யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/1/16

Annamalai University Apply Convocation -Last Date Posted: 07 Jan 2016 07:39 AM PST 81st Annual Convocation 2016 forDegree/Diploma ll b held on 26.02.16 >Fees-Rs.750/- >Last date for of filled in applications-20.01.16 www.annamalaiuniversity.ac.in Bonus Request for Part Time Teachers - CM cell request Posted: 07 Jan 2016 07:34 AM PST உங்களது மொபைலில் இலவசமாக டேட்டா,பணம்,ரீசார்ச் தரும் புதிய Mobile Application. Posted: 06 Jan 2016 11:50 PM PST இன்று நம்முடைய மொபைலில் டேட்டா ரீசார்ச் செய்வது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. டேட்டாக்களுக்கான கட்டணமும் பல மடங்கு உயர்ந்து விட்டது.இன்நிலையில் இலவசமாக நமது மொபைல் எண்ணிக்கு டேட்டாவும்,கையில் பணமும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அருமை! அப்படி ஒரு அருமையான Application தான் நாம் இன்றைய பதிவில் பார்க்க இருப்பது. எவ்வாறு Download செய்து பயன்படுத்த வேண்டும்? முதலில் கீழ் காணும் Download Linkஐ click செய்யவும். Download TaskBuck Application click here ... Open browse ல் Google Chrome என்பதை தேர்வு செய்யவும். அதில் Play store என்பதை clik செய்து instal செய்யவும். பின்பு Application ஐ Open. செய்யவும். -->என்று மூன்று முறை கடந்த பிறகு Start now என்பதை தேர்வு செய்யவும். அதில் உங்களது Mobile number, Email id, Referral code: SZW1SGPI ஆகியவற்றை பதிவு செய்யவும்.அவ்வளவுதான் உங்களது Application தயார். எவ்வாறெல்லாம் பணம் பெறலாம்? *Application ல் வரும் Offer என்பதை Click செய்துஅதில் வரும் Application ஐ Download செய்யலாம்.(Download செய்து விட்டு நமது கணக்கில் பணம் ஏறியவுடன் நமக்கு தேவையில்லாத Application ஐ Uninstall செய்து விடலாம்.) *Story என்பதை Click செய்து மற்ற நண்பர்களுக்கு அனுப்பலாம். *Share என்பதை Click செய்து உங்களது நண்பர்கள் இணைவதன் மூலமும் பணம் பெற முடியும். எவ்வாறெல்லாம் பணத்தை பயன்படுத்தலாம்? *நமது கணக்கில் உள்ள பணத்தை ரீசார்ச் செய்து கொள்ளலாம். *Paytm மூலமாக நமது வங்கி கணக்கில் பணமாக பெறலாம். *நமது கணக்கில் உள்ள டேட்டாவை ரீசார்ச் செய்து கொள்ளலாம். நன்றி... IGNOU B. Ed. Entrance Test - September, 2015 Results Published Posted: 07 Jan 2016 06:16 AM PST *.CLICK HERE - IGNOU B.ED ENTRANCE 2015 -RESULTS... அதேஇ - NMMS தேர்விற்கான வினாக்கள் 7-ம் வகுப்பு மூன்று பருவ புத்தகத்திலிருந்தும் இருந்தும், 8வகுப்பு முதல் இரண்டு பருவ புத்தகத்திலிருந்தும் கேட்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள். Posted: 07 Jan 2016 05:27 AM PST ஜுன் மாதத்திற்கு பின்னர் 7-வது ஊதிய குழு சம்பளம்- மத்திய அரசு தகவல் Posted: 07 Jan 2016 01:22 AM PST 10ம் வகுப்பு தேர்வுக்கட்டணம் ஜன., 20க்குள் செலுத்த உத்தரவு

பத்தாம் வகுப்பு தேர்வுக் கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து, ஜன., 20ம் தேதிக்குள் வசூலித்து செலுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. இதற்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது. இவர்களுக்கு தேர்வுக்கட்டணமாக, 115 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் வழியில் படிப்பவர்கள், பிறமொழி எடுத்து படிப்பவர்களில், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஆகியோருக்கும், பிற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம்,2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கும் தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மற்ற மாணவர்களிடமிருந்து தேர்வுக்கட்டணத்தை, ஜன., 20ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. ஜன., 21ம் தேதிக்குள், கட்டண விலக்கு பெற்ற மாணவர்களின் பட்டியல், கட்டணம் செலுத்திய மாணவர்களின் பட்டியல் உள்ளிட்ட விபரங்களை கல்வித்துறை அலுவலகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜுன் மாதத்திற்கு பின்னர் 7-வது ஊதிய குழு சம்பளம்- மத்திய அரசு தகவல்

7/1/16

உதவி பொறியாளர் நேர்காணல் அறிவிப்பு

அரசு துறையில் காலியாக உள்ள, 213 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கான தேர்வில் தகுதி பெற்ற, 400 பேருக்கு, நேர்காணல் தேர்வும், 23 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பும், 11 முதல், 14 வரை நடக்க உள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 24 காலியிடங்களுக்கு நடந்த தேர்வில் தகுதி பெற்ற, 57 பேருக்கு, 27ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கஉள்ளது. இது குறித்த விவரங்கள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளன.

சிறப்பு பொங்கல் பரிசு அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.அரிசி, சர்க்கரை, கரும்புடன், 100 ரூபாய் ரொக்கமும் வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை:'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு பை வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு பையில், அரிசி, சர்க்கரை, கரும்புடன், 100 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும். இதனால் அரசுக்கு, 318 கோடி ரூபாய் செலவு ஏற்படும்; 1.91 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.

முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பண்டிகையின் போது, அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, பாசிப்பருப்பு ஆகியவை வழங்கப்பட்டன. அடுத்து, 2011ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.கடந்த, 2015ல், ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இல்லாததால், பொங்கல் பரிசு வழங்கவில்லை. இந்த ஆண்டு, சட்டசபை தேர்தல் வர உள்ளதால், பொங்கல் பரிசு வழங்கப்படும் என, பொதுமக்கள் எதிர்பார்த்தனர். அதன்படி, நேற்று சிறப்பு பொங்கல் பரிசு அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
அவரது அறிக்கை:பொங்கல் திருநாளை கொண்டாட, அரிசிக்கான ரேஷன் கார்டு உடையவர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்பங்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 100 ரூபாய் ரொக்கம் அடங்கிய, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.இப்பரிசுதொகுப்பு, பொங்கல் பண்டிகைக்கு முன், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு, 318 கோடி ரூபாய் செலவு ஏற்படும்; 1.91 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

2 அடி கரும்பு: ஏகப்பட்ட குழப்பம்:
இதுவரை வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு இடம் பெற்றதில்லை; அரிசி, சர்க்கரை போன்றவை தான் இடம்பெற்றிருந்தன. இம்முறை, முதன் முறையாக, 'பொங்கல் பரிசு தொகுப்புடன், 2 அடி நீள கரும்பு துண்டு வழங்கப்படும்' என, முதல்வர் அறிவித்துள்ளார்; இது, பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எத்தகைய குழப்பம்:
* ஒரு குடும்பத்துக்கு ஒரு கரும்பு வழங்குவது, ஓரளவு எளிதாக இருந்திருக்கும். ஆனால், 2 அடி நீள கரும்பு துண்டு என கூறியிருப்பதால், ஒரு கரும்பை எத்தனைதுண்டாக்குவது?* கரும்பு துண்டுகளாக்கப்பட்டு ரேஷன் கடைக்கு வழங்கப்படுமா?* முழு கரும்பை வழங்கி, வெட்டி கொடுக்க உத்தரவிடுவரா?* 'நுனிக்கரும்பு வேண்டாம்; அடிக்கரும்பு வேண்டும்' என கேட்டால் என்ன செய்வது?என்பன போன்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுத் தேர்வு: இன்று முதல் 104ல் உளவியல் ஆலோசனை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 104 தொலைபேசி சேவை மூலம் வியாழக்கிழமை முதல் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

மூன்று கட்டங்களாக இந்த சேவை வழங்கப்படவுள்ளது. தேர்வுக்கு முன்பு தேவைப்படும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், உணவு முறைகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். 

தேர்வு சமயத்தின்போது ஏற்படும் மனஅழுத்தம், தோல்வி குறித்த பயம் உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனைகளைப் பெறலாம். தேர்வு முடிவு வெளிவரும்போது, அதை எதிர்கொள்வது, தோல்விகளைக் கையாள்வது, விரக்தி நிலையில் இருந்து மீட்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவர்கள் மட்டுமன்றி, தேர்வு சமயத்தை கையாள்வது குறித்து மாணவர்களின் பெற்றோர்களும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம்.
 மேலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், தேர்வு குறித்த குழப்பங்கள், மனஅழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கும் இதன் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும். 
 இந்த சேவைகளுக்காக உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட சிறப்புக் குழு 24 மணி நேரமும் செயல்படும். தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தொடர்ந்து இந்தச் சேவையை மாணவர்கள், பெற்றோர்கள் பெற முடியும்.

"புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும்"

தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவை கலைக்க வேண்டும் என கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். தேசிய புதிய கல்விக் கொள்கை உருவாக்கம் தொடர்பாக கோவை ராமநாதபுரம் மறைமாவட்ட கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் அமைத்துள்ள குழுவின் கருத்தரங்கு கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குழுவின் ஒருங்கிணைப்பாளரும் ராமநாதபுரம் ஆயருமான மார்ட் பவுல் ஆல்பர்ட் தலைமை வகித்தார். கல்வியாளர் ஸ்டீபன் பிரகாசம், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பாதிரியார் எஸ்.எம்.ஜான் கென்னடி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கருத்தரங்கைத் தொடர்ந்து, பிரின்ஸ் கஜேந்திர பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கல்விக் குழுவில் கல்வியாளர்களே இடம் பெறாமல் இருப்பது இதுவே முதல் முறை. இந்தியா கூட்டாட்சி நாடு என்பதால் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த கல்வியாளர்களையும் கல்விக் குழுவில் இணைத்திருக்க வேண்டும்.

பின்னர் அந்தக் குழுவினர் மக்களிடம் நேரடியாக பொது விசாரணை நடத்தி, அதன் பிறகு கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

பள்ளித் தேர்வு அறிவிப்பு: ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதை தவிர்க்க வலியுறுத்தல்

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு, பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தீபாவளிப் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து, தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் பள்ளிகளுக்கு அதிக நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.

மழைக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மீலாதுநபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என 9 நாள்கள் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டன.

தற்போது இந்த விடுமுறை நாள்கள் முடிந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வருகிற 11-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. மேலும், பிளஸ்-2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதியும் தொடங்குகின்றன.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தமிழாசிரியர்களுக்கு இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்த 3 நாள் பயிற்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இந்த பயிற்சி வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் (ஜன.7,8,9) பாப்பாகோயில் தனியார் கல்லூரி, மயிலாடுதுறையில் என 2 இடங்களில் நடைபெறுகிறது.

நிகழ் கல்வியாண்டை பொருத்தவரை மாணவர்கள் இயற்கை இடர்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட சிரமங்களுக்கிடையே தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது.

இதுபோன்ற நேரங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாற்றுப் பணி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்வதால் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படும்"

அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படுவதால் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்று, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலர் மங்களபாண்டியன் தெரிவித்துள்ளார்.

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 7இல் நடக்கவுள்ள ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தின் பிரசாரப் பயணமாக, செவ்வாய்க்கிழமை சிவகங்கை வந்திருந்த இவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஊதிய முரண்பாடுகள் நீக்கப்படவேண்டும், கடந்த சட்டபேரவைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்திருந்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 7 ஆம் தேதி மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.


அதன்பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும். தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்வது தேவையற்றது. நாங்கள் அரசு வேலை மட்டுமே செய்கிறோம். எந்தக் கட்சிக்கும் சாத கமாகச் செயல்படவில்லை. தற்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலமே வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

  தேர்தல் நடத்தும் நேரடி உயர் அலுவலர்களை இடமாற்றம் செய்வதில் பிரச்னை இல்லை. ஆனால், அடுத்த நிலைகளில் உள்ள அலுவலர்களை இடமாற்றம் செய்வதால், புதிதாக வருபவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடம், சூழ்நிலைகள் தெரியாது. எனவே, தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படுமே தவிர, நன்மை கிடைக்காது என்றார்.

  பேட்டியின்போது, மாவட்டத் தலைவர் தமிழரசன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழில் 'இனிஷியல்!' ஆசிரியர்களுக்கு உத்தரவு

அரசாணைகள், உத்தரவுகள் அனைத்தும், தமிழிலேயே வெளியிட வேண்டும்' என, ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல், 'கல்வி அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை, தமிழில் கையெழுத்து போட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடுகின்றனர்; ஆனால், ஆங்கிலத்தில் தங்களின் இனிஷியலை எழுதுகின்றனர்' என, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குணமால் என்பவர், பள்ளி கல்வி முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த செயலகம், அனைத்து ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடவும், இனிஷியலாக இருந்தாலும், அதையும் தமிழில் எழுதவும் உத்தரவிட்டுள்ளது. 
இது தொடர்பான சுற்றறிக்கையை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். இனிஷியல் என்பது, தந்தை அல்லது கணவர் பெயரின் முதல் ஆங்கில எழுத்தாக பெரும்பாலும் கருதப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஜனவரி 18ல் துவக்கம்

மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த, தமிழகத்தில் ஜன.,18 முதல் பிப்.,5க்குள் 2வது முறையாக ஆசிரியர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று வீட்டில் உள்ள தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்துக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற 42 விதமான விபரங்களை சேகரித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தனர்.


இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2011ல் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை ஜனவரி 18ல் துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு எப்படி: 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விபரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு 'பிரிண்ட் அவுட்' செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்தையே வீடுகள் தோறும் எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர் சரியாக உள்ளதா, குழந்தைகள் மற்றும் இதர விபரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். 2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரங்களை கூடுதலாக சேகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் ஒருவர் கூறுகையில்,“வீடுகள் தோறும் வரும் ஆசிரியர்களுக்கு குடும்ப தலைவர்கள் முழு விபரம் வழங்கி, ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதோர் மக்கள்தொகை பதிவேடு (இ.ஐ.டி.,எண்) எண்ணை காண்பிக்கலாம். இக்கணக்கெடுப்பு படி தான், ரேஷன் கார்டுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் திட்டம் உள்ளது. எனவே மக்கள் உண்மையான தகவலை தரவேண்டும்,” என்றார்.

பொதுத்தேர்வு தேதி வந்தாச்சு! செய்முறை தேர்வு எப்போது?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 4ல் பிளஸ் 2 வுக்கும், மார்ச், 15ல், 10ம் வகுப்புக்கும் தேர்வு துவங்க உள்ளது. வெள்ளம் பாதித்த, நான்கு மாவட்டங்களுக்காக, தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. ஜன., 11ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வு துவங்கி, 27ல் முடிகிறது. இதையடுத்து, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். அதற்கு கணினி அறிவியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் விலங்கியல் மாணவர்களுக்கு, 10 நாட்கள் தேவைப்படும். பின், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மூன்று திருப்புதல் - ரிவிஷன் - தேர்வுகள் நடத்த வேண்டும். 

எனவே, பொதுத் தேர்வை, 10 நாள் தள்ளிவைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அரசு தேர்வுத் துறை, வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்வு துவங்கும் படி செய்துள்ளது.இந்நிலையில், இந்த மாதம் முழுவதும், அரையாண்டு தேர்வு நடக்கும் நிலையில், செய்முறை தேர்வு எப்போது என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 
இதற்கிடையே, பிப்ரவரி 5 - 25க்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்முறை தேர்வு எப்போது என, தாமதமின்றி அறிவித்தால் மட்டுமே, அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்த முடியும். பிப்ரவரி முதல் வாரத்திலேயே செய்முறை தேர்வை நடத்தி முடித்தால் தான், அடுத்தடுத்து, திருப்புதல் தேர்வுகள் நடத்தி, பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த முடியும் என்றார் பேட்ரிக் ரைமண்ட், பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர். 

6/1/16

பி.எட்., கல்லூரி துவங்க தடையில்லா சான்று

பி.எட்., கல்லுாரிகள் துவங்க, தடையில்லா சான்று கோரி, மூன்று கல்வி அறக்கட்டளைகள் அளித்த மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திற்கு, கெடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி கவுன்சில்:வேலுார், மதுரை மற்றும் பிற நகரங்களில் இயங்கும் கல்வி அமைப்புகள் சார்பில், பி.எட்., கல்லுாரிகள் துவங்க அனுமதி கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.ஆனால், ஆசிரியர் கல்வி பல்கலை மற்றும் ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில்களிடம் இருந்து பெறப்பட்ட, தடையில்லா சான்று இணைக்கப்படவில்லை.


இதனால், விண்ணப்பங்களை நிராகரிப்பது தொடர்பாக, மூன்று கல்வி அறக்கட்டளைகளுக்கு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் தென் மண்டல இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பியது. இதை எதிர்த்து, மூன்று கல்வி அறக்கட்டளைகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவு:

விதிமுறைகளில்...:தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதிமுறைகளில், 'பி.எட்., கல்லுாரிகள் துவங்க விண்ணப்பத்துடன், தமிழக ஆசிரியர் கல்வி பல்கலை மற்றும்
தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி கவுன்சிலின் தடையில்லா சான்றை கட்டாயம் இணைக்க வேண்டும்; இல்லாவிட்டால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் கல்வி அறக்கட்டளைகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் நோட்டீசுக்கு பதில் அளிக்காமல், நீதிமன்றத்தை நாடியுள்ளன; இந்த விஷயத்தில் தலையிட முடியாது; மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் நோட்டீசுக்கு பதிலளிக்க, மனுதாரர் கல்வி அறக்கட்டளைகளுக்கு, இரண்டு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. தடையில்லா சான்று கோரி மனுதாரர்கள் அளித்த விண்ணப்பங்கள், 2015 ஜூன் முதல் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்கள் மீது நான்கு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தமிழக ஆசிரியர் கல்வி பல்கலைக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த புதிதாக 4 வகை இன்சுலின் மருந்து

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு புதிதாக 4 வகை இன்சுலின் மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. சர்க்கரை நோய், அதற்கான நவீன கிசிச்சைக்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான கருத்தரங்கம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை தொடங்கியது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் எம்.வைரமுத்துராஜன் கருத்தரங்கைத் தொடக்கிவைத்து பேசியதாவது: 

இந்தியாவில் சுமார் 15 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்து மாத்திரைகள் மூலம் 30 சதவீதம் மட்டுமே சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். உணவு, உடல்பயிற்சி, மன அமைதி ஆகியவற்றினால் 70 சதவீத நோயைக் குணப்படுத்த முடியும் என்றார். 


ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி டீன் வடிவேல் முருகன், கரூர் டீன் ரேவதி கயிலைநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அப்போது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இன்சுலின் ஊசிக்கு பதிலாக மாத்திரைகளை பரிந்துரை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாள்தோறும் இன்சுலின் ஊசி போடுவதற்கு பதிலாக, வாரத்துக்கு ஒரு முறை டெக்லியூடெக் என்ற மருந்து பயன்படுத்துவது குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

புதிதாக கண்டறியப்பட்டுள்ள 4 வகை இன்சுலின் மருந்து குறித்தும், அதைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கான பாதுகாப்பு குறித்தும் மதுரை சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் வி.குமரவேல் விளக்கம் அளித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 320 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அறிவிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 1ல் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 1ல் தேர்வு துவங்கி, 28ல் முடிகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 1 முதல் ஏப்., 22 வரை தேர்வு நடக்கும்.
* பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'டைனமிக் ரீடெய்ல்' மற்றும் இந்திய சுற்றுலா, பாதுகாப்பு உள்ளிட்ட, 10 விருப்ப பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. முக்கிய தேர்வு, மார்ச் 2ல் துவங்க உள்ளது
* மார்ச் 2 - அறிவியல், 8 - தமிழ், இந்தி, 10 - சமூக அறிவியல், மார்ச் 15 - ஆங்கில பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது
* பிளஸ் 2 தேர்வு - மார்ச் 1ல் ஆங்கிலம், 5 - இயற்பியல், 8 - வரலாறு, 9 - வேதியியல், 11 - ஹிந்தி, தமிழ், 14 - கணிதம், ஹெல்த் கேர், 17 - கணித பதிவியல், 18 - அரசியல் அறிவியல், நிதி கணக்கியல், 19ல் வேளாண்மை, வங்கியியல்.
மார்ச் 26ல் கணினி அறிவியல், மார்ச் 31 - பொருளியல், ஏப்., 1 - சட்டப் படிப்பு, ஏப்., 4 - சமூகவியல் என, முக்கிய பாடங்களுக்கும் தேர்வு நடக்க உள்ளது.

இந்த ஆண்டு, 14 லட்சம் மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வை எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தில் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தில் ஆலோசகர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி:Consultant-Enterprise Development

சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000

தகுதி: Business Administration,Management, Economics, Social Work,Agri & Allied பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை பட்டயம் பெற்றிருக்கவேண்டும்.

பணி:Consultant-Value Chain Development (Farm)

சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000

தகுதி:Business Administration, Management, Economics, Social Work, Agri & Allied பாடங்களில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:Consultant-Value Chain Development (Non Farm)

சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000

பணி:Consultant-Banking and Finance

சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000

பணி:Young Professionals

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 50,000

பணி:Consultant-Private Sector Interface (Skills and Livelihoods)

பணி:Consultant-Youth Skill Employment

பணி:State Consultant-Skill Training & Placement

தகுதி:Business Administration/ Management/ Economics/ Finance/Banking அல்லது சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:45க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.sids-co.in/tnpvp என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sids-co.in/tnpvp என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர் பணி

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 37 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 37
பணி: பேராசிரியர், இணை பேராசிரியர்உயர்கல்வித்துறையின் கடித எண் 2(டி) எண் 58 நாள் 19.4.2002ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஒரு துறையின் ஒவ்வொரு பணிநிலையும் தனித்தனி பிரிவாக கருதியும், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 206 நாள் 6.11.2008-இன் படியும், இடஒதுக்கீடு மற்றும் இனவாரி சுழற்சி முறை பின்பற்றப்பட்டுள்ளது.தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான அருந்ததியர் பணியிடம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 65 நாள் 27.5.2009-இன் படி ஒதுக்கீடு ́செய்யப்பட்டுள்ளது. அருந்ததியரில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இப்பணியிடங்களுக்கு கருதப்படுவர்.விண்ணப்பப் படிவம், PBAS படிவம், கல்வித்தகுதிகள் மற்றும் சிறப்புக் கல்வித்தகுதிகளைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் தொடர்பான விவரங்களுக்கு பல்கலைக்கழக நல்கைக்குழு இணைய தளத்தினை (www.ugc.ac.in) பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500/- க்கான (தாழ்த்தப்பட்ட வகுப்பு எனில் ரூ.300/-) வரைவோலை “பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்” என்ற பெயரில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அதன் இணைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.1.2016. ஏற்கனவே பணியில் உள்ளோர் பணியாற்றும் நிறுவனம் வழி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.கல்விநிலைப் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக ஏற்கெனவே பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் ந.க.எண் அ1/2609/2012 நாள் 12.8.2013 மற்றும் ந.க.எண் அ1/2609/2012 நாள்:19.12.2013 ஆகியனதிரும்ப பெறப்ப ́கிறது. செலுத்தப்பட்ட விண்ணப்பக்கட்டணம் உரியவர்களுக்கு மீள அளிக்கப்படும்.

குறிப்பு:நேர்காணலில் மேற்குறித்த அவ்வவ் பதவிகளுக்கான தகுதி நிலையில் விண்ணப்பதாரர்கள் முழுநிறைவு அளிக்காத நிலையில் அவ்வவ் பதவிகளுக்குக்கீழ்நிலையில் உள்ள பதவிகளுக்கே நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கருதப்படுவார்கள்.மேற்குறிப்பிடப்பட்ட பணியிடங்களை நிரப்புவது அல்லது நிரப்பாமல் இருப்பதற்கான உரிமை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.ஒரு பதிவிக்கும் கூடுதலாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் தனித்தனியே விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

மேலும் கல்வித்தகுதி, தேர்வு முறைகள் முழுமையான விவரங்கள் அறிய
 http://www.tamiluniversity.ac.in/tamil/wp-content/uploads/2016/01/application-form.pdf

பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர், துணைநிலை அலுவலர்கள் நேர்முகத் தேர்வு ரத்து: நிதி அமைச்சகம் உத்தரவு

எழுத்தர், துணைநிலை அலுவலர்கள் பணியிட நேர்முகத் தேர்வை ரத்து செய்யும்படி பொதுத் துறை வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசுத் துறைகளில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு நிலையிலான பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மத்திய நிதியமைச்சக செயலர் தலைமையில், செயலர்கள் நிலையிலான கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது.


இக்கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளில் கீழ்நிலை அளவிலான பணியிடங்களுக்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.அதன்படி, எழுத்தர், துணை நிலை அலுவலர்கள் நிலையிலான பணியிடங்களுக்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி,பொதுத் துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.அதற்குப் பதிலாக, சைக்கோ மெட்ரிக் தேர்வு உள்ளிட்டவற்றைச் சேர்த்து எழுத்துத்தேர்வை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயும்படி பொதுத்துறை வங்கிகள் அறிவுறுத்தபடுகின்றன என்று அந்த சுற்றறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


முன்னதாக, மத்தியப் பணியாளர் நலன், பயிற்சித்துறை அண்மையில் வெளியிட்டஅறிவிப்பில், நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும், திறனறித் தேர்வு அல்லது உடல் தகுதித் தேர்வு தொடர்ந்து நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. குறிப்பிட்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்துவது அவசியம் என்று சம்பந்தப்பட்ட துறை விரும்பும்பட்சத்தில், அதுகுறித்து மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறைக்கு விரிவாக அறிக்கை அனுப்பி அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயார்?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, பாடம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், சட்டசபைக்கு தேர்தல் வருவதால், பொதுத் தேர்வை தாமதப்படுத்த முடியாமல், தேர்வுத் துறை குழப்பம் அடைந்தது.

இந்நிலையில், மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 தேர்வை துவக்க அனுமதி கேட்டு, தேர்வுத் துறை சார்பில், முதல்வர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைத்து, அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2, மார்ச், 22ல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு துவங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

16,500 ஆசிரியருக்கு போனஸ் இல்லை?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது. இதில், ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள், 12 லட்சம் பேர் பயனடைவர்; அதற்காக, 326 கோடி ரூபாய் செலவாகும் என, அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இந்த பட்டியலில், அரசு பள்ளிகளில் பணி புரியும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் இடம் பெறவில்லை; இந்த ஆண்டும் சிறப்பாசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

சிமேட்' தேர்வு: இன்று ஹால் டிக்கெட்

மேலாண்மை படிப்புக்கான, 'சிமேட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேர, சிமேட் எனப்படும், பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 

இதை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நடத்துகிறது. வரும், 17ம் தேதி, இந்த தேர்வு, நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட, 62 இடங்களில் நடக்க உள்ளது; இதற்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.