யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/8/18

Flash News: உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (2.8.2018) பிற்பகல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது :

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான முதல்வர் பேச்சுக்கு ஜாக்டோ-ஜியோ 4ம் தேதி பதில்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு ஜாக்டோ-ஜியோ 4ம்  தேதி கூட்டத்தை கூட்டி பதிலளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
சேலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்தும் பேசினார். அப்போது அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்டு பணியை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். மேலும், ஆசிரியர்களின் ஊதியத்தை பொறியியல் பட்டதாரிகளின் ஊதியத்துடன் ஒப்பிட்டுக் காட்டி பேசியுள்ளார்.

இது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ இதுகுறித்து தங்களின் நிலையை வெளிப்படுத்த 4ம் தேதி ஜாக்டோ-ஜியோ கூட்டம் கூடி முதல்வரின் பேச்சுக்கு முறையான விளக்கம் மற்றும் பதிலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு துணை தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு

பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.பத்தாம் வகுப்புக்கு, மார்ச்சில் நடந்த பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, பங்கேற்க முடியாதவர்கள்; தேர்வில் 
பங்கேற்று ஏதாவது சில பாடங்களில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். முடிவுகளை, http://www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், இன்று பிற்பகலில் தெரிந்து கொள்ளலாம். தற்காலிக சான்றிதழ்களையும், இன்றே பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், நாளை மற்றும் நாளை மறுநாள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு சென்று, பதிவு செய்ய வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும், ஒப்புகை சீட்டையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கான, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, இன்று முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கேந்திரிய வித்யாலயா போன்ற, 
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசு நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கான அறிவிப்பை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.இதன்படி, www.ctet.nic.in என்ற இணையதளத்தில், இன்று முதல், ஆக., 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம், 92 நகரங்களில், 20 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGH SCHOOL HM PANEL AS ON 01.01.2018 RELEASED Posted: 01 Aug 2018 07:53 AM PDT CLICK HERE தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இணைக்க கணக்கெடுப்பு துவங்கியது! Posted: 01 Aug 2018 06:51 AM PDT DEO Promotion 2018-19: Panel தயாரிப்பது தொடர்பான அறிவுரைகள் ,படிவங்கள் மற்றும் உத்தேசமாக தேர்ந்த்தெடுக்கப்படவேண்டிய தலைமையாசிரியர்கள் பெயர் பட்டியல் Posted: 01 Aug 2018 06:34 AM PDT CLICK HERE TO DOWNLOAD .DIR.PRO.& FORMAT SSLC Special Supplementary June 2018 - Provisional Mark Sheet for Individuals on 01.08.2018 at 2.00 pm Posted: 01 Aug 2018 03:02 AM PDT CLICK HERE ஆகஸ்ட் மாத பள்ளி நாட்காட்டி Posted: 31 Jul 2018 07:19 PM PDT 'குரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு : 11,270 பேரை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., முடிவு Posted: 31 Jul 2018 07:09 PM PDT 'குரூப் - 4' தேர்வில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன், 2,000 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வின் வழியே, 11 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 9,351 பதவிகளுக்கு, குரூப் - 4 தேர்வு, இந்த ஆண்டு, பிப்., 11ல் நடத்தப்பட்டது. தேர்வில், மாநிலம் முழுவதும், 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள், ஐந்து மாதத்திற்குப்பின், நேற்று முன்தினம் வெளியாகின.முடிவுகள்,http://results.tnpsc.gov.inமற்றும், http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில், 15 லட்சத்து, ௨,௦௦௦ பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவு குறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் மற்றும் செயலர், நந்தகுமார் ஆகியோர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பிப்., 2018ல் நடத்தப்பட்ட, குரூப் - 4 தேர்வு, இந்தியாவிலேயே ஒரே நாள் தேர்வில், அதிக விண்ணப்பங்களை பெற்று, நடத்தப்பட்ட தேர்வு. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பதவிக்கு மூன்று பேர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவர். தற்போதைய நிலையில், தோராயமாக, 33 ஆயிரம்பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பட்டியல், விரைவில் அறிவிக்கப்படும்.ஆக.,16 முதல், 30 வரை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இ - சேவை மையங்களுக்கு சென்று, தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றை, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் ஆய்வு செய்த பின், அக்டோபரில் இட ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் நடக்கும்.இந்த தேர்வின் வழியே, வி.ஏ.ஓ., பதவியில், 494 காலியிடங்கள் உட்பட, பல்வேறு பதவிகளுக்கான, 9,351 இடங்கள் நிரப்பப்படும்; இடங்களின் எண்ணிக்கை, மாறுதலுக்குரியது என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, தற்போது கூடுதலாக, 1,929 இடங்கள் நியமன பட்டியலில் சேர்ந்துள்ளன.வி.ஏ.ஓ., - 1,107; பிணையமற்ற இளநிலை உதவியாளர் பதவி, 4,722; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர் பதவி, 226; வரிவசூலிப்பாளர், 52; தட்டச்சர், 3,974; சுருக்கெழுத்தர், 931; கள ஆய்வாளர், 102 மற்றும் வரைவாளர், 156 என, 11 ஆயிரத்து, 270க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த எண்ணிக்கையும், கவுன்சிலிங் நடக்கும் வரை மாற வாய்ப்புள்ளது. 86 சதவீதம், 'பாஸ்'பெண்கள் அமோகம் குரூப் - 4 தேர்வில், 17.53 லட்சம் பேர் பங்கேற்றதில், 15.02 லட்சம் பேர், அதாவது, 86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்களில், 7.97 லட்சம் பேரும்; ஆண்களில், 6.28 லட்சம் பேரும், மூன்றாம் வகை பாலினத்தில், 35; மாற்று திறனாளிகள், 17 ஆயிரம்; விதவைகள், 5,000 மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், 2,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தட்டச்சர் பதவிக்கு, 74 ஆயிரத்து, 555 பேரும்; சுருக்கெழுத்தர் பதவிக்கு, 1,446 பேரும் தேர்ச்சி பெற்றனர். வி.ஏ.ஓ., உள்ளிட்ட மற்ற ஆறு வகை பதவிகளுக்கு, 14.26 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.குரூப் - 4 தேர்வில், சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்தவர்களில், திருநாவுக்கரசு என்பவர், மாநில அளவில், 14வது இடம் பிடித்துள்ளார். செல்வகுமார், 33; கிருத்திகா, 114 மற்றும் கோபி, 731 ஆகிய இடங்களை பெற்றுள்ளனர். திருப்பூரில் ஆச்சரியப்பட வைக்கும் அரசு பள்ளி :அர்ப்பணிப்புடன் அசத்திய தலைமை ஆசிரியை Posted: 31 Jul 2018 07:08 PM PDT விரிசல் விழுந்த சுவர், துர்நாற்றம் வீசும் கழிப்பறை, உடைந்த பெஞ்ச், புதர்கள் நிறைந்த வளாகம்... இவ்வாறு தான் அரசு பள்ளி இருக்கும் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கி உள்ளது, திருப்பூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளி. அதன் உட்கட்டமைப்பு வசதி, மாணவர்களை சுண்டி இழுக்கிறது.திருப்பூர், அனுப்பர்பாளையம், நேதாஜி வீதி, கவிதா லட்சுமி நகரில், மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. கடந்த, 2003ல் துவக்கப்பட்ட இப்பள்ளி, மாநகராட்சியின் வாரச்சந்தை, இறைச்சி கடை அருகே, 4 சென்ட் இடத்தில், 8க்கு, 12 அடி கட்டடத்தில் இயங்கி வந்தது.ஒரேயொரு வகுப்பறையில் தான், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடந்தது. அப்பகுதி மக்கள், இந்த பள்ளியில், தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், 22 மாணவர்களுடன் பள்ளி இயங்கியது. 4 சென்ட் நிலம் இந்நிலையில், 2008ல், பள்ளியின் தலைமை ஆசிரியையாக கற்பகம் பொறுப்பேற்றார். பள்ளியின் நிலையை பார்த்த அவர், மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பது, உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது என உறுதியேற்றார்.இதற்காக, வீடு வீடாகச் சென்றும், அங்குள்ள வர்த்தகர்களை சந்தித்தும், பள்ளி கட்டடம் கட்ட நிதி திரட்டினார். அனைவருக்கும் கல்வி திட்டம் வாயிலாக, எட்டு லட்சம் ரூபாய் நிதி பெற்று, கூடுதலாக, 4 சென்ட் இடம் வாங்கி, பள்ளியை விரிவுபடுத்தினார்.தொடர்ந்து, நான்கு வகுப்பறைகள், சமையல் அறை கட்டப்பட்டன. பள்ளியின் தரத்தை உயர்த்துவதை லட்சியமாக கொண்ட கற்பகம், அடுத்த கட்டமாக, பள்ளியை வண்ணமயமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். சொந்த பணம், 50 ஆயிரம் ரூபாயுடன், பொதுமக்களிடம் திரட்டியது என, மொத்தம், 1.75 லட்சம் ரூபாயில், பணியை துவக்கினார். முப்பரிமாண ஓவியம் பள்ளி சுற்றுச் சுவரில், விலங்குகள், உள்பக்கம், தலைவர்கள், மலர்கள், விளையாட்டு என அனைத்து ஓவியங்களும் வரையப்பட்டன. இவற்றில், பல ஓவியங்கள் முப்பரிமாண முறையில் வரையப்பட்டன. இந்த முயற்சிக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. பெஞ்ச், டெஸ்க், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், வகுப்பறை முழுவதும் ஸ்பீக்கர் என, ஒரு முன்னோடி பள்ளியாக, இப்பள்ளி மாறி விட்டது.மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு, வெற்றி கிடைத்துள்ளது. மெல்ல மெல்ல பள்ளி மேம்பாடு அடைவதை பார்த்த பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். இதனால், மாணவர்கள் எண்ணிக்கை உயர ஆரம்பித்து, இப்போது, 160 பேர் படிக்கின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் பனியன், பாத்திர தொழிலாளர்களின் குழந்தைகள். 'ஏசி' வசதியும் வருகிறது தலைமை ஆசிரியை கற்பகம் கூறியதாவது:நான் பணியில் சேர்ந்த போது, தினமும் மது பாட்டில்களை அகற்றிய பின்பே, பள்ளிக்குள் நுழைய வேண்டியிருந்தது. எப்படியாவது, பள்ளியை மாற்றிக் காட்ட வேண்டும் என உறுதி எடுத்தேன்.புத்தகத்தில் படிப்பதை, சுவரில் நேரில் காண முடிவதால், மாணவர்கள் மனதில் எளிதாக பதிய வைத்து கொள்கின்றனர். இப்பகுதி மக்கள், தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு அனுப்பாமல், இங்கே சேர்த்துள்ளனர். இதுவே மிகப்பெரிய வெற்றி. அடுத்ததாக, வகுப்பறைகளில், 'ஏசி' மற்றும் மைதானம் வசதி ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார். 'நெட்' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வு முடிவுகள் வெளியிடப்
பட்டுள்ளன.பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்
 பணியில் சேர்வதற்கு, மத்திய அரசின் சார்பில், சி.பி.எஸ்.இ., நடத்தும்,

