யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/10/18

Amazon Festival Special Offer - ரூ.50,000 தள்ளுபடியுடன் 5 ஸ்மார்ட் டிவிகள் விற்பனை...!

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன் கோலாகல விற்பனை இன்று முதலே துவங்கிவிட்டது, ஆனால் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்தத் துவக்க விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் ப்ரிமே வாடிக்கையாளர்களுக்கு மட்டும், ஒரு நாள் முன்னரே அமேசான் நிறுவனம் தனது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனைக்கு முன்அனுமதி வழங்கியுள்ளது. பலராதரப்பட்ட தயாரிப்புகளுக்கு ஏராளமான சலுகைகளுடன் ஒரு நாள் முன்னரே அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


ரூ.50,000 வரை சலுகை

புதிதாக டிவி அல்லது ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், கட்டாயம் இந்த அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனை சலுகை பட்டியலைப் பார்க்க தவறிவிடாதீர்கள்.இந்த பெஸ்டிவல் சேல்ஸ் திட்டத்தில் அமேசான் நிறுவனம் ரூ.50,000 வரை சலுகை வழங்குவதுடன் ரூ.22,000 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்குகிறது.

பானாசோனிக் 49' இன்ச் 4K அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் எல்.இ.டி டிவி TH-49FX600Dஅமேசான் நிறுவனம் பானாசோனிக் 49' இன்ச் 4K அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் எல்.இ.டி TH-49FX600D டிவிகளுக்கு ரூ.46,010 வரை சலுகை வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் சந்தை விலை ரூ.99,000 ஆகும், தற்பொழுது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல்சேல் விற்பனையின் சலுகை விலையாக 52,990 என்று விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எக்ஸ்சேஞ் சலுகையாக ரூ.18,900 வழங்கப்படுகிறது.

பானாசோனிக் 55' இன்ச் எல்.இ.டி டிவி TH-55FX650Dபானாசோனிக் இன் இந்த மாடல் டிவி 32% சலுகையாக ரூ.41,910 விலை குறைக்கப்பட்டு ரூ.87,990 விற்கப்பட்டும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் ரூ.18,900 எக்ஸ்சேஞ் சலுகையும் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. 6 மணிக்கு மேல் ரூ.69,900க்கு விற்பனை செய்யப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சோனி 49' இன்ச் 4K அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் எல்.இ.டிடிவிசோனி நிறுவனத்தின் அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் டிவி ரூ.14,910 சலுகை வழங்கப்பட்டு இந்த பெஸ்டிவல் சேல்ஸ் கொண்டாட்டத்தில் வெறும் ரூ.69,990 என்ற விற்பனை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.84,900 என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் 32' இன்ச் 4 சீரிஸ் 32N4310 எச்.டி ரெடி எல்.இ.டி டிவிசாம்சங் 32' இன்ச் 4 சீரிஸ் 32N4310 எச்.டி ரெடி எல்.இ.டி டிவியின் அசல் விலை ரூ.33,900 இல் இருந்து ரூ.9000 சலுகை வழங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் கூடுதல் ரூ.9000 எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்கப்படுகிறது.

சாம்சங் 55' இன்ச் Q சீரிஸ் 55Q7FN 4K எல்.இ.டி ஸ்மார்ட் டிவிசாம்சங் நிறுவனத்தின் 55' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியா சந்தையில் ரூ.2,57,900 க்கு விற்கப்பட்ட இந்த மாடல் ஸ்மார்ட் டிவி தற்பொழுது ரூ.78,910 சலுகை வழங்கப்பட்டு வெறும் ரூ.1,78,990 க்கு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது

11/10/18

பள்ளியில், 'டிஜிட்டல்' வருகைப்பதிவு: பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் :

பள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவேடு முறை, விரைவில் அமலுக்கு வரும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சென்னை, போரூரில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 'ஸ்மார்ட்' வகுப்பு கட்டடத்தை, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.


அவர் அளித்த பேட்டி: இலவச சைக்கிள் மற்றும்
, 'லேப்டாப்' அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். இணையதள இணைப்புடன் கூடிய, ஐ.சி.டி., என்ற, கணினி முறை கல்வி வகுப்பு, 3,000 பள்ளிகளில், நவம்பர் இறுதிக்குள் அமைக்கப்படும்.அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், டிஜிட்டல் முறையில், வருகை பதிவேடு திட்டம் வர உள்ளது. சில பள்ளிகளில், பரீட்சார்த்த முறையில், அமலுக்கு வந்துள்ளது. எந்தெந்த பள்ளியில், இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என, முதல்வருடன் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும்.
ஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை, டிசம்பர் இறுதிக்குள் அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், தமிழக அரசின் நகரமைப்பு மற்றும் திட்டமிடல் துறையான, டி.டி.சி.பி., அங்கீகாரம் பெறாத கட்டடங்களில் உள்ள, தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு, மே, 2019 வரையில், ஓராண்டுக்கு அங்கீகார நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை, பள்ளி நிர்வாகிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார்.

வங்கக்கடலில் உருவான புயலுக்கு பெயர் 'டிட்லி' - வானிலை மையம் தகவல்!

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது. புதிய புயலுக்கு இந்திய வானிலை மையம் டிட்லி என்று பெயர் சூட்டியுள்ளது.
டிட்லி என பெயரிடப்பட்டுள்ள புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஒடிசா கோபால்பூருக்கு 530 கி.மீ தொலைவிலும், கிலிங்கப்பட்டிணத்திற்கு 480 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:  புதுச்சேரியில் வரும் 24 மணி நேரத்திற்கு மித மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மத்திய, வங்க அரபிக்கடலுக்கு அக்.13ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு


கடலூர், நாகை, பாம்பன் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு - கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு

கூகுள்’ தேடல் இணையதளம், தமிழரான
சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகிறது. இந்த இணையதளத்தின் ஒரு அங்கம் ‘கூகுள் பிள்ஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது பற்றி அந்த சமூக வலைத்தள நிறுவனத்தின் துணைத்தலைவர் பென் ஸ்மித் கூறும்போது, “இந்த தகவல் திருட்டு பற்றி, இதை உருவாக்கியவர்களுக்கு தெரியும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதில் இருந்து திருடப்பட்ட தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது” என்று கூறினார். ஆனால் இந்த தகவல் திருட்டு பற்றி ‘தி வால் ஸ்ரிரீட் ஜர்னல்’ பத்திரிகை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தி விட்டது.
இதையடுத்து ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடனடியாக மூடப்பட்டு விடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பென் ஸ்மித் கூறுகையில், “உபயோகிப்பாளர்களின் பரிமாற்றத்துக்கு தகுந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, 10 மாத காலத்தில் கூகுள் பிளஸ் மூடப்படும்” என்று குறிப்பிட்டார்.
‘’பேஸ் புக் சமூக வலைத்தள நிறுவனமும், தனது உபயோகிப்பாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு போனதால் சர்ச்சையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது

மாதம் ரூ.10,000க்கும் அதிகமாக ஊதியமா?: மத்திய அரசின் மருத்துவ காப்பீடு இல்லை :

மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும்
அதிகமாக இருந்தாலோ, பிரிட்ஜ், மோட்டார் சைக்கிள் சொந்தமாக இருந்தாலோ, அந்த குடும்பம், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு வரம்புக்குள்வராது.
பிரதமர் நரேந்திர மோடியால் அண்மையில் தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்பான தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஹெச்.ஏ.), மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
குடும்பம் ஒன்றின் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தாலோ, பிரிட்ஜ், மோட்டார் சைக்கிள் ஆகியவை சொந்தமாக இருந்தாலோ, அந்த குடும்பங்கள் மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு வரம்புக்குள் வராது

2, 3 அல்லது 4 எண்ணிக்கையில் நான்கு சக்கர வாகனங்கள், மீன்பிடி படகுகள், 3 அல்லது 4 சக்கர விவசாய வாகனம், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிக மதிப்பில் விவசாய கடன் அட்டை, தரைவழி தொலைபேசி இணைப்பு வைத்திருப்போர், அரசு ஊழியர், வருமான வரி, வர்த்தக வரி செலுத்துவோரும், விவசாயம் சாராத நிறுவனங்களும் இந்த வரம்புக்குள் வர மாட்டார்கள்.

2.5 ஏக்கருக்கும் அதிகமாக பாசன நிலம் மற்றும் பாசன உபகரணங்கள் வைத்திருப்போர், 5 ஏக்கர் அல்லது அதற்கு அதிகமாக பாசன நிலம் ஆகியவற்றை 2 அல்லது அதற்கும் அதிகமான பயிர் பருவங்களில் வைத்திருப்போர், 7.5 ஏக்கர் நிலம் மற்றும் பாசன உபகரணங்கள் வைத்திருப்போர் ஆகியோரும் தேசிய மருத்துவ காப்பீடு திட்ட வரம்புக்குள் வர மாட்டார்கள். இத்தகைய குடும்பத்தினரை தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து மாநிலங்கள் நீக்கிவிட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு :

உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது.

பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து,  இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி வெளியானதை தொடர்ந்து, தேர்வு நடத்துவதற்கான பணிகளில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், டெட் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இந்தத் தேர்வை, தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தாமல், தற்போது அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:ஏற்கனவே, தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்து காணப்படுகிறது. பழைய பாடத்திட்டப்படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால், தரம் இன்னும் சரியும். எனவே, புதிய பாடத்திட்டத்தின் படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால் தான், பணிக்கு வருவோர், சிறப்பாக பாடம் நடத்த முடியும்.இவ்வாறு கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

பல தரப்பினரும் கோரிக்கை விடுப்பதால், டெட் தேர்வுக்கு, தமிழக அரசின்புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனை

இது குறித்து, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி ஆகியோரிடம், டி.ஆர்.பி., தலைவர், ஜெயந்திமற்றும் உறுப்பினர் செயலர், உமா ஆலோசனை நடத்தியுள்ளனர்

அன்பார்ந்த பெற்றோர்களே., தங்களுடைய குழந்தைகள் இன்றைய கல்வி மாற்றத்திற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டுமா?

