யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/8/16

ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்ட விண்ணப்ப படிவம்



புதுமையாக கற்பிக்கும் ஆசிரியர்கள் எஸ்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் வீடியோ வெளியீடு.

பொம்மலாட்டம் உள்ளிட்ட புதுமை யான முறையில் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தரும் ஈரோடு ஆசிரியர்களின் வீடியோ தொகுப் பைத் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி) இணையதளத்தில் வெளியிட்டுள் ளது.
இதன்மூலம் இதர ஆசிரியர்களும் இத்தகைய முறையைப் பின்பற்றி எளிமையான முறையில் பாடங்களைக் கற்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்தியாசப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர் களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறையில், மாநில கல்வியி யல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளில் கற்பிக்கும் முறையைவிட, அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த புதிய முயற்சிகள் பலவற்றை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர் களின் செயல்பாடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணையதளத்தில் (www.tnscert.org) வீடியோவாக வெளியிட முடிவு செய்யப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்களது கற்பித்தல் முறைகளை விளக்கி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்தனர். இதில் மிகவும் வித்தியாசமான முறையில் மற்றும் புதுமையாகக் கற்பித்த 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் வகுப்பறை கற்பித்தல் செயல்பாடுகளை வீடியோவாக எடுக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்றது . இதில் 100 ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் முறையை ஆவணப் படம் போல மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணையதளத்தில் வீடி யோவாக பதிவேற்றம் செய்து வருகிறது. இதில் ஈரோடு மாவட் டத்தைச் சேர்ந்த 3 ஆசிரியர்களின் கற்பித்தல் முறை குறித்த வீடியோ இடம்பெற்றுள்ளது. ஈரோடுமாவட்டம் மொடக் குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாதகவுண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடை நிலை ஆசிரியர் தே.தாமஸ் ஆண்டனி (பொம்மலாட்டம் மூலம் கல்வி கற்பித்தல்), பவானி ஒன்றியம் சின்னியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை எம்.சுதா (பழைய செயல்வழிக் கற்றல் அட்டை மூலம் வகுப்பறையை அழகுபடுத்துதல் மற்றும் கற்றல் பயிற்சியை மேம் படுத்துதல்), பவானி ஒன்றியத்தில் உள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசி ரியை வாசுகி (வாழ்க்கைக் கல் வியை அனுபவ பயிற்சி மூலம் கற்பித்து மாணவர்களை உணரச் செய்தல்) ஆகியோரின் கல்வி கற் பித்தல் முறை குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவேற்றப்படும் வீடியோவால் மற்ற ஆசிரியர்களும் இந்த வீடியோவைப் பார்த்து புதுமையாகவும்எளிமையாகவும் கற்பிப்பார்கள் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த கற்பித்தல் முறையை அங்கீகரித்து இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வரும் கல்வியாண்டி லும் தொடரும் என்றும் இதன் மூலம் புதிய முறையில் வித்தியாசமாக கற்பிக்கும் ஆசிரியர்களின் திறமைகள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் எஸ்.சி.இ.ஆர்.டி தெரிவித்துள்ளது

தேர்வு கட்டணம் பாக்கி பி.இ., 'ரிசல்ட்' நிறுத்தம்

தேர்வு கட்டண பாக்கியால், ஒன்பது தனியார் இன்ஜி., கல்லுாரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 571 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, ஆக., 4ம் தேதி; எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கு, 6ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 
இதில், தேர்வு கட்டணம் செலுத்தாத, சில கல்லுாரிகளின் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டன; அந்த கல்லுாரிகளுக்கு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில், ஒன்பது கல்லுாரிகள், கட்டணம் செலுத்த அவகாசம் கேட்டுள்ளன. 'பணம் கட்டிய கல்லுாரிகளின் முடிவுகள், திங்கட்கிழமை வெளியாகும்' என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் செப்., 1ம் தேதி துவக்கம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, செப்., 1 முதல் துவக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செப்., 1ம் தேதி, மாநிலம் முழுவதும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 
சட்டசபை தேர்தல் நடைபெறாமல் உள்ள, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் மட்டும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது. வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட தொகுதிகளில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக, செப்., 30 வரை, மனு அளிக்கலாம்; செப்., 10 மற்றும், 24ம் தேதி, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் படித்து காட்டப்படும்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, செப்., 11 மற்றும், 25ம் தேதி, ஓட்டுச்சாவடி அளவில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். வரும், 2017 ஜனவரி, 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாகிறவர்கள், பெயர் சேர்க்க மனு கொடுக்கலாம். வாக்காளர் இறுதி பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும்.

தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான அறிவிப்பு, பின் வெளியிடப்படும்.

பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி

அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொலை நிலையில், ஆசிரியர் கல்வியியல் படிப்பான, பி.எட்., முடித்த பின், பயிற்சி மேற்கொள்ள விரும்பினால், தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தி, பயிற்சிமேற்கொள்ளலாம். 
அதேநேரம், ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளியில் பயிற்சி பெறலாம்.'இந்த பயிற்சிக் காலம், பணிக் காலமாக எடுத்துக் கொள்ளப்படாது; எனவே, பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், விடுப்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்

TNPSC:குரூப் - 1 நேர்முக தேர்வு பட்டியல் வெளியீடு.

குரூப் - 1 பதவியில், துணை கலெக்டர் உள்ளிட்ட, 79 காலியிடங்களை நிரப்புவதற்கான, நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஜூன், 5, 6 மற்றும், 7ம் தேதிகளில் நடந்தது; 3,407பேர் பங்கேற்றனர். 
இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தேர்வர்களின் மதிப்பெண், 'கட் - ஆப்' தரவரிசை போன்ற விவரங்கள், பதிவெண்களுடன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வு, வரும், 19ம் தேதி முதல் நடக்க உள்ளது

தமிழில் பெயர் 'இனிஷியல்'

அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தமிழில் பெயர் எழுதவேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபத்துரை என்ற தமிழ் ஆர்வலர், பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். 
அதில், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் சிலர், தங்கள் பெயரை ஆங்கிலத்திலும், சிலர் முன்னெழுத்தான, 'இனிஷியலை' ஆங்கிலத்தில் எழுதுவதாகவும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, தொடக்கப் பள்ளி இயக்குனர் இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில், 'தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை அனைவரும்,தங்கள் பெயரை தமிழில் எழுதுவதுடன், இனிஷியலையும், தமிழிலேயே எழுத வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார். தமிழில் எழுதாதது, அரசு விதிகளுக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

அரசு இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியர் பணிக்கு, செப்., 7 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு இன்ஜி., கல்லுாரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு நேரடி நியமன எழுத்து தேர்வு, அக்., 11ல் நடக்க உள்ளது.
சென்னை மாவட்டத்தில், இந்த பதவிக்குவிண்ணப்பிக்க விரும்புவோர், சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில், வரும், 17ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று, செப்., 7 வரை அனுப்பலாம் என, சென்னை கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்.

ஊதியக்குழு அரசாணை எண்:234ன் படி மிகக்குறைந்த ஊதிய ஏற்றம் 5200-20200 +.2800 நிர்ணயம் செய்யப்பட்டுஊதியம் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களில் 01.01.2006 முதல் 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ளஇடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை.
அரசாணை எண் :23ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 750 ரூபாய் தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கப்படுகிறது.01.01.2006 முதல் 31.12.2010 க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை + தர ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.01.01.2011லிருந்து பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அடிப்படை + தர + தனி ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.

எனவே 01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தில் தனி ஊதியம் 750 மற்றும் அதற்கான அகவிலைப்படி சேர்த்து ஒரு வருடத்திற்கு தோராயமாக 15000 ரூபாய் இழந்து வருகிறார்கள்.ஒன்றியத்திற்கு வருடத்திற்கு சுமார் 10 பேர் பதவி உயர்வு பெற்றிருப்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ளது 365 ஒன்றியங்கள்.2006-2010 வரை உள்ள 5 ஆண்டுகளில் சுமார் 18650 பேர் பாதிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.

இதன் பாதிப்பு அறிந்ததும் அறியாமலும் பணியாற்றுபவர்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.

