யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/8/16

ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி

கற்பியுங்கள் ஆசிரியர்களே

சுதந்திரதின விழா கவிதைகள்---தகவல் துளிகள்

தமிழ் தாத்தா---பொதுஅறிவுகட்டுரை,

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்

திருவள்ளுவரும் திருக்குறளும்

பள்ளிக்கு செல்ல குழந்தைகளை பக்குவப்படுத்துவது எப்படி?

புதிய தலைமுறை வார இதழ்-பெண்களுக்கு உதவும் எண்கள்-----தகவல் துளிகள்,

வளர்த்து விட்ட விடுதலை

திருப்பூர் குமரன் ---பொதுஅறிவுகட்டுரை,


கொடிகாத்த குமரன காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன். 

தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது. 

'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. 

உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான். 

அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான். 

1904ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஏழை நெசவாளர் குடும்பத்தில் குமரன் பிறந்தார். போதிய வருவாய் இன்ரி குடும்பம் வறுமையில் வாடியது. எனினும் செம்மையாகவும், கவுரவமாகவும் வாழ்ந்த குமரன், 11 வயது நிரம்பிய ராமாயி என்ற பெண்ணுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். 

இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார். 

கடந்த 1932ம் ஆண்டு ஜனவரியில், காந்தியடியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக வீரத்துக்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது. 

காவலர்கள் தடியடி நடத்தி, தூப்பாக்கி குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தேமாதரம்... வந்தே மாதரம்...' என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதியாகும். 

மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது. 

ஆலமரம் கீழே விழும்போது மரம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதன் அடியில் சிக்கி சிதறிய சிறு செடிகளை எவரும் நினைப்பதில்லை. 

நாடு சுதந்திரமடைந்ததன் 60ம் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடி மகிழும் வேளையில், திருப்பூர் குமரன் போன்ற உயிர் தியாகம் புரிந்த எண்ணிலடங்காத தியாக உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூறுவதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்.


திருக்குறள் பற்றிய ஆச்சர்யமான செய்திகள்!!!---கட்டுரைகள், கல்விச் செய்திகள்,

* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இருஎழுத்துக்கள்-ளீ,ங
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
*திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
*திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
*திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
*திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
* திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
தொகுப்பு : ஆசிரியர் கார்த்திகேயன்

13/8/16

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

தமிழகத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் (பணியிடங்களின் எண்ணிக்கை 842) அனைத்தும் இணையதளம் மூலம் கலந்தாய்வுமுறையில் முழுமையாக நிரப்பப்பட்டன.இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
""2016-17ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வின்போதுஇணையதளம் மூலம் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 325 தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. பொது மாறுதலுக்குப் பிறகு காலியாக இருந்த 517 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் விரும்பிய இடங்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் சரியாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து இணை இயக்குநர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று மேற்பார்வை செய்து வருகின்றனர் என்று பள்ளிக் கல்வி இயக்ககச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு கால விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்பு: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது

பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்து வதற்கான பேறுகால சலுகைகள் சட்டத் திருத்த மசோதா மாநிலங்கள வையில் நேற்றுநிறைவேறியது.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து தயாரிக்கப் பட்ட இந்த மசோதாவை தொழி லாளர் நல அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தாக்கல் செய்தார்.

பள்ளிகளில் மதிய உணவு: ஆசிரியர் சுவைக்க உத்தரவு.

பள்ளிகளில் மதிய உணவு திட்ட விதிகளை முறையாக பின்பற்றஅனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கை: 
அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள், தரமானவையாக இருக்க வேண்டும்.மதிய உணவு சமைத்ததும், மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன் மூன்று பேர் சாப்பிட்டு பார்க்க வேண்டும்; கண்டிப்பாக, ஒரு ஆசிரியர் மதிய உணவு முழுவதையும் சுவைத்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு.

அரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. 
இதில் முக்கிய கட்டமான, பணி நிரவல் என்ற கட்டாய இடமாற்றம், நாளை துவங்குகிறது. அனைத்து மாவட்டங்களிலும், நாளையும், நாளை மறுதினமும், பணி நிரவல் கவுன்சிலிங் நடக்கிறது.

தொடக்க பள்ளிகளில், ஆசிரியர் - மாணவர் விகிதத்திற்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை, தேவைப்படும்பள்ளிக்கு மாற்றுவர்.இந்த கட்டாய இடமாற்றத்தில், ஒவ்வொரு ஆண்டும், பல தில்லுமுல்லுகள் நடப்பது உண்டு. அதனால், பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்கும். இந்த ஆண்டு, எந்த பிரச்னைக்கும் வழியின்றி, பணி நிரவலை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட உத்தரவு.

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும், என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முதல்எழுத்து உள்பட தங்களின் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும். 
ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இதனை சரிவர பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளது. எனவே, அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் முதல் எழுத்துடன் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும். இதனைமாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

IGNOU B.Ed - June 2016 Term End Exam Result Published...

பணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை