யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/18

உடல்நலம் மருத்துவம்,









































உடல்நலம் மருத்துவம்,


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது எப்படி? அரசுக்கு சங்க நிர்வாகிகள் புதிய யோசனை:

                   
பழையை ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு நிறைய உள்ளதாக ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு புதிய யோசனையை தெரிவித்துள்ளனர்.
அதன்படி செயல்பட்டால் அரசுக்கு நிதிச்சுமையும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் கடந்த 1.4.2003 அன்று மற்றும் அதற்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (புதிய பென்சன் திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று ஊழியர்கள் போராட்டங்களை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அரசு தரப்பில் வாய்ப்பில்லை என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
இது குறித்து தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறி இருப்பதாவது: புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5.50 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

இவர்களின் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவீதம் பங்களிப்பு தொகை, அரசு சார்பில் செலுத்தப்பட்ட 10 சதவீதம் பங்களிப்பு தொகை மற்றும் அதற்குரிய வட்டி என தற்போது ரூ.24,000 கோடி அரசிடம் உள்ளது. இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தால் 50 சதவீதம் அதாவது ரூ.12,000 கோடி அரசு கரூவூலத்திற்கு திரும்ப வந்துவிடும்.

 மீதமுள்ள ரூ.12,000 கோடியை பணியாளர்களின் பங்களிப்பு ெதாகையை ஊழியர்களுக்கு சேமநல நிதி கணக்கு துவங்கி அதில் பற்று வைத்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு பின்னரே அத்தொகையை பயன்படுத்த அனுமதிக்கலாம்.
இதனால் அரசுக்கு உடனடி நிதி இழப்பீடு எதுவும் ஏற்படாது. மேலும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் அரசு சார்பில் வழங்கப்படும் 10 சதவீத பங்களிப்பு தொகை அளிக்க வேண்டிய அவசியம் எழாது. இதனால் ஆண்டுக்கு ரூ.2,000 கோடி அரசுக்கு நிதிச்சுமை குறையும்.
தற்போதுள்ள சூழலில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறும்பட்சத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள பெரிய தொகையான ரூ.24,000 கோடியை அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். அரசு இதுகுறித்து பரிசீலித்து விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர்

40 மணிநேரம் தொடர்ந்து கற்பித்தல் ஆசிரியை சாதனை முயற்சி :

மதுரை கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் 40 மணி நேரம் தொடர்ந்து கற்பித்தலில் ஈடுபட்டு ராஜம் வித்யாலயம் பள்ளி ஆசிரியை சுலைகாபானு சாதனை முயற்சி மேற்கொண்டார்.நேற்று காலை 9:10 மணிக்கு துவங்கி நாளை (டிச.,3) காலை 9:00 மணி வரை கற்பித்தலை தொடரவுள்ளார். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் குழு 'ஷிப்ட்' முறையில் கற்கும் பணியில் ஈடுபடுகின்றன. இவரது சாதனையை சாம்பியன் உலக சாதனை மையம் பதிவு செய்ய உள்ளது.சுலைகாபானு கூறுகையில், "சமூக அறிவியல் பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக இந்த சாதனையை துவங்கியுள்ளேன். தமிழகத்தில் ஆங்கில பாடத்தை தொடர்ந்து 10 மணிநேரம் கற்பித்தது சாதனையாக உள்ளது. சமூக அறிவியல் பாடத்திலான சாதனை இது தான் முதல்முறை," என்றார். இவர் தினமலர் லட்சிய ஆசிரியர் விருது பெற்றவர்

TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் கூடுதல் மார்க் வழங்க ஐகோர்ட் உத்தரவு :

வந்தே மாதரம் பாடல் முதலில் எழுதப்பட்ட மொழி பெங்காலியா, சமஸ்கிருதமா என்ற கேள்விக்கு பெங்காலி என்ற சரியான விடைக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி புதுநகரைச் சேர்ந்த சுதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  எம்ஏ, எட் (தமிழ்) பட்டதாரியான நான், 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றேன். இதில், கட் ஆப் மதிப்பெண் 82 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் எனக்கு 81 மதிப்பெண்கள் கிடைத்தது.
தேர்வின் போது சமூக அறிவியல் பாடத்தில் 97வது கேள்வியில், ‘வந்தே மாதரம்’’ பாடல் முதலில் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது என கேட்கப்பட்டிருந்தது. இதற்கு ஏ) பெங்காலி, பி) மராத்தி, சி) உருது, டி) சமஸ்கிருதம் என 4 பதில்கள் இருந்தன. சரியான பதிலான ஏ) பெங்காலி என விடை அளித்தேன்.
ஆனால், டிஆர்பியால் வெளியிடப்பட்ட கீ ஆன்சரில் டி) சமஸ்கிருதம் என்பதே சரியான விடை என குறிப்பிட்டிருந்தனர்.  வந்தே மாதரம் பாடல் வங்கத்து கவிஞர் பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் முதலில் எழுதப்பட்டு பின்னர் தான் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன்மூலம் எனக்கு ஒரு மதிப்பெண் குறைந்துள்ளது.
அந்த மதிப்பெண் எனக்கு வழங்கப்பட்டிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணி கிடைத்திருக்கும். எனக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கி, ஆசிரியர் பணி வழங்க வேண்டுமென மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டு எனக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கவும், பட்டதாரி ஆசிரியராக நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல், சிவகாமிசுந்தரி என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘‘தேர்வு முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நியமன நடைமுறைகளும் முடிந்து விட்டது. அதே நேரம் மனுதாரர்கள் தகுதி இல்லையென கூற முடியாது. எனவே, அவர்கள் எழுதிய சரியான விடைக்கு கூடுதலாக 1 மதிப்பெண் வழங்கி, அதற்குரிய சான்றிதழ்களை டிஆர்பி வழங்க வேண்டும்.

2020க்குள் நியமன நடைமுறைகள் மேற்கொள்ளும்போது மனுதாரர்களுக்கு தகுதியின்படி பணி வழங்க பரிசீலிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டார்

நர்சிங் மாணவர் சேர்க்கை: காலஅவகாசம் நீட்டிப்பு :

நர்சிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசத்தை, டிச., 31ம் தேதி வரை நீட்டித்து, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அறிவித்துள்ளது.
பி.எஸ்சி., நர்சிங், பி.பி.பி.எஸ்சி., நர்சிங், எம்.எஸ்சி., நர்சிங் ஆகிய அனைத்து படிப்புகளுக்கும் நவ., 30ம் தேதி வரை மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது, இந்தியன் நர்சிங் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, இக்காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்கலை விதிமுறைகளின்படி, பருவத்தேர்வுகளுக்கு முன் மாணவர்களின் வருகை பதிவு விதிமுறை சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TRB சிறப்பாசிரியர் பணி நியமனத்திற்கு அரசு தொழில் நுட்பத் தேர்வு பாடங்களுக்கு தமிழ் வழி சான்றிதழ் தேவையா? CM CELL Reply:

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க திட்டம் :

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணித் திறன் குறித்து, பொது மக்கள் அளிக்கும் மதிப்பெண் அடிப்படையில், பதவி உயர்வு வழங்கும் திட்டத்தை, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம், வேலைகளை முடிக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில், பொது மக்களிடம், கருத்துகளை பெற்று, அதன் அடிப்படையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு அளிக்க, ஏழாவது சம்பள கமிஷன், மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை தயாரிக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை, சமீபத்தில் வரைவு மசோதா தயாரித்து வழங்கியுள்ளது.இதன்படி, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் இணையதளங்களில், ஊழியர்கள் மற்றும் பணிகள் குறித்த விபரங்கள் வெளியிடப்படும். பொது மக்கள் தங்கள் அனுபவத்துக்கு ஏற்ப, அளிக்கும் மதிப்பெண் அடிப்படையில், அதிகாரிகள், ஊழியர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.'அடுத்த ஆண்டு, ஏப்.1 முதல், இத்திட்டம் அமல்படுத்தப்படும்' என, பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறினர்

முதுநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்ப திட்டம்?

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கான, பதவி உயர்வு நடவடிக்கையை, இந்த வாரத்தில் துவக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள், சமீபத்தில் நிரப்பப்பட்டன. பணி மூப்பு அடிப்படையில், மூத்த நிலையில் உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு வழங்கப் பட்டது. இதன்படி, 135 பேர் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து, முதுநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில் காலியாக உள்ள பணியிடங்களை, பதவி உயர்வு வழியாக நிரப்ப, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த பதவி உயர்வு நடவடிக்கை, இந்த வாரம் துவங்க உள்ளது. முதற்கட்டமாக, மாவட்ட வாரியாக பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்படும். இதையடுத்து, பதவி உயர்வு வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்

மாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு வெகுதூர இடமாறுதல்: பள்ளிக்கல்வித்துறை ஆணை ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு :

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்.தாமரைச்செல்வி. மாற்றுத்திறனாளி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான், கடந்த 1997-ம் ஆண்டு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். கடந்த ஆகஸ்டு மாதம் நாகப்பட்டினம் மாவட்டம் கொற்கையில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன்.
இந்தநிலையில், அந்த பள்ளி மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால், என்னை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். மாற்றுத்திறனாளியான என்னை அருகில் உள்ள தாழஞ்சேரி உயர்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்ய கோரினேன்.

ஆனால் நான் பணியாற்றி வந்த பள்ளியில் இருந்து 104 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியாத்தும்பூர் உயர் நிலைப்பள்ளிக்கு என்னை இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

என்னை பெரியாத்தும்பூருக்கு மாற்றம் செய்த அதிகாரி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தாழஞ்சேரி உயர் நிலைப்பள்ளிக்கு என்னை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இடமாறுதலில் உரிய சட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது. மனுதாரரை விட பணியில் மூத்தவரான கண்ணகி என்பவர் தாழஞ்சேரி பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியை இடமாறுதலில் மாற்றுத்திறனாளியை விட சீனியாரிட்டிக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது தெரிகிறது. மனுதாரர் மாற்றுத்திறனாளி என்பதால் அவர் தற்போது வசித்து வரும் பகுதியில் இருந்து 104 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரியாத்தும்பூர் பள்ளிக்கு சென்று வருவது கடினமானது.

ஒரு பதவிக்கு ஒருவருக்கு மேல் விண்ணப்பித்திருந்தால் அதில் ஊனமுற்றவருக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று தமிழக அரசின் ஆணை கூறுகிறது. மனுதாரர் விவகாரத்தில் இந்த ஆணை அமல்படுத்தப்படவில்லை. கவுன்சிலிங் என்ற பெயரில் மனுதாரருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது.

எனவே, மனுதாரரை பெரியாத்தும்பூர் பள்ளிக்கு இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை தாழஞ்சேரி அரசு உயர் நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து ஒரு வாரத்திற்குள் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்தாதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க நேரிடும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது

Recruitment Of Secondary Grade Teachers -last date to apply 15.12.2018:

ஆசிரியர்களுக்கான 'ஒர்க் பிளேஸ்' சமூக வலைதளம்

                                            
கற்பித்தல் முறை பரிமாற்றம் செய்வதில் முதன்மைஉடுமலை:ஆசிரியர்களுக்கான 'ஒர்க் பிளேஸ்', சமூக வலைதளம், பல்வேறு இணை செயல்பாடுகளும், கற்பித்தல் முறைகளையும் பரிமாற்றம் செய்வதில் முதன்மையாக மாறி வருகிறது.மாணவர்களுக்கு புதுவிதமான கற்பித்தல் முறையால், கற்றலை எளிமையாக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் அவரவர் பள்ளிகளில் செயல்படுத்தியுள்ள புதியமுயற்சிகளை, மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்த கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் பதிவுகளையும் மேற்கொண்டன.தொழில்நுட்ப வளர்ச்சியால், தற்போது, ஆசிரியர்களுக்கு தகவல் பரிமாற்றமும், மற்ற பள்ளிகளில் நடக்கும்புதுவிதமான செயல்பாடுகளை, அவரவர்பள்ளிகளில் செயல்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சமூக வலைதளத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கென, 'ஒர்க் பிளேஸ்', என்ற புதிய பக்கத்தைகல்வித்துறையினர் உருவாக்கியுள்ளனர்

புயல் நிவாரணப் பணிகளில் ஆசிரியர்களின் பங்கு :


Posted: 02 Dec 2018 07:07 AM PST

புதுக்கோட்டை,டிச.2: திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் வட்டாரக்கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமையில் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள்  விடுமுறை நாட்களில்  கஜாபுயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில்    வீடு வீடாக சென்று நிவாரப் பொருட்களை வழங்கினர்.

 இது குறித்து மணிகண்டம்  வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் கூறியதாவது:கஜா
புயலினால் தஞ்சை,திருவாரூர்,நாகை,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது..இச்செய்தி அறிந்தவுடன் என் மனம் வேதனை அடைந்தது.எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் துயர் துடைக்கும் வகையில் தஞ்சைப் பகுதியில் அலுவலக வேலை நேரம் முடிந்த பிறகு இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் களப்பணியில் ஈடுபட்டேன்.. அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிவெடுத்து எனது ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களோடு இங்கு வந்தேன்..அதன்படி புதுக்கோட்டை மாவட்டம்  திருமலைராயசமுத்திரம் ஊராட்சி ,மேட்டுபட்டி அருகே உள்ள உடையாநேரி கிராம மக்களுக்கு தார்ப்பாய்,கைலி,வாட்டர் பாக்கெட்,பிஸ்கெட் ,சாப்பாடு வழங்கினோம்..பின்னர் ரெங்கம்மா சத்திரம் அருகே உள்ள காமராஜர் பகுதி மக்களுக்கு சாப்பாடு,பிரட் வழங்கினோம்...பின்னர்நார்த்தாமலை பொம்மாடி மலை அருகே உள்ள இந்திராகாலனி,சமத்துவபுரம் மக்களுக்கு பிஸ்கட்,சேமியா பாக்கெட்,கோதுமை மாவு போன்ற பொருள்களை வழங்கினோம்..இது போன்ற பணியில் ஈடுபடும் பொழுது மனம் நிறைவாக உள்ளது..அடுத்த வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு ஏதாவது கிராமத்திற்கு கூடுதல் நிவாரப் பொருட்களை பெற்று வந்து களப்பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.

நிவாரணப்பணியில்  சமயபுரம்  எஸ்.ஆர்.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் துளசிதாசன் அறிவுறுத்தலின் பேரில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள்  11 பேர் தன்னுடன் பயிலும் மாணவர்களிடம் நிதி வசூல் செய்து அப்பணத்தில் பொருட்களை    வாங்கி வந்து களப்பணி ஆற்றியது  குறிப்பிடத்தக்கது..

நிவாரணப் பணியில் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழக மாநில பொதுச்செயலாளர் செல்வம்,அருவாக்குடி தலைமைஆசிரியர் ஆரோக்கியராஜ்,எடமலைப்பட்டி நல்லாசிரியர் புஷ்பலதா,ரயில்வே துறையை சேர்ந்த பாலாஜி, புதுக்கோட்டை மாவட்ட சி.பி.எம் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சலோமி,பொன்மாரி மெட்ரிக் பள்ளி தாளாளர் சந்திரா ரவீந்திரன் ஆகியோர் ஈடுபட்டனர்..

நிவாரணப்பொருட்களை சர்வீஸ் டூ சொசைட்டி அமைப்பைச் சேர்ந்த ரவி சொக்கலிங்கம் மற்றும் திருச்சியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் அனுப்பி இருந்தனர்..




Posted: 02 Dec 2018 07:04 AM PST
Posted: 02 Dec 2018 06:59 AM PST

புதுக்கோட்டை,டிச.2:திட்டமிட்டபடி ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்..

புதுக்கோட்டை திலகர் திடல் அருகே சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் டிசம்பர் 4 முதல் நடைபெறும் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பார்கள்..ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள்  போராட்டம் குறித்து வட்டார அளவில்  பிராச்சாரம் மேற்கொள்வார்கள்.. போராட்ட நாட்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சங்கங்களின் சார்பாக ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் 10 ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்,அரசுப் பணியாளர்கள் நிவாரணப்பணிகளில் ஈடுபட உள்ளனர் என்றார்கள்..

ஆயத்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெங்கசாமி,செல்வராஜ்,ராஜாங்கம்,கண்ணன்,செல்லத்துரை,புகழேந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக மன்றம் சண்முகம்நாதன்,ஜபருல்லா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்..

கூட்டத்தில் மாநில,மாவட்ட ஒன்றிய பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்,அரசுப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

திட்டமிட்டபடி டிசம்பர் 4 ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்: ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டி.