'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, 'நெட்' 
தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்பட்டது. தேர்வில், 8.59 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இதன் முடிவுகளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 
நேற்று வெளியிட்டது. இந்த தேர்வில், உதவி பேராசிரியர் பணி தகுதிக்கு, 
52 ஆயிரம் பேரும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின், 
ஜே.ஆர்.எப்., ஆராய்ச்சி மாணவர் உதவி தொகை பெறும் தகுதிக்கு, 
3,900 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

'குரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு : 11,270 பேரை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., முடிவு

குரூப் - 4' தேர்வில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன், 2,000 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வின் வழியே, 11 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 9,351 பதவிகளுக்கு, குரூப் - 4 தேர்வு, இந்த ஆண்டு, பிப்., 11ல் நடத்தப்பட்டது. தேர்வில், மாநிலம் முழுவதும், 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள், ஐந்து மாதத்திற்குப்பின், நேற்று முன்தினம் வெளியாகின.முடிவுகள்,http://results.tnpsc.gov.inமற்றும், http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில், 15 லட்சத்து, ௨,௦௦௦ பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவு குறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் மற்றும் செயலர், நந்தகுமார் ஆகியோர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பிப்., 2018ல் நடத்தப்பட்ட, குரூப் - 4 தேர்வு, இந்தியாவிலேயே ஒரே நாள் தேர்வில், அதிக விண்ணப்பங்களை பெற்று, நடத்தப்பட்ட தேர்வு. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பதவிக்கு மூன்று பேர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவர். தற்போதைய நிலையில், தோராயமாக, 33 ஆயிரம்பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பட்டியல், விரைவில் அறிவிக்கப்படும்.ஆக.,16 முதல், 30 வரை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இ - சேவை மையங்களுக்கு சென்று, தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
அவற்றை, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் ஆய்வு செய்த பின், அக்டோபரில் இட ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் நடக்கும்.இந்த தேர்வின் வழியே, வி.ஏ.ஓ., பதவியில், 494 காலியிடங்கள் உட்பட, பல்வேறு பதவிகளுக்கான, 9,351 இடங்கள் நிரப்பப்படும்; இடங்களின் எண்ணிக்கை, மாறுதலுக்குரியது என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, தற்போது கூடுதலாக, 1,929 இடங்கள் நியமன பட்டியலில் சேர்ந்துள்ளன.வி.ஏ.ஓ., - 1,107; பிணையமற்ற இளநிலை உதவியாளர் பதவி, 4,722; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர் பதவி, 226; வரிவசூலிப்பாளர், 52; தட்டச்சர், 3,974; சுருக்கெழுத்தர், 931; கள ஆய்வாளர், 102 மற்றும் வரைவாளர், 156 என, 11 ஆயிரத்து, 270க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த எண்ணிக்கையும், கவுன்சிலிங் நடக்கும் வரை மாற வாய்ப்புள்ளது.

86 சதவீதம், 'பாஸ்'பெண்கள் அமோகம்

குரூப் - 4 தேர்வில், 17.53 லட்சம் பேர் பங்கேற்றதில், 15.02 லட்சம் பேர், அதாவது, 86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்களில், 7.97 லட்சம் பேரும்; ஆண்களில், 6.28 லட்சம் பேரும், மூன்றாம் வகை பாலினத்தில், 35; மாற்று திறனாளிகள், 17 ஆயிரம்; விதவைகள், 5,000 மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், 2,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தட்டச்சர் பதவிக்கு, 74 ஆயிரத்து, 555 பேரும்; சுருக்கெழுத்தர் பதவிக்கு, 1,446 பேரும் தேர்ச்சி பெற்றனர். வி.ஏ.ஓ., உள்ளிட்ட மற்ற ஆறு வகை பதவிகளுக்கு, 14.26 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.குரூப் - 4 தேர்வில், சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்தவர்களில், திருநாவுக்கரசு என்பவர், மாநில அளவில், 14வது இடம் பிடித்துள்ளார். செல்வகுமார், 33; கிருத்திகா, 114 மற்றும் கோபி, 731 ஆகிய இடங்களை பெற்றுள்ளனர்.

SSLC Special Supplementary June 2018 - Provisional Mark Sheet for Individuals on 01.08.2018 at 2.00 pm

1/8/18

ஆசிரியர் தகுதி தேர்விற்கு தயாராவது எப்படி?

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணிநேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

தாள்-I : 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.
தாள்-II : 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கானதகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம், அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60வினாக்கள் அமைந்திருக்கும்.
ஆக, தாள்-I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்-II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டுதாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
தாள் - I எழுதுபவர்கள் 1 - 8 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாக தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம்.
தாள்- II எழுதுபவர்கள் 6 - 12 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாக தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ளகல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.
150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண்பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும்'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை.
தேர்வுக்குத் தயாராவதில் அத்தியாவசிய அடிப்படை மாதிரித்தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வுகளின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில்கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாகஉணர்ந்திருக்கிறார்கள். 
எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம்.
நன்றி : அல்லா பக்‌ஷ்

TNTET_அறிவியல்_பாடத்தை_படிக்கும்_போது_கவனிக்க_வேண்டியவை:-

அறிவியல் தாள் I - க்கு 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வரை படித்தால் மட்டுமே முழு மதிப்பெண்களைப் பெற முடியும். சூழ்நிலை அறிவியல் என்பதனால் சூழ்நிலை பற்றிய வினாக்கள் சற்று அதிகமாக கேட்கப்படும். இவை தவிர அடிப்படை அறிவியல் சம்பந்தமான அறிவைப் பெற்றிருப்பது அவசியம். உதாரணமாக, உயிரியலில் நமது சுற்றுச்சூழல், உடல் உறுப்பு மண்டலம், வேதியியலில் வேதிவினைகள், நிலக்கரி மற்றும் பெட்ரோலியம், இயற்பியலில் அளவீடுகள், அளவிடும் கருவிகள் போன்றவற்றைப் படித்திருக்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி பாடப் புத்தகமான, இரண்டு வருடத்திலும் உள்ள அறிவியல் கற்பித்தல் என்ற புத்தகத்தை முழுவதுமாகப் படித்தல் வேண்டும். 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை மிக எளிமையான பாடப்பகுதி இருக்கும் இவை தேவையில்லை என்று ஒதுக்கவேண்டாம்.
அறிவியல் தாள் - II க்குப் படிக்க வேண்டிய பாடப் பகுதி, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு.
உதாரணமாக: தாவரவியலில் - தாவர உலகம், செல் அமைப்பு
விலங்கியலில் - நுண்ணுயிரிகள் விலங்கு உலகம்
வேதியியலில் - வேதிவினைகள், கரிமச் சேர்மங்கள்
இயற்பியலில் - அளவீடுகள் ஒளியியல், ஒலியியல், மின்காந்தவியல் போன்றவற்றை மட்டும் நன்கு படித்தால் போதுமானது. 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு புத்தகம் முழுமையாக படிக்க வேண்டும்.. பி.எட். பட்ட வகுப்புகளை அறிவியல் கற்பித்தல் பாடப் புத்தகத்தை முழுமையாகப் படித்தல் வேண்டும். இவற்றிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும். இதன் மூலம் அறிவியல் கற்பித்தல் முறைகளை அறிய முடியும்.
"முந்தைய போட்டித் தேர்வின் மாதிரி வினாத்தாள்களை பயிற்சி செய்தல் வேண்டும்.

FLASH NEWS :-கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம்..உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
ஓய்வு பெற்ற நீதிபதிகள் 4 பேர் தலைமையில் கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள் விசாரிக்கப்படும் என்றும் 4 மண்டலமாக முறைகேடு விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முறைகேடு நிரூபிக்கப்பட்டால் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கூட்டுறவு தேர்தலை நடத்தினாலும் முடிவை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

வாட்ஸ்அப்பில் இனி க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசலாம்:

WhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்
வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் ( WhatsApp group call) அப்டேட் செயல்முறைக்கு வந்தது. வாட்ஸ்அப் செயலி உலகில் இருக்கும் அனேக திறன்பேசி பயனர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலி ஆகும்.
மிகவும் பயனுள்ளதாக இந்த செயலினையினை உபயோகிக்கும் வகையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அப்டேட்டினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சுமார் 2 பில்லியன்கள் மக்கள் பயன்படுத்தி வரும் இந்த வாட்ஸ்அப் செயலில் புதிதாக வந்திருக்கும் அப்டேட் தான் க்ரூப் கால்.
வீடியோ கால்கள் மற்றும் வாய்ஸ் கால்கள் இரண்டும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையேயான பேச்சு வார்த்தையினை மிகவும் எளிதாக்கும் வகையில் இருந்தது.

