலாண்மை திட்டம் மூலம், கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், செய்யாத திட்டப் பணிகளுக்காக, போலி ரசீதுகள் மூலம், பணம் பெறுவது போன்ற முறைகேடுகள் முற்றிலும் ஒழிக்கப்படும். 

பள்ளிகளில் கேமரா : பெண்கள் சங்கம் மனு

சென்னை: 'பள்ளி, கல்லுாரிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சங்கத் தலை வர், கலைச்செல்வி கொடுத்த மனு: பல கல்லுாரி மற்றும் பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு எதிராக, வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
மாணவ, மாணவியர் கொலை, பாலியல் தொந்தரவு, தற்கொலை போன்ற அவலங்கள் நடக்கின்றன. இவற்றை தடுக்க, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி யில், மாணவ, மாணவியரை, கழிப்பிடத்தை துாய்மைப்படுத்த கட்டாயப்படுத்திய, தலைமை ஆசிரியை மற்றும் துணைத் தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கல்வி கொள்கை கூட்டத்தில் தமிழகம் பங்கேற்க முடிவு

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக, டில்லியில் நடக்கும் கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பங்கேற்கிறார்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி அறிக்கையின் படி, மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது. அதன் முக்கிய அம்சங்களை, மூன்று மாதங்களுக்கு முன், மத்திய அரசு வெளியிட்டது;
அதற்கு, எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில், கல்விக் கொள்கை குறித்த முதல் ஆலோசனை கூட்டம், டில்லியில், வரும், 25ல் நடக்கிறது. இதில், அனைத்து மாநில பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபிதா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து, அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் ஆரோக்கியதாஸ் கூறுகையில், ''ஆல் பாஸ் திட்டத்தை நிறுத்தினால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள், எட்டாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்ய, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

21/10/16

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.



 Visit : www.tnguru.com /

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination, 2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Postal Assistant, Sorting Assistant 

காலியிடங்கள்: 3,281 

பணி: Data Entry Operator 

காலியிடங்கள்: 506 

பணி:  Court Clerks 

காலியிடங்கள்: 26 

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதவ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சி, திருநெல்வேலி 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு  

நடைபெறும் தேதி: 07.01.2017 - 05.02.2017 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2016 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssconline.nic.in என்ற இணையதளத்தை அல்லது Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai - 600006 என்ற விலாசத்தில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

முக்கியச் செய்தி

பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை வரை தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் டூ தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு முடிகிறது. அதேபோல் மார்ச் 15-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு முடிகிறது. 

பிளஸ் டூ தேர்வுகள் விவரம்:

மார்ச் 4-ம் தேதி மொழித் தாள்-1
மார்ச் 7-ம் தேதி மொழித் தாள்-2
மார்ச் 9-ம் தேதி ஆங்கிலத் தாள்-1
மார்ச் 10-ம் தேதி ஆங்கிலத் தாள்-2
மார்ச் 14-ம் தேதி வேதியியல், கணக்குவியல் 
மார்ச் 18-ம் தேதி கணக்கு, உயிரியல், சத்துணவு
மார்ச் 17-ம் தேதி வணிகம், வீட்டுப்பாடம், புவியியல்
மார்ச் 21-ம் தேதி தொடர்பு வழி ஆங்கிலம், இந்தியக் கலாச்சாரம்
மார்ச் 28-ம் தேதி பௌதீக அறிவியல், வரலாறு, வணிக கணக்கு

10-ம் வகுப்பு தேர்வு விவரம்:

மார்ச் 15-ம்  தேதி தமிழ் முதல்தாள்
மார்ச் 16-ம்  தேதி தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 22-ம்  தேதி ஆங்கிலம் முதல்தாள்
மார்ச் 29-ம்  தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4-ம் தேதி கணிதம் 
ஏப்ரல் 7-ம் தேதி அறிவியல்
ஏப்ரல் 11-ம் தேதி சமூகஅறிவியல்

அண்ணா பல்கலை தேடல் குழு; இடம் பிடிக்க கடும் போட்டி!

அண்ணா பல்கலை துணைவேந்தர் பணியிடம், ஐந்து மாதங்களாக காலியாக உள்ளது; புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் குழு அமைப்பதில், இழுபறி ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த ராஜாராம், மே மாதம் ஓய்வு பெற்றார். புதிய துணை வேந்தரை நியமிக்க, தேடல் குழுவை அரசு அமைக்க வேண்டும். ஆனால், தேடல் குழு அமைப்பதில், பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.


இதுகுறித்து, உயர்கல்வி துறை வட்டாரம் கூறியதாவது: தேடல் குழுவில், பல்கலை சிண்டிகேட் பிரதிநிதி, அரசுபிரதிநிதி மற்றும் கவர்னரின் பிரதிநிதி என, மூன்று பேர் இடம்பெற வேண்டும். புதிய துணைவேந்தருக்கான விண்ணப்பங்களை பெற்று, அவற்றில் ஒருவரை தேர்வு செய்யும் பொறுப்பு, தேடல் குழுவிற்கே உள்ளது.

அண்ணா பல்கலையானது, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு இணைப்பு வழங்கும் அதிகாரம் உடையது. அதனால், துணை வேந்தர்பதவிக்கு விண்ணப்பிப்போர், செல்வாக்கு மிக்கவர்களாகவே இருப்பர். எனவே, தேடல் குழுவில் இடம்பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பரிந்துரைகள் வருவதால் தேடல் குழுவில் யாரை நியமிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது. இதுகுறித்து, பல்கலை வட்டாரத்தினர் கூறுகையில், இன்னும், இரு தினங்களில், தேடல் குழு பிரதிநிதிகள் முடிவு செய்யப்படுவர் என்றனர்.

கல்வித்தரத்தை மேம்படுத்த அரசு ஆசிரியர்களுக்கு பயிற்சி

தலைவாசலில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் ஒழுக்கத்திறனை மேம்படுத்தும் பொருட்டு, அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பயிற்சி முகாம், நேற்று நடந்தது. 


தெற்கு மணிவிழுந்தானில் உள்ள மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் நடந்த, ஐந்து நாள் பயிற்சி முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. 

மாணவ, மாணவியர் மத்தியில், பெரிய பிரச்னையாக விளங்கும் பாலின வேறுபாட்டை களைவது; பாலியல் சமநிலை ஏற்படுத்துதல்; மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை; புதிய கற்றல் முறை மற்றும் கணினி வழி மூலம் கல்வி கற்பிக்கும் புதிய மென்பொருட்களை கையாளுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை, மாணவர்கள் சலிப்படையாமலும், ஆர்வத்துடனும் கற்க, பலவித யுக்திகள், ஆசிரியர்களுக்கு கற்றுத்தரப்பட்டன. தலைவாசல் ஆண்கள் அரசு பள்ளி தலைமையாசிரியர் வீராச்சாமி, ஐந்து நாள் பயிற்சியை, ஒருங்கிணைத்து நடத்தினார். 

இதில், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் மற்றும் கெங்கவல்லியில் உள்ள, அரசு பள்ளிகளை சேர்ந்த, ஒன்பது, பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள், 160 பேர் பங்கேற்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு அக்டோபர் 25 ஆம் தேதி அன்று முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது!

ADVANCE LIST FOR Tuesday 25th October 2016

Sr. No. Case No. Party Petitioner Advocates Respondent Advocates
1. SLP(C) No. 29245/2014 V. LAVANYA & ORS.
Vs.
THE STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMAR MR. M. YOGESH KANNA
MR. SUMIT KUMAR
MR. V. RAMASUBRAMANIAN

 0615
WITH
  SLP(C) No. 29353-29354/2014 K CHANDRASEKARAN AND ORS
Vs.

STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
  SLP(C) No. 29634/2014 P.K.KARTHI AND ORS
Vs.

STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
  SLP(C) No. 29715/2014 I SASIKALA
Vs.

STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.MR. M. YOGESH KANNA
  SLP(C) No. 32238-32239/2014 P RADHA & ORS.
Vs.

STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.
  SLP(C) No. 32240/2014 N.SETHURAMAN AND ORS
Vs.

STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
  SLP(C) No. 32241/2014 K. VENKADESAN & ORS.
Vs.

STATE OF TAMIL NADU & ORS. MR. L. K. PANDEYMR. M. YOGESH KANNA
  SLP(C) No. 34978/2014 R SIVAPRIYA AND ORS
Vs.

STATE OF TAMIL NADU AND ORS MR. N. RAJARAMAN
  SLP(C) No. 32160/2014 N. KAYALVIZHI & ORS.
Vs.

THE STATE OF TAMIL NADU & ORS. MR. N. RAJARAMAN
  SLP(C) No. 34568/2014 A. CHITHRA AND ORS
Vs.

SECRETARY. TO GOVT. SCHOOL EDUCATION.(TRB) DEPARTMENT., CHENNAI AND ORS MR. SATYA MITRA GARGMR. M. YOGESH KANNA
MR. R. NEDUMARAN
  SLP(C) No. 33127-33130/2014 N. VANMATHI AND ORS. ETC.
Vs.

THE STATE OF TAMIL NADU AND ORS. ETC. MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
  SLP(C) No. 6543/2015 K.V. PARAMANANTHAM AND ORS.
Vs.

STATE OF TAMIL NADU AND ORS. MR. ANANDH KANNAN N.
  SLP(C) No. 26461-26463/2015 S. VIJAYAN & ETC. ETC.,
Vs.

THE STATE OF TAMIL NADU & ETC., ETC., G.SIVABALAMURUGAN
MR. L. K. PANDEY
  SLP(C) No. 26464/2015 P. SELVI & ORS.,
Vs.

THE STATE OF TAMIL NADU & ORS., G.SIVABALAMURUGAN
MR. L. K. PANDEY
  SLP(C) No. 26256-26257/2015 STATE OF TAMIL NADU, REP. BY ITS SECRETARY TO GOVT., SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT AND ORS.
Vs.

S. VINCENT AND ORS MR. M. YOGESH KANNAG.SIVABALAMURUGAN

  SLP(C) No. 31629-31642/2014 P. MEKALA & ORS. ETC. ETC.
Vs.

THE STATE OF TAMIL NADU & ORS. ETC. ETC.

8ம் வகுப்புக்கு தனித்தேர்வு கட்டாயம்கல்விக்குழு பரிந்துரை.

8ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு கட்டாயம் என்றும் ஆல் பாஸ் செய்யக் கூடாது என்றும் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வதற்கு கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு ஒன்றை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியது. இந்தக் குழுவிற்கு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் தல்ஜித் சிங் சீமா தலைமை ஏற்றுள்ளார்.இந்தக் குழு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் 189 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

கல்வியின் தரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட இந்த குழு, சில பரிந்துரைகளை அதில் அளித்துள்ளது.8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க கூடாது என்று இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தனித் தேர்வை அறிமுகம் செய்து நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்ற நாடுகளில் உள்ளது போன்று, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் ஆரம்ப பள்ளி மற்றும்துவக்கப் பள்ளிகளுக்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளன.மேலும், கிராமங்களில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை அதிகரிப்பதும், கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதும் மிக அவசியம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

பொதுத்தேர்வு மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. 

இதற்காக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடந்த மாதம் காலாண்டு தேர்வு நடந்து முடிந்தது. 

 மேலும் டிசம்பர் மாதத்திற்குள் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான பாடங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு கற்பித்து முடிக்கவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதியும், பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்காகவும், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளி நாட்களில் விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொதுத்தேர்வு வருவதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பாடங்களையும், முடித்து, மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்தவேண்டும். முழுப்பாடங்களை கொண்டுதான் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இதை வைத்து மாணவர்களின் தேர்ச்சியை ஓரளவிற்கு அறியமுடியும். இதனால் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன், நன்கு பாடம் கற்பிக்கும் மாணவர்கள் மற்றும் மெல்ல பாடம் கற்பிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஏற்றார்போல், சிறப்பு பயிற்சிகள் மற்றும் எழுத்து தேர்வுகளை நடத்தப்படும். இதனால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது’ என்றனர்.

ஏழு மாவட்ட ஆசிரியர்க்கு மூன்று நாள் பயிற்சி !!

சென்னை உள்ளிட்ட, ஏழு மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, சென்னை அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகத்தில், மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து, மண்டல அளவிலான, பள்ளிகளுக்கான தர மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்திவருகின்றன.
மூன்று நாள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமை, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா துவக்கி வைத்தார்.

இப்பயிற்சியில், உதவி கல்வி அலுவலர், ஆசிரிய பயிற்றுனர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தவும், மதிப்பீட்டு முறைகள் சார்ந்த புதிய அணுகுமுறைகளை தெரிந்து கொள்ளவும் இந்த பயிற்சி நடந்தது. இன்றுடன், நிறைவுபெறும் இந்த பயிற்சி முகாமில், சென்னை,காஞ்சிபுரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை,விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த, 143 பேர் பங்கேற்றனர்.

MINORITY SCHOLARSHIP விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - விண்ணப்பிக்கும் வழிமுறைகள், அறிவுரைகள் - செயல்முறைகள்



32 லட்சம் DEBIT CARD PIN NO. களவு - உடனடியாக உங்கள் ATM. PIN நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!

சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். உங்கள் ஏ.டி.எம் பின்கோட் எண்ணை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி பாதுகாப்பை மேம்படுத்த மட்டுமே என வந்திருக்கும். 
நம்மில் பலர் அந்த செய்தியை ''ஜஸ்ட் லைக் தட்''  கடந்து செல்வதையே வாடிக்கையாக வைத்திருப்போம். ஆனால் அதன் விளைவு எவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது தெரியுமா? 32 லட்சம் டெபிட் கார்டுகளின் பின் நம்பர்கள் களவு போய்யுள்ளதாகவும், இதில் பெருமபாலான கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் பின் நம்பரை மாற்ற சொல்வது ஏன்?
இந்தியாவில் 32 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றித் தரவோ அல்லது  வாடிக்கையாளர்களை பின் நம்பரை மாற்றவோ சொல்ல வங்கிகள் முடிவெடுத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் அங்கீகாரமற்ற முறையில் இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிற‌து என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.  இந்த பரிமாற்றங்கள் சீனாவில் ஏ.டி.எம், பொருட்களை பர்சேஸ் செய்யும் இடம் போன்ற இடங்களில் பதிவாகியுள்ளது.

வாடிக்கையாளரின் தகவல்கள் திருடப்பட்டு அதே போன்ற கார்டுகள் க்ளோனிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. மொத்தமுள்ள 32 லட்சம் கார்டுகளில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளை சேர்ந்தது என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூ-பே கார்டுகள் என்றும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான  கார்டுகள் எஸ்.பி.ஐ மற்றும் ஹச்.டி.எஃப்.சி வங்கிகளைச் சேர்ந்த கார்டுகளாக உள்ளன.
எஸ்.பி,ஐ 6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விஷயம் தொடர்பாக புதிய கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறது. வங்கிகள் எண்களை மாற்ற சொல்கிறது என்பதை சாதாரண விஷயமாக கருதாமல் அதனைக் கொஞ்சம் சீரியசாக அணுகுங்கள். வங்கிகள் அடிக்கடி பின் நம்பரை மாற்றுவது நினைவில் வைத்துக் கொள்ள கடினமாக தான் இருக்கும் ஆனால் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுங்கள் என்கின்றன வங்கிகள்.
உங்கள் எண்கள் இந்த 32 லட்சம் எண்களில் இருக்கறதோ? இல்லையோ? பாதுகாப்புக்காக உங்கள் ஏ.டி.எம்  பின் நம்பரை உடனடியாக மாற்றி விடுங்கள்.
தகவல்கள் எப்படி திருடப்படுகின்றன?
நமக்கு மட்டுமே தெரிந்த நமது பின் நம்பர், கார்டு எண்கள் எப்படி திருடப்படுகின்றன. அதுவும் சீனாவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கூறப்படுகின்றன.
1. பர்சேஸ் செய்ய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் ''ஸ்கிம்மர்கள்'' எனும் கருவி ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைக்கப்பட்டு மொத்த தகவலும் எடுக்கப்படலாம்.
2. ஏ.டி.எம் நிலையங்களிலேயே ஸ்கிம்மர்கள் பொருத்தப்பட்டு அனுமதியற்ற முறையில் தகவல்கள் திருடப்படலாம்.
3. போலியான இணையதளங்களில் பணப்பரிவர்த்தனை செய்வது முறையற்ற முறையில் ஸ்க்ரீன் கேப்சர் செய்யப்படுவது.
4. அதிகாரபூர்வமற்ற வங்கி ஆப்ஸ்கள் மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகிறது.
இப்படியெல்லாம் திரட்டப்படும் தகவல்கள் குறிப்பிட்ட பெரிய தொகைக்கு  விற்கப்படுகிறது. இப்படித் தான் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பணம் திருடுபோகிறது.

என்ன செய்ய வேண்டும்?
1. வங்கிகளின் இணையதளங்களை நீங்களே டைப் செய்து செல்லுங்கள். இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-ல் வரும் லின்க்களை க்ளிக் செய்யாதீர்கள்.
2.வங்கிகளின் முறையான ஆப்ஸை மட்டுமே பயன்படுத்துங்கள்.
3. பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இங்கெல்லாம் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது அந்த கருவிகளில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.
4. ஆன்லைன் ஆர்டர்களை கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரியாக செய்யுங்கள்
5. ப்ரெளசிங் சென்டர்களில் பணப்பரிவர்த்தனை செய்வதை தவிருங்கள்.

8ம் வகுப்புக்கு தனித்தேர்வு கட்டாயம்..கல்விக்குழு பரிந்துரை.

8ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு கட்டாயம் என்றும் ஆல் பாஸ் செய்யக் கூடாது என்றும் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வதற்கு கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு ஒன்றை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியது. இந்தக் குழுவிற்கு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் தல்ஜித் சிங் சீமா தலைமை ஏற்றுள்ளார்.இந்தக் குழு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் 189 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

கல்வியின் தரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட இந்த குழு, சில பரிந்துரைகளை அதில் அளித்துள்ளது.8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க கூடாது என்று இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தனித் தேர்வை அறிமுகம் செய்து நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்ற நாடுகளில் உள்ளது போன்று, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் ஆரம்ப பள்ளி மற்றும்துவக்கப் பள்ளிகளுக்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளன.மேலும், கிராமங்களில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை அதிகரிப்பதும், கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதும் மிக அவசியம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

20/10/16

ஆசிரியர் தகுதித்தேர்வு எதிர்பார்ப்பு அதிகரிப்பு

பிளஸ்2 தேர்வில் 75 சதவீதம் மார்க் எடுத்தால் மட்டுமே என்.ஐ.டி.யில் இடம்: புதிய நடைமுறை அமுல்

மத்திய அரசு நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியதொழில்நுட்ப கல்லூரிகளை நடத்தி வருகிறது. இதில், ஐ.ஐ.டி. முதன்மை கல்லூரியாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் என்.ஐ.டி. கல்லூரிகள் உள்ளன.நாடு முழுவதும் 31 என்.ஐ.டி. கல்லூரிகள் இருக்கின்றன. இதில், ஒவ்வொரு ஆண்டும் 18 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்படுகின்றனர்.


அவர்களுக்கு ஜே.இ.இ. என்ற பெயரில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்கள் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.இதுவரை நுழைவு தேர்வு எழுதும் மாணவர்கள் பொது பிரிவினர் பிளஸ்-2 வில் 70 சதவீத மார்க்கும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 65 சதவீத மார்க்கும் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் இருந்தன.ஆனால், இப்போது இதில், மாற்றத்தை கொண்டு வர மத்திய மனிதவள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்த கல்லூரியில் சேர பொது பிரிவினர் பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 70 சதவீதமும் மார்க் பெற்று இருக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான சிபாரிசுகளை மத்திய இடஒதுக்கீட்டு வாரியத்துக்கு அனுப்பி உள்ளனர். அவர்கள் இறுதி முடிவு எடுத்த பிறகு இது நடைமுறைக்கு வரும்.ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சத்தில் இருந்து 13 லட்சம் மாணவர்கள் வரை ஜே.இ.இ. நுழைவு தேர்வு எழுதுகின்றனர். புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் நுழைவு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 2 லட்சம் வரையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் இன்று வெளியீடு

மின் வாரியம், ஊழியர்கள் நியமனத்துக்கு நடத்திய, எழுத்து தேர்வு மதிப்பெண்ணை, இன்று வெளியிடுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: மின் வாரியத்தில், இளநிலை உதவியாளர், ஸ்டெனோ, வேதியர், டைப்பிஸ்ட், உதவி வரைவாளர் என, 750 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூன், 19 மற்றும் ஆக., 27, 28ல், அண்ணா பல்கலை மூலம், எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

இதன் மதிப்பெண்கள், இன்று வெளியிடப்பட உள்ளன. தேர்வர்கள், www.tangedcodirectrecruitment.in என்ற இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். அரசு நிர்ணயம் செய்துள்ள இன,இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். 

நவ., 2 முதல் நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேதி, இடம், நேரம் போன்ற விபரங்கள், பின்னர் இணையதளத்தில் தெரிவிக்கப்படும். 

எழுத்து தேர்வுக்கு, 85 சதவீதம்; நேர்முக தேர்வுக்கு, 15 சதவீதம்; அதாவது, 10 மதிப்பெண் நேர்காணலுக்கு, 5மதிப்பெண் கல்வி தகுதிக்கு என, கணக்கீடு செய்து, நியமனம் செய்யப்படுவர். மதிப்பெண் குறித்த விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின், இடைக்கால தடை உத்தரவு நீக்கம் செய்யப்பட்ட பின், 525 தொழில்நுட்ப உதவியாளர்கள்; 900 கள உதவியாளர் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏழு மாவட்ட ஆசிரியர்க்கு மூன்று நாள் பயிற்சி முகாம்

சென்னை உள்ளிட்ட, ஏழு மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, சென்னை அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகத்தில், மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து, மண்டல அளவிலான, பள்ளிகளுக்கான தர மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்தி வருகின்றன.

மூன்று நாள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமை, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா துவக்கி வைத்தார்.

இப்பயிற்சியில், உதவி கல்வி அலுவலர், ஆசிரிய பயிற்றுனர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தவும், மதிப்பீட்டு முறைகள் சார்ந்த புதிய அணுகுமுறைகளை தெரிந்து கொள்ளவும் இந்த பயிற்சி நடந்தது. இன்றுடன், நிறைவுபெறும் இந்த பயிற்சி முகாமில், சென்னை,காஞ்சிபுரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த, 143 பேர் பங்கேற்றனர்.

முன் அரையாண்டு தேர்வால் பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

தமிழக தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் போதே, பிளஸ் 2 பாடங்கள் நடத்தி முடிக்கப்படுகின்றன. பின், பிளஸ் 2வில் மீண்டும், ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளில்,பிளஸ் 2 வகுப்பு துவங்கும் போது மட்டுமே,பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுகின்றன. 

இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கு முன்,அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதே நேரம், அரையாண்டு தேர்வுக்கு முன், நவ., 15 முதல், 25க்குள், முன் அரையாண்டு தேர்வு என்ற புதிய தேர்வை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 

இதற்கு, ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரையாண்டு தேர்வுக்கு முன், பாடங்களை நடத்தவே நாட்கள் இல்லை; மழைக் காலமும் வருகிறது. இந்நிலையில், இன்னொரு தேர்வு வைத்தால்,அதற்கு, 10 நாட்களாகும். அதனால், பாடம் நடத்துவது பாதிக்கப்படும்&' என, தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி இளங்கோ கூறியதாவது: 

ஏற்கனவே, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர். அதில் பங்கேற்பதால், ஐந்து நாட்கள் பாடம் நடத்த முடிவதில்லை. 

பண்டிகை விடுமுறைகள் வருகின்றன; அதை ஈடுகட்டவே திணறும் சூழலில், முன் அரையாண்டு தேர்வு நடத்தினால், உரிய காலத்தில் பாடங்களை முடிக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

கலங்க வைக்கும் குழந்தைக் கடத்தல்! (அவசியம் அனைவரும் படிக்கவும்) நன்றி:விகடன்

குழந்தைக் கடத்தல்... எங்கோ, யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘திருச்சியில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது, திருச்சியளவில் அடங்கக்கூடிய ஒரு குற்றச்செய்தி அல்ல. உண்மையில், அது மாநிலம், தேசம், சர்வதேசம் என்று சங்கிலித் தொடராக இயங்கும் ஒரு மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க்!

உடற்கல்வி ஆசிரியர்களின் 21 ஆண்டுகள் சிக்கலுக்கு விடிவு.

அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களின், ஊக்க ஊதியத்திற்கான, 21 ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்கும் போது, அதற்கு இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படும்.

ஆனால், இந்த ஊக்க ஊதியம் வழங்குவதில், 21 ஆண்டுகளாக பிரச்னை நீடித்தது; பலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆசிரியர் சங்கங்களும், அரசுக்கு, பலமுறை கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. இதில், சான்றிதழ் படிப்பு முடித்தோர், 1992க்கு முன், பி.எட்., படிப்பை முடித்திருந்தால், ஊக்க ஊதியம் தரப்படும். மற்றவர்களுக்கு, பி.பி.எட்., - பி.பி.இ.எஸ்., அல்லது பி.எம்.எஸ்., எம்.பி.எட்., - எம்.பி.இ.எஸ்., மற்றும் யோகாவில் முதுநிலை டிப்ளமோ முடித்தால், இரண்டு ஊக்க ஊதியம் தரப்படும்.

இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும்உடற்கல்வி இயக்குனர்கள் சங்க, மாநில பொதுச் செயலர், டி.தேவி செல்வம் கூறுகையில், ''21 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திய, அரசுக்கு நன்றி. ஆசிரியர்கள், உயர் கல்வி தகுதி பெற்ற நாள் முதல் கணக்கிட்டு, இந்த சலுகையை வழங்க வேண் டும்,'' என்றார்.

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட செலவு அனைத்தும்"ஆன்லைன்' மயம் : மத்திய அரசு முடிவு

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், (ஆர்.எம்.எஸ்.ஏ.,) அனைத்து செலவினங்களை ஆன்லைன் கணக்கில் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் எஸ்.எஸ்.ஏ.,வை தொடர்ந்து, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்க்கும் வகையில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் 2009 முதல் அமலில் உள்ளது.


இதன் மூலம் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், நுாலகம், கணினி அறை, கழிப்பறை, குடிநீர் வசதி, பள்ளி மானியம் மற்றும் பணியிடை பயிற்சிகள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் சார்பில் 60:40 என்ற விகிதத்தில் நிதிஒதுக்கீடு செய்கின்றன.தமிழகத்தில் ஆண்டிற்கு 2 ஆயிரம் கோடிக்கு மேல், இத்திட்டம் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்காக, ஒப்பந்ததாரர் உள்ளிட்டோருக்கு முடிந்த பணிகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் ரசீதுகள் அடிப்படையில்பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் எழுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் திட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், அனைத்துபண பரிவர்த்தனைகளையும், ஆன்லைன் கணக்கு எண்களில் மட்டும் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

இதனால் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் பொது நிதிமேலாண்மை திட்டம் (பி.எப்.எம்.எஸ்.,) மூலம் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், பள்ளிகளுக்கு வெள்ளை அடித்தால் கூட ஆன்லைன் கணக்கு மூலம் தான் ஊழியருக்கு சம்பளம் வழங்கும் நிலை ஏற்படும்.இதனால் செய்யாத திட்டப் பணிகளுக்காக போலி 'பில்'கள் மூலம் பணம் பெறுவது போன்ற முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

10 நாட்களில் 'செட்' தேர்வு முடிவு

கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவை, 10 நாட்களுக்குள் வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்கலை மற்றும்கல்லுாரிகளில், பேராசிரியராக சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

சில மாநிலங்களில், கல்லுாரி, பல்கலைகளில், பேராசிரியராக சேர, மாநில அளவிலான, செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழக அரசு சார்பில், செட் தேர்வு, பிப்., மாதம் நடந்தது; இதில், 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வை நடத்திய, முன்னாள் உயர் கல்வி செயலர் அபூர்வா, வேறு துறைக்கு மாற்றப்பட்டதால், தேர்வு முடிவு வெளியிடப்படாமல், கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசின் நெட் தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, அக்., 17ல் துவங்கியது.

செட் தேர்வு முடிவை வெளியிட்டால், அதில் தேர்ச்சி பெறாதோர்,நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம். அதற்கு வசதியாக, செட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. செட் தேர்வு முடிவு வெளியான பின், நெட் தேர்வை நடத்த வேண்டும் என, வழக்கு தொடர, நெட், செட் சங்கத்தினர் முடிவு செய்தனர். இதனால், 10 நாட்களுக்குள், செட் தேர்வு முடிவை வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்து உள்ளது; அதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

பள்ளிகளில் 4ஆயிரம் லேப் அசிஸ்டென்ட் நவம்பரில் நியமிக்க கல்வித்துறை முடிவு.

CPS- Double number- Old Number CPS Amount transfer to New CPS Number



19/10/16

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும் முறை 7-ந் தேதி முதல்

 ...

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை வருகிற (நவம்பர்) 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

பொம்மலாட்டம் முறை

தமிழ்நாட்டில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பொம்மலாட்டம் மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்து உள்ளது.

இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சார்பில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

இதில் பொம்மலாட்டத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் எஸ்.வி.மாணிக்கம், சுகந்தி டெய்சி ராணி உள்பட பலர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகுழு இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இணை இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பயிற்சி குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட சீனியர் ஆலோசகர் ஆர்.மாலதி கூறியதாவது:-

7-ந் தேதி முதல்...

தமிழ் உள்பட அனைத்து பாடங்களையும் பொம்மலாட்டம் மூலமாக நடத்தி காண்பித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். அதற்காக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு கற்பிப்பார்கள். பின்னர் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வருகிற (நவம்பர்) 5-ந் தேதி முதல் நடத்தப்படும்.

பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் கையேடு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி தங்கள் வகுப்பில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு பொம்மலாட்டம் மூலம் பாடங்களை கதைகளாக கூறி நடத்துவார்கள். இந்த புதிய கற்பிக்கும் முறை வருகிற 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு மாலதி தெரிவித்தார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான தொலைநிலைக் கல்வி இரண்டாண்டு  பி.எட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை முதல் வழங்கப் பட்டு வருகிறது.
   இடைநிலை ஆசிரியர் பயிற்சி பட்டயம் முடித்து ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
   விண்ணப்பத்தை ரூ.600 செலுத்தி நேரிலோ அல்லது www.tamilunivercity.ac.in. என்ற இணைய தள முகவரியிலோ  பெற்றுக் கொள்ளலாம்.
   விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் நவம்பர் 30 ஆண் தேதியாகும்.

பள்ளிக்கல்வி - உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் சார்பான ஆணை வெளியீடு






Honourable CM Released Learning Materials for 10th and 12th Standard

Download Study Materials
12th Standard
SubjectTamil
Medium
English
Medium
Tamil
Download
English
Download
Mathematics
Download
Download
Physics
Download
Download
Chemistry
Download
Download
Biology
Download
Download
Bio-Botany
Download
Download
Bio-Zoology
Download
Download
Accountancy
Download
Download
Commerce
Download
Download
Economics
Download
Download
History
Download
Download
Geography
Download
Download

வெற்றிக்கு தேவை 5 ‘சி’!

வெற்றி என்பது தானாக வருவதல்ல; தானமாகவும் கிடைப்பதல்ல. அது வியர்வைத் துளிகளின் விளைச்சல்! படுத்துக் கிடக்கும் சோம்பேறிக்கு பகல்கூட இரவுதான்; ஆனால், எழுந்து உழைப்பவனுக்குத் திரும்பும் திசையெங்கும் வெற்றிதான்!


வெற்றி பெற விரும்புகிறவர்கள், அதற்கு மூலாதாரமாக விளங்கும் 5‘சி’களை வளர்த்துக் கொண்டு, அவற்றைச் செதுக்கிச் செம்மை படுத்திக் கொண்டால் நொடிதோறும் வெல்லலாம். வாழ்க்கையை வரலாறாக்கி சாதனைச் சரித்திரத்தில் நிரந்தர இடம் பிடிக்கலாம்.

அது என்ன 5‘சி’ என்றுதானே கேட்கிறீர்கள். இதோ

1. ஒழுங்கு நெறிமுறைகள் - Character

திறமை இருந்தால் ஒருவனால் வெற்றி சிகரத்தை அடைய முடியும்; ஆனால் ஒழுக்கம் இல்லை என்றால் அங்கு நிலைத்து நிற்கமுடியாது. ஆகவே எல்லாவற்றுக்கும் நன்னடத்தையே அஸ்திவாரம்.

2. துணிச்சல் - Courage

நன்னடத்தையுடன் தொடர்ந்து நடந்து கொள்வதற்கு நெஞ்சில் துணிச்சல் வேண்டும். சூழ்நிலைகளுக்குள்ளாக கரைந்து போகாமல், தனது ஒழுக்க நெறியில் நின்று, நேர்மையான முறையில் செயல்படுவதற்கும், அப்பளுக்கற்ற நெறியில் செல்வதற்கும் துணிச்சலே துணை நிற்கிறது.

3. அறிவாக்கத்திறன் - Compentency

இனிப்பு இருந்தால் தான் அது கரும்பு; இல்லாவிட்டால் அது மூங்கலின் தம்பி! காரம்  இருந்தால் தான் அது மிளகாய் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை! அதுபோல தான் அறிவாக்கத் திறன் இருந்தால் தான் ஒருவனால் செயல் வீரனாக முடியும். அறிவு மட்டும் போதாது, அந்த அறிவைச் செயலாக்கும் திறனும் வேண்டும். இதை தான் அறிவாக்கத் திறன் என்று சொல்கிறார்கள்.

4. உள்ளார்ந்த செயலுறுதி - Commitment

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும், எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவதும் திட்டமிட்டவாறு செயலாற்றி வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு நெஞ்சில் உறுதி இருக்க வேண்டும்.

5. படைப்பாற்றல் திறன் - Creativity

எந்தச் செயலையும் மேன்மையாகவும், சுலபமாகவும், சிக்கனமாகவும் செய்ய உதவுவது தான் படைப்பாற்றல் திறன். எதையும் வித்தியாசமாச் சிந்தித்து கற்பனை நளத்துடன் உயர்வாகச் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். எதையும் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற தீவிர எண்ணமே படைப்பாற்றலைத் தோற்றுவிக்கிறது.

-முனைவர் கவிதாசன்.

மாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்ட “ஆட்சியர்”- தினம் ஒரு அதிரடியால் 'பொதுமக்கள் நெகிழ்ச்சி'.

திருவண்ணாமாலை மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்காக சமைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.கடந்த 11ம் தேதி திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம், தண்டராம்பட்டு மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில்சென்ற ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் காரிலிருந்து இறங்கி கீழே விழுந்த அந்த வாலிபரை தனதுகாரிலேயே அழைத்து சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதித்ததார்.நேற்று மதிய உணவு வேளையின் போது,   பூங்கா பகுதி ஒன்றின் புல் தரையின் மீது சக ஊழியர்களுடன் அமர்ந்துசகஜமாக ஆட்சியர் பிரசாந்த் மதிய உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்தது.  இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் சத்துணவு தரமாக சமைத்து கொடுப்பது இல்லை என புகார் எழுந்தது.

இதையடுத்து அந்த பள்ளியில் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாணவர்களுக்ககாக சமைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதனை பள்ளி மாணவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.பிரசாந்த் தான் ஆட்சியர் என பெரிதாக நினைக்காமால் நாளுக்கு நாள் அவர் மிக எளிமையாக நடந்து கொள்ளும் இது போன்ற விஷயங்கள் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் 2017 ஜனவரியில் நடத்தப்பட உள்ள அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Computer on Office Automation) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, இந்த சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண் ணப்பிக்கலாம்.ஒருவேளை, பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டால் தகுதி காண் பருவத்துக்குள் கண் டிப்பாக தேர்ச்சி பெற்றாக வேண்டும்.

அரசு கணினி சான்றிதழ் தேர்வை தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு 2 முறை நடத்து கிறது. 2016 டிசம்பரில் நடத்தப் பட வேண்டிய சான்றிதழ் தேர்வு 2017 ஜனவரி 7, 8 தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் (www.tndote. org) நவம்பர் 11-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ள லாம். பூர்த்தி செய்த விண்ணப் பங்களை, உரிய சான்றிதழ் களுடன் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு நவம்பர் 18-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8/10/16

IAS

NHIS

அறிஞர் அண்ணாதுரை வாழ்க்கை வரலாறு

ஆசிரியர்களே

ஆதார் அட்டை பற்றி மிக முக்கிய தகவல்.

இந்திய வரலாறு

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும்

ஈகோ என்பது என்ன?

உமிழ்நீர்

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன?

காய்கறி வாங்குவது எப்படி?

கைவைத்தியம்

சமுதாயத்தில் மாதா, பிதாவுக்கு அடுத்த நிலையில் குரு

சில அருமையான விஷயங்கள்

பட்டதாரிகளுக்கு இந்திய அஞ்சல் துறை வங்கியில் 650 உதவி மேலாளர் பணி இந்திய அஞ்சல் பண அளிப்பு வங்கியில் (IPPB) நிரப்பப்பட உள்ள 650 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவி: Assistant Manager (JMGSI-I) - 650

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, மற்ற பிரிவினருக்கு ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: http://www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2016

எழுத்துத் தேர்வு: டிசம்பர் 2016, ஜனவரி 2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://govtjobsdisk.com/wp-content/uploads/2016/10/IPPB-650-Assistant-Manager-Officer-Scale-Notification-PDF.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Training details
Oct 22,-CRC PRIMARY &UPPER PRIMARY .
>Oct 24 tamil elakkanam trng For up pri trng at BRC.
>Nov 5 PRI CRC pommalattam.
>Nov 7,8 science trng for primary trs @ BRC.
>Nov 12 up pri CRC

7/10/16

பட்டதாரிகளுக்கு இந்திய அஞ்சல் துறை வங்கியில் 650 உதவி மேலாளர் பணி இந்திய அஞ்சல் பண அளிப்பு வங்கியில் (IPPB) நிரப்பப்பட உள்ள 650 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவி: Assistant Manager (JMGSI-I) - 650

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, மற்ற பிரிவினருக்கு ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: http://www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2016

எழுத்துத் தேர்வு: டிசம்பர் 2016, ஜனவரி 2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://govtjobsdisk.com/wp-content/uploads/2016/10/IPPB-650-Assistant-Manager-Officer-Scale-Notification-PDF.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்

தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.


இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள், சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும். அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வழங்கப்பட உள்ளது. அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் கீழ், 486 இ - சேவை மையங்கள் உள்ளன.

இந்த நிறுவனத்தின் சார்பில், சென்னையில், சில இடங்களில், இந்த சேவை நேற்று துவங்கியது. அதற்காக, வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம், தேர்தல் துறை வழங்கி உள்ளது. வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்; 25 ரூபாய் செலுத்த வேண்டும். வாக்காளர் அட்டை தொலைந்தாலும், இந்த மையத்தில், அடையாள அட்டை எண்ணை தெரிவித்து, புதிய அட்டை பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அழகாக தெரிய வேண்டுமா? : வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படங்கள், மிக மோசமாக தெரிவதாக புகார்கள் உள்ளன. இ - சேவை மையங்களில், வாக்காளர்களை புகைப்படம் எடுத்து, அதை, வண்ண அடையாள அட்டையில் பதிந்து தர வசதிகள் உள்ளன. தேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படத்தை, விருப்பம் உள்ளோர், இந்த மையங்கள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம்.

Epayslip வழங்கப்படுமா? - முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

THANKS : MR.JAYAPRAKASH
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள -epayslip- திட்டத்தை, நடைமுறைப்படுத்தாமல் உள்ள DDOக்கள் (ஊதியம் வழங்கும் அலுவலர்கள்), இனி மேலாவது
நடைமுறைப்படுத்துவார்களா?

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகிலுள்ள சட்டையம்பட்டி
கிராமத்தை சேர்ந்த A.அமிர்தவள்ளி க/பெ ஜெயப்பிரகாஷ் என்பவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள -epayslip- திட்டத்தை, நடைமுறைப் படுத்தாமல் உள்ள
DDOக்களுக்கு, நடைமுறைப்படுத்த உத்திரவிட வேண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (TN CM SPECIAL CELL) அனுப்பிய கோரிக்கையின் விவரம் பின்வருமாறு:
அரசு ஊழியர்கள் சங்கமும், ஆசிரியர்கள் சங்கமும் ஊதியம் வழங்கும் அலுவலர்களை (DDO) வலியுறுத்தவில்லை என்பதும் உண்மை. கோரிக்கையின் விவரம் பின்வருமாறு:
மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்!
தமிழகத்தின் முதல்வரான மாண்புமிகு அம்மா அவர்களின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் டிசம்பர்-15ல் அவர்கள் இட்ட உத்தரவின் பேரில் கருவூலம் & கணக்குகள் துறையானது அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் மாதாந்திர ஊதிய விவரத்தை இருக்குமிடத்திலிருந்து இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வசதியாக http://epayroll.tn.gov.in/epayslip/ என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது. இந்த தளத்தில் அரசு ஊழியர் ஒருவரின் Employee Code & Date of Birth உள்ளீடு செய்தால் அவரின் ஊதிய விவர பக்கம் open ஆகும். அதில் PaySlip , Annual Income Statement, Pay Drawn Particulars என காட்டும்.
இதிலுள்ள 2&3ல் மாதாந்திர ஊதியம்,அரசு பிடித்தங்கள் மட்டும் எவ்வளவு என்பதை ஒரு ஆன்டிற்கு தொகுத்து வழங்குகிறது.இதில் முக்கியமானது PaySlip. அதில் தான் அனைத்து பிடித்தங்களின் (சொசைட்டி தொகை உள்பட)
விவரங்களும்,அது போக வழங்கப்பட்ட சம்பளத்தின் விவரம் இருக்கும். இந்த
PaySlip திட்டமானது இந்தியாவிலே இராணுவத் துறைக்கு மட்டுமே நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை நமது மாநில அரசு, ஊழியர்களின் நலன் கருதி
நடைமுறைப்படுத்தியுள்ளது.இந்த மகத்தான திட்டமானது தமிழக
அதிகாரிகளின் அலட்சியத்தால்முடங்கியுள்ளது.அதாவது PaySlip டவுன்லோடு
செய்ய அந்தந்த DDOக்கள், கருவூலம் வழங்கும் டோக்கன் நெம்பரை மாதந்தோறும் UPDATE செய்ய வேண்டும்.அப்படி செய்தால் அவரின் PAY DETAILSஐ ஒரு நிமிடத்தில் அறிந்து கொள்ளலாம்.

அடுத்த ஆண்டு 'நீட்' தேர்வு உண்டா? : அறிவிப்பு இல்லாததால் குழப்பம்

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, அடுத்த கல்வி ஆண்டில், 'நீட்' என்ற, தேசிய நுழைவுத்தேர்வு உண்டா என்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்ந்த வழக்கில், அனைத்து மாநில மாணவர்களும்,
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய அரசின் சார்பில், அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களில், நடப்பு கல்வி ஆண்டான, 2016 - 17க்கு மட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நீட் தேர்வுப்படியே மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத்தேர்வு முடித்ததும், நீட் இல்லாமல், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, இந்திய மருத்துவ கவுன்சிலோ, இத்தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நிர்வாகமோ, இதுவரை விளக்கம் அளிக்கவில்லை; அதனால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், மாணவர்களிடம் தனி கட்டணம் பெற்று, நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொழில்நுட்ப தேர்வு முடிவு : கலை ஆசிரியர்கள் சந்தேகம்

ஓவியம், கலை படிப்புகளுக்கான, தேர்வின் விடைத்தாள் நகல்களை வழங்க வேண்டும்' என, கலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓவியம், கலை, தையல், கைவினை உள்ளிட்ட, பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளுக்கு, அரசு தேர்வுத்துறை சார்பில், 2015 நவம்பரில் தேர்வு நடந்தது.
இதன் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு, தேர்வு மையங்களில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன; இதில், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தவர், அதிக தேர்ச்சி பெற்றுஉள்ளனர். தமிழகத்தை சேர்ந்த, 40 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என, தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு, விடைத்தாள் சரியாக திருத்தம் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், விடைத்தாள் நகல்களை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், ''விடைத்தாள் நகல்கள் வழங்கவும், மறுமதிப்பீடு செய்யவும், அரசு தேர்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். 

பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முறை ரத்து செய்ய சி.பி.எஸ்.இ., திட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை ரத்து செய்ய, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். சி.பி.எஸ்.இ., நடத்தும் பொதுத் தேர்வில், 2014ல் விடைத்தாள் மறுமதிப்பீடு திட்டம் அமலானது.
வழக்கமான மதிப்பீட்டில் பிரச்னை இருப்பதாக தெரிய வந்தால், மறு மதிப்பீட்டுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.கடந்த, இரு கல்வி ஆண்டு களில் மறுமதிப்பீட்டுக்கு, இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களே விண்ணப்பித்தனர். அத்துடன், மறுமதிப்பீட்டில், பலரது மதிப்பெண்கள் மாறவில்லை. சொற்ப அளவிலான மாணவர்களுக்காக, பல ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு, கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, மூன்று வகை மேற்பார்வையுடன், விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுவதால், பெரிய அளவில் புகார்கள் எழவில்லை.
எனவே, விடைத்தாள் மறுமதிப்பீட்டை, நடப்பு கல்வி ஆண்டில் ரத்து செய்யவும், தற்போதுள்ள திருத்த முறையை தொடரவும், சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்; இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது. 

சிறுபான்மை மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்'

சென்னை: மவுலானா ஆசாத் நினைவு கல்வி உதவித்தொகைக்கு, 10ம் வகுப்பு முடித்த, சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
மவுலானா ஆசாத் நினைவு உதவித்தொகை என்ற இத்திட்டத்தில், 10ம் வகுப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்று, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 1ல் துவங்கியது; நவ., 30 வரை பதியலாம். மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின், http://www.maef.nic.in இணையதளத்தில், நேரடியாக விண்ணப்பித்து, அதன் நகலை, கல்வி அறக்கட்டளை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.