யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/1/16

2016ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் 5013 பணியிடங்கள் நிரப்பப்படும்: அருள்மொழி

16 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 பணியிடங்க‌ள் வரும் ஆண்டில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டிற்கான திட்ட அறிக்கையை தேர்வாணையத்தின் தலைவர் கே.அருள்மொழி இன்று (ஜன.29) வெளியிட்டார்.அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு முதல்முறையாக சுற்றுலா வளர்ச்சித்துறையில் 5 அதிகாரி பணியிடத்தில் 5 காலியிடங்களும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குருப் 3 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியில் 36 பணியிடமும், குருப் 4 பிரிவில் 4,931 காலியிடங்கள் என 5,513 பணியிடங்கள் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய 9 தேர்வுகள் கனமழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. அவற்றிக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பதவி ஏற்றது முதல் 3 மாதங்களில் 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, 6 ஆயிரத்து 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.மேலும், இந்த ஆண்டு குருப் 1 பிரிவில் 29 துணை ஆட்சியர் பணியிடங்களும், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 1 மாவட்டப் பதிவாளர் உட்பட 45 பணியிடங்களும், 65 உதவி சிறை அலுவலர் பணியிடமும், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 172 பணியிடமும்நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் அடங்கிய குருப் 2 தேர்வில் நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பல்வேறு காலியிட விவரங்கள் வர வேண்டி உள்ளது என்று கூறினார்.மேலும், புதிய திட்ட அறிக்கையை விவரங்களை அறிய தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

29/1/16

சென்னையில் இன்று தேர்தல் பயிற்சி வகுப்பு.

சென்னை: மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான, தேர்தல் ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு, சென்னையில் இன்று நடைபெறுகிறது.தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. 

மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்களுடனான ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு, தலா, எட்டு மாவட்டங்கள் வீதம், நான்கு கட்டமாக நடத்தப்படுகிறது.சென்னை, அண்ணா மேலாண்மை கூட்டுறவு பயிற்சி நிலையத்தில், இன்று நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோர், தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர்.

ஆதார், ரேஷன் கார்டுகளின் எண்கள் மக்கள்தொகை பதிவேட்டில் இணைப்பு பணி: 10 மாவட்டங்களில் தொடங்கின

அரசின் திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடையும் வகையில் மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார், ரேஷன் கார்டு,கைபேசி எண்களை இணைக்கும் பணி 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் சார்பில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்பிஆர்) பொதுமக்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.அந்த விவரங்களின் அடிப் படையில்தான் தமிழகத்தில் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் அட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 


என்பிஆர் பதிவேட்டு தகவல் தொகுப்புகளை மாநிலம் முழுவதும் சரி செய்யும் பணியை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் கடந்த ஜனவரி 18-ம் தேதி தொடங்கியது

10 மாவட்டங்களில் தொடக்கம்

இது தொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா கூறியதாவது:என்பிஆர் பதிவேட்டு தகவல் களை தற்போதுள்ளபடி சரி செய்யும் பணிகள், தற்போது திண்டுக்கல், திருப்பூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக் குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட் டுள்ளன. என்பிஆர் விவரங்கள் அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த பிரதிகளைக் கொண்டே, தகவல்களை சரி செய்யும் பணிகளை கணக்கெடுப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.தகவல்களை பிரதி எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களில் பிரதிகள் கிடைத்தவுடன் தகவல் களை சரி செய்யும் பணிகள் தொடங்கிவிடும். சென்னையில் புதன்கிழமை (இன்று) தொடங்கி விடும்.

70 ஆயிரம் ஆசிரியர்கள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் பணி தொடங்கிய நாளில் இருந்து 20 நாட்களுக்குள் பணிகளை முடிக்க கணக்கெடுப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கணக் கெடுக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆசிரியருக்கும் 300 குடும்பங்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.கணக்கெடுப்பாளர் கொண்டு வரும் என்பிஆர் பதிவேட்டில் அச்சிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா? இறந்த நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா? பிறந்த குழந்தை மற்றும் குடும்பத்தில் புதிதாக வந்தவர்கள் என புதிய உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டுள்ளனரா? என உறுதி செய்ய வேண்டும்.

புதிய நபர்கள்

புதிதாக குடியேறிய குடும்பத் திலுள்ள உறுப்பினர்கள், விடுபட்ட உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் விவரங்களைக் கணக்கெடுப்பாளரிடம் கொடுத்து, என்பிஆர் பதிவேட்டில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.கணக்கெடுப்பாளரிடம் ஆதார் எண் அல்லது அதன் பதிவு எண், குடும்ப அட்டை எண், ஒவ்வொருவரின் கைபேசி எண் (இருந்தால்) ஆகியவற்றை வழங்க வேண்டும்.

போலி ரேஷன் கார்டு ஒழியும்

என்பிஆர் பதிவேட்டில் ஆதார் மற்றும் குடும்ப அட்டை, கைபேசி எண்களை பதிவு செய்வதன் நன்மைகள் குறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:என்பிஆர் பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் நலதிட்டங்கள் உண்மையான பயனாளிகளைச் சென்று சேரும். அரசின் பண விரயம் தவிர்க்கப் படும். அரசிடம் 10 ஆண்டுகளுக்கு முந்தைய தரவுகள் தான் உள்ளன.இப்பணி மூலம் தற்போதைய தரவுகள் கிடைக்கும். குடும்ப அட்டை விவரங்களும் கேட்கப் படுகின்றன.அந்த விவரங்களைக் கொண்டு ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வழங் கும்போது, போலி ரேஷன் கார்டுகள் ஒழியும். இதை செயல்படுத்துவதற்கான திட்டம் அரசிடம் இப்போதைக்கு இல்லை. பிற்காலத்தில் செயல்படுத்த வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 30, 31 மற்றும் பிப்., 1ல் மாவட்ட தலைநகரங்களில், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


இதையடுத்து, அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்து, போராட்டம்குறித்து பிரசாரம் செய்யவும் ஜாக்டோ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பெயரளவுக்கு வந்து விட்டு, ஒரு வாரம் வரை போராட்டபணிகளில் ஈடுபடும் நிலை உள்ளது.இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்து வகுப்பு மாணவர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடாமல் மவுனமாக இருப்பதால், ஆசிரியர்சங்க போராட்டத்துக்கு, அதிகாரிகளும் துணை போவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோரிக்கைகள் என்ன?

* மத்திய அரசுஆசிரியர்களை போல், தமிழக ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி தர ஊதியம் வழங்க வேண்டும்
* 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைக்கவேண்டும்
* பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை வாபஸ் பெற்று, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வர வேண்டும்
* ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்
* தமிழை முதல் பாடமாக்கி அரசாணை வெளியிட வேண்டும்
* இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழுவின் படி சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

ஜாக்டோ ஆசிரியர்கள் 3 நாட்கள் போராட்டம்

ஜாக்டோ அமைப்பின் மதுரை மாவட்ட செயற்குழுக் கூட்டம், அமைப்பாளர்கள் சந்திரன், ஆரோக்கியம் தலைமையில் நடந்தது.மாவட்டத்திலுள்ள 19 ஆசிரிய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். 

மத்திய அரசுக்குஇணையான சம்பளம், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குதல், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு நலத்திட்ட அலுவலர் நியமிக்கப்படுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன., 30, 31, பிப்., 1ல் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மூன்று நாட்கள் நடக்கும் போராட்டத்தில் தினமும் 5000 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்கள்:பிப்.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

484 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்: 


சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு ரூ.2,500-5,000 என்ற ஊதிய விகிதத்தின் கீழ் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை ஒன்றியத்தில் 26 காலிப் பணியிடங்களும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 23 பணியிடங்களும் காலியாக உள்ளன. 

இதேபோல, துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 21, போளூர் ஒன்றியத்தில் 26, கலசப்பாக்கத்தில் 21,சேத்பட்டில் 24, செங்கத்தில் 28, புதுப்பாளையத்தில் 27, தண்டராம்பட்டில் 22, ஜவ்வாதுமலையில் 19, செய்யாறில் 33, அனக்காவூரில் 26, வெம்பாக்கத்தில் 35, வந்தவாசியில் 26, தெள்ளாரில் 36, பெரணமல்லூரில் 33, ஆரணியில் 31, மேற்கு ஆரணியில் 15, திருவண்ணாமலை நகராட்சியில் 7, ஆரணி நகராட்சியில் 2, திருவத்திபுரம் நகராட்சியில் 3 என மொத்தம் 484 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இவற்றில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 14 இடங்களும்,ஆதிதிராவிடர்களுக்கு 73 இடங்களும், பழங்குடியினருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 97 இடங்களும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு 17 இடங்களும், முஸ்லிம் தவிர மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 129 இடங்களும், பொதுப்பிரிவினருக்கு 149 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 2016 ஜனவரி 1-ஆம் தேதிப்படி 21 வயதுபூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தோல்வியடைந்தவர்களாக இருக்கலாம். இவர்களது வயது வரம்பு 2016 ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் சான்று ஆகியவற்றுடன் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். 