இந்நிலையில் க்ரூப் கால்கள் செய்வதற்கான வாய்ப்பினையும் அளித்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.
அந்நிறுவனத்தின் ப்ளாக் ஸ்பாட்டில் "உலகில் இருக்கும் பல்வேறு நாடுகளில் வழங்கப்படும் இணைய சேவைகள் பொறுத்து இது மாற்றம் அடையும்" என்று இது குறித்து குறிப்பிட்டுள்ளது.
வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் (WhatsApp group call) செய்வது எப்படி?
மற்ற வாட்ஸ்அப் காலினைப் போலவே ஒருவரை மட்டுமே அழைக்க முடியும்.
பின்னர் அதில் "ஆட் பார்ட்டிசிபெண்ட்" ( add participant ) என்ற வசதியினை பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களை இந்த குருப் காலில் இணைத்துக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்சனான 2.18.189 and v2.18.192 - ல் WhatsApp group call சரியாக இயங்குகிறதா என்று சரிபார்க்கப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது இந்த புதிய அப்டேட்.

மொத்தம் நான்கு நபர்கள் WhatsApp group video and audio call மூலம் ஒரே நேரத்தில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளலாம்

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுமன் ஆகியோர் கூறியதாவது, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 9,351 இடங்களுக்கு நடந்த தேர்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்தத் தேர்வினை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். முதல்முறையாக, குரூப் 4 பிரிவுடன் கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் இணைத்தே நடத்தப்பட்டது. இதன் மூலம் டிஎன்பிஎஸ்சிக்கு ரூ.11 முதல் ரூ.12 கோடி மிச்சமானது. நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்.

பிப்ரவரி மாதம் நடந்த குரூப் 4 தேர்வை எழுதிய 17 லட்சம் பேரில் சுமார் 14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை விட 3 மடங்கு அதிகமான அதாவது 30 ஆயிரம் பேரை கலந்தாய்வுக்கு அழைப்போம்.

தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தகவல் அனுப்பப்படும், அவர்கள் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம், அவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும்.

சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும். 30ம் தேதி வரை இ-சேவை மையங்களில் செய்யலாம். அது முடிந்ததும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும். நாங்களே அதனை பதிவிறக்கம் செய்து சரிபார்ப்போம். அது முடிந்த பிறகு அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவித்தன

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவை பிறப்பித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை என மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் வினவினார். மேலும் ஆகஸ்ட் 6-க்குள் அட்டவணையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

அதன்பின் உள்ளாட்சி தேர்தலை சென்ற வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. அதன்பின் மீண்டும் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கில் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங்கில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆதிக்கம் : கொங்கு மண்டல கல்லூரிகளுக்கு அதிக மவுசு

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கணினி அறிவியல் பாடப்பிரிவை, அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். முதல் சுற்றில், பெரும்பாலானோர், கொங்கு மண்டல கல்லுாரிகளுக்கு
முக்கியத்துவம் அளித்துள்ளனர்.அண்ணா பல்கலை சார்பில், 509 கல்லுாரிகளில் உள்ள, 1.70 லட்சத்து, 628 இடங்களுக்கு, பொதுப் பிரிவு ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. முதல் சுற்றில், 190 வரையில், 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, 10 ஆயிரத்து, 734 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், 7,347 பேர் மட்டும், கட்டணம் செலுத்தினர். அதிலும், 7,303 பேர், விருப்ப பாடப்பிரிவை பதிவு செய்தனர். இவர்களில், 6,768 பேர் மட்டும், இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை, அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகளான, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, குரோம்பேட்டை, எம்.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு, மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். திருநெல்வேலி, நாகர்கோவில், ஆரணியில் உள்ள, பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளிலும், அதிக இடங்கள் நிரம்பின.

மேலும், கோவை, பி.எஸ்.ஜி., - மதுரை தியாகராஜர் கல்லுாரி, கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை, அரசு தொழில்நுட்ப கல்லுாரி, கோவை குமரகுரு, ஈரோடு கொங்கு இன்ஜினியரிங் கல்லுாரி, கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்லுாரி ஆகியவற்றிற்கு, மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரிகளை பொறுத்தவரை, எஸ்.எஸ்.என்., கல்லுாரி, திருவள்ளூர், ஆர்.எம்.கே., கல்லுாரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லுாரி, சோழிங்கநல்லுாரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் கல்லுாரி ஆகியவற்றை, அதிகம் தேர்வு செய்துஉள்ளனர். மாணவர்கள் இடங்கள் பெற்றுள்ள பல கல்லுாரிகள், தன்னாட்சி கல்லுாரிகள்.

பாடப்பிரிவு வாரியாக, கணினி அறிவியலை, 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்துஉள்ளனர். அரசு ஒதுக்கீட்டு கட்டணத்தில், கணினி அறிவியல் கிடைக்காதோர், சுயநிதி கல்லுாரிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.சுயநிதி கல்லுாரிகளிலும், கணினி அறிவியல் இடம் கிடைக்காதோர், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவான, இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவை உறுதி செய்துள்ளனர். மெக்கானிக்கல் உட்பட மற்ற பாடப்பிரிவுகள், மெதுவாகவே நிரம்புகின்றன.
விருப்ப பட்டியல் முக்கியம்

ஆன்லைனில் விருப்ப பதிவு செய்த மாணவர்களில் முதல் 3,000 இடங்கள் வரை தரவரிசை பெற்றவர்களுக்கு அவர்கள் விருப்பம் தெரிவித்தமுதல் 10 பாடப்பிரிவுகளுக்குள் கிடைத்துள்ளது. தரவரிசையில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக 59வது விருப்ப பதிவு வரை இடங்கள் கிடைக்கவில்லை.ஒரு மாணவருக்கு அவர் பதிவு செய்த 60வது விருப்ப பாடமேகிடைத்துள்ளது. இதேபோல் 1,000 மாணவர்கள் வரை 30 முதல் 60வது விருப்பம் வரை பதிவு செய்த இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கில் 175 முதல் 190 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விருப்ப பதிவு நேற்று துவங்கியது. நாளை மாலை 5:00 மணிக்கு பதிவு முடிகிறது. இதில் மாணவர்கள் தங்கள் விருப்ப கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவை அதிகம் பதிவு செய்வது நல்லது.அதேநேரம் தங்களின் கட் ஆப் மதிப்பெண் நிலவரத்துக்கு எந்த கல்லுாரி கிடைக்கும் என்பதை சரியாக கணித்து பதிவுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
'ஹவுஸ் புல்' கல்லுாரி

முதல் சுற்றில் அண்ணா பல்கலையின் நேரடி மற்றும் உறுப்பு கல்லுாரிகளில் 2,080; அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில் 2,430 மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் 2,258 இடங்கள் நிரம்பியுள்ளன. சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரியில் 18 பாடப்பிரிவுகளில் 241 இடங்கள் மட்டுமே மீதம் உள்ளன. அதிலும் சிவில் இன்ஜி., மற்றும் மெக்கானிக்கல் இன்ஜி., பாடப்பிரிவில் தமிழ் வழியில் தலா 60 இடங்கள் வீதம் 120 இடங்கள் உள்ளன.

ஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா? ஒரு நபர் குழு ஆய்வு இன்று முடிகிறது

ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட, ஒரு நபர் கமிட்டி, இன்று அறிக்கை தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டசபையில், 
ஜனவரி மாதம், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றியபோது, 'கடுமையான நிதி நிலை நிலவி வரும் போதும், அரசு பணியாளர் ஊதிய திருத்தங்கள் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 'அவற்றை பரிசீலிக்க, அரசு, ஒரு குழுவை அமைக்கும்' என, அறிவித்தார். அதன்படி, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினம் துறை செயலர், சித்திக் தலைமையில், பிப்ரவரி மாதம், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. 'இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே, இன்று கமிட்டி சார்பில், அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு

பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழு அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், சத்துணவு, அங்கன்வாடி மையங்களில், 
தினமும் ஏதாவது ஒரு கலவை சாதம், முட்டை, குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் தரம் குறித்து, அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. 
அரசு முடிவு : இந்நிலையில், பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில், கண்காணிப்பு குழுக்களை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்ட குழுவுக்கு, கலெக்டர் தலைவராக இருப்பார்.முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மருத்துவத் துறை இணை இயக்குனர், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர், சமூகநல அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட, 12 பேர், உறுப்பினர் செயலர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஒன்றிய அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், குழந்தை நல வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் உட்பட, ஏழு பேர் குழுவில் இடம் பெறுவர். 
விசாரணை : குழுவினர், ஒவ்வொரு பள்ளியின் அடிப்படை தேவை குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். 90 நாட்களுக்கு ஒருமுறை கூடி, பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும், இரு பள்ளிகளில் உணவு மாதிரிகளை எடுத்து, பாதுகாப்பு அலுவலர், ஆய்வு கூட்டங்களுக்கு கொண்டு வர வேண்டும்.ஏதேனும் பள்ளிகளில், தரமில்லாத உணவு தயாரித்திருப்பின், ஆய்வு கூட்டத்துக்கு பின், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

12th - Government Model Question Paper Published by TNSCERT

28/7/18

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்

குழந்தைகளை எந்த முறையில் கண்டித்து வளர்க்கலாம்

கண் இமைகள் அடர்த்தியாக வளர 5 டிப்ஸ்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்

பல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை

குழந்தைகளின் முரட்டுத்தனத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு

உடல் ரீதியான துன்பங்களை போக்கும் துளசி

கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

சகோதரர்களுக்கு இடையேயான சண்டையை தவிர்க்க வழிகள்

தேனில் ஊற வைத்து நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்து கொள்வது எப்படி

மாணவர்கள் தேர்வின் முடிவுகளை ஏற்றுக் கொள்வதற்கான மனநல ஆலோசனைகள்

நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் சுக்கு கஷாயம்

கோடை வெயிலை சமாளிக்க பயனுள்ள டிப்ஸ்

பெண்களுக்கு முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலிக்கான முக்கியமான காரணம்… சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். அவை என்னவென்று பார்க்கலாம்

நல்லா படிக்கணுமா?

தேன்கூடு SCi 11

தேன்கூடு உளவியல் New

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

நமது ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாமே அறிந்துகொள்ளலாம் - YouTube

7 லட்சம் பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் திருட்டு. நடவடிக்கை கோரி கமிஷ்னர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் புகார்!!!

தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு TAB பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

Welfare Schemes for students: 20 J-directors in field work:

மாணவர்களுக்கான நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய 20 இணை இயக்குநர்களை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிறப்பித்துள்ள அரசாணை: பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்யவும், அரசால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கூர்ந்தாய்வு செய்யவும் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இணை இயக்குநர்களை மாவட்டங்களுக்குச் சென்று களப்பணியை மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அரசை கோரியுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமாகப் பரிசீலித்து அதை ஏற்கலாம் என முடிவு செய்து பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த அனைத்து இணை இயக்குநர்களையும் களப்பணி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசாணை (நிலை) எண். 152 பள்ளிக் கல்வி – தொழிற்கல்வி -பாடத்திட்டம் – மேல்நிலைக் கல்வி- 2018-19 ஆம் கல்வியாண்டு – தொழிற்கல்வி கலைப்பிரிவு -பாடப்பிரிவுகளில் உள்ள பாடப்பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் விற்பனையா போலீசில் அரசு தேர்வுத் துறை புகார்

தமிழக பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள், 'லீக்' ஆனது குறித்து, விசாரணை நடத்தும்படி, சென்னை போலீசில், அரசு தேர்வுத் துறை சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.'நீட்' தேர்வு எழுதிய சி.பி.எஸ்.இ., 
மாணவர்களின், தனிப்பட்ட விபரங்கள், தனியார், 'டேட்டா பேஸ்' நிறுவனங்களின் வழியாக, லீக் ஆனதாக, இணையதளம் ஒன்றில், சில தினங்களுக்கு முன், செய்தி வெளியானது. இதற்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம்மறுப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வி துறையில் படித்த, பிளஸ் 2 மாணவர்களின் தனிப்பட்ட விபரங்கள், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, மாவட்டத்துக்கு, 2,000 ரூபாய்; ஒரு மாணவர் விபரத்துக்கு, ஒரு ரூபாய் என விற்கப்படுகின்றன.இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றில், இரண்டு நாட்களுக்கு முன், செய்தி வெளியானது.எனவே, இதுபற்றி விசாரணை நடத்தும்படி, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதில், 'மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் முகவரியுடன், தனிப்பட்ட விபரங்களை, 'மார்கெட்டிங்' நிறுவனங்கள் விற்று வருகின்றன.'இந்த தகவல்கள், எங்கிருந்து பெறப்பட்டன; திருடப்பட்டதா அல்லது வேறு யாரிடமும், அதிகாரப்பூர்வமாக வாங்கப்பட்டதா என, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.முதற்கட்ட விசாரணையில், மார்கெட்டிங் நிறுவனங்கள் விற்கும் தகவல்கள், தேர்வுத் துறையிடம் உள்ள தகவல்கள் இல்லை என, தெரிய வந்துள்ளது. ஆனால், அவை, பள்ளி மாணவர்களின் விபரங்கள் என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.பல்வேறு வழிகளில், இந்த விபரங்கள் பெறப்பட்டிருக்கலாம் என்பதால், எங்கிருந்து பெறப்பட்டது என, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசின் தேர்வுத் துறை நடத்தும், அனைத்து தேர்வுகளின், 'டிஜிட்டல்' விபரங்கள் மற்றும், 'ஆன்லைன்' நடவடிக்கைகள், சென்னையில் உள்ள, 'கே லேப்ஸ்' என்ற நிறுவனத்தால் கையாளப்படுகின்றன.தேர்வுக்கான மதிப்பெண் பதிவு விபரங்கள், தமிழக அரசின் தகவல் தொகுப்பு மையம் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன.மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன், அவர்களது விபரங்கள், 'நாமினல் ரோல் என்ட்ரி' என்ற வகையில், ஒவ்வொரு பள்ளி வாரியாக, தேர்வுத்துறை வழங்கியுள்ள, 'சாப்ட்வேரில்' பதிவு செய்யப்படுகின்றன.இந்த தளங்களை செயல்படுத்தும் உரிமை மற்றும் கட்டுப்பாடுகள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், தேர்வுத்துறை மண்டல அலுவலகம், இணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றுக்கு உள்ளன.தேர்வு முடிவுகள் அனைத்தும், தனியார் நிறுவனம் வழியே, 'பல்க் எஸ்.எம்.எஸ்.,' என்ற, ஒட்டுமொத்த குறுஞ்செய்தியாக, தேர்வுத்துறை சார்பில், மாணவர்களுக்கு அனுப்பப்படும்.அந்த தனியார் நிறுவனத்துக்கு, மாணவர்களின் பெயர், பள்ளி, பதிவு எண், மொபைல் போன் விபரங்கள் வழங்கப்படும்.மேலும், அரசின் பல்வேறு துறைகளின் உதவி தொகைக்காக, மாணவர் விபரங்கள், அந்த துறைகளுக்கு, முழுமையாக வழங்கப்படுகின்றன.மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, தமிழக அரசு வழங்கும் உதவி தொகையை பெறுவதற்கு, 'பவர் பைனான்ஸ்' நிறுவனத்துக்கு, வங்கி கணக்கு எண்ணுடன், மாணவர் விபரங்கள் தரப்படுகின்றன.'பஸ் பாஸ்' வழங்குவதற்காக, மாணவர்களின் வீட்டு முகவரி உள்பட அனைத்து விபரங்களும், போக்குவரத்து துறைக்கு தரப்படுகின்றன.தனியார் நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி மையங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், இலவச பயிற்சி நிகழ்ச்சி, இலவச நீட் தேர்வு பயிற்சி, பல்வேறு அமைப்புகள் சார்பில், பரிசு, உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும், மாணவர் விபரங்கள் தரப்படுகின்றன.பல்வேறு கல்லுாரிகள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் போன்றவை, மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி தருவதாக கூறி, தகவல் திரட்டை பெறுகின்றனர்.பல்கலைகள், மத்திய அரசின் பல்வேறு உதவி தொகை வழங்கும் நிறுவனங்கள், மாணவர் தகவல் திரட்டை, பள்ளிக் கல்வித் துறையில் பெறுகின்றன.இவற்றிற்கு எல்லாம் மேலாக, அந்தந்த தனியார் பள்ளிகளிடம், அவரவர் மாணவர் விபரங்கள் உள்ளன. மேலும், பல்வேறு தனியார் மாணவர் நிகழ்ச்சிகளில், மாணவர்களே தங்களின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை தருகின்றனர்.இவற்றை எல்லாம் நிறுத்தி, ரகசியம் காப்பாற்றினால் மட்டுமே, மாணவர் விபரங்கள் ரகசியமாக இருக்கும். தற்போதைய நிலையில், தகவல் திரட்டு என்பது, வெளிப்படையானதாகவே உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி

அரசு பள்ளி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' எனப்படும், கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 3,000 பள்ளிகளில், டிஜிட்டல் பலகையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 
அமைக்கப்படுகின்றன.அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வித்தரத்தை உயர்த்த, பல்வேறு திட்டங்களை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து வருகிறது.இதன்படி, 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மூன்று மாதங்களில், டிஜிட்டல் பலகையுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.பாடங்களை ஒளிபரப்ப, தலா ஒரு புரஜக்டர் வழங்கப்படும். மேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு, 3,000, 'டேப்லட்'கள் வழங்கப்படும்.இதற்கான நடவடிக்கைகளை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் மேற்கொண்டுஉள்ளது. இவற்றுடன், ஒரு பள்ளிக்கு, 10 மாணவர் வீதம், மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்னும், 90 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் இயங்க துவங்கும்; ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள் நடத்தப்படும்.சென்னை உட்பட, எந்த முக்கிய நகரங்களில் இருந்தும், கல்வியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், 'டேப்லட்' பயன்படுத்தி, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், ஸ்மார்ட் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்த முடியும்.இந்த ஸ்மார்ட் வகுப்பில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில், 'ரைம்ஸ்' என்ற, பள்ளி குழந்தைகளுக்கான பாடல்கள், ஒழுக்க நெறி கதைகள் போன்றவையும், வீடியோவாக வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரசு

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் மாற்றம் செய்வதால், விண்ணப்பம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனை கவுரப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும், அவரது பிறந்த நாளான, செப்.,5ல், மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதை, தமிழகத்தில், 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்ற பெயரில், அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குகின்றனர்.இதற்கான விண்ணப்பம், ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல் வாரத்தில் வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, நல்லாசிரியர் விருதுக்கு, இன்னும் விண்ணப்பம் வழங்கப்படவில்லை. ஆசிரியர் தினத்துக்கு, ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், விண்ணப்ப வினியோகம் தாமதம் ஆகியுள்ளது. விருது வழங்குவதற்கான விதிகள், பெரிய அளவில் மாற்றப்படுவதாகவும், அதனால் தான், விண்ணப்ப அறிவிப்பு தாமதம் ஆவதாகவும், தகவல்கள் வெளியாகிஉள்ளன.ஏற்கனவே, தேசிய அளவில் ஆசிரியர் விருதுக்கு, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், நேரடியாக, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், மாநிலங்களுக்கான விருதுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழகத்தில் தனியாக, 'கனவு ஆசிரியர் விருது' அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், நல்லாசிரியர் விருதை, பல்வேறு நிபந்தனைகளுடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வெறும் அனுபவத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், ஆசிரியர்களின் திறமை, மாணவர்களை உருவாக்கிய விதம், ஒழுக்க நடைமுறைகள், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திய விதம் போன்றவற்றையும், ஆய்வு செய்ய உள்ளனர்.ஒவ்வொரு மாவட்டங்களிலும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் சிபாரிசுகளுக்கு இடம் தராமல், தகுதி அடிப்படையில், விருது வழங்கப்பட உள்ளது.விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையை புகுத்துவதுடன், விண்ணப்ப பரிசீலனையில், கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் தலையீடு இன்றி, பட்டியல் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அரசாணை (நிலை) எண். 152 பள்ளிக் கல்வி – தொழிற்கல்வி -பாடத்திட்டம் – மேல்நிலைக் கல்வி- 2018-19 ஆம் கல்வியாண்டு – தொழிற்கல்வி கலைப்பிரிவு -பாடப்பிரிவுகளில் உள்ள பாடப்பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

Special Teachers TRB Exam 2012-2016 C V List Published by TRB

27/7/18

Kalvi Sevai

மனிதராக பிறந்து.. மேதையாக உயர்ந்து.. மறக்க முடியாத மகானாக மறைந்த டாக்டர் கலாம்!

Abdulkalam death anniversary today
சென்னை: மறைந்த பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு நாட்டு மக்கள் அனைவராலும் - குறிப்பாக மாணவர்கள் மற்றும் குழந்தைகளாலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர் டாக்டர் கலாம். சிறந்த விஞ்ஞானியாக - அதிலும் குறிப்பாக அணுசக்தி துறையின் ஆற்றல் மிக்க வல்லுனராக - தேசத்தின் திறமைமிக்க நிர்வாகியாக - எதிர்காலத்தின் எழிலார்ந்த இந்தியாவிற்காக தினம் தினம் கனவு காணும் தேசபக்தராக திகழ்ந்தவர் டாக்டர் கலாம். இந்திய திருநாட்டின் முதல் குடிமகனாக - ஜனாதிபதியாக - பதவி வகித்த 5 ஆண்டுகளும் மறக்க முடியாதவை. குடியரசு தலைவர் மாளிகையை "மக்கள் மாளிகை"யாக மாற்றி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் கலாம். ஜாதீய பலமோ - மதத்தின் பின்பலமோ - கோடீஸ்வர பின்னணியோ இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இந்தியாவின் கடைகோடியில் பிறந்து - குடியரசு தலைவர் வரை சொந்த உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்தவர் டாக்டர் கலாம். விடியற்காலையில் விழித்தெழுந்து, வீடு வீடாக செய்தித்தாள்களை விநியோகித்து - தமிழ்மொழியில் பயின்று - விஞ்ஞான மேதையாக வளர்ந்தவர் டாக்டர் கலாம். குடியரசு தலைவராய் திகழ்ந்த காலத்தில் உலக நாடுகளிலும், அனைத்துலக அமைப்புகளிலும் அபாரமான சிந்தனைகளுடன் அற்புதமாய் உரையாற்றி அறிஞர் பெருமக்களையே அசத்தியவர் டாக்டர் அப்துல் கலாம். தனது ஆற்றல் மிக்க உரைகளால் மறைந்த வி.கே.கிருஷ்ணமேனனுக்குப் பிறகு உலக நாடுகளை தனது சிந்தனை மிக்க உரைகளால் இந்தியாவையே நிமிர வைத்தவர் அப்துல்கலாம். பதவியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு தன் கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து பாடுபட்டவர் டாக்டர் அப்துல் கலாம். நாட்டை பற்றியும், எதிர்காலம் குறித்தும் இளைஞர்களுக்கு ஏராளமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், வழங்கியவர் டாக்டர் அப்துல்கலாம். இதுவரை எல்லா குடியரசு தலைவர்களும் ஓய்வுபெற்ற பிறகு, உண்மையாகவே ஓய்வு பெற்று பொதுவாழ்விலிருந்து ஒதுங்கியே வாழ்ந்தாலும் ஓய்வு பெறாமல் பொதுவாழ்விற்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர் டாக்டர் கலாம். தேசத்தின் மிக முக்கிய இரண்டு பிரச்சனையான முல்லை பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனைக்கு மிக முக்கிய ஆலோசனைகளையும் மகத்தான தீர்வுகளையும் முன்வைத்தவர் டாக்டர் கலாம். 100 கோடி மக்களின் அதிகாரப்பூர்வ அதிபர் என்ற உயர் பதவியில் இருந்தும் கூட சாதாரணமாகவும், இயல்பாகவும் நேசப்பூர்வமாகவும் மாணவர்களோடும், குழந்தைகளோடும் உரையாடிய உயர்ந்த உள்ளம் உடையவர் டாக்டர் கலாம். உடம்பில் ஓடும் ஒவ்வொரு ரத்தத் துளியிலும் தேசபக்த உணர்வை இழைத்து கொண்டு மக்கள் ஜனாதிபதியாக மலர்ந்தவர் டாக்டர் கலாம். இளைஞர்களும், மாணவர்களும் தடுமாறி விழும்போதெல்லாம் அவர்களை தன் பொன்மொழிகளால் இன்றுவரைதாங்கி பிடித்து வரச் செய்பவர் டாக்டர் கலாம் குழந்தைகளுக்கு நேருவாகவும், பெரியவர்களுக்கு நவீன காந்தியாகவும் திகழ்ந்தவர் டாக்டர் கலாம். இப்படிப்பட்ட மகான்மேல் ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை ஒரு துரும்பளவுகூட ஒருவரும் எக்காலமும் மீது சுமத்த முடியாது. ஏனெனில் இவர் அரசியல்வாதி இல்லை!

SCERT - 2 Days Training For PG Teachers - Dir Proc

ஆசிரியர்கள் ,தலைமை ஆசிரியர்களின் -கல்விப்பணி திருப்திகரமாக இல்லை யெனில் ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தம் -முதன்மைக் கல்வி அதிகாரி எச்சரிக்கை

No automatic alt text available.

இனி தனியார் பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை??? அரசாணைவெளியிட்ட தமிழக அரசு!

ஆங்கில வழி கல்வி என்ற முறையை தனியார் பள்ளிகள் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுகொண்டு இருந்தன. இதனால் தமிழக அரசு பள்ளிகளின், தமிழ் வழி கல்வி முறையை புறக்கணித்து, தமிழக மக்கள் ஆங்கில மோகம் கொண்டு தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தனர். 


இதனை பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளிகள்,அதிகபட்ச கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வந்திருந்தது.இதனை அடுத்து தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விமுறை சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தமிழ்வழி கல்விமுறையில் நிறைய மாற்றங்களையும் கொண்டுவந்தது. இதற்க்கு நல்ல வரவேற்பு பெருகவே, அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்கஅனுமதி கோரி விண்ணப்பித்தது.

இதற்கிடையே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கெனவே அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்தார்.இந்நிலையில், நேற்று அதற்கான அரசாணையை தமிழக அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக வெளியிட்டுள்ளார்.

 அந்த அரசாணையில், ''ஆங்கில வழி கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியை விரிவுபடுத்தப்பட உள்ளதாக'' தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ''ஆங்கில வழி பிரிவுகளில் பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

ஆங்கில வழியில் பாடத்தை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பதைஉறுதிப்படுத்த வேண்டும். ஆங்கில வழி கல்வி கோரும் பள்ளிகளில் 50 சதவீத பிரிவுகள் கட்டாயமாக தமிழ் வழி பிரிவுகளாக இருக்க வேண்டும்''. உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த அரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE - 214 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்றவர்களுக்கு, 1.5 கோடி விடைத்தாள்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் திருத்தப்பட்டன.இவற்றில், 66 ஆயிரத்து, 876 பேர், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.

 இதில், 4,632 பேருக்கு மட்டும், மறுமதிப்பீட்டில் மதிப்பெண்கள் மாறின.இந்நிலையில், மதிப்பெண்கள் மாறிய மாணவர்களுக்கு, ஏற்கனவே விடைத்தாள் திருத்தியவர்களின் பட்டியலை, சி.பி.எஸ்.இ., சேகரித்தது. இதில், மதிப்பீட்டில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள்,  'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாகச் சீரமைப்பா ? கூடுதல் பணிச்சுமையா ? ஓர் விரிவான பார்வை

வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் மத்திய அரசு தீவிர பரிசீலனை

வதந்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் ஆப் எனப்படும் தகவல் பரிமாற்ற சேவையை, உலகம் முழுவதும், 130 கோடி பேர், பயன்படுத்தி வருகின்றனர். நம் நாட்டில் மட்டும், 20 கோடி பேர், வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர்.இதன் வாயிலாக, தவறான தகவல்களும், வதந்திகளும் எளிதில் பரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, நாடு முழுவதும், பல அப்பாவிகள் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள், சமீபத்தில் நடந்தன.இதையடுத்து, வதந்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, வாட்ஸ் ஆப் நிர்வாகத்துக்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலர், அஜய் பிரகாஷ் சாஹ்னியை, வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மாத்யூ ஐடிமா, நேற்று சந்தித்து பேசினார்.வாட்ஸ் ஆப் வாயிலாக வதந்திகள் பரவுவதை, உடனடியாக கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து, இருவரும் விவாதித்தனர்.அப்போது, வாட்ஸ் ஆப் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்ததாக, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில், வாட்ஸ் ஆப் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள், எங்கு பாதுகாக்கப்படும் என்பதில், மத்திய அரசு அதிக அக்கறை காட்டியதாக கூறப்படுகிறது.தகவல்கள் அனைத்தும், இந்தியாவில் தான்பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை, மத்திய அரசு முன் வைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

26/7/18

ஜூலை 27 இரவில் எப்போது தொடங்கும் சந்திர கிரகணம்?



