- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
23/10/15
திட்டமிட்டு படித்தால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி., தொடர்ந்து தேர்வுகளை நடத்துகிறது
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 1947 காலியிடங்களை நிரப்ப குரூப் 2 ஏ தேர்வை அறிவித்துள்ளது.இது குறித்து மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் கூறியதாவது:தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் இளநிலை அலுவலர், வணிகவரி, பதிவுத் துறை, போக்குரவத்து, தொழில்நுட்ப கல்வி, பள்ளிக்கல்வி, ஊரக மேம்பாட்டு துறையில் 1947 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வுக்கு அக்., 12 ல் அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவ., 11. தேர்வு நாள் ஜன.,24. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது வரம்பில்லை.
தேர்வு முறை: பொதுஅறிவு 75 வினாக்கள். இது பட்டப்படிப்பு தரத்தில் கேட்கப்படும். திறனறி தேர்வில் 25 வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் ஆகியவை பத்தாம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். 300 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி தேர்வு எழுத வேண்டும்.
கடந்த இரண்டாண்டுகளாக திறனறி தேர்வுகள் நடத்தப்படுவதால், முதல்முயற்சியில் தேர்வெழுதுபவர்களுக்கு அதிக வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. எழுத்துத் தேர்வின் மூலமே பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. நேர்காணல் கிடையாது.
எதிர்பார்ப்பில் வி.ஏ.ஓ., தேர்வு: அடுத்ததாக வி.ஏ.ஓ., மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. வி.ஏ.ஓ., தேர்வுக்கான 800 காலிப் பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 21 - 30 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பொதுஅறிவு 75 வினாக்கள், கிராம நிர்வாக நடைமுறைகள் குறித்து 25 வினாக்கள், திறனறி தேர்வு 20 வினாக்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 வினாக்கள் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வெழுத வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் இருக்கும்.
குரூப் 4 தேர்வு: பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், சர்வேயர், டிராப்ட்ஸ்மேன் பிரிவுகளில் 2500 காலிப்பணியிடங்கள் உள்ளன. குரூப் 4 தேர்விற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.பொது அறிவு 75 வினாக்கள், திறனறி தேர்வு 25 வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வெழுத வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயது, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் 32 வயது, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வயது வரம்பில்லை.
பொதுப்பிரிவினருக்கு இச்சலுகை கிடையாது. பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அளவில் திறனறி வினாக்கள் கேட்கப்படும். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு பாடத்தை படிக்க வேண்டும்.குரூப் 2ஏ தேர்வுக்கு உங்களை தயார்படுத்திக்கொண்டால், தொடர்ந்து நடக்கும் குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வுகளுக்கும் அது பயனுள்ளதாக அமையும், என்றார்.
போனஸ் சம்பள உச்சவரம்பு உயர்வு: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு
தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பு தொகையை, தற்போதுள்ள, 10,000 ரூபாயிலிருந்து, 21 ஆயிரமாக உயர்த்த, பிரதமர் மோடி தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 1965ல், நிறைவேற்றப்பட்ட, போனஸ் சட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே, போனஸ் சட்டம் பொருந்தும். போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பு மற்றும் போனஸ் தொகை, கடைசியாக, 2006ல், உயர்த்தப்பட்டது. இந்நிலையில், போனஸ் மற்றும் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை உயர்த்த வேண்டுமென, நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. செப்டம்பர் 2ல், தொழிற்சங்கங்கள், ஒரு நாள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அப்போது, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்திய மத்திய அரசு, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில், மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று(21-10-15) நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பை, தற்போதுள்ள, 10,000 ரூபாயிலிருந்து, 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்த, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது; இனி, 21 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுவோருக்கு போனஸ் கிடைக்கும்.