மாதிரி விண்ணப்பப் படிவங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.463 சமையல் உதவியாளர் பணியிடங்கள்: இதேபோல, சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.950-2,000 என்ற ஊதிய விகிதத்தின் கீழ் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 26 காலிப் பணியிங்களும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 24 காலிப் பணியிடங்களும் உள்ளன. இதேபோல, துரிஞ்சாபுரத்தில் 27, போளூரில் 8, கலசப்பாக்கத்தில் 19,சேத்பட்டில் 23, செங்கத்தில் 40, புதுப்பாளையத்தில் 20, தண்டராம்பட்டில் 35, ஜவ்வாதுமலையில் 16, செய்யாறில் 23, அனக்காவூரில் 20, வெம்பாக்கத்தில் 41, வந்தவாசியில் 21, தெள்ளாரில் 32, பெரணமல்லூரில் 32, ஆரணியில் 28, மேற்கு ஆரணியில் 24, திருவண்ணாமலை நகராட்சியில் 3, ஆரணி நகராட்சியில் 1 பணியிடம் என மொத்தம் 463 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில், அருந்ததியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 13 இடங்கள், ஆதிதிராவிடர்களுக்கு 70 இடங்கள், பழங்குடியினருக்கு 5, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 93, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு 16, முஸ்லீம் தவிர இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 123, பொதுப்பிரிவினருக்கு 143 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்தப் பணியிடத்துக்கு பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தோல்வி அடைந்தவர்களாக இருக்கலாம். பழங்குடியினர் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்... இனி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான தொகையை இனி ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.பணமில்லா நடவடிக்கையை கவனத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கான முன்பதிவு முறை ஏற்கெனவே ஆன்லைன் வழியாக அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், விநியோகிப்பட்ட பிறகே பணம் செலுத்த முடியும் என்ற நிலையே இருந்தது.இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் திட்டத்தை நேற்று (24.01.16) தொடக்கி வைத்துள்ளார்.நாடு முழுவதும் தற்போது 16.5 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தப் புதிய நடைமுறையின் மூலம் நுகர்வோர்கள் பயனடைவார்கள், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

பி.எப்., தொகை கணக்கு வைக்காதது கிரிமினல் குற்றம்: அதிகாரி எச்சரிக்கை'

''பி.எப்., தொகையை, முறையாக கணக்கு வைக்காமல் இருப்பது, கிரிமினல் குற்றம்,'' என, பி.எப்., கோவை மண்டல உதவி கமிஷனர் ரவிதேஜாகுமார் ரெட்டி எச்சரித்து உள்ளார். ஊட்டியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு, 'யு.ஏ.என்.,' எனப்படும், நிரந்தர வைப்பு எண் சேவை பயனுள்ளதாக இருக்கும்.

அரசு போக்குவரத்து கழகஊழியர்களின் பி.எப்., நிதியை, முறையாக கணக்கு வைப்பதில்லை என்ற சர்ச்சை இருந்து வருகிறது. போக்குவரத்து கழகம், மின் வாரியம் உட்பட, சில பொதுத் துறை நிறுவனங்கள், தாங்களே பி.எப்., பிடித்தம் செய்துக் கொள்வதாக, எங்களிடம் இருந்து விலக்கு பெற்றுள்ளன. நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான், பி.எப்., நிறுவனத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. நிபந்தனைகளை பின்பற்றாமல் இருப்பதும், பி.எப்., தொகையை முறையாக கணக்கு வைக்காமல் இருப்பதும் கிரிமினல் குற்றம்.இவ்வாறு ரவிதேஜாகுமார் ரெட்டி கூறினார்.

மார்ச் மாதத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் : கல்வி இயக்குனரகம் முடிவு!

நாடு முழுவதும் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும்  ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதார்புகைப்படம் எடுப்பதற்காக சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில்2016 மே இறுதிக்குள் அனைவருக்கும ஆதார் எண் கொடுக்கும் பணி முடிக்க வேண்டும் என்று மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.ஆனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1.20 கோடி பேர் இன்னும் ஆதார் எண்ணுக்கு பதிவு செய்யவில்லை என்றும், இதில் 60 சதவீதம் மாணவர்கள் உள்ளதாக தெரியவந்தது.

