யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/18

உடல்நலம் மருத்துவம்,


இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..
இதை தயாரிக்கும் முறை:

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.

தேவையான பொருட்கள்:

ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
நாட்டு கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2

செய்முறை :

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.

தானியங்களை இந்த அளவு வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

பயன்கள்

1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.

2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.

3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

குறிப்பு:

5 மாதம் கெடாது.

1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 5 மாதம் வரை கெடாது.

2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.

குறிப்பு : காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...

பகிருங்கள் நம் மக்கள் உடல் பலம் அடையட்டும்....

உடல்நலம் மருத்துவம், இஞ்சிப் பால்


இஞ்சிப் பால்

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

அரிசிகளின் இரகசியம்...உடல்நலம் மருத்துவம்,


அரிசிகளின் இரகசியம்...

       1. கருப்பு கவுணி அரிசி : மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும்.
9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும்.
11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும்.
14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும்.
15. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும்.
17.சீரகச் சம்பா அரிசி : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும்.
19. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும்.
20.சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21. பிசினி அரிசி : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும்....

MEDICAL FITNESS_உடல்நலம் மருத்துவம்


MEDICAL FITNESS_
  BLOOD PRESSURE
120/80 --  Normal
130/85 --Normal  (Control)
140/90 --  High
150/95 --  V.High
----------------------------

           PULSE
          --------
72  per minute (standard)
60 --- 80 p.m. (Normal)
40 -- 180  p.m.(abnormal)
----------------------------

          TEMPERATURE
          -----------------
98.4 F    (Normal)
99.0 F Above  (Fever)

BLOOD GROUP COMPATIBILITY

What’s Your Type and how common is it?

O+       1 in 3        37.4%
(Most common)

A+        1 in 3        35.7%

B+        1 in 12        8.5%

AB+     1 in 29        3.4%

O-        1 in 15        6.6%

A-        1 in 16        6.3%

B-        1 in 67        1.5%

AB-     1 in 167        .6%
(Rarest)

Compatible Blood Types

O- can receive O-

O+ can receive O+, O-

A- can receive A-, O-

A+ can receive A+, A-, O+, O-

B- can receive B-, O-

B+ can receive B+, B-, O+, O-

AB- can receive AB-, B-, A-, O-

AB+ can receive AB+, AB-, B+, B-, A+,  A-,  O+,  O-

This is an important msg which can save a life! A life could be saved...
What is ur blood group ?
Share the fantastic information..

EFFECT OF WATER                 
 We Know Water is
       important but never
       knew about the
       Special Times one
       has to drink it.. !

       Did you know ?

  Drinking 1 Glass of Water at the Right Time Maximizes its effectiveness on the  Human Body;

         1 Glass of Water
              after waking up -
              helps to
              activate internal
              organs..

         1 Glass of Water
              30 Minutes  
              before a Meal -
              helps digestion..

        1 Glass of Water
              before taking a
              Bath  - helps
              lower your blood
              pressure.

        1 Glass of Water
              before going to
              Bed -  avoids
              Stroke  or Heart
              Attack.

      'When someone
       shares something of
       value with you and
       you benefit from  it,
       You have a moral


உடல்நலம் மருத்துவம்,









































உடல்நலம் மருத்துவம்,


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது எப்படி? அரசுக்கு சங்க நிர்வாகிகள் புதிய யோசனை:

                   
பழையை ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு நிறைய உள்ளதாக ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு புதிய யோசனையை தெரிவித்துள்ளனர்.
அதன்படி செயல்பட்டால் அரசுக்கு நிதிச்சுமையும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் கடந்த 1.4.2003 அன்று மற்றும் அதற்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (புதிய பென்சன் திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று ஊழியர்கள் போராட்டங்களை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அரசு தரப்பில் வாய்ப்பில்லை என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
இது குறித்து தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறி இருப்பதாவது: புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5.50 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

இவர்களின் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவீதம் பங்களிப்பு தொகை, அரசு சார்பில் செலுத்தப்பட்ட 10 சதவீதம் பங்களிப்பு தொகை மற்றும் அதற்குரிய வட்டி என தற்போது ரூ.24,000 கோடி அரசிடம் உள்ளது. இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தால் 50 சதவீதம் அதாவது ரூ.12,000 கோடி அரசு கரூவூலத்திற்கு திரும்ப வந்துவிடும்.

 மீதமுள்ள ரூ.12,000 கோடியை பணியாளர்களின் பங்களிப்பு ெதாகையை ஊழியர்களுக்கு சேமநல நிதி கணக்கு துவங்கி அதில் பற்று வைத்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு பின்னரே அத்தொகையை பயன்படுத்த அனுமதிக்கலாம்.
இதனால் அரசுக்கு உடனடி நிதி இழப்பீடு எதுவும் ஏற்படாது. மேலும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் அரசு சார்பில் வழங்கப்படும் 10 சதவீத பங்களிப்பு தொகை அளிக்க வேண்டிய அவசியம் எழாது. இதனால் ஆண்டுக்கு ரூ.2,000 கோடி அரசுக்கு நிதிச்சுமை குறையும்.
தற்போதுள்ள சூழலில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறும்பட்சத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள பெரிய தொகையான ரூ.24,000 கோடியை அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். அரசு இதுகுறித்து பரிசீலித்து விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர்

40 மணிநேரம் தொடர்ந்து கற்பித்தல் ஆசிரியை சாதனை முயற்சி :

மதுரை கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் 40 மணி நேரம் தொடர்ந்து கற்பித்தலில் ஈடுபட்டு ராஜம் வித்யாலயம் பள்ளி ஆசிரியை சுலைகாபானு சாதனை முயற்சி மேற்கொண்டார்.நேற்று காலை 9:10 மணிக்கு துவங்கி நாளை (டிச.,3) காலை 9:00 மணி வரை கற்பித்தலை தொடரவுள்ளார். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் குழு 'ஷிப்ட்' முறையில் கற்கும் பணியில் ஈடுபடுகின்றன. இவரது சாதனையை சாம்பியன் உலக சாதனை மையம் பதிவு செய்ய உள்ளது.சுலைகாபானு கூறுகையில், "சமூக அறிவியல் பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக இந்த சாதனையை துவங்கியுள்ளேன். தமிழகத்தில் ஆங்கில பாடத்தை தொடர்ந்து 10 மணிநேரம் கற்பித்தது சாதனையாக உள்ளது. சமூக அறிவியல் பாடத்திலான சாதனை இது தான் முதல்முறை," என்றார். இவர் தினமலர் லட்சிய ஆசிரியர் விருது பெற்றவர்

TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் கூடுதல் மார்க் வழங்க ஐகோர்ட் உத்தரவு :

வந்தே மாதரம் பாடல் முதலில் எழுதப்பட்ட மொழி பெங்காலியா, சமஸ்கிருதமா என்ற கேள்விக்கு பெங்காலி என்ற சரியான விடைக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி புதுநகரைச் சேர்ந்த சுதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  எம்ஏ, எட் (தமிழ்) பட்டதாரியான நான், 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றேன். இதில், கட் ஆப் மதிப்பெண் 82 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் எனக்கு 81 மதிப்பெண்கள் கிடைத்தது.
தேர்வின் போது சமூக அறிவியல் பாடத்தில் 97வது கேள்வியில், ‘வந்தே மாதரம்’’ பாடல் முதலில் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது என கேட்கப்பட்டிருந்தது. இதற்கு ஏ) பெங்காலி, பி) மராத்தி, சி) உருது, டி) சமஸ்கிருதம் என 4 பதில்கள் இருந்தன. சரியான பதிலான ஏ) பெங்காலி என விடை அளித்தேன்.
ஆனால், டிஆர்பியால் வெளியிடப்பட்ட கீ ஆன்சரில் டி) சமஸ்கிருதம் என்பதே சரியான விடை என குறிப்பிட்டிருந்தனர்.  வந்தே மாதரம் பாடல் வங்கத்து கவிஞர் பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் முதலில் எழுதப்பட்டு பின்னர் தான் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன்மூலம் எனக்கு ஒரு மதிப்பெண் குறைந்துள்ளது.
அந்த மதிப்பெண் எனக்கு வழங்கப்பட்டிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணி கிடைத்திருக்கும். எனக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கி, ஆசிரியர் பணி வழங்க வேண்டுமென மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டு எனக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கவும், பட்டதாரி ஆசிரியராக நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல், சிவகாமிசுந்தரி என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘‘தேர்வு முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நியமன நடைமுறைகளும் முடிந்து விட்டது. அதே நேரம் மனுதாரர்கள் தகுதி இல்லையென கூற முடியாது. எனவே, அவர்கள் எழுதிய சரியான விடைக்கு கூடுதலாக 1 மதிப்பெண் வழங்கி, அதற்குரிய சான்றிதழ்களை டிஆர்பி வழங்க வேண்டும்.

2020க்குள் நியமன நடைமுறைகள் மேற்கொள்ளும்போது மனுதாரர்களுக்கு தகுதியின்படி பணி வழங்க பரிசீலிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டார்

நர்சிங் மாணவர் சேர்க்கை: காலஅவகாசம் நீட்டிப்பு :

நர்சிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசத்தை, டிச., 31ம் தேதி வரை நீட்டித்து, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அறிவித்துள்ளது.
பி.எஸ்சி., நர்சிங், பி.பி.பி.எஸ்சி., நர்சிங், எம்.எஸ்சி., நர்சிங் ஆகிய அனைத்து படிப்புகளுக்கும் நவ., 30ம் தேதி வரை மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது, இந்தியன் நர்சிங் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, இக்காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்கலை விதிமுறைகளின்படி, பருவத்தேர்வுகளுக்கு முன் மாணவர்களின் வருகை பதிவு விதிமுறை சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TRB சிறப்பாசிரியர் பணி நியமனத்திற்கு அரசு தொழில் நுட்பத் தேர்வு பாடங்களுக்கு தமிழ் வழி சான்றிதழ் தேவையா? CM CELL Reply:

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க திட்டம் :

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணித் திறன் குறித்து, பொது மக்கள் அளிக்கும் மதிப்பெண் அடிப்படையில், பதவி உயர்வு வழங்கும் திட்டத்தை, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம், வேலைகளை முடிக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில், பொது மக்களிடம், கருத்துகளை பெற்று, அதன் அடிப்படையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு அளிக்க, ஏழாவது சம்பள கமிஷன், மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை தயாரிக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை, சமீபத்தில் வரைவு மசோதா தயாரித்து வழங்கியுள்ளது.இதன்படி, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் இணையதளங்களில், ஊழியர்கள் மற்றும் பணிகள் குறித்த விபரங்கள் வெளியிடப்படும். பொது மக்கள் தங்கள் அனுபவத்துக்கு ஏற்ப, அளிக்கும் மதிப்பெண் அடிப்படையில், அதிகாரிகள், ஊழியர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.'அடுத்த ஆண்டு, ஏப்.1 முதல், இத்திட்டம் அமல்படுத்தப்படும்' என, பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறினர்

முதுநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்ப திட்டம்?

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கான, பதவி உயர்வு நடவடிக்கையை, இந்த வாரத்தில் துவக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள், சமீபத்தில் நிரப்பப்பட்டன. பணி மூப்பு அடிப்படையில், மூத்த நிலையில் உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு வழங்கப் பட்டது. இதன்படி, 135 பேர் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து, முதுநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில் காலியாக உள்ள பணியிடங்களை, பதவி உயர்வு வழியாக நிரப்ப, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த பதவி உயர்வு நடவடிக்கை, இந்த வாரம் துவங்க உள்ளது. முதற்கட்டமாக, மாவட்ட வாரியாக பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்படும். இதையடுத்து, பதவி உயர்வு வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்