மேலும், தொழிலாளர்களுக்கான போனஸ் உச்சவரம்பாக உள்ள, 3,500 ரூபாயை இரட்டிப்பாக்கியுள்ள மத்திய அமைச்சரவை, அதை, 7,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. விரைவில் கூடவுள்ள பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத் தொடரில், இது தொடர்பான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
* இந்தியா - எகிப்து இடையேயான, கடல்சார் போக்குவரத்து குறித்த ஒப்பந்தத்துக்கும், வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணும் விஷயத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது
* பயங்கரவாதத்தை ஒழிக்கும் விஷயத்தில், மாலத்தீவு நாட்டுடன் இணைந்து செயல்படுவதற் கான ஒப்பந்தத்துக்கும் ஓப்புதல் அளிக்கப்பட்டது.
சித்தா உள்ளிட்ட 5 படிப்புகளுக்கு 25-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்: 4 நாட்கள் நடக்கிறது
சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள் ளிட்ட 5 பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2015-16ம் கல்வி ஆண்டுக்கு சித்தா, ஆயுர் வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளில் சேர தமிழகம் முழுவதும் இருந்து 5,075 பேர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான 4,913 பேருக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இது, www.tnhealth.org என்ற சுகா தாரத்துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட 5 பட்டப் படிப்புகளுக்கான கலந் தாய்வு சென்னை அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவ மனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘முதல் கட்ட கலந் தாய்வுக்குப் பிறகு காலி இடங்கள் இருந்தால் 31-ம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வில் பங்கேற்குமாறு மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப் பட்டு வருகின்றன. 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு இன் னும் அனுமதி கிடைக்கவில்லை. விரைவில் அனுமதி கிடைத்து விடும். கலந்தாய்வு குறித்த மேலும் தகவல்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்’’ என்றார்.

பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ல் கணிதத்திறன் தேர்வு
பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி சென்னையில் கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும் இத்தேர்வில் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
இதில் கலந்துகொள்ள விரும்பு வோர் நவம்பர் 18-ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு (தொலைபேசி எண்: 044-24410025) செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியால் கூடுதல் பணிச்சுமை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுமா?
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. கலந்தாய்வின்போது பல காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியிடத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர்.
இவ்வாறு கூடுதலாக கவனிப்பதால் பிளஸ் 2 பாடம் எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் நெல்லை மாவட்டத்தில் சில அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்கள் மறைக்கப்பட்டன. இதனால் அந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் பிளஸ்2 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் முதுநிலை ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியர் பொறுப்பும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு அதிகமான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, காலி பணியிடங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதனால் ஏற்படும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு இரண்டாவது பொது கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.ஏற்கெனவே, கலந்தாய்வு மூன்று மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்ட நிலையில் பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆள் இல்லாமல் காலியாக உள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியையும் கவனிக்க முடியாமலும், பாடத்தை முழு ஈடுபாட்டுடன் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாமலும் திணறுகின்றனர்.
எதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு?
* வேலை வாய்ப்பை பொறுத்தவரை, இளநிலை அல்லது முதுநிலை படிப்பை எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம்? என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்!
* துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம், நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமே இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
*நவீன இயந்திரங்களின் வருகையால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ‘கோர்’ பொறியியல் துறைகளில் 30 சதவீத வேலை வாய்ப்புகள் காணாமல் போகும். அதேசமயம், டிஜிட்டல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் உதயம், அதிக பணியாளர்களை நியமிக்கும் நிலையை உருவாக்கும்.
* பிக்-டேட்டா அனலிடிக்ஸ், மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட், பிளாட்பார்ம் இன்ஜினியரிங், கிராபிக் டிசைன் இன்ஜினியரிங், நியு யூசர் இன்டர்பேஸ் மற்றும் டேட்டா சயின்டிஸ்ட் ஆகிய புதிய துறைகளில் தேவைப்படும் திறனாளர்களின் எண்ணிக்கை பிரம்மாண்டமான அளவில் இருக்கும்.
* முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யும் முறையை அதிகளவில் கையாளும். அதன்படி, வரும் 2020ம் ஆண்டிற்குள் 22 சதவீத பணியாளர்களை ஆன்லைன் மூலம் தேர்வு செய்யும்.
* பல்கலைக்கழகங்கள் தங்களது பாடத்திட்டத்தை தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றத் தவறினால், வேலை வாய்ப்புக்கு தகுதியுடைய பட்டதாரிகளின் எண்ணிக்கை 20 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கும்.
* எந்த இன்ஜினியரிங் படிப்பை படித்திருந்தாலும், ‘கோடிங்’ திறன் உள்ளவர்களுக்கு சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
* ஈவன்ட் மேனேஜ்மென்ட், மீடியா, விஷûவல் மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறைகளின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
* கிரியேட்டிவ் மற்றும் டெக்னிக்கல் ரைட்டிங் போன்ற புதிய துறைகளில் பணியாளர்களுக்கான தேவை எக்கச்சக்கமாக இருக்கும்.
* ஹெல்த் கேர் துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக உயரும்.
* சட்டத்துறையில், கார்ப்ரேட் சட்ட ஆலோசகளின் தேவையும் அதிகளவில் இருக்கும்.
* கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தேவை சொல்லிக்கொள்ளும் வகையில் அமையும்.
* வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துறையில் பணியாளர்களின் தேவை அபரிமிதமாக இருக்கும்.
* மாற்றத்தக்க சக்தி துறையில் பணியாளர்களின் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளில், 15 சதவீதத்தை தொடும்.
* அதிக தேவை மிகுந்த துறைகளாக பொறியியல், வங்கி, நிதி, கணிதம் மற்றும் சேவை ஆகியவை இருக்கும்.
* ஒருவரின் முன்னேற்றத்தில் ஆங்கில வழிதொடர்பு, பகுத்தாய்வு திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
-கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
கல்விக்கு அனைத்து உதவியும் செய்யப்படும்: அமைச்சர் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் விசுவநாதன் பேசியதாவது:ஒரு சமுதாயம், நாடு முன்னேற கல்வியே அடித்தளம். இதற்கான விதையை பள்ளியில் விதைத்தால் தான் நோக்கம் நிறைவேறும் என்பதற்காக அரசு 14 வகை உபகரணங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
இனி நோட்டு புத்தகமும் இலவசமாக கிடைக்கும். இவை தவிர பெற்றோர், தங்களது குழந்தைகளை பள்ளியில் படிக்க வைக்க வேறு எந்த பொருளாவது கடையில் பணம் தந்து வாங்க வேண்டியிருக்கிறது என்றால், அதுபற்றி தெரிவிக்கலாம். இதுகுறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, அதையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உணவு, உடை, இருப்பிடம் போன்று,நவீன கால மாற்றத்திற்கேற்ப கம்ப்யூட்டர் பயன்பாடும் மாறியுள்ளது என்றார்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திலுள்ள அரசு ஊழியர், ஆசிரியர் வட்டி வரவுக் கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள்
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்களது பங்குத்தொகைக்கான வட்டி வரவுக்கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 4.20 லட்சம் பேர் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் 2003–ம் ஆண்டு ஏப்ரல் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படிக்கு பிரதி மாதம் 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவுத் தொகையை அரசும் தன் பங்காக செலுத்தும். அரசு பங்குத் தொகைக்கும் பணியாளரின் பங்குத் தொகைக்கும் சேர்த்து வட்டி கணக்கிட்டு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.
விடுபட்ட கணக்குகள் விடுபட்ட 21 லட்சத்து 70 ஆயிரத்து 464 வரவு நேர்வுகள், கருவூலக் கணக்குத் துறையால் சரிபார்க்கப்பட்டு உரிய அரசுப் பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு 2014–15ம் ஆண்டிற்கான கணக்குத் தாள்கள் (அக்கவுன்ட் சிலிப்ஸ்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் யாரும் விடுவிக்கப்பட்டு இருந்தாலோ, குறைகள் இருந்தாலோ சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அலுவலர் அல்லது மாவட்ட கருவூல அலுவலரை அணுகி குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள அரசு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வலைதள முகவரி அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனப் பணியாளர்களுக்கான 2014–15ம் ஆண்டுக்கான கணக்குத் தாள்களை, URLhttp://218.248.44.123/auto_cps/public என்ற வலைதள முகவரியில் அவரவர் கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
20/10/15
3 நாள் விடுமுறை: மின் கட்டணம்கட்டுவதில் சிக்கல்
தொடர்ந்து, மூன்று நாட்கள் அரசு விடுமுறையாக வருவதால், 'மின் கட்டணம் செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைஎழுந்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின், 2,800 பிரிவு அலுவலகங்களில், மின் கட்டண மையங்கள் உள்ளன.
தொழிற்சாலைகளில், மாதம் தோறும்; வீடு,வணிகம் உள்ளிட்ட இணைப்புகளில், இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது.கணக்கு எடுத்த தேதியில் இருந்து, 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும்; அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும், மீண்டும்இணைப்பு வழங்கப்படும்.
சரஸ்வதி பூஜை, விஜயதசமி, மொகரத்தை முன்னிட்டு, 21, 22, 23 ஆகிய, மூன்று நாட்களுக்கு அரசு விடுமுறையாக வருகிறது. இதனால், அன்றைய தினங்களில், மின் கட்டண மையங்கள் செயல்படாது.எனவே, 'மின் கட்டணம் செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, மின் வாரியத்திற்கு, மின் நுகர்வோர்கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.1400 கோடி அபராதம்.
இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்பட 4 பேர் கொண்ட குழுவின்தொழில்நுட்பத்தை அனுமதியின்றி திருடி பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆயிரத்து நானூறு கோடி ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் குரிந்தர் சோஹி, இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் மின்னணுதுறை பேராசிரியர் டெரனி விஜயகுமார். இவர்கள் இருவரும் ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் மின்னணு தொழில்நுட்பத்தில் பி.டெக்., பட்டம் பெற்றவர்கள்.இவர்களை உள்ளடக்கிய 4 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலையின் கீழ் செயல்படும் முன்னாள் மாணவர்களின் ஆராய்ச்சி அமைப்புக்கு சாப்ட்வேர் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி இருந்தனர். அதிவேகமாக செயல்படக்கூடி இந்த தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையையும் இவர்கள் பெற்றிருந்தனர்.இவர்கள் உருவாக்கிய இந்த நவீன தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம்அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாக, அமெரிக்காவின் மேடிசன் மாவட்டகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியன் கோன்லி, விஸ்கான்சின் பல்கலைகழக ஆராய்ச்சி அமைப்புக்கு, ரூ.1,400 கோடி ரூபாயை இழப்பீடாக ஆப்பிள் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த தீர்ப்பு, எங்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் உழைப்புக்கு கிடைத்த பெரும் வெற்றி என விஸ்கான்சின் பல்கலைக்கழகஆராய்ச்சி பிரிவின் தலைவர் கார்ல் குல்பிரான்ட்சென் தெரிவித்துள்ளார்.

மாவட்ட படைவீரர் நல அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர் மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவலக உதவியாளர் பணிக்கு, தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.தற்போது இந்தப் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அந்த பணியிடத்துக்கு முன்னுரிமையற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, தமிழ்வழி கல்வி பயின்ற, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மகளிர் விண்ணப் பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 2015,அக்டோபர் 1-ன் படி, 30 வயது இருக்க வேண்டும் (அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு).
விண்ணப்பிக்க விரும்புவோர், சுய விவரம் மற்றும் புகைப்படத்து டன் வரும் 30-ம் தேதிக்குள், ‘உதவி இயக்குநர், மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவலகம், 6/25 லால்பகதூர் சாஸ்திரி சாலை, பெரியகுப்பம், திருவள் ளூர்-602001’ என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் டி.என்.பி.எஸ்.சி., - 'நெட்'
பேராசிரியர் பணி தகுதிக்கான, 'நெட்' தேர்வும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் - 2 தேர்வும், டிச., 27ல், ஒரே நாளில் நடக்க உள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கல்லுாரி மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர வேண்டும் எனில், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' எனப்படும், தேசிய தகுதி தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான, இரண்டாவது, 'நெட்' தேர்வு, டிச., 27ல், நாடு முழுவதும் நடக்கிறது.தமிழக அரசில், 33 துறைகளில்காலியாக உள்ள, 1,863 பணி இடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், டிச., 27ல், குரூப் - 2 தேர்வும் நடத்தப்படுகிறது. நீண்ட காலத்துக்கு பின், இந்தத் தேர்வு நடப்பதால், லட்சக்கணக்கான பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பித்துவருகின்றனர்.
அதே நேரத்தில், நெட் தகுதி தேர்வும் டிச., 27ல் நடக்க உள்ளதால், தமிழக பட்டதாரி இளைஞர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து, 'நெட், ஸ்லெட்' சங்க செயலர் நாகராஜன் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் கடைசிஞாயிறு அன்று, 'நெட்' தேர்வு நடக்கும். அதன்படியே, இந்த ஆண்டும் நடக்கிறது.இந்த தேதியை கருத்தில் கொள்ளாமல்,டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு தேதியை மாற்ற வேண்டும்,'' என்றார்.

பள்ளிகளில் நூடுலஸ்,சிப்ஸ் விற்பனைக்கு வருகிறது தடை
நுாடுல்ஸ், சிப்ஸ்' போன்ற, 'ஜங்க் புட்' எனப்படும், சத்தற்ற உணவுப் பொருட்களை, பள்ளிகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் விற்பதற்கு தடை விதிக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் திட்டமிட்டுள்ளது. இக்கட்டுப்பாடு, விரைவில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுதும், பள்ளிகளிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், 'ஜங்க்' உணவுகள் விற்பதை தடுக்கும் விதிமுறைகளை, மூன்று மாத காலத்தில் வகுக்குமாறு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்துக்கு, டில்லி ஐகோர்ட், 2015, மார்ச்சில் உத்தரவிட்டிருந்தது.
உப்பு நிறைந்த...:
இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வரைவு நெறிமுறைகளை வகுத்து உள்ளது. இதுகுறித்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., கூறியுள்ளதாவது:தம் விருப்ப உணவை தேர்வு செய்யும் திறன், பள்ளிக் குழந்தைகளுக்கு இல்லை. எனவே, கொழுப்புச்சத்து, உப்பு,சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுப்பொருட்களை விற்பனை செய்ய, பள்ளிகள் உகந்த இடம் அல்ல. பள்ளிகளில் உள்ள, 'கேன்டீன்'களை, வர்த்தக நோக்கில் நடத்தக்கூடாது.பள்ளி கேன்டீன்களில், சத்தான, ஆரோக்கியமான, சுகாதாரமான உணவுகளை வழங்கும் வகையில், கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.புரதச்சத்து, நார்ச்சத்து குறைவான, அதேநேரத்தில் சர்க்கரை, உப்பு, கொழுப்புஅதிகமுள்ள ஜங்க் உணவுப் பொருட்களையும், கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்களையும், பள்ளிகள், அவற்றை சுற்றி, 50 மீட்டர் துாரத்துக்குள்உள்ள பகுதிகளில் விற்க தடை விதிக்க வேண்டும்.இந்த நடவடிக்கையின் நோக்கம், பீட்சா, நுாடுல்ஸ்,பர்கர், இனிப்பு வகைகள், சிப்ஸ், கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை, பள்ளிக் குழந்தைகள் மிகக் குறைவாக நுகர வேண்டும் என்பது தான்.
நெறிமுறைகள் :
'ஜங்க் உணவுகளில், குழந்தைகளுக்கு தேவையான சத்துகள் சம அளவில் இல்லாததால், அவை, ஆரோக்கியத்துக்கு உகந்தவை அல்ல' என, என்.ஐ.என்., எனப்படும், தேசிய சத்து மையம் வகுத்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளில், குழந்தைகளின் பெற்றோர் கண்காணிப்பு இல்லாததால், ஜங்க் உணவு மீதான கட்டுப்பாடு அவசியம்.இவ்வாறு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., கூறியுள்ளது.
டில்லி ஐகோர்ட்டின் உத்தரவுப்படி, ஜங்க் உணவு வகைகள், பள்ளிகளில் விற்கப்படுவதை தடுக்கும் நெறிமுறைகளை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தயாரித்து விட்டதால், அடுத்த கட்டமாக, இத்தடை, விரைவில் நாடு முழுதும் அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பிழைகளுடன் வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள்: பொது இ-சேவை மையங்களில் விரைவில் முகவரி திருத்தும் சேவை
தமிழகத்தில் பல ஊர்களில் வழங்கப்பட்ட ஆதார் அட்டை களில் முகவரி தவறாக இருப்பதால் அதை இருப்பிட ஆவணமாக பயன்படுத்த மக்கள் தயங்குகின்றனர். முகவரியில் உள்ள பிழைகளை திருத்துவதற் கான சேவை அரசு பொது இ-சேவை மையங்களில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பா லோருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வேலூர் உட்பட சில மாவட்டங்களில் வழங்கப்பட்ட ஆதார் அட்டை களில், சம்பந்தப்பட்ட கிராம மக்கள் அளித்த முகவரியுடன், அருகில் உள்ள கிராமத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதை இருப்பிடச் சான்றாக பயன்படுத்தினால், மற்ற ஆவணங்களிலும் அருகில் உள்ள கிராமத்தின் பெயர் கூடுதலாக இடம்பெறும் நிலை ஏற்பட்டது. அதனால், அவர்கள் ஆதார் அட்டையை முகவரிச் சான்றாக பயன்படுத்தாமல் இருந்து வந்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அஞ்சல் துறை வழங்கிய தரவுகளின் அடிப்படையில் ஆதார் அட்டையில் முகவரியை சேர்க்கிறோம். கிராமப் பகுதிகளில் நான்கைந்து கிராமங்களுக்கு ஒரே பின்கோடு எண் இருக்கும்.அப்படி வரும் பின்கோடு எண்ணில் குறிப்பிட்ட சில ஊர்கள் சேர்க்கப்படாமல் இருக்கும். அப்படி இருந்ததால், அருகில் உள்ள ஊரின் பெயரை ஆதார் அட்டையில் பதிவு செய்திருந்தனர்.
இது தொடர்பாக புகார்கள் வந்ததையடுத்து, அஞ்சல் துறையுடன் கலந்தா லோசித்து பிரச்சினை சரி செய்யப்பட்டது. ஏற்கெனவே முகவரியில் தவறுகளுடன் அட்டை பெற்றிருந்தால், அவர்கள் https://uidai.gov.in என்ற இணைய தளத்தில் மாற்றிக்கொள்ளலாம்’’ என்றார்.மேலும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது ஒரு முகவரியிலும், தற்போது வேறு முகவரியிலும் வசிப்பவர்கள் ஆதார் அட்டையை முகவரிச் சான்றாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.ஏற்கெனவே, அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.10 கட்டணத்தில் இ-மெயில் முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை திருத்தும் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன் முகவரி திருத்தும் சேவையும் வழங்கப்படுமா என்று அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரனிடம் கேட்டபோது, ‘‘முகவரி திருத்தும் சேவையை பொது இ-சேவை மையங்களில் வழங்கும் வகையில், அதற்கான மென்பொருளை ஆதார் அட்டை வழங்கி வரும் யூஐடிஏஐ நிறுவனம் உருவாக்கி வருகிறது.விரைவில் இ-சேவை மையங்களில் குறைந்த கட்டணத்தில் ஆதார் அட்டைகளில் முகவரிதிருத்தும் சேவை வழங்கப்படும்’’ என தெரிவித்தார்.

சுகாதாரம் குறித்து குறும்படம், வானொலி நிகழ்ச்சி போட்டி: அண்ணா பல்கலை. -யுனிசெப் ஏற்பாடு
நன்றாக கைகழுவுவது, சுகாதாரம் பேணுவது குறித்து குறும்படம், வானொலி நிகழ்ச்சி தயாரிக்கும் போட்டியை அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் யுனிசெப் அறிவித்துள்ளன.இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
நன்றாக கை கழுவுவதன் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகளை 51 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று யுனிசெப் ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், இதற்கு பலரும் உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழகத்தில் 30 சமூக வானொலிகள் உள்ளன.
ஆனால், கை கழுவுதல் மற்றும் சுகாதாரம் குறித்து குறைவான நிகழ்ச்சிகளே ஒலிபரப்பாகின்றன. படங்களிலும் இதுகுறித்த செய்திகள் கூறப்படுவதில்லை.இதைக் கருத்தில் கொண்டு, கை கழுவுதல், சுகாதாரம் பேணுதல் குறித்து குறும்படம் மற்றும் சமூக வானொலிக்கான நிகழ்ச்சிகள் தயாரிக்கும் போட்டி அண்ணா பல்கலைக்கழகம், யுனிசெப் சார்பில் நடத்தப்படுகிறது. குறும்படம் இரண்டரை நிமிடங் களுக்குள் இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஊடகம் சார்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். சமூக வானொலிக்கான நிகழ்ச்சிகள் 15 நிமிடங்கள் இருக்கலாம். தமிழகத்தில் செயல்படும் சமூக வானொலிகள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
படைப்புகள் அக்டோபர் 29-ம் தேதிக்குள் வந்துசேர வேண்டும். அனுப்பவேண்டிய முகவரி: டாக்டர் எஸ்.அருள்செல்வன், உதவி பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், ஊடக அறிவியல் துறை, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை 25.
மேலும் விவரங்களுக்கு 044-2235 8246 என்ற தொலைபேசி எண் அல்லது dmsauchennai@gmail.comஎன்ற இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் படைப்புகளுக்குநவம்பர் முதல் வாரத்தில் விருதுகள் வழங்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 604 விரிவுரையாளர்கள் நேரடி நியமனம்: பிஇ, எம்எஸ்சி பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 604 விரிவுரையாளர்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடி யாக நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல், அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசி ரியர் பணியிடங்களும் தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.
தமிழகத்தில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பொறியியல் சம்பந்தப்பட்ட 3 ஆண்டு கால டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. பொறியியல் பிரிவிலும், பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளிலும் (கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம்) 450-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.புதிதாக கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 2 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பின்தங்கிய பகுதிகளில் மேலும் 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அண்மையில் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 604 விரிவுரையாளர் பணியிடங் களையும், அதேபோல், அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் பணியிடங் களையும் நிரப்ப மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி‘கூறியதாவது:
அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் 604 விரிவுரையாளர் காலியிடங்களையும்,அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் இடங்களையும் நிரப்புவதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்துவிட்டோம்.உதவி பேராசிரியர் பணிக்கு விதித்திருந்த வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப்பட்டு முன்பு போலவே 57 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட விரிவுரையாளர், உதவி பேராசிரியர் காலியிடங்கள் தனியாக நிரப்பப்படும்.இவ்வாறு மதுமதி கூறினார்.பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு பொறி யியல் பாடத்துக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளில் அதாவது கணிதம்,இயற்பியல், வேதியியல் பாடம் என்றால் முதல் வகுப்பில் எம்எஸ்சி அல்லது எம்ஏபட்டம் அவசியம்.அதேபோல், பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு பொறியியல் பாடங் களுக்கு எம்இ அல்லது எம்டெக் பட்டம் வேண்டும். பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதுகலை பட்டத்துடன் ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இடஒதுக்கீடு
தமிழ்வழியில் படித்தவர் களுக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. அந்த வகையில், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் படித் தவர்களுக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம், தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களும், அதேபோல், தமிழ்வழியில் எம்எஸ்சி முடித்தவர்களும் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் தொகுதி உட்பட 5 இடங்களில் புதிய அரசு பாலிடெக்னிக்
இந்த ஆண்டு 5 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான சென்னை ஆர்.கே. நகர், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய 5 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)