யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/12/15

CPS: பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு...

*பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு.
* 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.


*இதில் உங்கள் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடிக்கப்படும்(10%) தொகை , அகவிலைப்படி நிலுவை ,ஊக்க ஊதியஉயர்வு நிலுவை ஆகியன வரவு வைக்கப்படுகின்றது.
* அவ்வாறு வரவு வைப்பதில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் அதை Missing credit என்றும், அதற்கு உரிய Token Number & dateVoucher Number & date.Bill cross & Net amount,Total Cps Amount.இதனுடன் விடுபட்ட தொகையினையும் சேர்த்தால் தான் உங்கள் கணக்கில்சேரும்.கணக்கு விபரங்களை ஓப்பிட்டு பிழைகள் மற்றும் விடுபட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட PDO (Pay drawing officer ) யை தொடர்பு கொள்ளலாம்.

விடுமுறை .'' நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும், பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்...

மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான,எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக்கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம்வழங்கப்படும்.மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது.''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்,''என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

PAY ORDER: 7979 BT POST NOV MONTH PAY ORDER

PAY ORDER: 7979 BT POST NOV MONTH PAY ORDER

Tamil Nadu Open University:DECEMBER 2015 Hall Ticket.

படிப்பை கைவிட்ட குழந்தைகள் விவரம் சேகரிக்கும் கல்வித்துறை

பள்ளிக்கு நீண்ட நாட்களாக வராத குழந்தைகள், படிப்பை பாதியில் கைவிட்ட குழந்தைகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,), 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக உள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. 


பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல், படிப்பை கைவிட்ட குழந்தைகளுக்குமீண்டும் கல்வி வாய்ப்பு அளித்தல், எஸ்.எஸ்.ஏ., முக்கிய பணி.தற்போது, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரம், தற்போது படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, படிப்பை கைவிட்ட குழந்தைகள், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத குழந்தைகள், அதற்கான காரணங்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அனுப்ப, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வகுப்பு ஆசிரியர் மூலம், இவ்விவரங்கள் சேகரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, எஸ்.எஸ்.ஏ., அலுவலர் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் வீதி வீதியாக சென்று, படிப்பை கைவிட்ட குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

30/11/15

உதவி பேராசிரியர் தேர்வு பட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு

அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு அறிவித்து ஓராண்டாகியும் தேர்வு நடத்தாததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்திலுள்ள இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், காலியாக இருந்த, 139 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த, ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது.முதுகலை பட்டத்துடன், எம்.பில்., ஸ்லெட், நெட், முடித்தவர்கள் என, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், விண்ணப்பித்திருந்தனர்.

இதற்கான எழுத்து தேர்வு, கடந்த, 2014, அக்டோபரில் நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான பாடத்திட்டமும் ஆன்லைனில் வெளியிட்டிருந்தனர். ஆனால், எம்.பில்., மட்டும் முடித்தவர்கள், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடாது என, ஸ்லெட், நெட் முடித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
அதேசமயம், 2009க்கு முன், எம்.பில்., படிப்பு முடித்தவர்களுக்கு ஸ்லெட், நெட் தேவையில்லை என, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது. தற்போது, ஓராண்டுக்கு மேல் ஆகியும் எழுத்து தேர்வு பற்றி எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறும்போது, 'ஸ்லெட், நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, உதவி பேராசிரியாக பணியாற்ற முடியும்' என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. ஆனாலும், இன்னும் தேர்வு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை,'என்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சட்டப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, அரசிடமிருந்து அனுமதி வந்தால் தேர்வு அறிவிக்கப்படும்,' என்றனர்.

அரசுப் பள்ளி ஆசிரியரால் துயர் நீங்கிய கிராமம்; தற்கொலை எண்ணத்திலிருந்து தன்னம்பிக்கை பெற்ற மக்கள்

NMMS EXAM: INSTRUCTION & APPLICATION

கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உத்தரவு: அரசு கல்லூரி பேராசிரியர்கள் அதிருப்தி

போலி கல்விச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக, அரசுக் கல்லூரி பேராசிரியர்களின் அனைத்துச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதோடு, இதைக் காரணம் காட்டி, தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணி மேம்பாட்டை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் நிறுத்தி வைப்பதாகவும் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 ராஜஸ்தானில் போலி கல்விச்
 சான்றிதழ்கள் விநியோகம்: ராஜஸ்தான் அரசின் உயர் கல்வித் துறையிடமிருந்து அனைத்து மாநில உயர்கல்வித் துறைகளுக்கும், அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் கடிதம் ஒன்று அண்மையில் அனுப்பப்பட்டது.
 அதில், 2014 டிசம்பர் 17-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கு (எண்.15) 14 குறித்து ராஜஸ்தான் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஜோத்பூர் தேசியப் பல்கலைக்கழகம் என்ற தனியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்வி மையத்திலிருந்து ஒரு மென்பொருளைப் பறிமுதல் செய்தனர். அதை ஆய்வு செய்தபோது, ஜோத்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பெயரில் ஏராளமான போலியான கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
 இந்தப் போலிச் சான்றிதழ்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற பட்டியல், ராஜஸ்தான் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 எனவே, இதன் மூலம் எவரேனும் பணியில் சேர்ந்துள்ளனரா என்பதை ஆய்வு செய்து, தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சான்றிதழ்களை ஆய்வு செய்ய கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உத்தரவு: இந்தக் கடிதத்தின் நகலை கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள தமிழக உயர் கல்வித் துறை துணைச் செயலர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் அறிவுறுத்தியுள்ளார். இதனடிப்படையில், அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 அதில், கல்லூரிகளில் உள்ள அமைச்சுப் பணியாளர்களின் கல்விச் சான்றிதழ்கள், உரிய முறையில் உண்மைத்தன்மை அறியப்பட்டு பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இதுநாள் வரை அரசுத் தேர்வுத் துறை, பல்கலைக்கழகங்கள் மூலம் பணியில் சேர்ந்தவர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறியப்படாத நிலையினைத் தவிர்க்கும் பொருட்டு, இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களின் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும் அந்தந்த அரசுத் தேர்வுத் துறை, பல்கலைக்கழகங்கள் மூலம் உண்மைத்தன்மையை அறிந்து இயக்குநர் அலுவலகத்துக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கல்லூரிகளும் நடவடிக்கையில்
 தீவிரம்: இதனடிப்படையில், ஒவ்வொரு பேராசிரியரின் 10-ஆம் வகுப்பு சான்றிதழ் முதல், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, எம்.ஃபில்., பிஎச்.டி. என அனைத்து கல்வித் தகுதியின் உண்மைத் தன்மையை அறியும் நடவடிக்கையை கல்லூரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதற்கு கல்லூரிப் பேராசிரியர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 
 அறிக்கையை அளிக்க அவகாசம்
 நீட்டிப்பு: இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
 ஏற்கெனவே பள்ளிகள் அளவில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் பேராசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதுநிலை பட்டப் படிப்பு, எம்.ஃபில்., பிஎச்.டி. தகுதிக்கான் சான்றிதழ்களுக்கான உண்மைத் தன்மை அறிக்கை மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. இதுதவிர்க்க முடியாதது. இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்க பேராசிரியர்களுக்கு இப்போது மேலும் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
"வற்புறுத்துவது ஏற்புடையது அல்ல'
 இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் சிவராமன் கூறியதாவது:
 சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிவது, அந்தந்தத் தேர்வு வாரியத்தின் பணி. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்படும்போதே, அனைத்துச் சான்றிதழ்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த நிலையில், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பேராசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வற்புறுத்துவது ஏற்புடையது அல்ல. உண்மைத்தன்மை அறிக்கை பெற ஒவ்வொரு கல்வித் தகுதிக்கும் ரூ.600 முதல் ரூ.1000 வரை பல்கலைக்கழகத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதை உயர் கல்வித் துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2015-16 கல்வியாண்டுக்கான பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒற்றைச் சாளர சேர்க்கை மையத்தை வருகிற டிசம்பர் 19-ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு சேர்க்கை பெறலாம்.

இந்த மையம் சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாள்களும் செயல்படும். மேலும், விவரங்களுக்கு www.unom.ac.in, www.ideunom.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி உதவித் தொகை தேர்வு(NMMS): விண்ணப்பங்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

தேசிய வருவாய் வழி- திறன் கல்வி உதவித் தொகை (என்.எம்.எம்.எஸ்.) தேர்வுக்கான விண்ணப்பங்களை திங்கள்கிழமை (நவ. 30) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக, ஜனவரி 23-இல் இந்தத் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு

'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுவது போல், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, 25 மதிப்பெண்கள் தனியாக வழங்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா, நான்கு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும். பின், அவற்றில், தலா ஒரு பயிற்சி, செய்முறைத் தேர்வில் வினாவாக வரும்.


இதற்காக, செய்முறைத் தேர்வு பயிற்சி புத்தகம், கல்வித் துறையிலிருந்து வழங்கப்படும். இந்த ஆண்டு, பயிற்சிப் புத்தகம் வழங்கப்படாததால், செய்முறைத் தேர்வு உண்டா என, மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், நவ., 28ல் செய்தி வெளியானது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை கண்ணப்பன் கூறியதாவது:செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி வினாக்கள், அறிவியல் பாடப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன; இந்த ஆண்டு தனியாக புத்தகம் வழங்கப்படாது. அதிலுள்ள, 15 செய்முறைப் பயிற்சிகள் குறித்து, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத் தேர்வுக்கு கட்டாயம் செய்முறைத் தேர்வு உண்டு; எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மழை விடுமுறை ,ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி

''மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பல பகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.


இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும். மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது.

''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்,'' என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில் தவறுகள் இருந்தால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. மாவட்டம் தோறும், தேர்வு மையங்களின் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை விவரங்கள், பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தவறுகள் வருவதால், தேர்வு நடத்தும் போது, பல மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் இல்லை; பட்டியலில் பெயர் இல்லை என்பன போன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன.


இந்த ஆண்டு இதுபோன்ற குழப்பங்களைத் தடுக்க, ஆசிரியர்களுக்கு விடப்பட்டுள்ள உத்தரவுகள்:
* தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும்
* பட்டியலில் தவறுகள் இருக்கக்கூடாது. பெயர், விவரம், முகவரியில் பிழைகள் இல்லாமல் கணினியில் பதிவு செய்ய வேண்டும்.'பட்டியலில் தவறு இருந்தால், ஆசிரியர், ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு ரூ.125 கோடி சேதம்

தமிழகத்தில், தொடர் மழையால், பள்ளிக்கல்வித் துறைக்கு, 125 கோடி ரூபாய் சேதம் மற்றும் செலவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 6ம் தேதி முதல், 25ம் தேதி வரை கனமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் போன்ற மாவட்டங்களின், பள்ளி, கல்லுாரி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலகத்துக்கு, அதிகாரிகள் அறிக்கை அனுப்பியுள்ளனர். மொத்தம், 125 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில், 85 கோடிக்கு நேரடி சேதமும், 40 கோடிக்கு மறைமுக செலவும் ஏற்பட்டுஉள்ளதாக கணக்கிட்டுள்ளனர்.அதில் தெரிவித்துள்ளதாவது:

ஓட்டை, உடைசல் கட்டடங்கள், மழையில் இடிந்து விழுந்துள்ளன. பல பள்ளி கட்டடங்களின் சுவரில், விரிசல் ஏற்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ளன. பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகளுக்கு இரண்டாவதாக கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் நீரை வெளியேற்றுதல், மின் கருவிகளை பழுது பார்த்தல், மாற்று கட்டடங்கள் ஏற்பாடு என, பலவகை யில் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்

ஐந்து நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர் கோரிக்கை

வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம், உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி, மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.


கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் பணி என்பதை ஐந்து நாட்கள் முழுநேர பணி, மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது: வாரத்தில் 5 நாட்கள் வேலைக்கு வருகிறோம். ரூ.10 ஆயிரம் சம்பளம் தாருங்கள் என அரசிடம் கேட்டுள்ளோம். ஒரு சில வாரங்களில் இதற்கான முடிவு எட்டப்படும், என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர்.

சமீபத்தில் ஜாக்டோ சார்பில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் பணியாற்றினர். அரசுக்கு ஆதரவாக, எந்த நிலையிலும் வேலை பார்க்க தயார் என அறிவித்தோம். ஆனால், அரசு எங்களுக்கு சம்பள உயர்வு அளிக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.

பகுதி நேர ஆசிரியர்களுக்குரிய சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கூறப்பட்டது. பழைய முறையில், தலைமை ஆசிரியர் மூலமே வழங்கப்படுகிறது. தற்போது பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில் பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால், ஆண்கள் ஏற்கனவே பணியாற்றிய இடத்திலிருந்து கூடுதலாக 100 கி.மீ., அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே பொதுப்பிரிவு கவுன்சிலிங்கை மறுபடியும் வைக்க வேண்டும், என்றார்.

வேலூர் மாவட்டத்தில் - பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, தொலைக்காட்சி பெட்டிகள் திருட்டு

ஆம்பூர் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக கானாற்றில் ஏற்பட்ட வெள்ளம் ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கியது.
 மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிடிந்து விழுந்தது. பள்ளியின் கட்டடமும் தண்ணீர் தேங்கியதால் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அக்கட்டடம் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது தெரியவந்தது. மேலும் உள்ளே இருந்த அலமாரி உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினி, 2 தொலைக்காட்சிப் பெட்டிகள், அச்சு இயந்திரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை நடத்தினர்.

பிளஸ் 2 இடைநிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமானோர் தோல்வி: ஆசிரியர்களுக்கு சிறப்பு கற்பித்தல் பயிற்சி

மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைநிலைத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமான மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

   மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இடைநிலைத் தேர்வுகள் நடைபெற்றன.


  அத்தேர்வுகள் அடிப்படையில், 50 சதவிகித மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களில் அதிகமாக தோல்விடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

  இடைநிலைத் தேர்வில் அதிகமானோர் தோல்வியடைந்திருப்பது பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதத்தைப் பாதிக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

   எனவே, எந்தெந்தப் பாடங்களில் எந்தெந்தப் பள்ளி மாணவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள், அதற்குக் காரணம் என்ன என ஆராய்ந்துள்ளனர். அதில், வகுப்புகளுக்கு சரியாக வராதவர்களும், பாடங்கள் நடத்தப்படும்போது புரியாமல் இருந்தவர்களுமே அதிகம் தோல்வியடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பாடங்களின் ஆசிரியர்களுக்கு சிறப்புக் கற்பித்தல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   பயிற்சியின்போது, தோல்வியடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிக்கும் முறையும் விளக்கப்பட உள்ளது.

   இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் இருக்கவேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, இடைநிலைத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்குள்ள பிரச்னைகள் ஆராயப்பட்டு, அதைத் தீர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

ஆசிரியர்கள் மறியல் போராட்டம்டிச., 1ல் மனு அளிக்க 'ஐாக்டோ' முடிவு

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல் போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோ நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ, கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.

அக்., 8ல் ஜாக்டோ நடத்திய, மாநில அளவிலான வேலை நிறுத்தத்தால், பள்ளிகள் செயல்படாமல் முடங்கின. ஆனாலும், அரசு அவர்களை அழைத்து பேச்சு நடத்தவில்லை.
இந்நிலையில், அடுத்த கட்டமாக டிச., 28 முதல் 30 வரை தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, வரும் 1ம் தேதி தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வி முதன்மை செயலரை, ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சந்தித்து, மனு அளிக்க உள்ளனர். அதன்பின், அரசு தரப்பில் பேச்சு நடத்தினால் போராட்டத்தை வாபஸ் பெற, ஆசிரியர் குழு முடிவு செய்துள்ளது