கல்வி தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவில்லை: மத்திய அரசு விளக்கம்

புதிய கல்வி கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


மாநிலங்களவையில் இதுதொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை கல்வியில் திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்களவையில், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமையும் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் விளக்கம் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இட ஒதுக்கீடு அல்லது சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான எந்த அரசமைப்புச் சட்ட விதிகளையும் திருத்தம் செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபடவில்லை. ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறோம்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு குறித்து கருத்துகள் அல்லது ஆலோசனைகளை தெரிவிக்கும்படி மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அனைத்து தரப்பினரிடம் இருந்தும் ஆலோசனைகளை அரசு கேட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் பிரகாஷ் ஜாவ்டேகர்.

Results of Departmental Examinations - MAY 2016 (Updated on 08 August 2016)

கணினி ஆசிரியர்கள் 39000பேருக்கு தமிழக அரசு புதிய பணியிடஞ்களை உருவாக்கித் தரவேண்டும் -தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு வேண்டும்கோள்.

தமிழ்நாட்டில் பி.எட் கணினி அறிவியல் படித்த 39000 பேர்கள் இன்றுவேலையில்லாமல் உள்ளனர் அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கும் வகையில்புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.2011ஆம் கல்வியாண்டில் 6,7,8,9,10 வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம்அறிமுகப்படுத்தப்பட்டு
 பாடபுத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு கொஞ்சம்மாணவர்களுக்கு வழங்கியும் கொஞ்சம் மாணவர்களுக்கு வழங்காமல் இருந்ததுஅதற்கக்குள் நான் போக விரும்பவில்லை.
தற்போது தமிழ்நாட்டில் அந்தப்பாடபுத்தகமும்,பாடமும் கைவிடப்பட்டது என்பதை நான் அறிவேன் கைவிடப்பட்ட கணினிஅறிவியல் பாடபுத்தகங்களை மீண்டும் அமல்படுத்தி அதற்கு புதிய கணினி ஆசிரியர்கல்பணியிடங்களை உருவாக்கி தரவேண்டும்.

கழக ஆட்சியில் 1800தோற்றுவிக்கப்பட்ன தொடர்ந்து இந்த ஆட்சியிலும்39000பேர்கள்இன்றைக்கு வேலையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் அவர்களுக்கு வேலைவாய்ப்புவழங்கும் வகையில் புதிய பணியிடங்கள் உருவாக்கி தரவேண்டும் என தமிழகஅரசுக்குவேண்டுகோள் வைக்க விரும்புகிறேன் -தங்கம் தென்னரசு.

பி.எட்., கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி
நடத்துகிறது. இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்; அவர்களில், 3,736 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள்.
மாணவர் சேர்க்கை செயலர் தில்லைநாயகி வெளியிட்ட அறிவிப்பு: பி.எட்., கவுன்சிலிங், வரும், 22 முதல், 30 வரை நடக்க உள்ளது. முதல் நாளில், மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பதாரர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் வரும், 17ம் தேதி, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி இணையதளத்தில், (www.ladywillingdoniase.com) வெளியாகும். விண்ணப்பதாரர்களுக்கு, தபால் மூலமும், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலமும், அழைப்பு தகவல் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கள்ளர் பள்ளி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: ஆக.18-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை பட்டியலுக்கு ஆக.18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் (மதுரை) செல்வக்குமார் தெரிவித்துள்ளது: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு 2016- 17 ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.26 மற்றும் 27 ஆகிய 2 நாள்கள் மதுரை மாவட்டம், செக்கானூரணி, அரசு கள்ளர் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும்.  ஆக.26 ஆம் தேதி, மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஆகியோருக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். ஆக.27 ஆம் தேதி முற்பகல் தமிழாசிரியர் மாறுதல், பட்டதாரி ஆசிரியர், காப்பாளர் மாறுதல், பிற்பகலில் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு இடைநிலை ஆசிரியர் (1 முதல் 5 ஆம் வகுப்பு) இடைநிலைக் காப்பாளர் மாறுதல் மற்றும் சிறப்பாசிரியர் மாறுதலும் நடைபெற உள்ளது.

 முன்னுரிமையில் உள்ளவர்கள் உரிய சான்றுகளுடன் ஆக.18 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், அதற்குரிய முன்னுரிமை வழங்கப்படும். அதன்பின்னர் வரும் மனுக்கள் நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

��சிறப்புச் செய்தி�� பணிநிரவல் மூலம் ஆணை பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேராமல் ஒன்றியம் விட்டு ஒன்றியம்,மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு மனு கொடுத்திருந்தால் கலந்துகொள்ளலாம்

காந்தியடிகள்

உடலோம்பலின் இன்றியமையாமை

நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்

நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்க உங்கள் வாகனத்தில் சாளரங்கள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.
மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை ஒற்று இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும்.நீங்கள் மெதுவாக செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்தி விடும்.
திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் எட்டி விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும் பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீதுமோதிவிடலாம்.அப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மட்டும் தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் கூடிய சூழலில் புரிந்துகொள்ளும் ஆனால் அது ஒரு காலம்கடந்த ஞானம் ஆகி நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள்.
மூளையின் இந்த குறைபாட்டை தான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள்.ஆகவே நீங்கள் வேகமாக செல்லும் போது அடிக்கடி SPEEDOMETERஐ கவனிக்க பழகி கொள்ளுங்கள். மேலும் நம் நாட்டில் 90 KMக்கு மேலும் வெளிநாடுகளில் 120 KMக்கு மேலும் வேகமாக செல்வது ஆபத்து தான். நாம் வாகனம் ஓட்டும் போது நம் வரவை எண்ணி நம் வீட்டில் நமக்கு பிரியமானவர்கள் வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் அன்றும்-இன்றும்:

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்...
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது...
அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே...

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...
- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)...
- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று...
- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...
- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது...
- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது...
- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...
- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி...
- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்...
- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்...
- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது...
- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்...
- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது...
- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...
- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது...
- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...
- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை...
- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது...
- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...
- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது...
- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...
- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...
- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது...
- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...நன்றி மாலைமலர்

இன்று இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு பற்றிய தகவல்.

இன்று இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு பற்றிய தகவல்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது.

கோல்கத்தாவில் பார்சி பாகன்

 சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது. அது சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்து, பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடி, பச்சை பாகத்தில் பட்டைகளில் வெண்தாமரை மலர்கள், வந்தேமாதரம் என்ற வார்த்தைகள், கதிர்வீசும் ஆதவன், பிறைசந்திரன், நட்சத்திரங்கள் என்று அந்தக்கொடி ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டது. நடுபாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப் பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது.

பின்னர், 1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. 8 வெண்தாமரைகளுக்குப் பதிலாக, வானில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு, அந்தக் கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும், அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர்.

1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3ம் முறையாக மாற்றப்பட்டது. இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், பாலகங்காதரதிலகரும் சிவப்புநிற பட்டை (5) பச்சைநிற பட்டை (4 ), அடுத்தடுத்து அமைந்த இந்தகொடியின் மேற்பகுதி இடது புறம் சிறிதளவு யூனியன் ஜாக்கும், வலது புறம் பிறைச்சந்திரன் கூடிய நட்சத்திரமும், நடுவில் சில நட்சத்திரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன. இக்கொடி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை.

பின்னர் 1921 ம் ஆண்டு விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது, பிங்கிலி வெங்கையா என்ற இளைஞர் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி காவி, பச்சை நிறங்களில் ஒரு கொடியை வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார். இந்தக்கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது.

ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931ல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாக, காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.

பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் சக்கரத்தை கொண்ட கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.

அதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது. சக்கரத்திற்குப் பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது.. இரண்டாம் உலகப் போரின்போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசியப் படை பயன்படுத்திய இந்தக் கொடி தேசியக் கொடியாக இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது.

விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசியக் கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது.

அடர் காவி, அடர் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும், மத்தியிலுள்ள வெண்பட்டையில் கடல்நீல வண்ணத்தில் 24 அரும்புக் கால்களும் கொண்ட ஓர் அசோகச் சக்கரமும் கொண்டு வரையறுக்கபட்ட நீள அகலத்தில் கொடி உருவாக்கப்பட்டது.

இதை 22 - 07 - 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து, அதன்பின், முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது.

இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் [இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறை]யால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இவ்வளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு (அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப் பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.

கொடித்துணி, காதி என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்) இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.
நன்றி கார்த்தி