யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/15

Pen drive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்.---தகவல் துளிகள்

TNPSC TET TRB 100 QUESTIONS AND ANSWER

இேதா ஒர கணித விதைத !----தகவல் துளிகள்,

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய ---தகவல் துளிகள்

20/11/15

Pay commission-ல் எப்படி fitment formula மூலம் புதிய ஊதியம் கணக்கிடப்படுகிறது .........?

தற்போது D.A 119%
01-01-2016 - ல் எதிர் பார்க்கப்படும் 6% கூடுதல் D.A உடன் மொத்த D.A 125%.
Pay 100% + D.A 125%
= 225% = 2.25
# ஒரு வேளை அரசின் அளிப்பாக கூறப்படும் 15% ஊதிய உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 15% )
= 2.58
# ஒரு வேளை தொழிற் சங்கங்களின் குறைந்த பட்ச கேட்பான 30% உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 30% )
= 2.92
இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்......

38 நிகர்நிலை பல்கலைக்கு தடை நீங்கியதுஇரண்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி

புதுடில்லி:'தமிழகத்தில், 10 உட்பட, தேசிய அளவில், 38 நிகர்நிலை பல்கலை கழகங்கள் தொடர்ந்து செயல்பட தடை ஏதும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான, என்.ஏ.ஏ.சி., தெரிவித்துள்ளது. இதனால், 'அங்கீகாரம் ரத்தாகுமோ' என, அஞ்சிய, இரண்டு லட்சம் மாணவர்களின் எதிர்காலம், பிரகாசமாகியுள்ளது.

கடந்த, 2010ல், 'அடிப்படை கட்டமைப்பு வசதியற்ற, 44 நிகர்நிலை பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, டாண்டன் குழு பரிந்துரைத்தது. இது தொடர்பான வழக்கில், மூன்று பல்கலைகள் நீங்கலாக, 41 நிகர்நிலை பல்கலைகளை ஆய்வு செய்து அறிக்கை தர, பல்கலை கழக மானியக் குழுவிற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதில், மூன்று பல்கலைகள் அங்கீகாரம் பெற்றன.
எஞ்சிய, 38 நிகர்நிலை பல்கலைகளை ஆய்வு செய்து, புதிய தரப் பட்டியலை வழங்கும்படி, என்.ஏ.ஏ.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி. பந்த் ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, என்.ஏ.ஏ.சி., தரப்பில், 38 பல்கலைகளை ஆய்வு செய்த அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் விவரம்: கடந்த, 2012ம் ஆண்டு, என்.ஏ.ஏ.சி., ஒழுங்குமுறை விதிகளின்படி, 38 நிகர்நிலை பல்கலைகளும் மதிப்பீடு செய்யப்பட்டன. அதில், அவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திருப்திகரமாக உள்ளது தெரியவந்துள்ளது. அதனால், இந்த நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து இயங்கலாம். மேலும், இந்த பல்கலைகளின் தர வரிசைப் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. அது, இணையத்திலும் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தர வரிசைப் பட்டியல் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை நிகர்நிலை பல்கலைகள் தெரிவிக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை, 2016, ஜனவரிக்கு ஒத்தி வைத்தனர்.
இதன் மூலம், ஐந்து ஆண்டுகளாக தங்களின் எதிர்காலம் குறித்து, பரிதவித்து வந்த, 2 லட்சம் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை

சென்னை: 'அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வால், தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு மீண்டும் கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


கடந்த வாரம் பெய்த மழை பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் விடுக்கப்பட்டு உள்ள கன மழை எச்சரிக்கையால், பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.வங்கக் கடலில் ஏற்பட்ட காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், நேற்றுடன் முடிந்த, ஒரு வாரத்தில், சென்னையில் மிக அதிகபட்சமாக, 44 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், 25 மாவட்டங்களில் சராசரி மழையை விட கூடுதல் மழை பெய்தது.சென்னை, கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 

சென்னை, புறநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் நேற்று வரை வடிந்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடலில் லட்சத் தீவு அருகே, புதிதாக காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர் மழை:

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:வங்கக் கடலில் உருவான காற்று மேலடுக்கு சுழற்சி இடம் பெயர்ந்து, அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில், லட்சத் தீவு அருகே, புதிய காற்று அழுத்த தாழ்வு பகுதியாக, நேற்று காலை உருவாகி உள்ளது. 

இது தீவிரமடைந்து, கேரளா, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதனால், நவ., 23 வரை, நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். நாளை முதல், திங்கள்கிழமை வரை, கடலோர பகுதிகளில் கன மழை பெய்யலாம். எனவே, இந்த வார இறுதி வரை கடலோர பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததுஅமெரிக்க வானிலை கணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நவ., 25ல், வங்க கடலில், அந்தமான் தீவு பகுதியில் உருவாகும் காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என தெரிவித்துள்ளது. இதை, இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.எனவே, இம்மாத இறுதி வரை கன மழை தொடரும் என, கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு: குழு பரிந்துரை

புதுடில்லி: ஏழாவது ஊதிய குழுவின் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசு ஊழியர்களுக்கு, 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 48 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மேலும், 55 லட்சம் பேர், ஓய்வூதியம் பெறுகின்றனர். தற்போதைய ஊழியர்களின் ஊதியம் மற்றும் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதிய விகிதங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
இதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழு அமைக்கப்படும். இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், ஊதிய வீதம் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, 2014ல், ஓய்வு பெற்ற நீதிபதி மாத்துார் தலைமையில், ஏழாவது ஊதிய குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு, தன் அறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் நேற்று தாக்கல் செய்தது. அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் விபரம் வருமாறு:
* மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஊதியம் மற்றும் இதர படிகள் சேர்த்து, 23.55 சதவீத அளவுக்கு மொத்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இதில், ஊதிய உயர்வு மட்டும், அடிப்படை சம்பளத்தில், 16 சதவீதமாகவும், இதர படிகள், 63 சதவீதமாகவும் இருக்க வேண்டும். அதேநேரத்தில், ஓய்வூதியதாரர்
களுக்கான ஓய்வூதிய உயர்வு, 24 சதவீதமாக இருக்க வேண்டும்.* ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, 2016 ஜனவரி முதல் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.
* மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், 18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம், 2.25 லட்சம் ரூபாயாகவும் இருக்க வேண்டும். கேபினட் செயலர்
களுக்கும், அவருக்கு சமமான அந்தஸ்து உள்ள அதிகாரி
களுக்கும், 2.50 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.* இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும், 3 சதவீத சம்பள உயர்வும், 24 சதவீத ஓய்வூதிய உயர்வும் வழங்க வேண்டும்.
* ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால், 2016 - 17ம் நிதியாண்டில், மத்திய அரசுக்கு, 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும். இதில், 28 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வே பட்ஜெட்டிற்கு சென்று விடும்.
* 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' முறையை, ராணுவத்தினருக்கு மட்டுமின்றி, மத்திய அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.* ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, செலவுகள் துறை செயலர் தலைமையில், செயலகம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
* ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம், 0.65 சதவீதம் நிதிப்பற்றாக்குறை ஏற்படும்.* மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையானது, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்.
இவ்வாறு பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஊதியக்குழுவின் இந்தப் பரிந்துரைகள், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டதும் அமல்படுத்தப்படும். 2008ல் நியமிக்கப்பட்ட, ௬வது ஊதிய குழு, மத்திய அரசு 
ஊழியர்களுக்கு, 35 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என, பரிந்துரை செய்தது

பள்ளியின் மேற்கூரை ஓடுகள் விழுந்து புத்தகங்கள் நாசம்

பலத்த மழையால் அரசுப் பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்து வகுப்பறைக்குள்ளே விழுந்ததில் புத்தகங்கள் சேதமடைந்தன.

ஜோலார்பேட்டை ஒன்றியம், மல்லப்பள்ளி ஊராட்சி அன்சாகரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 38 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இந்திரா காந்தியும், உதவி ஆசிரியராக கோவிந்தியும் பணியாற்றி வருகின்றனர்.


இப்பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பள்ளி வகுப்பறையின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் உடைந்து விழுந்தன. இதில் மாணவர்களின் புத்தகங்கள் சேதம் அடைந்தன. வியாழக்கிழமை காலை பள்ளியைத் திறக்க வந்த தலைமையாசிரியர் வகுப்பறையின் மேற்கூரை ஓடுகள் விழுந்து மழைநீர் புகுந்தது குறித்து உதவித் தொடக்க கல்வி அலுவலர் மாதையனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சம்பவ இடம் சென்று சேதமடைந்த பள்ளி வகுப்பறையைப் பார்வையிட்டார். பின்னர் அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தில் வகுப்புகளை நடத்துமாறு தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். மேலும் பள்ளிக்கூரை சேதமடைந்திருப்பது குறித்து மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்

ஆதார் அட்டை இல்லாத அரசு அலுவலர்கள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு

ஏழாவது ஊதிய குழு ஆணையம்: 23.55 சத உயர்வு வழங்க ஒப்புதல்

ஏழாவது ஊதிய குழு ஆணையம்: 23.55 சத உயர்வு வழங்க ஒப்புதல்
    மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை இன்று மத்திய அரசிடம் அளித்தது.நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.
        இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் சமர்பித்தது.
பரிந்துரைகள் விவரம
்*.அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் 23.55 சதமாக உயர்த்தப்படும்
*.இந்த ஊதிய உயர்வுகள் ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும
்*.குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 ஆக இருக்கும், அதிகபட்ச ஊதியமாக ரூ. 2.25 லட்சமாக இருக்கும்
*.ஆண்டுதோறும் 3 சத ஊதிய உயர்வு வழங்கப்படும்
*.ஓய்வூதியர்களுக்கு 24 சத உயர்வு வழங்கப்படும
்*.பாதுகாப்புத் துறையை தொடர்ந்து அனைத்து மத்திய அரசு பணியாளர்களுக்கும் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முறை அமல்படுத்தப்படும்.
*.பணிக்கொடைக்கான உச்சவரம்பு ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், பஞ்சபடி 50 சதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும்போது, இந்த உச்சவரம்பு மேலும், 25 சதம் உயர்த்தப்படும்.
*.தற்போது மாதத்திற்கு ரூ. 90 ஆயிரம் ஊதியம் பெறும் அமைச்சரவை செயலர் இனி ரூ. 2.25 லட்சம் பெறுவார்.
*.இந்த பரிந்துரைகளால் மத்திய அரசுக்கு ரூ. 73,650 கோடியும், ரயில்வேக்கு ரூ. 28,450 கோடியும் கூடுதல் செலவாகும்.
*.நடப்பில் உள்ள 52 படிகள் வழங்கும் முறை 36 ஆக குறைக்கப்படும்
*.இந்த பரிந்துரை மூலம் 47 லட்சம் ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.

தினமும் 2 மணி நேரம் மொபைல் போனில் செலவிடும் இந்திய இளைஞர்கள்!

தினமும் 2 மணி நேரம் மொபைல் போனில் செலவிடும் இந்திய இளைஞர்கள்!
இந்தியா இளைஞர்கள், தினந்தோறும் 2.2 மணி நேரத்தை தங்களது மொபைல் போனில் செலவிடுவதாக டி.என்.எஸ்., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது."டி.என்.எஸ்.,' என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம், சர்வதேச அளவில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வு முடிவில், இந்தியாவிலுள்ள 16-30 வயதுடைய இளம் வயதினர்கள் தினமும் சராசரியாக 2.2 மணி நேரத்தை தங்களது மொபைல் போனில் செலவிடுகின்றனர். இவ்வாறாக ஆண்டுக்கு 34 நாட்கள் தங்கள் மொபைல் போனுக்காக நேரத்தை செலவழிக்கின்றனர். இதுவே சர்வதேச இளைஞர்கள் நாளொன்றுக்கு 3.2 மணி நேரம், அதாவது ஆண்டுக்கு 49 நாட்கள் மொபைல் போனில் நேரத்தை செலவிடுகின்றனர். அதேபோல், இந்தியாவில் 31-45 வயதுடையோர் சராசரியாக 1.8 மணி நேரத்தையும், 46-65 வயதுடையோர் 1.5 மணி நேரத்தையும் மொபைல் போனில் செலவிடுகின்றனர்.
இந்தியாவில், வாரந்தோறும் இண்டர்நெட் பயன்படுத்தும் இளைஞர்களில், சுமார் 85% பேர் ஸ்மார்ட்போன்கள் வைத்துள்ளனர். இதில் சமூக வலைதளங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதில் 43% பேர் தினமும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்; 42% பேர் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்கின்றனர். இளைஞர்களில் 11% பேர் மொபைல் போன் வழியே ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் செலுத்தி, பொருட்களை வாங்கும் முறைகளை வாரம்தோறும் பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள 16-30, 31-45, 46-65 வயதுடை 3 பிரிவினருமே மொபைல் போனில் செலவிடும் நேரத்தில் பாதியை சமூக வலைதளங்களுக்காக பயன்படுத்துவதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்கலாம் எனவும் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும்

புதுடெல்லி,மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள்
அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.


இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்குஅதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.இந்நிலையில், 7-வது சம்பளக்கமிஷனின் அறிக்கையை இன்று ஊதிய குழுவின் தலைவர் ஏகே மாத்தூர், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்பித்தார். 900 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் ஊதிய உயவு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், வருடத்திற்கு 3 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கவும், குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரம் அளிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



மேலும், வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்கலாம் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் குழு கேட்டுக்கொண்டுள்ளது. 52 விதமான படிகளை ரத்து செய்யவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி திறந்ததும் வகுப்பு நேரம் கூடுது

வட கிழக்கு பருவ மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தீபாவளிக்குப் பின், 10 வேலை நாட்கள், பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. வரும் 23 முதல், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.
கடந்த ஒன்றரை மாதத்தில், 20 நாட்கள் மட்டுமே, பள்ளி, கல்லுாரிகளில் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. மற்ற நாட்களில், பண்டிகை விடுமுறை, மழை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதனால், பெரும்பாலான பாடங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை.

இதனால், பாடங்களை முடிக்க ஆசிரியர்கள், கல்வித் துறையினர் திட்டமிட்டுள்ளதாவது:
* மழைக்காக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, மதிய இடைவேளை நேரத்தைக் குறைத்து; மாலை நேரத்தில், கூடுதல் நேர பாடப்பிரிவு ஒதுக்கி பாடங்கள் நடத்தப்படும் 
* சனிக்கிழமைகளில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பள்ளிகள் முழு நேரம் இயக்கப்படும் 
* மழையால், கல்லுாரிகளில் தேர்வுகள் ரத்தாகி உள்ளதால், தேர்வு நாட்களை குறைத்து, மற்ற நாட்களில், கூடுதல் பாட வேளைகள் ஏற்படுத்தப்படும்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்:கள ஆய்வு நாளை துவக்கம்

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றக் கோரி வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், நாளை முதல் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.பட்டியலில் மாற்றம் கோரி விண்ணப்பம் அளித்தவர்கள், தங்கள் பெயர், முகவரி விவரம் சரியாக இடம் பெற்றுள்ளதா என, இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாவது கட்டமாக, விண்ணப்பங்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இவற்றை கொண்டு, கள ஆய்வுக்கான விண்ணப்பம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர் விவரம் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. ஒரு சில மாவட்டங்களில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், கள ஆய்வை துவக்கி 
உள்ளனர்.பெரும்பாலான மாவட்டங்களில், நாளை முதல் கள ஆய்வை துவக்க உள்ளனர். ஆய்வின் போது விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் சரியாக இருந்தால், ஓட்டுச்சாவடி அலுவலர், தனக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில், 'சரி' என குறிப்பிடுவார். தவறு இருந்தால், 'மொபைல் ஆப்ஸ்' மூலம், உடனடியாக திருத்தம் மேற்கொள்வார்.
கள ஆய்வு விவரமும், உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும். இப்பணி டிச., 5க்குள் முடிக்கப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று சிறப்பு முகாம்கள்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்டம்பரில் துவங்கி, அக்., 24ல் முடிந்தது. மூன்று நாள் சிறப்பு முகாம் நடந்தது. வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, 17 லட்சம்; நீக்க, 1.76 லட்சம்; பெயர் திருத்தம் செய்ய, 2.69 லட்சம்; முகவரி மாற்ற, 1.76 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். முதல் கட்டமாக, விண்ணப்பத்தில் இருந்த விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு: தேர்தல் ஆணையம் பரிந்துரை

தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய, 18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இப்போதுள்ள விதிகளின் படி ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு 18 வயதை எட்டியவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு அந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஜனவரி 2-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள், தேர்தல் நடைபெறும்போது 18 வயதை எட்டியிருந்தாலும் கூட அந்த ஆண்டு வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியாது.

எனவே இதனை மாற்றி, 18 வயதை எட்டிய அனைவரையும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சக அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.

அதேநேரத்தில் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வர சட்ட அமைச்சகம் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்துவது இந்த விஷயத்தில் உதவாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும். இப்போதுள்ள விதிகளின்படி 18 வயதை எட்டியவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டிலேயே தேர்தல் ஆணையம் இத்திட்டத்தை பரிசீலித்தது. அப்போது சட்ட அமைச்சகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகியின் கருத்து கேட்கப்பட்டது. அவரும் சட்ட அமைச்சகத்துக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை, அரசமைப்புச் சட்டத்தின் 326-ஆவது பிரிவுடன் முரண்படுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகம், புதுவையில் மழை பெய்யும்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவுப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. காற்றின் மேலடுக்குச் சுழற்சி காரணமாக இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, கடல் பகுதியில் நிலவும் ஈரம் மிகுந்த காற்றை நிலப்பகுதிக்குள் இழுக்கும் என்பதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. கடந்த 24 மணி நேரத்தில், சங்கரன்கோயில் மற்றும் கடம்பூரில் அதிகபட்சமாக 14 செ.மீ மழை பெய்துள்ளது.

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்? இரு எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் அழைப்பு

ஸ்ரீரங்கம் மற்றும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க, முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்ததால், விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும் என, தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில், தனக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் ஆறு பேருக்கு, காலியாக உள்ள, அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் பதவி வழங்கவும், முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மோகன், காமராஜ், ஆகியோர் கூடுதல் துறைகளை கவனித்து வருகின்றனர். அந்த துறைக்கு புதிய அமைச்சர்களை நியமிக்கவும், சர்ச்சைக்குள்ளான அமைச்சர்களை மாற்றவும், முதல்வர் திட்டமிட்டு உள்ளதால், அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது.குறிப்பிட்ட இனத்தவரை விமர்சித்த பிரச்னையில் சிக்கிய, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுார் கூட்டத்தில், சொத்துகள் குறித்து பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணி ஆகியோரின் பதவி பறிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வளர்மதி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., கிட்டுசாமி ஆகியோருக்கு, முதல்வரை சந்திக்க, அழைப்பு சென்றதை தொடர்ந்து, அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், முதல்வர் தரப்பு வழக்கறிஞர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர்.அவர்களில், முக்கிய பணிகளில் ஈடுபட்ட ஆறு பேருக்கு, முதற்கட்டமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவியை வழங்க, முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.நேற்று, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அழைக்கப்பட்டு இருந்தவர்களில், ராசிபுரம் முன்னாள் எம்.பி., சரோஜாவும், முன்னாள் எம்.எல்.ஏ., ராசு ஆகியோரும் அடங்குவர்.

-- நமது சிறப்பு நிருபர் --

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய வினா விடை ’சிடி’

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் 11 பாடங்களின் முக்கிய வினா விடை அடங்கிய சிடி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் தாவரவியல், உயிர்விலங்கியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய 11 பாடங்களுக்கு முக்கிய வினா விடை அடங்கிய ஒரே சிடி தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ் வழி பாடப்பிரிவு மாணவர்களுக்கான இந்த சிடி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களிடமும் வழங்கப்பட்டுள்ளது.


இதை அவர்கள் பாடவாரியாக பிரின்ட் அவுட் எடுத்து ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெல்லக்கற்கும் மாணவர்கள் முதல் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் இது பயன்பெறும். அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் இணையதள முகவரியிலும் இந்த வினா-விடையை பார்த்து படித்துக் கொள்ளலாம், என்றார்.

மேல்நிலைத் தேர்வு;தனித்தேர்வர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் துறையால் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க 16.11.2015 முதல் 27.11.2015 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், தனித்தேர்வர்கள் நலன் கருதி அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. 

தனித்தேர்வர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.