வெள்ளி இரவு தொடங்கி சனிக்கிழமை காலை 4 மணி வரை நீடிக்கும் இரட்டை சந்திர கிரகணங்கள்

Lunar Eclipse 2018 Date and Time: இந்த நூற்றாண்டின் அதிசய நிகழ்வான மிக நீளமான சந்திர கிரகணம் வரும் வெள்ளிக் கிழமை இரவு நடைபெற இருக்கிறது.

வெள்ளி இரவும் சனிக்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் முதல் சந்திர கிரகணம் முழுதாக 103 நிமிடங்கள் வரை நிகழும்.

இந்த நிகழ்வின் போது, ப்ளட் மூன் என்ற நிகழ்வும் நடைபெற உள்ளது. அதாவது சூரியனுக்கும், நிலவிற்கும் நடுவில் பூமி பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் தெரியும்.

Chandra Grahan 2018 Date, Timing in India and Significance of The Lunar Eclipse

பிளட் மூன் என்றால் என்ன? 

இந்தியாவில் இந்த அதிசய நிகழ்வினை பார்ப்பதற்கான நேரம் எது?

நிலவின் மீது பூமியின் நிழல் விழும் நிகழ்வினை அம்புரா என்று அழைப்பார்கள். இந்த நிகழ்வு வரும் வெள்ளி இரவு, இந்திய நேரப்படி, சரியாக 11.44 நிமிடங்களுக்கு நிகழ ஆரம்பிக்கும்.

இந்தியாவில் எங்கிருந்து இந்த சந்திர கிரகண நிகழ்வினை காணலாம்?

இந்தியாவில் இந்த நிகழ்வினை டெல்லி, புனே, மும்பை, மற்றும் இதர நகரங்களிலும் காண இயலும். ஆனால், இது பருவமழை காலம் என்பதால் மழை பெருவதற்கான வாய்ப்புகளும் இதில் அதிகம். சனிக்கிழமை அதிகாலை 2.43 நிமிடங்களுக்கு பின்னர், மெதுவாக புவியின் நிழலில் இருந்து வெளிவர ஆரம்பிக்கும்.

இரண்டு சந்திர கிரகணங்கள்

இந்த நிகழ்வில் எக்கச்சக்க அதிசயங்கள் நிகழ உள்ளன. மிக நீளமான சந்திர கிரகணம், ப்ளட் மூன், தொடர்ச்சியாக இரண்டு சந்திர கிரகணங்கள் நடைபெற இருக்கிறது.

இரண்டாவது சந்திர கிரகணம் அதிகாலை 2.43 நிமிடங்களுக்கு ஆரம்பித்து 3.49 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு




🏀அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன


 🏀தேர்வு கால விடுமுறை மற்றும் பள்ளி திறக்கும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது


🏀பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்ற பின், தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. பிளஸ் 1க்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது


🏀இதைத்தொடர்ந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடக்கும் தேதிகள், பள்ளி துவங்கிய நாளே அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதிகளும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்டன


🏀நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது தேர்வுகள் தேதி, முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன


இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், அனைத்து பள்ளிகளுக்கும், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் கையேட்டை அனுப்பியுள்ளார்


 இதில், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன


தேர்வு கால அட்டவணைவகுப்பு காலாண்டு அரையாண்டு இறுதி தேர்வு


1 முதல் 8 வரை செப்.17 - 22 டிச.17 - 22 ஏப்., 10 - 18


9 முதல் பிளஸ் 2 வரை செப்.10 - 22 டிச.10 - 22 ஏப்., 8 - 18


தேர்வு விடுமுறை

செப்.23-அக்.2

 டிச.23 - ஜன.1

 ஏப்., 19 - ஜூன் 2

மாணவர் தன் விவரப்படிவம் 2018-19:

மாணவர்களின் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை

தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கான தேர்வு கால அட்டவணை (மாறுதலுக்குட்பட்டது)

மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள்:

மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய 20 வழிமுறைகள்


ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும்
எழுத வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அதனால், இனி பள்ளி, கல்லுாரி படிப்பில் பெறும் மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது.


ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்'  தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவிப்பின்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிகளுக்கு, தகுதி தேர்வான, 'டெட்' கட்டாயம் ஆகியுள்ளது.தமிழகத்தில், 2012ல், டெட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர், பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படித்திருப்பதுடன், கூடுதலாக, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பள்ளி, கல்லுாரி கல்வி சான்றிதழ் அடிப்படையிலான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையால், பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு, வேலை கிடைப்பதில் பிரச்னை இருந்தது.எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதிய அரசாணை

இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 'டெட்' தேர்வு மட்டுமின்றி, கூடுதலாக போட்டி தேர்வும் நடத்தப் படும். போட்டி தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என,
தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்த அரசாணையை, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ளார்.அதன் விபரம்:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன் படி, டெட் தேர்வில், தேர்ச்சிபெற்றவர்களையே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.டெட் தேர்வில், அதிக தரம் பெற்றவர்களை, இனவாரி சுழற்சியில், ஆசிரியர் பணிக்கு நியமிக்கும்போது, அதே தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றவர்களும், தங்களுக்கு ஆசிரியர் பணி வேண்டும் என, கோரிக்கை விடுக்கின்றனர்.இந்த நிலையை மாற்ற, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளது போல, டெட் தேர்வு என்பதை தகுதி தேர்வாக நடத்தி விட்டு, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, தனியாக போட்டி தேர்வு நடத்தலாம்.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், இந்த தேர்வில் பங்கேற்க நிபந்தனை விதிக்கலாம் என, பொதுப்பள்ளி கல்வி வாரியம் பரிந்துரைத்தது.இந்த பரிந்துரைகளை, அரசு ஆய்வு செய்ததில், சில விபரங்கள் பரிசீலிக்கப் பட்டன.டெட் தேர்வின் தேர்ச்சி என்பது, ஏழு ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது என்ற நிலையில், வெயிட்டேஜ் முறையில் பின்தங்கி யவர்கள், டெட் தேர்விலா வது அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, மீண்டும் மீண்டும், டெட் தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதனால், தேர்வர் களுக்கு சிரமம் ஏற்படுகிறது.விண்ணப்பதாரர்களின் கல்விசான்றிதழ் அடிப்படையில், வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பின்பற்றுவதால், பல ஆண்டுகளுக்கு முன், அடிப்படை கல்வித் தகுதி பெற்றவர்கள், சமீபத்தில் படித்தவர்களை விட, வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவாக பெறும், முரண்பாடான நிலை ஏற்படுகிறது.மேலும், ஆண்டுதோறும் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் வேறுபடுவதால், வெயிட்டேஜ் முறையின் படி,தரவரிசை பட்டியல்
தயாரிப்பதில், தேர்வு நடத்தும் அமைப்புக்கும், இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

'வெயிட்டேஜ்' இனி இல்லை


எனவே, ஆந்திரா போன்ற மாநிலங்களில், இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. டெட் தேர்வுடன், போட்டி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.இந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சில முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வை தனியாகவும் நடத்தலாம் என, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

விதிமுறை


போட்டி தேர்வை எழுது வதற்கு விண்ணப்பிப்பவர்கள், டெட் தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி, விதிமுறைப்படி காலியிடங்களை நிரப்பும்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது

ஆதார் எண்ணை குறிப்பிடாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

ஆதார் எண்ணை குறிப்பிடாமல்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆதார் எண் கட்டாயம் என்ற வருமான வரித்துறை அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆதார் எண்ணை குறிப்பிடாமல் 2018-2019-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான கணக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

செய்முறை பயிற்சி அளிக்காத அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை நேற்று முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தினர். செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆய்வின்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இயற்பியல் பாடத்திற்கான செய்முறை பயிற்சிகள் அளிக்காதது தெரியவந்தது. அதேபோல், பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள 2.50 லட்சம் மதிப்பிலான கருவிகளை பயன்படுத்தி ‘ஸ்மார்ட் கிளாஸ்’ நடத்தாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இயற்பியல் பாட முதுகலை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உத்தரவிட்டார். மேலும், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, கட்டாயம் செய்முறை வகுப்புகளை நடத்தவும், அதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்

இலவச கல்வித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால் பள்ளியை மூடலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இலவச கல்வித் திட்டத்தில் மாணவர்களைச் சேர்ப்பதில் முறைகேடுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி டி.ராஜூ, தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அவரது மனு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர்களைச் சேர்க்க அவர்களது பெற்றோர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது என நாளிதழ்களில் செய்தி வெளியானது. மேலும், இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் தவிர புத்தகம், சீருடை உள்ளிட்ட செலவினங்களை பெற்றோர்கள் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதனால் ஏழைக் குடும்பங்கள் கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. இலவச கல்வித் திட்டத்தில் சேருபவர்களைக் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிப்பது இத்திட்டத்திற்கு எதிரானது. இலவச கல்வித் திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். எனவே இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாத பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இலவச கல்வித் திட்டத்தில் சேரும் மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இலவச கட்டாயக் கல்வித் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்வது அவசியம். இதில் முறைகேடுகள் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்று தொடக்கம்