மாநிலம் முழுவதும் ஆரம்பம், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் கொடுப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை அலையவிடாமல் தவிர்க்கும் வகையில் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று புகைப்படம் எடுக்கும் திட்டம் செயல்படுத்த கர்நாடக மாநிலபொதுகல்விதுறை இயக்குனரக ஆணையர் கே.எஸ்.சத்யமூர்த்தி முடிவு செய்தார். இதுதொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆதார் புகைப்படம் எடுக்கும்திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.மேலும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் மாநிலம்முழுவதும் படிக்கும் மாணவ, மாணவிகளைஆதார் எண் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது

வெள்ளத்தில் மாணவர்கள் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்களை, விண்ணப்பித்த இடங்களிலேயே 27.01.2016 முதல் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.


TNPSC GROUP IIA TENTATIVE ANSWERS KEY DT:24.01.2016

TENTATIVE ANSWER KEYS

 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES)
(Dates of Examination:24.01.2016 FN)

         1
       2
       3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 3rd February 2016 will receive no attention.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 இளநிலை உதவியளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்..001/PR33/2016,  தேதி: 13.01.201

பணி: இளநிலை உதவியாளர்காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்ற ரீதியில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் Word Processing சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 75சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தங்களது படிப்பை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750. எஸ்சி.,எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை Registrar, Anna University என்ற பெயரில் Chennai-ல் மாற்றத்தக்க வையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http:/www.annauniv.edu என்றஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:The Registrar,Anna University,CHENNAI- 600025.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.annauniv.edu/pdf/JA-ADV-2016.pdfஎன்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும்.

போலீஸ் தொந்தரவு இனி இருக்காது: சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவலாம் - மத்திய அரசு புதிய உத்தரவு

சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு இனி போலீஸ் தொந்தரவு இருக்காது. அதற்கான பல புதிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை,அருகில் உள்ளவர்கள் காப்பாற்றவே நினைக்கின்றனர். ஆனால் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, இவர்களே குற்றவாளிகள் என்பது போல் பார்ப்பதும், போலீஸார் விசாரணை என்ற பெயரில் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும் அடிக்கடி நடக்கிறது. 

இதற்கு பயந்தே சாலை விபத்துகளின்போது பலர் ஒதுங்கி விடுகின்றனர்.இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், ‘முறையாக செயல்படும் விதிமுறை களை’ (ஸ்டாண்டர்ட் ஆபரேட்டிங் புரசீஜர்) வெளியிட்டுள்ளது. அதன் விதிமுறைகள் வருமாறு:

* சாலை விபத்தில் சிக்கியவர்கள் பற்றி போலீஸுக்கு தகவல் அளிப்பவர்களோ அல்லது அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களையோ மரியாதை யாக நடத்த வேண்டும்.
* விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களிடம் அவர் களுடைய முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை கேட்கக் கூடாது. சாட்சி சொல்ல அவர்களாக விரும்பி விவரங்களை கொடுத்தால் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும்.
* உதவி செய்பவர்கள் சாட்சி சொல்கிறேன் என்று ஒப்புக் கொண்டால், அவர்களுக்கு வசதியான நேரத்தில்தான் விசாரணை அதிகாரி சந்திக்க வேண்டும். அதுவும் அவருடைய வீடு அல்லது அலுவலகத்தில் விசாரணை நடத்தலாம். உதவி செய்தவரை விசாரிக்கச் செல்லும் போது, போலீஸார் சீருடையில் செல்லக்கூடாது, சாதாரண உடையில்தான் செல்ல வேண்டும்.* ஒருவேளை சாலை விபத்தை நேரில் பார்த்து பாதிக்கப் பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தவரே போலீஸ் நிலையம் வந்து விரிவான தகவல்கள் தர ஒப்புக் கொண்டால், நியாயமாகவும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளும் அவரிடம் ஒருமுறை மட்டும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். 