அதற்காகவே நாங்கள் QB365 App உருவாக்கியுள்ளோம்.
இந்த App மூலம் தங்கள் குழந்தைகளுக்கு நீங்களே ஒரு ஆசிரியராக செயல்பட்டு அவர்களுக்கு வழிகாட்டவும்,  வழி நடத்தவும் உதவுகிறது.
மேலும் புத்தக வினா இன்றி மேலும் பல கூடுதல் வினாக்கள் உடன் அவர்களை தயார் செய்ய இந்த செயலி முழுக்க முழுக்க பயன்படுகிறது. இதன் மூலம் தங்களுடைய குழந்தைகள் பள்ளியின் முதல் மாணவனாக திகழலாம்.
இந்த அரிய செயலியை பெற இந்த QB365 APPlink ஐ click செய்யவும்.

10/10/18





நீதிக்கதை

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்


அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது. மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.

ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன. சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது. சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன. அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது.
இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, “உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்துருப்பாய்?” என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. “ஏன் இந்த முடிவு?” என்றது சிங்கம். தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேடையடபடும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது. இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும். இல்லையென்றல் அனைவரையும் வேடையடிவிடுவேன் என்றது சிங்கம். அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது. ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது. அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது. சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சிங்கராசா” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது. என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது. அதற்கு “சிங்கராசா” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது. பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயல் துள்ளிகுதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூரியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது. முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம்.

10, 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு அதிரடி மாற்றம் இந்த ஆண்டு அமல்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, முன்கூட்டியே தேர்வு நடத்துதல் உள்ளிட்ட மாற்றங்கள், இந்த ஆண்டு அமலுக்கு வருகின்றன.
மத்திய இடைநிலை கல்வி பாடத்திட்டமான, சி.பி.எஸ்.இ., முறையை பின்பற்றும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதாவது, தொழிற்கல்வி பாடங்களுக்கு, ஏப்ரலுக்கு பதில், பிப்ரவரியில் தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற முக்கிய பாடங்களுக்கு, மார்ச்சில் நடத்தப்பட உள்ளன. தேர்வு முடிவுகள், மே மாதம் வெளியிடப்படும்.பிளஸ் 2 துணை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மதிப்பெண் வழங்க தாமதமாகும் போது, அவர்களால், அதே கல்வி ஆண்டில், கல்லுாரிகளில் சேர முடிவதில்லை. எனவே, டில்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, முன்கூட்டியே தேர்வுகள் நடத்தும் வகையில், புதிய மாற்றத்தை அமல்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, பிளஸ் 2வில், ஆங்கில வினாத்தாளில் மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இதுவரை, 40 கேள்விகள் இடம் பெற்ற நிலையில், ஐந்து கேள்விகள் குறைக்கப்பட்டு, இனி, 35 கேள்விகள் மட்டுமே இடம்பெறும். இதற்கான மாதிரி வினாத்தாள் பட்டியலை, cbseacademic.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இதற்கிடையில், 10ம் வகுப்புக்கு, 'தியரி' என்ற கருத்தியல் மற்றும் செய்முறை தேர்வில், தனித்தனியே, 33 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்ற விதி, நடைமுறையில் இருந்தது. கடந்த, 2017ல், 10ம் வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகமானதால், இந்த விதி தளர்த்தப்பட்டு, இரண்டிலும் சேர்த்து, 33 சதவீதம் மதிப்பெண் எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த ஆண்டும், இந்த சலுகை தொடருமா என, சி.பி.எஸ்.இ., தரப்பில், அதிகாரபூர்வ தகவல் இல்லாததால், மாணவர்கள் இடையே, குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கலாம் பிறந்த நாளில் பள்ளிகளில் தண்ணீர் பரிசோதனை போட்டி

சென்னை: மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாளை ஒட்டி, பள்ளி மாணவர்களுக்கு, தண்ணீர் பரிசோதனை திறன் போட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி, மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாள், வரும், 15ம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
மத்திய - மாநில அரசுகள் சார்பில், பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகளில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தேசிய அளவில், தண்ணீர் பரிசோதனை திறன் போட்டியை, மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., வழியாக, பள்ளிகளில், இந்த போட்டிகள் நடத்தப்படும். தமிழகத்தில், மொத்தம், 402 பள்ளிகளில், கலாம் பிறந்த நாளில், அறிவியல் மற்றும் தண்ணீர் பரிசோதனை திறன் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளி கல்வி இணை இயக்குனர், நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட பள்ளி களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், '402 வட்டாரங்களில், தலா, ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு, தேசிய போட்டிக்கு அனுப்பப்படும்' என, குறிப்பிட்டுள்ளார்.இந்த திட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஏரி அல்லது குளத்து நீர், நிலத்தடி நீர் என, மூன்று வகையான நீர் மாதிரியை பயன்படுத்தி, மூன்று வகை பரிசோதனைகள் செய்ய வேண்டும். ஒன்பது முதல், பிளஸ் 2 வரையில் உள்ள மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம்

டிஸ்லெக்சியா' மாணவரை நீக்க தடை

சென்னை: 'டிஸ்லெக்சியா என்ற, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை, கட்டாயப்படுத்தி, பள்ளியில் இருந்து வெளியேற்ற கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
'டிஸ்லெக்சியா' மாணவர்கள் விஷயத்தில், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்த திட்டப்படி, முதல் கட்டமாக, சென்னை மாவட்டத்தில், 1,088 ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில், சிறப்பு பயிற்சிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்கான நிகழ்ச்சி, ராயப்பேட்டை, வெஸ்லி மேல்நிலை பள்ளியில் நடந்தது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர், அறிவொளி பேசியதாவது: மாணவர்களின் அடிப்படை திறனை புரிந்து, அதை வெளிக்கொணர வேண்டும். கற்றல் குறைபாடு இருந்தால், அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், அதற்கான பயிற்சி தருவது முக்கியம். தனியார் பள்ளிகளில், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கணக்கெடுத்ததில், ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தபட்சம், 20 சதவீதம் பேர் படிக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, ஆசிரியர்களோ, சம்பந்தப்பட்ட பள்ளிகளோ, பயிற்சி தருவதில்லை.மாறாக, மதிப்பெண் குறைவாக வாங்கினால், அவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் கொடுத்து, கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். இனி, எந்த பள்ளியும், கற்றல் குறைபாடுக்காக, மாணவர்களை வெளியேற்ற கூடாது. அவர்களுக்கு, அரசின் சார்பில், இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும், டிஸ்லெக்சியா மாணவர்களுக்கான ஆசிரியர்கள், கட்டாயம் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினா

11.57 லட்சம் மாணவர்களுக்கு கையடக்கக் கணினி வழங்க திட்டம்: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 11.57 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கையடக்கக் கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 285 மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கி அவர் மேலும் பேசியது: தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 82 லட்சம் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளில் 41 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றன. நாங்கள் உங்களுடன் போட்டியிடுவதாகக் கருதக்கூடாது. உங்கள் பணி இன்னும் சிறக்கத் தேவையான உதவிகளை அரசு செய்து தரும்.
மெட்ரிக் பள்ளிகளுக்கு மூன்றாண்டு காலத்துக்கு அங்கீகாரம் வழங்கலாம் என கருதி அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், சிபிஎஸ்இ- சுயநிதிப் பள்ளிகளின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தடையாணை உள்ளதால், தற்போது ஓராண்டு காலத்துக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழகத்தில் 500 சுயநிதிப் பள்ளிகளுக்கும் தற்காலிக அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இணையதள வசதியை அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிசம்பர் மாத இறுதிக்குள் மாநிலத்தில் 672 பள்ளிகளில் அடல் அறிவியல் ஆய்வகத் திட்டத்தின் கீழ் தலா ரூ.20 லட்சத்தில் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. மத்திய அரசு நடத்தும் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் 132 கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருந்தாலும் 2.85 லட்சம்பேர்தான் பட்டயக் கணக்காளர்களாக உள்ளனர். எனவே, தலைசிறந்த பட்டயக் கணக்காளர்களைக் கொண்டு, மாநிலத்தில் 25,000 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் செங்கோட்டையன்.
விழாவுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமை வகித்து பேசினார். கேரளத்துக்கு அதிக நிவாரண நிதி வழங்கியவர்களைப் பாராட்டி மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி பேசினார்.
விழாவில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த 285 பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரப்படுகிறதா ?:கண்காணிக்க சிறப்புக்குழு

பள்ளிகளில், இரண்டாம் வகுப்பு வரை, வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுவது குறித்து கண்காணிக்க, சிறப்பு குழுக்களை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், இரண்டாம் வகுப்பு வரை, பள்ளிக்குழந்தைகளுக்கு, வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அமல்படுத்தும் வகையில், தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது. தமிழக அரசால் அனுமதிக்கப்படாத பாடப்புத்தகம், குறிப்பேடுகள் பயன்படுத்தக்கூடாது. உடல் எடையில், 10 சதவீதத்துக்கும் மேல், புத்தகப்பையின் எடை இருக்கக்கூடாது உள்ளிட்டவற்றை, அனைத்து கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.

இதை கண்காணிக்க, சார்நிலை அலுவலர்களை கொண்டு, சிறப்பு கண்காணிப்பு குழுவை உருவாக்கியும், பள்ளி ஆய்வின் போது, கவனம் செலுத்தவும், முதன்மைகல்வி அலுவலர்கள்

ராணுவ பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் காலி: விண்ணப்பிக்க ராணுவம் அழைப்பு

நாட்டில் உள்ள 137 ராணுவப் பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க உள்ளதாக ராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது.  நாட்டில் ராணுவப் பயிற்சி மையங்கள் உள்ள இடங்களில் 137 ராணுவப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் என 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப ராணுவ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதுநிலைப் படிப்பு மற்றும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பயிற்சி முடித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சிபிஎஸ்இ பள்ளிகளில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும். பணி அனுபவம் அதிகம் உள்ளவர்கள் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த பிறகு தகுதிகளை சோதித்த பிறகு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய தளம் வழியாக 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  இதற்கான தேர்வு முறைகள் நவம்பர் 17, 18ம் தேதிகளில் நடக்கும். இது தொடர்பாக கூடுதல் விவரம் வேண்டுவோர் http://aps-csb.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் கவனத்திறனை பரிசோதிக்கலாமா?

மாணவர்களின் கவனத்திறன் எப்படி?

 மாணவர்களிடம் கவனச்சிதறல் இருக்கிறதா?

அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...

சிறந்த மாணவர்களின் பண்புகளில் ஒன்று கவனத்திறன். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதும், நாமாக பாடம் படிக்கும்போதும் கவனம் சிதறாமல் இருந்தால் நமக்கு எளிதில் பாடங்கள் விளங்கிவிடும். நன்றாகப் படித்தும் பாடங்கள் நினைவில் நிற்காமல் போவதற்கு கவனச்சிதறல் காரணமாக இருக்கலாம். உங்களின் கவனத்திறன் எப்படி? உங்களிடம் கவனச்சிதறல் இருக்கிறதா? அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...


கேள்விகளுக்கு செல்லலாமா?

1. ஒரு பாடம் அல்லது பயிற்சி சிரமமாக இருந்தால் அதை உடனே நிராகரிப்பீர்களா?

அ. ஆமாம், அதுதான் எனக்கு தெரியவில்லையே.
ஆ. முயற்சித்துப் பார்க்கிறேன், ஆனாலும் விளங்கவில்லை.
இ. இல்லை. அதை நிச்சயம் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன். ஆசிரியரிடம் விளக்கம் கேட்பேன்.

2. பேனா, பென்சில் போன்றவற்றை அடிக்கடி மறந்துவிடுகிறீர்களா? இவற்றை இரவல் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டா?

அ. மறதி இயல்புதானே, நண்பர்களிடம் இரவல் கேட்பதில் தவறில்லையே.
ஆ. மறந்துவிட்டால் இரவல் வாங்கித்தானே ஆக வேண்டும்.
இ. மறக்கமாட்டேன், என்னிடம் அவசர தேவைக்கான கூடுதல் பேனா, பென்சில்கூட இருக்கும்.

3. ஆசிரியர் பாடம் நடத்தும்போது எழும் சிறு சத்தம் அல்லது வெளிப்புற நிகழ்வு உங்களை ஈர்க்கிறதா?

அ. அது என்ன? என்று ஜன்னலில் பார்ப்பேன். நண்பனிடம் பேசுவேன்.
ஆ. ஆசிரியரை கவனிப்பேன். எல்லோரும் வேடிக்கை பார்த்தால் நானும் பார்ப்பேன்.
இ. மற்றவற்றை கவனிக்க மாட்டேன், திடீர்நிகழ்வுகளை மற்றவர் சொன்னால் கேட்டுக் கொள்வேன்.

4. நீங்கள் படிக்கும் இடத்தில் டி.வி. ஓடுகிறதா?

அ. வீட்டில் எல்லாம் இருக்கத்தானே செய்யும். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பேன்.
ஆ. டி.வி. ஓடும், சத்தத்தை குறைக்க சொல்லிவிட்டு படிப்பேன்.
இ. படிப்பதற்கு தனி இடம் செல்வேன். படிக்கத் தொடங்கினால் டி.வி. போடமாட்டார்கள்.

5. பாடம் நடத்தும்போது எடுத்த கிறுக்கல் குறிப்புகளை, பின்னர் உங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறதா?

அ. குறிப்பு எடுக்க சொன்னதற்காக எழுதுவேன். பிறகு புரிவதில்லை.
ஆ. விவரமாக குறிப்பெடுக்க நினைப்பேன் முடிவதில்லை.
இ. ஆம், என் கிறுக்கல்கள், எனக்கு விஷயங்களை விளக்கிவிடும்.

6. யாராவது பேசும்போது குறுக்கீடு செய்து பேசுகிறீர்களா?

அ. ஆமாம். நான் என் கருத்தை சொல்ல வேண்டாமா?
ஆ. பேச தயக்கமாக இருக்கும்.
இ. இடையில் பேச மாட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது என் கருத்துகளை சொல்வேன்.

7. வகுப்பறை சலித்துவிட்டதா?

அ. ஆம். ஓய்வே இல்லையே.
ஆ. வேறு வழியில்லையே.
இ. படிக்கத்தானே வந்திருக்கிறோம். படிப்பதில்தான் விருப்பம் அதிகம்.

8. ஒரு கேள்வி கேட்கும் போதே பதிலை உளறிக் கொட்டுவது உண்டா?

அ. பதில் தெரிஞ்சா சொல்ல வேண்டியதுதானே.
ஆ. பதில் தெரிந்தாலும் சொல்வதற்கு கூச்சப்படுவேன்.
இ. என்னை பதில் சொல்ல அழைத்தால் பதில் சொல்வேன். அல்லது அனுமதி பெற்று பதிலளிப்பேன்.

9. குறிப்புகளை படிக்காமல் விடையளித்திருக்கிறீர்களா?

அ. தேர்வே பிடிக்காது. விடை எழுத சிரமப்படுவேன்.
ஆ. குறிப்புகளை மறந்து நிறைய வினாக்களுக்கு விடை எழுதியிருக்கிறேன்.
இ. இல்லை. குறிப்புகளை படித்த பின்புதான் விடையளிக்க ஆரம்பிப்பேன்.

10. வீட்டுப்பாடத்தை எப்போது எழுதுவீர்கள்?

அ. பள்ளி கிளம்பும் முன்பு.
ஆ. இரவில் தூங்கும் முன்பு
இ. வீட்டுப்பாடம் முடித்துவிட்டுத்தான் வேறுவேலை.

11. ஒரு புதிய பயிற்சி வழங்கினால் அதை சரியாக, சீராக செய்து முடிப்பதில் சிரமம் இருக்கிறதா?

அ. ஆம், அதிக பயிற்சியால் அவதிப்படுகிறேன்
ஆ. சிரமமாக இருந்தாலும் செய்து முடிப்பேன்.
இ. இல்லை, புதிய புதிய பயிற்சிகள் உற்சாகம் தருகின்றன

12. இணையதளத்தில் ஒரு வேலை கொடுத்தால், நீங்களாகவே முயன்று முடித்துவிடுவீர்களா?

அ. ம்ஹூம், இன்டர்நெட் என்னை குழப்பிவிடும், நண்பர்களின் உதவியுடன்தான் கேட்டு செய்வேன்.
ஆ. செய்ய முயற்சிப்பேன், சந்தேகம் வந்தால் நண்பர்களிடம் கேட்பேன்.
இ. என்னால் அது முடியும். தேவையான விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன்.

CBSE - 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு!

10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிமையாக்கும் வகையில், புதிய மதிப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வில் 33% மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33% மதிப்பெண் பெறுவது கட்டாயமாக உள்ளது. புதிய திட்டத்தில் எழுத்துத்தேர்வு, செயல்முறைதேர்வு இரண்டிலும் சேர்த்து 33% மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

மூன்றாம் வகுப்பு தமிழ் வாசித்தல் மற்றும் எழுதுதல் பயிற்சி!



தற்செயல் விடுப்பு போராட்ட நாளுக்கு சம்பளம் பிடித்தம் செய்தால் வழக்கு: ஆசிரியர் சங்கங்கள் முடிவு :

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு போராட்டம் தீவிரம் அடைந்தது. அதற்கு பிறகு அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், ஒரு நபர் குழுவின் பரிந்துரையை வெளியிடுவதாகவும் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காத நிலையில் இந்த ஆண்டும் தொடர் போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, கடந்த 4ம் தேதி அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28ம் தேதி அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் மூலம் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, அக்டோபர் 4ம் தேதி முறையான காரணத்தின் பேரில் சாதாரண விடுப்பு எடுத்திருந்தால், அதன் உண்மைத்தன்மை அறிந்து அந்த விடுப்பை அனுமதிக்கலாம் என்றும், முன் அனுமதி இல்லாமல் அக்டோபர் 4ம் தேதி எடுக்கும் தற்செயல் விடுப்பை ‘‘நோ ஒர்க்; நோ பே’’ என்ற அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்என்றும் தெரிவித்து இருந்தார். இதனால், கடந்த 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளது.

இதற்கு மேற்கண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். மேலும், சாதாரண விடுப்பை பயன்படுத்துவது என்பது, அடிப்படை விதிகளுக்கு உட்பட்ட விடுப்புஅல்ல. இந்த விடுப்பு பணியாளர்களுக்கு ஒரு சலுகைபோன்றது. ஒரு அரசு ஊழியர் சில நேரங்களில் அரசுப் பணி செய்ய இயலாத நிலை ஏற்பட்டால், அரசுப் பணி செய்ய இயலாத நாட்களை முறைப்படுத்திக் கொள்ள இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விடுப்பை அரசு விடுமுறை நாட்களுடன் சேர்த்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த விதிகள் அடிப்படை விதி எண் 85(3)ன்படி பார்த்தால் கடந்த 4ம் தேதி அரசுப் பணி செய்யாமல் இருந்துவிட்டு, அந்த நாட்களுக்கு சாதாரண விடுப்பு விண்ணப்பத்தை அந்தந்த அதிகாரிகளுக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பும் கடிதங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாதாரண விடுப்பாகத்தான் கருத வேண்டும். எனவே, அந்த நாளை ‘நோ ஒர்க்; நோ பே’ என்று  தீர்மானிப்பது அடிப்படை விதி எண் 85(3)க்கு எதிரானது.

சாதாரண விடுப்புக்கு காரணங்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. 4ம் தேதி பணிக்கு வராத பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதாக காரணத்தை குறிப்பிட்டு மனு செய்திருந்தால் மட்டுமே அவர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டார் என்று கருத முடியும். எனவே தலைமைச் செயலாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதை அரசு பரிசீலிக்கவில்லை என்றால், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்

9/10/18

அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி: அம்பானி!

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிவேக இணைய இணைப்பு வசதி அளிக்க ரூ.4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் சூறாவளியையே ஏற்படுத்தியிருக்கிற முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 2,385க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அதிவேக இணைய இணைப்பு வசதிகள் அளிக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக ரூ.4,000 கோடியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உத்தராகண்டில் அக்டோபர் 7ஆம் தேதி நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முகேஷ் அம்பானி, “சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிற தொழில்கள் மற்றும் நிறுவனங்களை ஜியோ ஊக்குவிக்கும். தேவபூமியாக இருக்கிற உத்தராகண்டை டிஜிட்டல் தேவபூமியாக மாற்றுவோம். ஜியோவால் உத்தராகண்டின் சுற்றுலாத் துறை நிலையான வளர்ச்சி பெறும். சுகாதாரத் துறை, கல்வி மற்றும் அரசு சேவைகள் விநியோகத்தை ஜியோ மேம்படுத்தும்.