தமிழகத்தில் பி.இ. ஆன்லைன் முதல் சுற்று கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கியது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர ஆன்லைன் கலந்தாய்வுப் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 1,06,105 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆன்லைன் கலந்தாய்வு மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
கலந்தாய்வு அட்டவணை: கலந்தாய்வுக்கு முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டிய தேதி, கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டிய தேதிகள், தேர்வு செய்த பொறியியல் கல்லூரியை தற்காலிகமாக உறுதி செய்தல், பொறியியல் கல்லூரி ஒதுக்கீட்டை இறுதியாக உறுதி செய்யும் தேதி, தேர்வு செய்த பொறியியல் கல்லூரிக்குச் சென்று சேர வேண்டிய தேதி ஆகியவை அண்ணா பல்கைலக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை 8,000 மாணவர்கள்: கடந்த 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி நள்ளிரவு வரை முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்புள்ள 10,000 மாணவர்களில், 8,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை முன்வைப்புத் தொகையைச் செலுத்தியுள்ளனர்.
நள்ளிரவு முதல் கல்லூரி தேர்வு: பிளஸ் 2 தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-இல் தொடங்கி, 200-க்கு 190 வரை எடுத்து முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பொறியியல் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை ஆன்லைனில் தேர்வு செய்யத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (ஜூலை 27) மாலை 5 மணி வரை தேர்வு செய்யலாம்.
உதவி மையங்களிலும்...இணையதள வசதியுடன் கணினி இல்லாத மாணவர்கள், புதன்கிழமை (ஜூலை 25) முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) வரை சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொறியியல் கல்லூரிகள், பாடப் பிரிவைத் தேர்வு செய்யலாம்.
தொடர்ந்து தேர்வு செய்த பொறியியல் கல்லூரியை ஜூலை 28, 29 தேதிகளில் தற்காலிகமாக உறுதி செய்தல், பொறியியல் கல்லூரியை ஜூலை 30-இல் இறுதி செய்தல், தேர்வு செய்த பொறியியல் கல்லூரிக்கு ஆக. 3-ஆம் தேதிக்குள் சென்று சேருதல் ஆகியவை முதல் சுற்று கலந்தாய்வு நடைமுறைகள்.
கவனமாகத் தேர்வு செய்வது நல்லது: ஆன்லைன் மூலம் அல்லது உதவி மையங்களுக்குச் சென்று பொறியியல் கல்லூரி, பாடப் பிரிவைத் தேர்வு செய்யும் மாணவர்கள் அதிக பொறியியல் கல்லூரிகளையும், பாடப் பிரிவுகளையும் தேர்வு செய்வது நல்லது. இவ்வாறு தேர்வு செய்யும்போது, தங்களது தேர்வுக்கான வரிசைப்படுத்துதலில் உரிய கவனத்தைச் செலுத்துவது அவசியம்'' என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
2-ஆவது சுற்று முன்வைப்புத் தொகை: இரண்டாவது சுற்றில் பங்கேற்க உள்ள 20,000 மாணவர்கள் புதன்கிழமை (ஜூலை 25) முதல் முன்வைப்புத் தொகையை வரும் 29-ஆம் தேதி வரை செலுத்தலாம். கட்-ஆஃப் மதிப்பெண் 190-க்குக் கீழ் 175 வரை உள்ள மாணவர்களுக்கு, பி.இ. ஆன்லைன் இரண்டாவது சுற்று கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது

பொறியியல் படிப்புக்கும் விரைவில் ‘நீட்’ தேர்வு?



சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா, திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

Published :  24 Jul 2018   09:21 IST
Updated :  24 Jul 2018   09:21 IST
செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலை யில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலை. தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா, திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலை. சார்பாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சுமார் 2470 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 86 மாணவர் களுக்கு பல் மருத்துவ பட்டமும், 85 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டமும் வழங்கப்பட் டது. மேலும், ஒவ்வொரு துறை யிலும் சிறந்து விளங்கிய 29 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தி யாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா கூறும் போது, “மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தகுதித் தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண் டில், அதாவது 2019 -ம் ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது” என்று தெரிவித்தார்.

அரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி!

அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.


 தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கலை அறிவியில் கல்வி பயில மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த கல்வியாண்டில் பொறியியல் கல்வியை விட அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதிலேயே மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது
இதனால் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கூடுதலாக 20 சதவீத இடம் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அதில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அதற்கேற்ப புதிய உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வந்தாலும் முழுமை பெறுவதில்லை. மாநிலத்தில் சுமார் 600 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கவுரவ விரிவுரையாளர்களும் இல்லை. இதனிடையே கடந்த 2016-17ம் ஆண்டில் ஆயிரத்து 863 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களும் நிரப்பப்படவில்லை. இவ்வாறாக சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு தேவைப்படுகின்றனர். இடையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 500 பேர் மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வும் அறிவிக்கப்படவில்லை.

சில அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் கெஸ்ட் லெக்சரர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் தற்காலிக ஆசிரியர்களை வைத்து சமாளிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவித்தபடி காலதாமதமின்றி ஆசிரியர்களை உடனே நியமிக்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆடி-18 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரியை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகையை உடனடியாக இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டள்ளது. ஆசிரியர்,

அரசு ஊழியர் என மாதச் சம்பளம் பெறுபவர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இத்தொகையானது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களின் வரி விலக்கு சேகரிப்பு கணக்கு எணணில் வரவு வைக்கப்படும். ஆனால் தற்பொழுது உள்ள நடைமுறைப்படி அவர்கள் இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு முறையில் வரியினை ஒவ்வொரு காலாண்டிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் சரியான நடைமுறையை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பின்பற்றாததால் வருமானவரித்துறையால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வரி செலுத்தவில்லையென எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

25/7/18

வனப் பயிற்சியாளர் பதவி: தேர்வு தள்ளிவைப்பு



வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:-

வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வுகள் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேதிகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற தேர்வு நடத்தும் அமைப்புகள் பல்வேறு தேர்வுகளை அறிவித்துள்ளன.

எனவே, வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வு தேதிகளை மாற்றியமைப்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்தது.

இதையடுத்து, வனப் பயிற்சியாளர் பதவிக்குரிய தேர்வு தேதிகள் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

2018-19 கல்வி ஆண்டு வேலை நாட்கள் ஒரு பார்வை:



ஜூன்:

விடுமுறை நாட்கள்

2,3,9,10,15,16,17,23,24,30 (10 நாட்கள்)

வேலை நாட்கள் 20

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

ஜூலை:

விடுமுறை நாட்கள்

1,7,8,14,15,22,29 (7 நாட்கள்)

சனி வேலை நாள் 21,28

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 20+24=44

ஆகஸ்ட் :

விடுமுறை நாட்கள்

4,5,11,12,15,18,19,22,25,26 (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி ஆகஸ்ட் 4

வேலை நாட்கள் 44+21=65 நாட்கள்

செப்டம்பர்:

விடுமுறை நாட்கள்

1,2,9,13,15,16,21 மற்றும் 23 முதல் 30 வரை (15 நாட்கள்)

சனி வேலை நாள் செப்டம்பர் 8

CRC பயிற்சி நாள் செப்டம்பர் 15

முதல் பருவத் தேர்வு

செப்டம்பர் 17 முதல் 22 வரை

முதல் பருவத் தேர்வு விடுமுறை

செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை

 (10 நாட்கள்)

வேலை நாட்கள் 65+15=80

அக்டோபர்:

விடுமுறை நாட்கள்

1,2,6,7,13,14,18,19,20,21,28 (11 நாட்கள்)

சனி வேலை நாள் அக்டோபர் 27

CRC பயிற்சி 
அக்டோபர் 6

வேலை நாட்கள் 80+20=100

நவம்பர்:

விடுமுறை நாட்கள்
3,4,6,10,11,17,18,21,24,25 (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 100+20=120 நாட்கள்

டிசம்பர்:

விடுமுறை நாட்கள்

1,2,8,9,15,16, 23 முதல் 31 வரை (15 நாட்கள்)

இரண்டாம் பருவத் தேர்வு நாட்கள்

டிசம்பர் 17 முதல் 22 வரை

இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை நாட்கள்

டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை.

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 120+16=136 நாட்கள்

ஜனவரி:

விடுமுறை நாட்கள்

1,5,6,12,13,15,16,17,19,20,26,27 (12 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 136+19=155 

பிப்ரவரி:

விடுமுறை நாட்கள்

2,3,9,10,16,17,23,24 (8 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 155+20=175 நாட்கள்

மார்ச்:

விடுமுறை நாட்கள்

2,3,9,10,16,17,23,24,30,31 (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 175+21=196

ஏப்ரல்:

விடுமுறை நாட்கள்

6,7,13,14,17,19 மற்றும் 21 முதல் 30 வரை (16 நாட்கள்)

மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 18 வரை

கடைசி வேலை நாள் ஏப்ரல் 20

கோடை விடுமுறை

ஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)

சனி வேலை நாள் ஏப்ரல் 20

CRC பயிற்சி நாட்கள்

ஏப்ரல்22,23,24,25,26, மற்றும் 29,30 (7 நாட்கள்)

பள்ளி வேலை நாட்கள் 196+14=210 நாட்கள்

ஆசிரியர் வேலை நாட்கள்


210+10 ( பயிற்சி) = 220 நாட்கள்

சனி வேலை நாட்கள்:

🌷ஜூலை 21,28

🌷செப்டம்பர் 8

🌷அக்டோபர் 27

🌷ஏப்ரல் 20

CRC பயிற்சி நாட்கள்:

🌷ஆகஸ்ட் 4

🌷செப்டம்பர் 15

🌷அக்டோபர் 6

ஏப்ரல் 22,23,24,25,26 மற்றும் 29,30

மொத்த பயிற்சி நாட்கள்
 10

பருவத் தேர்வுகள் விவரம்:

முதல் பருவத் தேர்வு

செப்டம்பர் 17 முதல் 22 வரை

விடுமுறை

செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை (10 நாட்கள்)

இரண்டாம் பருவத் தேர்வு

டிசம்பர் 17 முதல் 22 வரை

விடுமுறை

 டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)

மூன்றாம் பருவத் தேர்வு

ஏப்ரல் 10 முதல் 18 வரை

கோடை விடுமுறை

ஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)

பள்ளி இறுதி வேலை

நாள் ஏப்ரல் 20.