பல முறை வரவழைத்து அலைக்கழிக்க கூடாது.* உதவி செய்தவர் பேசும் மொழி, விசாரணை அதிகாரிக்கு தெரியாவிட்டால், மொழிபெயர்ப் பாளரை அதிகாரியே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக சாலை விபத்து களில் சிக்கியவர்களை காப்பாற்ற முன்வருவோரை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 1.4 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 50 சதவீதம் பேரை சரியான நேரத்தில் (கோல்டன் ஹவர்) மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களின் உயிரை காப்பாற்ற வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

போட்டித் தேர்வுக்குப் படிக்கும் பார்வையற்றோருக்கு உதவ பிரெய்லி புத்தகங்கள்

வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இணை இயக்குநர் தகவல்போட்டித்தேர்வுக்குப் படிக்கும் பார்வையற்றோருக்கு உதவும் வகையில் பிரெய்லி புத்தகங்களை வாங்கிக்கொடுக்க அரசு தயாராக இருப்பதாக வேலைவாய்ப்பு மற் றும் பயிற்சித்துறை இணை இயக்கு நர்டி.விஜயகுமார் தெரிவித்தார்.தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், பார்வையற்றோ ருக்கான 3 நாள் கல்வி- வேலை வாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு திடல் வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற துணை பதிவாளர் சி.சுப்பையா தலைமை தாங்கி னார். கருத்தரங்கை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் (தொழில் ஆராய்வு) டி.விஜயகுமார் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கு மத் திய, மாநில அரசு வேலை வாய்ப் பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. 

சமீப காலமாக மாற்றுத் திறனாளிகளுக்கான காலியிடங் களைநிரப்புவதற்கு அதிகளவில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள்வந்தவண்ணம் உள்ளன. இதற் கான தேர்வுகளுக்கு பார்வையற்ற வர்களை தயார்படுத்தும் வகை யில் சென்னை கிண்டியில் விரை வில் சிறப்பு பயிற்சி அளிக்க உள் ளோம்.டிஎன்பிஎஸ்சி, ஸ்டாப் செலக் ஷன் கமிஷன், பேங்கிங், ரயில்வே என பல்வேறு தேர்வு அமைப்புகள் நடத்தக்கூடிய போட்டித் தேர்வுகளுக்குப் பார் வையற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டித் தேர்வெழு தும் மாணவர்களுக்கு உதவுவதற் கென ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் வாசகர் வட்டம் (ஸ்டடி சர்க்கிள்) இயங்கு கிறது. இங்கு போட்டித்தேர்வுக் கான அனைத்துப் பாடப்புத்தகங் களும் உள்ளன. 

மேலும், போட் டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி யும் நடத்தப்படுகிறது. பார்வையற்ற மாணவர்களுக்கு தேவைப்பட்டால் பிரெய்லி புத்தகங்களையும் வாங்கிக்கொடுக்க தயாராக இருக் கிறோம். புத்தகங்கள் வாங்குவதற் கென அரசு கூடுதலாக ரூ.35 லட்சம் ஒதுக்கியுள்ளது.அரசு அளிக்கின்ற வாய்ப்பு வசதிகளை பார்வையற்றவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை ஆன்லைனில் பதியலாம் என்றாலும் பார்வையற்றவர்கள் கல்வித்தகுதி மற்றும் மருத்துவ சான்றிதழுடன் நேரில் சென்றுதான் பதிவுசெய்ய வேண்டும். பார்வை யற்றோருக்கான சலுகைகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டால் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற் றுத்திறனாளிகள் வேலைவாய்ப் பற்றோர் உதவித்தொகையை பெறத் தகுதியுடையவர். ஆவர். இதன்படி, எஸ்எஸ்எல்சி முடித்தவர் களுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டப் படிப்பு மற்றும்முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.1000-ம் வழங்கப்படுகிறது.

 இந்த உதவித் தொகையை 10 ஆண்டுகள் பெற லாம். இவ்வாறு விஜயகுமார் கூறினார்.வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்வது, போட்டித் தேர்வுகளுக்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் தொடர்பாக மாணவ-மாணவிகளின் பல் வேறு கேள்விகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். முன்னதாக, பார்வையற்றோர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.வி.பக்கிரி சாமி வரவேற்றார். துணைத்தலை வரும், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியையுமான ராஜேஸ் வரி அறிமுகவுரை நிகழ்த்தினார். நிறைவாக, பொதுச்செயலாளர் வி.எஸ்.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

ஆதார் முகாம் நிறைவு சான்றிதழ்...

TNPSC:VAO APPLICATION STATUS - 2016

28/1/16

தொலைபேசி நம்பரை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்---தகவல் துளிகள்

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்---தகவல் துளிகள்

நமது மொபைல் போனில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான தொலைப்பேசி எண்கள்--- தகவல் துளிகள்,

நலமுடன் வாழ---தகவல் துளிகள்