உத்தராகண்டில் உள்ள 2,185 அரசுப் பள்ளிகள் மற்றும் 200க்கும் அதிகமான கல்லூரிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இணைய இணைப்புகளை வழங்குவோம். இதன்மூலம் மக்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகளும், வருவாயும் கிடைக்கும். உத்தராகண்ட் மக்களுக்குத் தரமான டிஜிட்டல் சேவைகளை வழங்க வேண்டுமென்பதில் ஜியோ உறுதி பூண்டுள்ளது” என்றார்

தற்செயல் விடுப்பை "No Work No Pay" என்று தீர்மானிப்பது சரியா?

முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் சிக்கல் :

அரசு பள்ளிகளில், பணி நியமனத்தின் போதே, ஊதிய உயர்வு கோரிக்கை எழுந்துள்ளதால், 1,400 ஆசிரியர்களை நியமிப்பதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில், காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், தினசரி ஊதியம், சிறப்பு தொகுப்பூதியம் என, பல ஊதிய முறைகளில், ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தொகுப்பூதியங்களில் நியமிக்கப்படுவோர், பணிக்கு சேர்ந்த சில ஆண்டுகளில், சங்கமாக உருவாகி, பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் நிலை உள்ளது. இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில், பாடம் நடத்த, 11 பாடங்களுக்கு, 1,400 ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறை செயலகம் அனுமதி அளித்துள்ளது. காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக, மாதம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த பணி நியமனம் துவங்கியுள்ள நிலையில், பணிக்கு சேர்ந்தவர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், ஊதிய உயர்வு கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மாதம், 7,700 ரூபாய் சம்பளம் தரும் போது, முதுநிலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, 'வாட்ஸ் ஆப்' வழியாக பிரசாரம் துவக்கியுள்ளனர்.இந்த நிலை நீடித்தால், புதிய ஆசிரியர்கள் பணிக்கு சேர்ந்த சில மாதங்களில், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன. எனவே, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

அரசுப் பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் மீண்டும் ஆசிரியர் நியமனம் :

தொகுப்பு ஊதிய அடிப்படையில் பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் மூலம் 1474 ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு தொகுப்பு ஊதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் 16,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தற்போது மாதம் ரூ7500 வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் மீண்டும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் 1474 ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் பெற்றோர்- ஆசிரியர் கழகங்கள் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ7500 ஊதியத்துடன் நியமிக்கவும்  தெரிவிததுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட வேண்டும் 
அதற்கான கால தாமதம் கருதி தொகுப்பு ஊதிய அடிப்படையில் மேற்கண்ட பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. முதுநிலை ஆசிரியர்கள் ஆறு மாதத்துக்கு மட்டும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் குழு அமைத்து 1474 ஆசிரியர்களை நியமிக்கலாம்.

தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகவியல்,ெபாருளியல், பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த ஆசிரியர்கள் பெற்றோர் -ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பி மாதம் ஒன்றுக்கு ரூ7500 என தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

இதன்படி சென்னை மாவட்டத்தில்  14, திருவள்ளூர் மாவட்டத்தில்  106, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  77 உள்பட மொத்தம் 1474 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்

பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள்-ல் மாற்றம்:

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், 10 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பொது தேர்வு வினாத்தாள், தேர்வுக்கான மதிப்பெண், விடை திருத்தும் முறை உள்ளிட்டவற்றில் மாற்றம் வந்தால், அவற்றை, சி.பி.எஸ்.இ., முன்கூட்டியே அறிவிக்கும்.

இதன்படி, இந்த ஆண்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 ஆங்கில பாட வினாத்தாளில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இதுவரை, 40 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், இனி, 35 கேள்விகள் மட்டுமே இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இரண்டு வகைகளாக கேள்விகள் இடம் பெற உள்ளன.முதல் வகையில், சரியான விடையை தேர்வு செய்யும், ஐந்து கேள்விகள் இடம் பெறுகின்றன. மிக குறுகிய விடை அளிக்கும் வகையில், ஒன்பது கேள்விகள்; குறுகிய விடையளிக்கும் மூன்று கேள்விகள்; விரிவான விடையளிக்கும் இரண்டு கேள்விகள் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாதிரி வினாத்தாளை, சி.பி.எஸ்.இ.,யின், http://cbseacademic.nic.in/ என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள

அரசு பள்ளிகளில் அதிகாரிகளின் குழந்தைகள்' - உச்ச நீதிமன்றத்தில் மனு :

அரசு உயரதிகாரிகளின் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் படிக்க அனுப்பும்படி, அலஹாபாத் உயர் நீதிமன்றம், 2015ல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 2015ல், உ.பி.,யில் உள்ள அரசு பள்ளிகளின் தரம், மோசமாக உள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலஹாபாத் உயர் நீதிமன்றம், மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் ஒன்றாக, 'அரசு உயரதிகாரிகள், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.இது தொடர்பாக, வழக்கறிஞர், சிவ்குமார் திரிபாதி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:அலஹாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுகளை, உ.பி., அரசு அமல்படுத்தாததால், குழந்தைகளின் நலன் பாதிக்கப்படுகிறது. உ.பி., மாநில அடிப்படை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் ஆரம்ப பள்ளிகளில் நடக்கும் மோசமான நிர்வாகத்தால், ஊழல் தலைவிரித்தாடுகிறது.
இந்த பள்ளிகளின் நிர்வாகத்தில் அரசு அதிகாரிகள் போதிய கவனம் செலுத்துவதில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று ஆண்டு கடந்த பின்னும், அதை அமல்படுத்தாததால், அரசு பள்ளிகளின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை, மாநில அரசு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தவறி விட்டது.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காத அதிகாரிகள், தனியார் பள்ளிகளில் செலுத்தும் கட்டண தொகையை, அபராதமாக செலுத்த வகை செய்யும் சட்ட திருத்தத்தை, மாநில அரசு இயற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

நீதிக்கதை



விடா முயற்சி ::

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும்  வீரத்துடன்  போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் எதிரி  வெற்றி பெற்றான்.  வெற்றி பெற்ற எதிரி அரசனைக் கொல்ல திட்டமிட்டான். அதனால் அரசன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தை ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான் .

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியும் தன் எதிரியுடன் போர் புரியத் தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

2018-2019 EDUCATION YEAR PLANNER (SCHOOL EDUCATION DEPARTMENT) :

பாடப்புத்தக வீடியோவை பார்வையிட்ட ஒரு கோடி பேர்... டிஜிட்டலுக்கு மாறும் பள்ளிக் கல்வித்துறை :

தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாமல் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது. புதியதாக வெளியிடப்பட்ட பதினொன்றாம் வகுப்பு பாடங்களை மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில், கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு வீடியோக்களைத் தயாரித்து யூ-டியூப்பில் வெளியிட்டு வருகிறது. இந்த காணொளிகளை குறுகிய காலத்தில் ஒரு கோடியே இருபது லட்சம் பேர் பார்வையிட்டு இருப்பது ஆச்சர்யம்.
தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, இந்த ஆண்டு 6,9,11-ம் வகுப்புக்கான புதிய பாடநூல்களை வெளியிட்டது. 11-ம் வகுப்பு பாடப்பகுதிகள் அதிகமாகவும், பல பகுதிகள் கடினமாகவும் உள்ளன என்று ஆசிரியர்களும், மாணவர்களும் கருத்து தெரிவித்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் பதினொன்றாம் வகுப்பில் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதிகளையும், கடினமான பகுதிகளையும் எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது பள்ளிக்கல்வித்துறையின் மாநிலக்கல்வியியல்  ஆராய்ச்சி  பயிற்சி   நிறுவனம். இந்தப் பணியில் பதினைந்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடநூல் தயாரிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள்  உதவியுடன் பல்வேறு வீடியோக்களைத் தயாரித்து வெளியிடப்படுகிறது. இந்த வீடியோக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் என்று தனித்தனியே தயாரித்துப் பதிவேற்றுவதால் மாணவர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

பாடப் புத்தகங்களை வீடியோக்களாக பதிவுசெய்து வரும் படப்பதிவு இயக்குநர் அமலன் ஜெரோமிடம் பேசினோம். ``பதினொன்றாம் வகுப்பில் தடுமாறுபவர்கள், தேர்வு பயம் கொண்டவர்கள் இனி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. முதல்கட்டமாக,  பதினொன்றாம் வகுப்பில் கணிதப்பாடத்தில் 143, இயற்பியலில் 112, வேதியியலில்  81, தாவரவியல் பாடத்தில் 57, கணினி அறிவியலில் 22,  பொருளியல் பாடத்தில் 6, விலங்கியல்  பாடத்தில் 8 என இதுவரை 500 -க்கும் மேற்பட்ட வீடியோக்களைத் தயாரித்துள்ளோம். தற்போது கணக்கு பதிவியியல், பிஸினஸ் மேக்ஸ் போன்ற பாடங்களுக்கான வீடியோக்களைத் தயாரித்து வருகிறோம். பாடம் நடத்துவதுபோல் மட்டுமல்லாது, ஆசிரியர்கள் பாடத்தைக் குறித்து உரையாடுவது போலும், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் உரையாடுவது போலும் வீடியோக்களைத் தயாரித்து பதிவேற்றம் செய்து வருகிறோம் என்றார்.

3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பு : ஜப்பானிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

தமிழகத்தில், 3,000 அரசு பள்ளிகளில், கேமரா வுடன் கூடிய, 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. தமிழகபள்ளி கல்வியில், பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து பள்ளிகளிலும், நவீன தொழில்நுட்பத்தில், வகுப்பறைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 'டேப்லெட்' என்ற, கையடக்க கணினியுடன் பாடம் கற்றுத் தரதிட்டமிடப்பட்டு, 3,000 பள்ளிகளுக்கு தலா, 10 வீதம், 30 ஆயிரம், 'டேப்லெட்' வாங்க, 'டெண்டர்' விடப்பட்டது.இந்நிலையில், டேப்லெட் வழங்குவதற்கு பதில், வகுப்பறைகளில், கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பை துவக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, 'எல்மோ' என்ற நிறுவனத்துடன், தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது. முதல் கட்டமாக, ஐந்து அரசு பள்ளிகளில், கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னையில், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒரு வகுப்புஅறையில், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, கேமராவுடன் இணைந்த ஸ்கேனர் கருவி, டிஜிட்டல் எழுது கருவி, வீடியோ ரெக்கார்டர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உரையாடல்களை, ஒரு மாதம் வரை சேமித்து வைக்கும் வசதியுள்ள, ஸ்மார்ட் கருவி போன்றவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, வீடியோ ரெக்கார்டர் மற்றும் புகைப்பட கேமராவை பயன்படுத்தலாம். ஆசிரியர் முன் கேமராவை திருப்பினால், அவர் பாடம் நடத்துவதை திரையில் பார்க்கலாம்.

அதேபோல, மாணவர்கள் சந்தேகம் கேட்டால், அவர்களின் முகத்தை, மற்ற மாணவர்கள் திரையில் பார்க்க முடியும். புத்தகத்தில் உள்ள சில வரிகளையோ, படங்களையோமாணவர்களுக்கு உதாரணம் காட்ட வேண்டும் என்றால், கேமராவில் காட்டினால் அது, திரையில் பெரிதாக தெரியும். வகுப்பின் கடைசி பெஞ்ச் மாணவர்கள் வரை, பாடம் நடத்துவதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அந்த மாணவர்கள் கேள்வி கேட்டால், கேமராவில் அவர்களின் முகத்தை பார்க்க முடியும்.

8/10/18

சத்துணவு திட்டத்தில் 10 லட்சம் முட்டை குறைப்பு மாணவர்கள் எண்ணிக்கையில் மோசடி?

தமிழகத்தில் பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய சத்துணவு திட்டத்தில் தினமும் 10 லட்சம் முட்டை குறைக்கப்பட்ட விவகாரத்தில் மோசடி நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 58,474 அரசு பள்ளிகள், 54,472 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. பள்ளி மற்றும் அங்கன்வாடி சத்துணவு மையங்களின் மூலமாக தினமும் 60 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகள் சத்துணவு திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனர். இவர்களுக்காக தினமும் 60 லட்சம் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நடப்பாண்டில் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் சத்துணவு திட்டத்திற்கான தினசரி முட்டை கொள்முதல் 60 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக குறைக்கப்பட்டு விட்டது. நடப்பாண்டில் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை தினமும் 60 லட்சம் முட்டை பெறப்பட்டது. 

ஜூலை மாதம் முதல் தினசரி முட்டை கொள்முதல் 50 லட்சமாக குறைந்தது.கடந்த ஜூலை 24ம் தேதி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் டெண்டர் அறிவிப்பில் முட்டை கொள்முதல் குறைந்த விவரங்கள் மாவட்ட வாரியாக குறிப்பிடப்பட்டது. 


கடந்த ஆண்டில், ஜூலை மாதத்திற்கான தினசரி முட்டை கொள்முதல் அளவுடன் ஒப்பிடுகையில் தினமும் 10 லட்சம் முட்டை கொள்முதல் குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 

முட்டை ெகாள்முதல் குறைந்த விவகாரத்தின் பின்னணியில் பெரும் முறைகேடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மாநில அளவில் அரசு பள்ளிகளில் 1.23 கோடி மாணவ மாணவிகள் கல்வி கற்கின்றனர். இதில் தினமும் 40.50 லட்சம் பேர் மட்டுமே சத்துணவு திட்டத்தில் பயனாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது. நடப்பாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சத்துணவு திட்டத்தில் இடம் பெற்றிருந்தனர். 

அங்கன்வாடிகளில் 7,79,278 மாணவ மாணவிகள் பயனாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் மாணவ மாணவியர் சேர்க்கை 2 முதல் 3 சதவீதம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் நடப்பாண்டிற்கு தினமும் சுமார் 63 லட்சம் முட்டை கொள்முதல் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அதிகரிப்பிற்கு மாறாக, மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்திருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 


பள்ளி மற்றும் அங்கன்வாடி சத்துணவு திட்டத்தில் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையில் ‘பொய் கணக்கு’ காட்டியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சத்துணவு திட்டத்தில் இல்லாதவர்களின் பெயரில் முட்டை கொள்முதல் செய்து மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது. முட்டை கொள்முதல், சப்ளை போன்றவை ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட துறையில் டெண்டர் விடப்பட்டு, மேற்கொள்ளப்படுகிறது. 


பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை தினசரி, வாராந்திர தேவைப்பட்டியல் பள்ளிக்கல்வி நிர்வாகத்திடம் இருந்து பெறப்படுகிறது. தேவைப்பட்டியலில் குளறுபடி, மோசடி செய்து முட்டை கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

முட்டை விவகாரத்தில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையில் நடந்த மோசடி, முறைகேடு மறைக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது உண்மையாக இருந்தால், அதை மறைத்து அதிகமாக காட்டியிருப்பது எதற்காக என்ற சந்தேகமும் நிலவுகிறது. மாணவ மாணவிகளின் சேர்க்கை அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் வெகுவாக குறைகிறது. 


ஆனால் ‘பள்ளி ரெக்கார்டுகளில்’ மறைக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மட்டுமே பொது தேர்வு காரணமாக மறைக்காமல் காட்டப்படுவதாக தெரிகிறது. 1 முதல் 9ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறித்து விசாரிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது கல்வியாளர்கள் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

3 லட்சம் கூமுட்டை..?! 

முட்டை மோசடி விவகாரத்திற்கு பின், கொள்முதலில் பல்வேறு மாற்றம் 

செய்யப்பட்டுள்ளது. 385 ஒன்றியம், 200 மையங்கள் மூலமாக தினமும் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டையின் எடை 49 கிராம் அளவில் இருக்கவேண்டும். எடை குறைவாக (புல்லட் முட்டை) இருந்தாலும், தரமற்ற முட்டை வினியோகம் செய்தாலும் ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடைந்த, கெட்டுப்போன முட்டை கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. 

கோழிப்பண்ணையில், கோழி போடும் முதல் முட்டை எடை குறைவாக இருக்கும். இந்த முட்டை 25 கிராம் முதல் 30 கிராம் எடை அளவிற்குள் இருக்கும். இந்த முட்டைகளை சத்துணவு மையங்களுக்கு வினியோகம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சத்துணவு கூடங்களுக்கு 2 நாட்களுக்கு முன்பே முட்டைகளை வினியோகம் செய்து விடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்த முட்டைகளில் 3 லட்சம் முட்டை கெட்டுப்போனதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் தெரிகிறது. ‘கூமுட்டையாக’ இருந்தாலும் இவற்றையும் பள்ளிக்கு சப்ளை செய்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.

சத்துணவில் அரை முட்டை 

சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள், குறியீடு உடன் சில கடைகளில் வெளிப்படையாகவே விற்கப்படுவதாக கூறப்படுகிறது. சில ஓட்டல்களில் சத்துணவு முட்டைகள் கிடைப்பதாக தெரிகிறது. 

மாவட்டம், ஒன்றியம் வாரியாக ஒதுக்கப்படும் முட்டை பதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சில மையங்களில் தினமும் முழு முட்டை வழங்காமல் அரை முட்டை வழங்குவதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முட்டையில் மட்டுமின்றி பள்ளி, அங்கன்வாடி மையங்களில் பருப்பு, எண்ணெய், அரிசி போன்றவையும் முறைகேடாக பதுக்கிவைத்து, கொண்டுசெல்வதாக கூறப்படுகிறது. 

மற்ற திட்டங்களிலும் மோசடி..?

பள்ளி கல்வித்துறையில் நோட்டு புத்தகம், இலவச லேப்டாப், சைக்கிள், நான்கு செட் சீருடை, காலணி, புத்தக பை, கிரையான்ஸ், கலர் பென்சில், கணித உபகரண பெட்டி, கம்பளி சட்டை, ரெயின்கோட், புவியியல் வரைபடம் போன்ற பல்வேறு திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. 

இதில் பயன்பெறும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, பெறப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை போன்றவற்றில் பெரும் வித்தியாசம் இருப்பதாக தெரிகிறது. கொள்முதல் செய்த பொருட்களை தணிக்கை செய்யவோ, விசாரிக்கவோ யாருமில்லாத நிலை உள்ளது. இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக செலவிடப்படுகிறது. இந்த செலவினங்களை ஆய்வு செய்ய, முறைகேடுகளை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை.

தமிழகம் முழுவதும் உபரியாக உள்ள 92 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

அக்டோபர் 31க்குள் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உத்தரவு

பள்ளி கல்வித்துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து, கிராமப்புற மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.


*மாவட்டத்துக்கு, 150 பேரை தேர்வு செய்து, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கல்வி சார் சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.மாவட்டத்துக்கு தலா, 2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

*கூட்ட நெரிசல் இல்லாத இடங்களுக்கு, வானிலை மாற்றங்களை கருத்தில்கொண்டு, ஒரு நாள் கல்வி சுற்றுலா, வரும், 31க்குள் அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது
*கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களை மூன்று பஸ்களில் அழைத்துச் செல்ல வேண்டும். மூன்று சுற்றுலா வழிகாட்டிகள் இடம்பெற வேண்டும்

*ஒரு பஸ்சில் நான்கு ஆசிரியர்கள், மாணவர்கள் பாதுகாப்புக்கு உடன் செல்ல வேண்டும். காலை, 7:00 முதல், மாலை 5:00 மணி வரை செல்லும்

*ஒரு நாள் சுற்றுலாவுக்கு, கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். தற்போது மழை பெய்வதால், வானிலை மாற்றம் சீரானதும், சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்' என்றனர்

TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வழக்கு சாதகமானதால் விரைவில் அரசாணை வெளியிட 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தமிழக கல்வித்துறையிடம் கோரிக்கை.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசு கடந்த 23/08/2010 ஆம் தேதியில் அமலாக்கம் பெற்றது. ஆனால் அது தமிழகத்தில் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைமுறையில் வந்தது. இந்த காலகட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள்  நிரப்பிக்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டது. பணியில் சேர்ந்த பல மாதங்களுக்குப் பின்னர் இவர்கள் TNTET  நிபந்தனைகளுக்குள் கொண்டுவரப்பட்டனர்.

TNTET 2012 ல் பற்றியதான அறிவிப்பு வந்த போதும் கூட பல மாவட்டங்களில் இது சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் TET நிபந்தனை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்புதல் குறித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் கடந்த 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் ஒன்று வெளியிட்டது.
 அதன்படி இனிமேல் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர் பணியிடம் நிரப்பும் போது TET தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று அறிவித்தது.

இந்த செயல்முறைக்குப் முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு முறையாக கொடுக்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் இதர பலன்கள் ஒருசில மாவட்டங்களில் தர மறுக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET லிருந்து விலக்கு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு இடையே அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு  இந்த TNTET நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு விலக்கு கொடுத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படி நான்கு மாதங்களில் மற்ற ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஒரு நல்ல தீர்வை தமிழக அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆகவே TNTET நிபந்தனை ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் (individual representation) தமிழக அரசுக்கு அளித்து வருகின்றனர். அதில் இவர்களின் நியாயமான வேண்டுகோளாக 16/11/2012 ஆம் தேதியிட்ட பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வெளியிட்ட செயல்முறைகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலில் TNTET லிருந்து முழுவதும் விலக்கு தர கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

இது தொடர்பான அரசாணை விரைந்து வெளியீடு செய்து தருமாறு மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை மீண்டும் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் இந்த சிக்கல்களைத் தீர்க்க செயல்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும் இவ்வமைப்பு கூறுவது யாதெனில் அரசாணை   வெளியீடு தொடர்பான எந்தவொரு வதந்திகளையும் நம்பாமல் கடந்த 07--09--2018 அன்று வெளிவந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு  போட்ட எந்தவொரு ஆசிரியரும் பாதிக்கப்படாதவாறான நாளான
16/11/2012 ற்கு முன்பு ஆசிரியர் பணியில்  சேர்ந்த அனைவரும் INDIVIDUAL REPRESENTATION ஐ தங்கள் பங்குக்கு  விரைந்து செய்து முடிக்க வேண்டுமாய்  கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

சமக்ர சிக்‌ஷா ஒருங்கிணைந்த பள்ளி மான்யம்2018-2019 பயன்படுத்துதல் மற்றும் வழிக்காட்டுதல் குறிப்புகள் :

மானியம் வழங்குவதன் நோக்கம்
✔2018 – 19 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்
கல்வி திட்டத்தின்கீழ்(Samagra Shiksha) அரசு பள்ளிகளில் பயிலும்
மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கேற்றவாறு தேவையான வசதிகளை
மேம்படுத்த ஒருங்கிணைந்த பள்ளி மான்யம்(Composite School Grant)
அனுமதிக்கப்பட்டுள்ளது.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
✅ஒருங்கிணைந்த பள்ளி மானியத் தொகையை சட்ட திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள
நிதி நெறிகள் மற்றும் திட்ட விதிமுறைகளின் படி பயன்படுத்தப்பட வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*1⃣.SWACHHTA ACTION PLAN*
*2018 – 19*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
✅SWACHHTA ACTION PLAN 2018 – 19 (SAP) முழு சுகாதார தமிழகம் என்ற
தலைப்பின் கீழ் பயன்படுத்துவதற்காக 10 சதவீத தொகைக்கு அனுமதி
வழங்கப்படுகிறது.
1. மாணவர்களின் எண்ணிக்கை - 15 – 100 எனில் மான்யத் தொகை ரூ.25000/-
இதில் SWACHHTA ACTION PLAN 2018 – 19 க்கு அனுமதிக்கப்படும் தொகை
ரூ.2,500/.
2மாணவர்களின் எண்ணிக்கை – 101 - 250 எனில் மான்யத் தொகை ரூ. 50000/-
இதில் SWACHHTA ACTION PLAN 2018 – 19 க்கு அனுமதிக்கப்படும் தொகை ரூ.
5,000/.
3.மாணவர்களின் எண்ணிக்கை – 251 - 1000 எனில் மான்யத் தொகை ரூ. 75,000/-
இதில் SWACHHTA ACTION PLAN 2018 – 19 க்கு அனுமதிக்கப்படும் தொகை ரூ.
7,500/-
4.மாணவர்களின் எண்ணிக்கை – 1000 க்கு மேல் எனில் மான்யத் தொகை ரூ.
1,00,000/- இதில் SWACHHTA ACTION PLAN 2018 – 19 க்கு அனுமதிக்கப்படும்
தொகை ரூ. 10,000/-
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*2⃣.கழிவறை பராமரிப்பு*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1.பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் பயன்பாட்டில் இருக்கும்
வகையில் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு மாணவர்கள்
பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
2.கழிப்பறையின் உட்புறம் பேசின் பொருத்துதல், கதவு மற்றும்
வெண்டிலேட்டர், தரைப் பூச்சு வேலை, தண்ணீர்  வசதிக்கான குழாய்கள், தரை
ஒடுகள், செப்டிங் டாங்க் பழுது பார்த்தல் முதலிய பணிகள் மேற்கொள்ளலாம்.
3.கழிவுநீர் வெளியேறும் குழாய் இணைப்புகள் பழுது பார்த்தல்.
4.கழுப்பறைகளை சுத்தம் செய்யத் தேவையான (Bleaching powder, Phenol,
etc…) பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.
5.கழிவுநீர்த் தொட்டி (Septic tank) சுத்தம் செய்தல்.
6.பள்ளி வளாகத்தில் இருக்கும் அனைத்துக் கழிப்பறைகளிலும் கட்டாயம் கை
கழுவ வசதியாக (Hand Washing Facility) குழாய் அமைத்திடவும் மற்றும்
அதற்கான பொருட்கள் (Wash Basin, Soap, etc..) வைத்திடவும் வேண்டும்.
7.பழுது மற்றும் பராமரிப்புப் பணி செய்யப்பட்ட கழிவறை கட்டடங்களுக்கு
வெள்ளை மற்றும் வர்ணம் அடிக்கப்பட்டு(White and Colour washing) அத்தகவலை
கழிவறை சுவற்றில் எழுதி வைத்திட வேண்டும். (ஆண்கள்/பெண்கள்/பொதுக் கழிவறை
2018 – 19 ஆம் ஆண்டு நிதியிலிருந்து பணி செய்யப்பட்டது).
8. பொதுக் கழிப்பறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நுழைவு
வாயிலில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*3⃣.குடிநீர் வசதி*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. அனைத்துப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதியினை
மேம்பாடு செய்து தொடர்ந்து தண்ணீர் வசதி கிடைக்கும் வகையில் பராமரிப்புப்
பணி மேற்கொள்ள வேண்டும்.
2.மோட்டார், தண்ணீர் வசதிக்கான குழாய்கள், தரைமட்டத் தொட்டி, மேல்நிலை
நீர் தேக்கத் தொட்டி போன்றவற்றை பழுது பார்த்தல்.
3.மொத்தப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான போதுமான எண்ணிக்கையில்
குழாய்(TAP) வசதி செய்யப்பட வேண்டும்.
4.கழிவறை மற்றும் குடிநீர் தொட்டியினைச் சுற்றியுள்ள இடங்களிலுள்ள
முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்து பள்ளி வளாகத்தினை தூய்மையாக
வைத்திருக்க வேண்டும்.
5.மாணவர்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர் வசதி செய்து கொள்ளலாம்.
6.தரைமட்டத் தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, கழிவு நீர்த்
தொட்டி(Septic tank) ஆகிய தொட்டிகளுக்கு மேல்மூடி இல்லாத நிலையில்
உடனடியாக மூடி அமைத்திட வேண்டும்.
7.அனைத்துக் கழிவறைகளிலும் கண்டிப்பாக தண்ணீர் இணைப்புடன் கூடிய குழாய்
பொருத்த வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*4⃣.கற்றல் – கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1.தொடக்க மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1 – 3 வகுப்புகளில் உள்ள
மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக் கற்றல் முறையின் புதிய
அணுகுமுறை மூலம் கல்வி கற்பதற்கேற்றவாறு கற்றல் – கற்பித்தலுக்குத்
தேவையான எழுதுபொருட்கள், அமர்வதற்கான பாய்கள்/நாற்காலிகள், கீழ்மட்ட
கரும்பலகை, கம்பிப்பந்தல், சுய வருகைப் பதிவேடு, ஆரோக்கிய சக்கரம், CCE
பதிவேடுகள், கரும்பலகைக்கு வண்ணம் தீட்டுதல், அடிப்படை வசதிகளை
மேம்படுத்த மேஜை, நாற்காலி, பீரோ, சுவர் கடிகாரம், மின் சாதனப்பொருட்களான
மின்விசிறி, மின் விளக்குகள், ஒலி பெருக்கி(மைக்) போன்றவற்றை வாங்க
பயன்படுத்தலாம்.
2.மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பட கற்றல் – கற்பித்தல்
செயல்பாடுகளுக்கு பயன்படுத்து கொள்ளலாம்.
3.மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த மாணவர்களின் பயன்பாட்டிற்காக
பள்ளி வேலை நாட்களில் ஏதேனும் ஒரு ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ் பள்ளி
மேலாண்மைக் குழு மூலம் வாங்கிப் பயன்படுத்தலாம்.
4.அறிவியல் ஆய்வகத்திற்கான தேவையான ஆய்வகப் பொருட்கள், உலக உருண்டை,
நிலப்படத் தொகுதி, தனிம வரிசை அட்டவணை போன்றவற்றை வாங்க முன்னுரிமை
அடிப்படையில் பயன்படுத்தலாம்.
5.மாணவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில்
கைபந்து, கால்பந்து, ஸ்கிப்பிங் கயிறுகள், சதுரங்கப் பலகை(Chess Board),
கேரம் விளையாட்டு(Carrom Board) போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்க
பயன்படுத்தலாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*5⃣.கணினி வழிக் கற்றல் (CAL Centre)*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. இக்கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ள புதிய பாடப்புத்தங்கள் மூலம்
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் அறிவியல் தொழில்நுட்பத்தை கைக்கொண்டு
பயில்வதற்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்கனவே அனைவருக்கும் கல்வி
இயக்கத்தின் மூலம் கணினி வழி கல்வி திட்டத்தின்கீழ்(CAL Centrer)
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்திரவாத காலம் முடிந்த நிலையில்
பயன்பாடின்றி உள்ள கணினிகள் மற்றும் பழுதடைந்துள்ள பள்ளி உபகரணங்களைப்
பழுது நீக்கம் செய்திடவும், இயங்காக நிலையில் உள்ள பழுதுப் பொருட்களுக்கு
மாற்றாக புதிய உபகரணங்களை மாணவர்களுக்கு பயனுடையதாக வாங்கி கொள்ளவும்
பயன்படுத்தலாம்.
2.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் செயல்படும் கணினிவழிக் கல்வித்
திட்டம் நடைபெறும் பள்ளிகளுக்கு இணையதள வசதி தேவைப்படின் வருடத்திற்கு
அதிகபட்சமாக ரூ.2000 பயன்படுத்துக் கொள்ளலாம்.
3.மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் நிகழ்வைப் புதுமையான முறையில்
வழங்குவதற்கு ஏதுவாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு
பழுதடைந்துள்ள நிலையில் உள்ள (Audio/Visual Aids) LCD Projector, Screen,
TV, DVD உள்ளிட்ட பொருட்களை பழுது நீக்கம் செய்ய பயன்படுத்தலாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*6⃣.மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் மற்றும் பள்ளிப் பாதுகாப்பு.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1.பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைக் கட்டடங்களிலும் கட்டாயம்
கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்பட வேண்டும்.(To achieve 100%
barrier free access (RTE) Act,2009)
2.மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில் இருக்கும்
அனைத்துக் கழிப்பறைகளில் குறைந்தபட்சம் ஒரு கழிப்பறை அலகு மாற்றுத்
திறனாளிகள் பயன்படுத்தும் விதமாக கைப்பிடிகள், தரை ஒடுகள், கழிப்பறை
கோப்பைகள் மற்றும் விவரப் பலகைகள் அல்லது குறியீடுகள் அமைக்க
பயன்படுத்தலாம்.
3.பள்ளி வளாகத்தில் பாதுகாப்பில்லாத மின் இணைப்புகள், கட்டுமானங்கள்,
மரங்கள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றினை அகற்றிடவும் மாணவர்கள்
பாதுகாப்புடன் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பள்ளி மேலாண்மைக் குழு (SMC)*
1.ஒருங்கிணைந்த பள்ளி மானியப் பதிவேட்டில் (வ.எண், பெற்ற தொகை, வங்கி
பெயர் மற்றும் நாள்) ஆகியவற்றை தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும்.
2.மேற்காணும் இனங்களில் தேவையான பொருட்களை வங்குவதற்கு அவசியமான
பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அப்பொருட்களை பட்டியலிட வேண்டும்.
பட்டியலிடப்பட்ட பொருட்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின்படி
தரமான பொருட்களாக மட்டுமே வாங்கப்பட வேண்டும்.
3.ஒரு செலவீனம் ரூ.5000/- க்கு மேல் இருந்தால் அத்தகைய செலவினத்திற்கு
கண்டிப்பாக மூன்று நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெறப்பட்டு
“Quotation” அவற்றில் குறைவான விலைப்புள்ளி வழங்கிய நிறுவனத்திடமிருந்து
பொருட்கள் வாங்கப்பட வேண்டும்.
4.நிதி ஆண்டு இறுதியில் ரொக்கக் கணக்குப் புத்தகம் இறுதி இருப்பு ஆகியவை
கணக்காளரால் சரிபார்க்கப்பட்டு தலைமையாசிரியரால் கையொப்பமிட வேண்டும்.
5.ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கர் பள்ளி பார்வையின்போது
அப்பள்ளிக்கு வழங்கப்படுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் மூலம்
மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ரொக்கப் பதிவேட்டில் பதிவு
செய்வதற்கு ஏதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி கணக்கு புத்தகம், ரொக்க
பதிவேடு மற்றும் செலவு மேற்கொண்டதற்கான பற்று சீட்டுகளை பள்ளி மேலாண்மைக்
குழு கணக்கரிடம் ஒத்திசைவு செய்ய வேண்டும்.
6.அனைத்து  பள்ளிகளிலிருந்து கூடிய வரையில் டிசம்பர் மாதம் முதல் ரொக்க
பதிவேடு, பற்றுச்சீட்டுகள், இருப்புப் பதிவேடு மற்றும் பொருட்களின்
உண்மைத் தன்மை ஆகியவற்றை பார்வையிட்ட பின்னரே பயன்பாட்டுச் சான்றிதழை
தலைமையாசிரியர் கையொப்பமுடன் ஆசிரியர் பயிற்றுநர்கள் பெறுதல் வேண்டும்.
7.பயன்படுத்தாத மீதமுள்ள தொகையினை 31.03.2019 க்குள் மாவட்ட திட்ட
அலுவலக கணக்கிற்கு தலைமையாசிரியர்கள் வங்கி வரைவோலை / ECS மூலம்
ஒப்படைப்பு செய்தல் வேண்டும்.
8.பள்ளித் தகவல் பலகையில் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நாளதுவரை
பெறப்பட்ட விவரம் (தேதி தொகை உட்பட) பெயிண்டால் எழுதப்பட்டிருக்க
வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*ஒருங்கிணைந்த பள்ளி மான்யம் பயன்படுத்தியதைக் கண்காணித்தல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. முதன்மைக் கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர்(APO), மாவட்ட கல்வி
அலுவலர்கள்(DEO), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பள்ளி பார்வையின்
போது மானியம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும் அதற்கான பற்றுச் சீட்டுகள்,
ரொக்கப் பதிவேடு மற்றும் இருப்புப் பதிவேடு ஆகியவற்றைக் கண்காணிக்க
வேண்டும்.
2.தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறனை 6,7,8 வகுப்பு மாணவர்கள் மேம்படுத்த
ஒவ்வொரு பள்ளி நாட்களிலும் தலைமையாசிரியர் (பள்ளி மேலாண்மைக் குழு
ஒப்புதலுடன்) தினசரி பத்திரிக்கைகள் வாங்கியுள்ளாரா என்பதையும்,
மாணவர்கள் வாசித்தல் திறனை பரிசோதித்தும் பள்ளிப் பார்வைக்கும் செல்லும்
அலுவலர்கள் பதிவேட்டில் குறிக்க வேண்டும்.
3.SWACHHTA ACTION PLAN 2018-19 முழு சுகாதாரத் தமிழகம் என்ற தலைப்பின்
கீழ் 10 சதவீதத் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
4.இருப்புப் பதிவேட்டையும், ரொக்க பதிவேட்டையும், பள்ளி மானியப்
பதிவேட்டையும் மற்றும் இம்மானியத்தை பயன்படுத்தி வாங்கப்பட்டுள்ள
பொருட்களின் உண்மைத் தன்மையையும் அலுவலர்கள் பார்வையிட வேண்டும்.
5.தேவையின் அடிப்படையிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி
மேலாண்மைக் குழு ஓப்புதலுடன் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளதா என்பதையும்,
வாங்கப்பட்டுள்ள பொருட்களின் தரத்தையும் உறுதி செய்தல் வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பொருட்கள் வாங்குதல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்களை பட்டியலிட வேண்டும்.
அவ்வாறு பட்டியலிட்ட பொருட்களை அவசியமான பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கி
பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின்படி தரமான பொருட்கள் மட்டுமே
வாங்கப்பட வேண்டும்.
2.தேவைப்படும் பொழுது மட்டும் பொருட்கள் வாங்க தேவைப்படும் அளவிற்கு
வங்கியிலிருந்து தொகை எடுக்கப்பட வேண்டும். கூடுதலாக தொகை எடுக்கப்பட்டு
நெடுநாட்களுக்கு தலைமையாசிரியர் கையிருப்பில் வைத்திருத்தல் கூடாது.
3.பொருட்கள் வாங்கியமைக்கான பற்றுச் சீட்டுகள் (Vouchers) பெறப்பட்டு
வரிசையாக பத்திரமாக பராமரிக்கப்பட வேண்டும். ஒரு செலவீனம் ரூ.5000/- க்கு
மேல் இருந்தால் அத்தகைய பற்றுச் சீட்டுகளுக்கு Tin நம்பர்
அவசியமானதாகும்.
4.தொகை பெறப்பட்டமை மற்றும் செலவு செய்யப்பட்டவை ரொக்கப் பதிவேட்டில்
(Cash book) பதிவு செய்ய வேண்டும். தலைமையாசிரியர் ஒவ்வொரு பதிவிலும்
தலையொப்பமிட வேண்டும். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் ரொக்கப் பதிவேடு
Abstract – இல் கையொப்பமிட வேண்டும்.
5.பொருட்களின் விவரங்களை இருப்புப் பதிவேட்டில் (Stock Register) பதிவு
செய்தல் வேண்டும். இருப்புப் பதிவேட்டு பக்க எண் பற்று சீட்டில் பதியப்பட
வேண்டும்.ஒவ்வொரு பதிவிலும் தலைமை ஆசிரியர் தலையொப்பமிப்பமிட வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பயன்பாட்டுச் சான்றிதழ்கள் ஒப்படைத்தல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1.பயன்பாட்டுச் சான்றிதழ்களை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

மாணவர் விவரத்தை கல்வித்துறை வெப்சைட்டில் பதிவு முடியாததால் காலதாமதமாகும் ஸ்மார்ட் கார்டு திட்டம் :

அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஸ்மார்ட் கார்டு திட்டம் காலதாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்தாக பள்ளி கல்வி மேலாண்மை இணையதளம்(இஎம்ஐஎஸ்) என்ற திட்டத்தை கடந்த 2012ம் ஆண்டு அரசு தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் ஒன்று முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவர்களின் பெயர், முகவரி, பள்ளி விவரம், பெற்றோர் விவரம் உள்ளிட்ட பொதுவான தகவல்கள் மற்றும் ரத்த வகை, எடை உயரம் உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் கூடுதலாக ஒவ்வொரு விவரமும் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டே இருக்கும். அதை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. அதற்கான பணிகள் தொடர்ந்து பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்த விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் தனித்தனியாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் உடனுக்குடன் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்கள் முடிந்து தற்போது 4வது மாதம் தொடங்கியுள்ளது. இருப்பினும் பல மாவட்டங்களில் மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்வது தொடர் காலதாமதமாவதாக புகார் எழுந்துள்ளது. அதாவது பெரும்பாலான அரசு தொடக்கப்பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் வசதியும் இல்லாமல் ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் விவரங்கள் கடந்த ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் எங்களுக்கு என்று தனியாக கணினி ஆசிரியர்கள் இல்லை. இங்கிருக்கும் ஓரிரு ஆசிரியர்களும் கணினி தெரிந்த ஆசிரியர்கள் இல்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள வேறு பள்ளி ஆசிரியர்களிடம் கொடுத்து பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

மேலும் கணினி தெரிந்த ஆசிரியர்கள் இருந்தாலும் பள்ளியில் கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் வசதி இல்லை. இதனால் தனியார் இன்டர்நெட் மையத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டி உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 90 லட்சம் மாணவர்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 90 சதவீதமாகும். இந்த பணி நூறு சதவீதம் முடியாமல் உள்ளதால் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடர்ந்து காலதாமதமாகிறது. இந்த பணி முடிந்தவுடன், ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஸ்மார்ட் கார்டால் என்ன பயன்?