10 std மெல்ல கற்கும் மற்றும் சராசரி மாணவர்களுக்கான வழிகாட்டி!

SSA சார்பில் மாவட்ட திட்ட அலுவலகத்தில் District Co-Ordinator தேர்வு செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது:

ஒரே வங்கி கணக்கிற்குள் இனி "பீம்" மூலம் பணம் அனுப்ப முடியாது:-வரும் 1- ந்தேதி முதல் கெடுபிடி!

தமிழகம் முழுவதும் சொத்து வரி 50 - 100 சதவீதம் உயர்வு

சென்னை : தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகம்,முழுவதும்,சொத்து வரி,50 - 100 சதவீதம்,உயர்வு
இடத்திற்கேற்ப சொத்து வரி விதிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகிறது. முறைப்படி 2008க்கு பின் சொத்து வரி ஏற்றப்படவில்லை. சிலஉள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரிஅவ்வப்போது உயர்த்தப்பட்டது. பல பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்குபெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பான வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுத்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு சார்பில்அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இதன்படி குடியிருப்பு பகுதி, வாடகை குடியிருப்பு பகுதி, குடியிருப்பு அல்லாத பகுதி என மூன்று விதமாக சொத்து வரி விதிக்கப்படஉள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவீதம்; வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம்; குடியிருப்புஅல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் 'ஏ, பி, சி' என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, சதுர அடி முறையில் தனித்தனியே சொத்து வரி விதிக்கப்பட்டு உள்ளது.அவை அனைத்தும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. புதிய சொத்து வரி நடப்பு ஆண்டு முதல் வசூலிக்கப்படும்.
தி.மு.க.எதிர்ப்பு
வரி உயர்வுக்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி எம்.எல்.ஏ., சுப்பிரமணியன் அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய 3,500 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறை ஊழல்கள் அனைத்து துறைகளையும் விஞ்சி நிற்கிறது. அதை தடுக்க முடியாத அமைச்சரும் முதல்வரும் சொத்து வரியை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கை. சொத்து வரி உயர்த்தப்பட்டதும் உடனடியாக பாதிக்கப்படுவோர் வாடகை குடியிருப்புதாரர்கள் தான். 
மாநகராட்சி பகுதிகளோடு புதிதாக இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த விதமான புதிய வசதிகளையும் ஏற்படுத்தாமல் மாநகர் பகுதிகளுக்கு இணையாக சொத்து வரியை மட்டும் உயர்த்தியது கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர்கள் 01.08.2017அன்றையநிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரிஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்து பணநிரவல் செய்யப்பட்டமைபணியிலிருந்து விடுவித்த மற்றும் சேர்ந்த அறிக்கை பெறாப்படாதவர்கள்பட்டியல் அனுப்புதல் சார்பு CEO - செயல்முறைகள்!!

தனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞராகப் பதிவு செய்யலாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்றிருக்க வேண்டும்.
இப்படிப்புகளை தொலைதூரக் கல்வி வழியாகவோ அல்லது தனியாகவோ எழுதி தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தகுதியான படிப்புதான் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ராஜி உள்ளிட்ட சட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில், மாநில பாடத் திட்டத்தின்படி 10 அல்லது பிளஸ் 2 தேர்வுகளை எங்களில் சிலர் தனித் தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளோம். ஒரு சிலர் 10-ஆம் வகுப்பை முடித்த பிறகு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள என்ஐஓஎஸ்' எனும் தேசிய திறந்தவெளி பள்ளியில் 2 ஆண்டு படிப்பை முடித்துள்ளோம். பின்னர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் 3 ஆண்டு பட்டப்படிப்பை முடித்து, அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகம் மூலமாக 3 ஆண்டு சட்டப்படிப்பையும் படித்து முடித்துள்ளோம். நாங்கள் 10 அல்லது பிளஸ் 2 தேர்வை தனியாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதால், எங்களை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மறுக்கிறது.

எனவே, எங்களை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.தலைமை நீதிபதி விசாரணை: இந்த மனு மீதான விசாரணை தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முழுஅமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 10 மற்றும் பிளஸ் 2 மற்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இதே போன்று 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இப்படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் வழியாகப் பெற்றிருக்க வேண்டும். அந்த படிப்புகளை அவர்கள் தொலைதூரக்கல்வி வழியாகவோ அல்லது தனியாக எழுதியோ தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்யத் தகுதியான படிப்புதான்.

10, பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை உரிய வழிகளில் இல்லாமல் திறந்தவெளி பல்கலைக்கழங்கள் மூலமாகவோ நேரடியாகவோ படித்து பட்டம் பெற்றிருந்தால் அவர்கள் மட்டுமே வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய முடியாது. எனவே, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை தனியாகத் தேர்வு எழுதி தற்போது சட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ள, மனுதாரர்களான இந்த மாணவர்களை வழக்குரைஞர்களாக 3 மாத காலத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

9ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: 40 ஆண்டுகளில் இல்லாத புது முயற்சி

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல, தமிழக பள்ளி கல்வியிலும், 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பிளஸ் 1, பிளஸ் 2 தவிர, 10 வகுப்புக்கும், தொழிற்கல்வி, விருப்ப பாடமாக நடத்தப்படுகிறது.

ஒப்புதல்
இதை பின்பற்றி, தமிழ கத்திலும், இடைநிலை கல்வியில் முதன்முதலாக, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரும், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ.,வின் முன்னாள் இயக்குனருமான, ராமேஸ்வர முருகன், இந்த திட்டத்துக்கான கோப்பை தயாரித்து, மாநில அரசிடம் தாக்கல் செய்திருந்தார். அதற்கு ஒப்புதல் கிடைத்து உள்ளது.

இதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், முதற்கட்டமாக, 67 பள்ளிகளில், 9ம்வகுப்பிற்கு மட்டும், தொழிற்கல்வி பாடம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, பள்ளி அளவிலான தேர்வாக அல்லாமல், அரசின் பொது தேர்வுத்துறை வழியாக, தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு பின், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக சான்றிதழ் வழங்கப்படும்.

இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பின், மாநில அமைப்பாளர் ஜனார்த்தனன் கூறியதாவது:தமிழகத்தில், 1978 - 79ல், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு, அவை, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அமலுக்கு வந்தன.
வேலை வாய்ப்பு

ஆனால், இடைநிலைமாணவர்களுக்கும், தொழிற்கல்வி துவங்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. அதை நிறைவு செய்யும் வகையில், 9ம் வகுப்பில், தொழிற்கல்வி பாடம் அமலுக்கு வந்துள்ளது.இதில், தானியங்கி ஊர்தி பொறியியல், வீட்டு அலங்காரம் செய்தல், விவசாயம், அழகு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 

இந்த நடவடிக்கையால், உயர்கல்விக்கு செல்லாமல், பள்ளிப்படிப்பை மட்டும் முடிக்கும் மாணவர்களுக்கும், தொழில் திறனும், வேலை வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். மத்திய திட்டத்தை பின்பற்ற உத்தரவுதொழிற்கல்வி பாடத்தை, சி.பி.எஸ்.இ.,யை போல, தமிழக மாணவர்களுக்கு, விருப்ப பாடமாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

சி.பி.எஸ்.இ., பின்பற்றும், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் பாடத்திட்டப்படி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த மத்திய பாடத்திட்டத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது

பிளஸ் 2 துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வின் முடிவு, இன்று வெளியாகிறது.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, உடனடி துணை தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. 
இந்தத் தேர்வு முடிவு, http://www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில், இன்று வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வு முடிவில் சந்தேகம் உள்ளவர்கள், நாளை முதல் இரண்டு நாட்கள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு பயணமாகும் சேலம் அரசு பள்ளி மாணவர்

அரசு சார்பில், வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள, பண்ணப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,745 மாணவ - மாணவியர்
படிக்கின்றனர். இப்பள்ளியில், அரசு சார்பில், வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள, ஒன்பதாம் வகுப்பு மாணவர் மேகநாதன். சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவி ராகவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனத்துக்காக, தானியங்கி வேகத்தடை கட்டுப்பாட்டு கருவியை, மாணவர் மேகநாதன் கண்டுபிடித்துள்ளார். ஆம்புலன்ஸ் வேகமாக வரும் போது, வேகத்தடை, தானாக, சமமான சாலையாக மாறி விடும். பின், மீண்டும், வேகத்தடையாக மாறிவிடும்.போக்குவரத்து சிக்னலும், பச்சை விளக்குக்கு மாறி, மற்ற சிக்னல்கள் சிவப்பு விளக்குக்கு மாறிவிடும். மேலும், செல்லக்கூடிய மருத்துவமனைக்கு, முன்னதாகவே அலாரம் அடிக்கக்கூடிய வகையில் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளார்.பண்ணப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் கூறுகையில், ''பல்வேறு அறிவியல் கண் காட்சியில், மேகநாதன் வெற்றி பெற்றுஉள்ளார். ''சேலம் மாவட்டம், பெருமை கொள்ளும் வகையில், அவர் வெளிநாடு செல்ல தேர்வு பெற்றது, மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.மாணவர், எந்த நாட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

அரசாணை (நிலை) எண். 149 Dt: July 20, 2018 -பள்ளிக் கல்வி-தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது


12-ம் வகுப்பு முடித்ததும் பி.எட் பட்டதாரி ஆகலாம்- அடுத்த ஆண்டு முதல் புதிய கல்வித் திட்டம்

தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் மத்திய அரசு சில 
திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டு பி.எட் பட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்

பாராளுமன்றத்தில் இதன் மீதான விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார்

 ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது