மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில், மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்களில் 370 பேர், மாத சம்பளமாக ரூ.4 லட்சம் பெற்று வருவது குறித்து உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
இது குறித்த பத்திரிகை செய்தி அடிப்படையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை, தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டு, மத்திய அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதனை எதிர்த்து, இந்திய உணவுக் கழக தொழிலாளர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்த மனு தலைமை நீதிபதி தாக்கூர், மற்றும் ஏ.கே.சிக்ரி, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, உணவு கழகத்தில், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அளவுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டங்கள் இருப்பதாக உணவு கழகத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் அந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
முடிவில் நீதிபதிகள், '' இந்திய உணவு கழகத்தில் முறைகேடுகள் நடப்பதையே இது காட்டுகிறது . ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி எப்படி ரூ.4 லட்சம் சம்பாதிக்கிறார்? அவர் தொழிலாளியா அல்லது ஒப்பந்ததாராரா? இந்த நாட்டில் அதிக சம்பளம் பெறுவது குடியரசுத் தலைவர்தான். அவரை விட 370 தொழிலாளர்கள் மாதம் ரூ. 4 லட்சம் சம்பளமாக பெறுகின்றனர். அதனால் ஆண்டுக்கு அரசுக்கு 18000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இந்த விவகாரத்தில் மிகப் பெரிய தவறு நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு விரைந்து இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும். இது குறித்து 10 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான உயர் மட்ட குழு அமைத்து நாங்களே விசாரணை நடத்த வேண்டியது இருக்கும்'' என்று எச்சரித்தனர்.
மத்திய உணவு கழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 370 மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் தலா ரூ. 4 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளனர். மேலும் 400 தொழிலாளர்கள் ரூ.2 முதல் ரூ 2.5 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளனர்.