இந்த திட்டம் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையாக மட்டும் அல்லாமல்  கல்வித்துறையில் டிஜிட்டல் வளர்ச்சிக்கான நகர்வாகவும் கருதப்படுகிறது. இந்த கார்டில் பயிலும் மாணவர்களின் புகைப்படம், ரத்த வகை, முகவரி, குடும்ப விவரம், ஆதார் விவரம் இடம் பெற்று இருக்கும். ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும் ஆசிரியர்கள் குறித்த விவரம் உள்ளிட்டவை குறித்தும் அறிந்து கொள்ளலாம். பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறைக்கு தேவை இருக்காது. ஒருங்கிணைக்கப்படும் தகவல்கள் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு தீர்வு காண வழிவகை ஏற்படும்

200 கோடி செலவில் 111 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை வசதி :

200 கோடி செலவில் 111 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை வசதி,  குடிநீர் வசதி செய்து தரப்படவுள்ளது. இதற்காக, விரைவில் டெண்டர் விட பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களின் கல்வி கற்பிக்கும் தரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பள்ளிகளில் புதிதாக ஆய்வகம், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டிய பள்ளிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டது. அதன்பேரில், மாவட்ட வாரியாக அதிகாரிகள் அளித்தனர். அந்த அறிக்கையின் பேரில் தமிழகம் முழுவதும் 111 மேல்நிலை பள்ளிகளில் நபார்டு வங்கியின் நிதியுதவியின் பேரில் 200 கோடி செலவில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகம், தளவாட பொருட்கள், சுற்றுச்சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டது. 885 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், 111 பள்ளிகளில் ஆய்வகம், தளவாட பொருட்கள், 104 இடங்களில் குடிநீர் வசதிகள், 255 இடங்களில் கழிப்பறை, 39478 மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது.

இதற்காக தற்போது தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் விரைவில் டெண்டர் விடப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் 1 பள்ளியிலும், கடலூர் மாவட்டத்தில் 2 பள்ளியிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 1ம், தர்மபுரி மாவட்டத்தில் 10ம், ஈரோடு மாவட்டத்தில் 6ம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1ம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2ம், கரூர் மாவட்டத்தில் 2ம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5ம், மதுரை மாவட்டத்தில் 5ம், நாமக்கல்லில் 1ம், நாகையில் 2ம், நீலகிரி, பெரம்பலூரில் தலா 1ம், புதுக்ேகாட்டையில் 21ம், ராமநாதபுரத்தில் 1ம், சேலத்தில் 14ம், சிவகங்கை 1ம், நெல்லையில் 3ம், திருப்பூரில் 2ம், திருவண்ணாமலை 3ம், திருச்சி 2ம், திருவள்ளூர் 2ம், தேனி 2ம், திருவாரூர் 1ம், தூத்துக்குடி 2ம், வேலூரில் 7ம், விழுப்புரத்தில் 10ம், விருதுநகர் 1 பள்ளி என மொத்தம் 111 பள்ளிகளில் அமைக்கப்படவிருக்கிறது. இதற்காக, 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் வகுப்பறை கேட்ட 14.13 லட்சம், ஆய்வகள் 39.27 லட்சம், தளவாட பொருட்கள் 24.24 லட்சம், குடிநீர் வசதி 2.52 லட்சம், கழிப்பறை 5.59 லட்சம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு 10 நாட்களுக்குள் டெண்டர் விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த பள்ளிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்

இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை :

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெற்று வரும் நான்காவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் வாழைப்பழத்தில் இருந்து டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் நிகழ்வில் பள்ளி மாணவர்கள் 550 பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்தனர் .
லக்னெளவில் கடந்த ஐந்தாம் தேதி முதல் இந்திய சர்வதேச அறிவியல் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திராகாந்தி பிரதிஷ்டானில் நடைபெற்று வரும் இந்த விழாவின் ஒரு பகுதியாக டிஎன்ஏவை தனியாகப் பிரித்து எடுக்கும் நிகழ்ச்சி ஜிடி கோயங்கா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அப்பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுமார் 550 பேர் பங்கேற்று வாழைப்பழத்தில் இருந்து டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வை கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் அமைப்பின் கல்வியாளர் ரிஷிநாத், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சரோஜா காந்த் பாரிக் ஆகியோர் பார்வையிட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் டாக்டர் ரேணு ஸ்வரூப் தொடங்கிவைத்தார். அவர் கூறுகையில், இந்த நிகழ்வானது இந்திய அறிவியல் வரலாற்றில் ஒரு பொன்னான தருணம் ஆகும். மேலும், மாணவர்களின் அறிவியல் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மாணவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை இது காட்டுவதாக உள்ளது. நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களிடமும் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், ஊக்கமளிக்கவும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் மாணவர்கள், பெண்கள், ஆராய்ச்சியாளர்கள் என 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 12,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும் என்றார்.
தேசிய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் சரோஜ் காந்த் பாரிக் கூறுகையில், சியாட் நகரில் நடைபெற்ற டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் கின்னஸ் நிகழ்வில் சுமார் 302 மாணவர்கள் பங்கேற்றனர். தற்போது நடைபெற்ற நிகழ்வில் 550 மாணவர்கள் பங்கேற்று சாதனை நிகழ்த்தி உள்ளனர் என்றார்.
திட்ட மாதிரிகள் கண்காட்சி: லக்னெள அன்சல் பிளாசா பகுதியில் உள்ள ஜிடி கோயங்கா பள்ளி வளாகத்தில் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக மாணவர்கள் பொறியியல் மாதிரி போட்டி நடைபெற்றது.
இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது நவீன கண்டுபிடிப்பு மாதிரிகளை காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழகம், ஆந்திரம், உத்தர பிரதேசம், தில்லி என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது 100 நவீன படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதில் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சர்பீன், பிரதீப் ஆகியோர் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய இரண்டு சக்கரங்களில் செயல்படும் ரோபோ இயந்திரத்தை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். கோயம்புத்தூர் கே. பி.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகள் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் கழிவுகளை அகற்றும் நவீன இயந்திரத்தை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஈ.சந்திரகுமார், எஸ்.ஹரிபிரசாத் ஆகியோர் பார்வையற்றவர்கள் பயன்படுத்தக் கூடிய நவீன ஊன்றுகோலை வடிவமைத்திருந்தனர்.
இது குறித்து அந்த மாணவர்கள் கூறுகையில், பார்வையற்றவர்கள், செல்லிடப்பேசியின் வாயிலாக இணைக்கப்பட்ட கருவிகள் மூலம் தங்களது முன்னே உள்ள பொருள்களை உணரும் வசதி இந்தக் கருவியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

தேசிய திறனாய்வுத் தேர்வில் சென்னை மாணவர் முதலிடம்!

உயர் படிப்புகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வில், தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

கடினமான தேர்வாகக் கருதப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் நிலைத் தேர்வு கடந்தாண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று மாநில அரசால் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாவது கட்டத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர். கடந்த மே 13ஆம் தேதியன்று, இது என்சிஇஆர்டியால் நடத்தப்பட்டது.இந்த தேர்வை நாடு முழுவதும் 12 லட்சம் பேர் எழுதினர். இதில், 1,000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் பொதுப் பிரிவைச் சேர்ந்த 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த ஆதித்யாஎன்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு சார்பில் ஆராய்ச்சிப் படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு போன்ற உயர் படிப்புகள், மருத்துவ உயர்படிப்புகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்

ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மை கண்டறியும் முகாம் !

கடலுாரில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மை கண்டறியும் முகாம் நடந்தது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எஸ்.எஸ்.எல்.சி., - பிளஸ் 2 பாட பிரிவு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் உண்மைத் தன்மையை கண்டறியும் பணியை மாவட்டம் வாரியாக முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மேற்கொண்டு வருகிறது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எஸ்.எஸ்.எல்.சி., - பிளஸ் 2 பாட பிரிவு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 3,800 பேரின் மதிப்பெண் சான்றிதழ்கள் உண்மையானவை என, கண்டறிந்து ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டது.மீதமுள்ள 400 பேரின் மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மையைக் கண்டறியும் சிறப்பு முகாம் கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.


இதற்காக ஆசிரியர்கள், பணியாளர்கள் சான்றிதழ்களுடன் வந்தனர்.அவர்களின் மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவெண், பிறந்த ஆண்டு, தேதியை, தேர்வுத் துறையின் ஆன்-லைன் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் கடலுார் செல்வராஜ், வடலுார் திருமுருகன், விருத்தாசலம் செல்வகுமார், சிதம்பரம் ஆஷா கிறிஸ்டின் ஆகியோர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, உண்மையானவ என, சான்றிதழ் வழங்கப்பட்டது.