யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/8/16

சர்வதேச தினங்கள்

சர்வதேச தினங்கள்
================
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO) உலகில் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சில நாட்களை சிறப்பு தினங்களாக அறிவித்துள்ளது. அத்தகைய சிறப்புவாய்ந்த தினங்களை பலமூலங்களில் இருந்து சேகரித்து இங்கு மாதவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஜனவரி
• 26 - உலக சுங்கத்துறை தினம்
• 30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி
• 02 - உலக சதுப்பு நில தினம்
• 21 - உலக தாய்மொழிகள் தினம்

மார்ச்
• 06 - உலக புத்தகங்கள் தினம்
• 08 - உலக பெண்கள்கள் தினம்
• 13 - உலக சிறுநீரகநோய்
விழிப்புணர்வு தினம்
• 15 - உலக நுகர்வோர் தினம்
• 21 - உலக வன தினம்
• 21- உலக கவிதைகள் தினம்
• 22 - உலக தண்ணீர் தினம்
• 23 - உலக தட்பவெட்பநிலை தினம்
• 24 - உலக காசநோய் தினம்
ஏப்ரல்
• 02 - உலக சிறுவர்நூல் தினம்
• 07 - உலக சுகாதார தினம்
• 15 - உலக நூலகர்கள் தினம்
• 18 - உலக நினைவுச்சின்னங்கள் தினம்
• 22 - உலக புவி தினம்
• 23 - உலக புத்தகம் மற்றும்
பதிப்புரிமை தினம்
மே
• 01 - உலகத் தொழிலாளர் தினம்
• 03 - உலக சூரிய தினம்
• 03 - உலக ஊடக விடுதலை தினம்
• 04 - உலக தீயணைக்கும் படையினர்
தினம்
• 08 - உலக செஞ்சிலுவை நாள்
• 12 - உலக செவிலியர் நாள்
• 15 - உலக குடும்ப தினம்
• 18 - உலக அருங்காட்சிய தினம்
• 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜீன்
• 05 - உலக சுற்றுச்சூழல் தினம்
• 08 - உலகக் கடல் தினம்
• 12 - உலக குழந்தை தொழிலார்
ஒழிப்பு தினம்
• 14 - உலக இரத்த தான தினம்
• 14 - உலக வலைப்பதிவர்கள் தினம்
• 20 - உலக அகதிகள் தினம்
• 27 - உலக நீரிழிவுநோய்
எதிர்ப்பு தினம்
ஜீலை
• 11 - உலக மக்கள்தொகை தினம்
• 20 - சதுங்க தினம்
ஆகஸ்ட்
• 01- உலக சாரணர் தினம்
• 12 - உலக இளைஞர் தினம்
செப்டம்பர்
• 08 - உலக எழுத்தறிவு தினம்
• 15 - உலக மக்களாட்சி தினம்
• 21 - உலக அமைதி நாள்
• 27 - உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
• 01 - சர்வதேச முதியோர் தினம்
• 02 - உலக அகிம்சை தினம்
• 04 - உலக வனவிலங்குகள் தினம்
• 05 - உலக ஆசிரியர்கள் தினம்
• 09 - உலக தபால்கள் தினம்
• 10 - உலக மனநல தினம்
• 16 - உலக உணவு தினம்
• 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
• 24 - ஐ.நா தினம்
நவம்பர்
• 17 - உலக மாணவர்கள் தினம்
• 20 - உலக குழந்தைகள் தினம்
• 21 - உலக தொலைக்காட்சி தினம்
டிசம்பர்
• 01 - உலக எயிட்ஸ் தினம்
• 02 - உலக அடிமை ஒழிப்பு தினம்
• 03 - உலக ஊனமுற்றோர் தினம்
• 09 - உலக ஊழல் ஒழிப்பு தினம்
• 10 - உலக மனித உரிமைகள் தினம்.
திரு. சீனிவாசன், ப.ஆ., கிருட்டிணகிரி மாவட்டம்

I.A.Sஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள்---பொதுஅறிவு

கண் தானம் செய்வது எப்படி?---தகவல் துளிகள்

நவம்பர் 14. குழந்தைகள் தினம்!

இந்தியா விடுதலைப்பெற்ற பின் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவ.ம்பர் 14 ம் தேதி நம் நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அதே போல் குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்தனர். குழந்தைகளால் அவர் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்தார் பிறகு இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்துவிட்டு சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் துணை நின்றார் இந்தியா சுதந்திரம் பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். அவர் குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் இவரது ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தின் போது அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் ஆனால் அச்சமயத்தில் ஆதரவற்ற அனாதை குழந்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலை மாறி இந்த குழந்தைகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு இத்தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இனிப்புகள் வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து கொண்டாடப்படும் கொண்டாட்டம்தான் நேரு நினைத்த உண்மையான குழந்தைகள் தின கொண்டாட்டமாக இருக்க முடியும்.

கட்டுரைகள் தாய்மொழி பற்று நான் விரும்பும் பாரதியார்

சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்க சமையல் எரிவாயு

சுதந்திரதின விழா கவிதைகள்

16/8/16

நம் கல்வி... நம் உரிமை!

ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. இன்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி நவீன இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கல்விக் கொள்கைகள், அவற்றின் நோக்கங்கள், தாக்கங்களின் வரலாற்றுப் பின்னணியில் புதிய கல்விக் கொள்கையின் சுருக்கமான அறிமுகம்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கை எனும் பெயரில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 43 பக்கக் கொள்கைப் பிரகடனம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. பலரும் சுட்டிக்காட்டும் சம்ஸ்கிருதத் திணிப்பு என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அலசும் முன்னர், இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட முக்கியமான கல்விக் குழுக்களைப் பார்த்துவிடலாம்.

மெக்காலேவுக்கு முன்னும் பின்னும்

1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை. பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது.

1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்குச் சமர்ப்பித்தார்.

ஆங்கிலக் கல்வியை முழுதும் வேலையாள் தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?” என அவர் பகிரங்கமாக அறிவித்தார். 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில், ‘வேலை… கும்பேனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது’ என்று காந்தி விமர்சித்தது குறிப்பிடத் தக்கது.
[11:24 AM, 8/15/2016] +91 99437 90308: 1853-ல் இங்கிலாந்தின் கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக இருந்த சார்லஸ் வுட் தலைமையில் ஒரு கல்விக் குழு இந்தியா வந்தது. 1854-ல் கர்சன் பிரபுவின் காலத்தில் இதன் அறிக்கை முன்வைக்கப்பட்டது. நமது கல்வி முறையில் இருக்கும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என்பதெல்லாம் இக்குழுவின் கைங்கர்யம்தான். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882-ல் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய கல்வி கமிஷன் கொண்டுவந்தது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு

நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே, பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை ஆராய, அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு. பிரதான பிரச்சினை பல்கலைக்கழகக் கல்வியல்ல; அனைவருக்குமான ஆரம்பக் கல்விதான் என அம்பேத்கர், மேகநாத் சாஹா, அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் அப்போதே கருத்துத் தெரிவித்தனர். ஆனால், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது உட்பட, உயர் கல்வியை நிறுவனமயமாக்கி, தனியார் கல்லூரிகளை உள்ளூர்க் குழுமங்கள் உருவாக்கி, மானியக் குழுவிடம் பண உதவிபெறலாம் என்றெல்லாம் முன்மொழிந்தது டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக் குழு.

டாக்டர் லட்சுமணசாமி குழு

1952-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. இதில் தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு உட்பட பலர் நேரில் ஆஜராகி, கல்வி குறித்து விவாதித்தனர். பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்குதல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்று மொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழு முன் மொழிந்தது.

கோத்தாரி கல்விக் குழு

டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் நேரு உருவாக்கிய இந்தக் குழுவின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1964 அக்டோபர் 2-ல் தனது பணியைத் தொடங்கிய இக்குழு, 9,000 பேரிடம் கருத்தறிந்து, 2,400 பக்க அறிக்கையை 1966-ல் வழங்கியது. இந்தியக் கல்விக் குழுக்களிலேயே நமது மண்ணின் ஆதாரக் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக முன்வைத்தது கோத்தாரி கல்விக் குழுதான்.

அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6%ஐக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்தது (தற்போது மோடி அரசு கல்விக்கு ஒதுக்கியிருப்பது 3.47% மட்டுமே). பொதுப் பள்ளிகளை அக்குழுதான் அறிமுகம் செய்தது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச் சாலைகளைக் கட்டமைத்தது. தறிப் பயிற்சி, தோட்டக் கலை, குடிமைப் பயிற்சி ஆகியவற்றை அறிமுகம் செய்தது. விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இக்குழுவின் சாதனைகள். இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளை அரசுகள் முழுமையாக அமல்படுத்தவில்லை.

தில்லுமுல்லுக்கு இடமின்றி ஆசிரியர் கவுன்சிலிங்:போராட்டம் இல்லாததால் அதிகாரிகள்நிம்மதி:

சிபாரிசுக்கு இடமின்றி, காலியிடங்களை மறைக்காமல் ஆசிரியர் கவுன்சிலிங் நடந்து வருகிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம் இல்லாததால், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆக., 3ல் துவங்கி நடந்து வருகிறது.
தொடக்கக் கல்வித்துறைக்கு தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளிக் கல்வித்துறைக்கு தனியாகவும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லுமுல்லு, சிபாரிசு கடிதமின்றி கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.'அமைச்சர் அலுவலகம் துவங்கி, கீழ் நிலையில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் என, எவ்வித சிபாரிசுக்கும் இடமில்லை; சங்கங்களோ, அதிகாரிகளோ தலையிட்டு, காலியிடங்களை மறைத்து வைத்து, வேண்டியவர்களுக்கு ஒதுக்கக் கூடாது. புகார் வந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கவுன்சிலிங் நடைமுறையில் குழப்பங்கள் இல்லாததால், கடந்த ஆண்டை போல, கல்வித்துறை மாவட்ட அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா போன்ற போராட்டங்கள் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கில், காலி இடங்கள் முழுமையாக காட்டப்பட்டுள்ளன. இதேபோல், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் இடங்களையும் வெளிப்படையாக நிரப்ப வேண்டும்.சாமி.சத்தியமூர்த்தி, மாநில தலைவர், தமிழ்நாடுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்.

10. பி.எப்., பணத்தை அடகு வைத்து வீடு வாங்கும் திட்டம் விரைவில்...

தொழிலாளர்கள், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை அடகு வைத்து, குறைந்த விலையில் வீடுகள் வாங்கும் திட்டத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம்அறிமுகம் செய்ய உள்ளது.
இத் திட்டத் தால், நான்கு கோடி, பி.எப்., சந்தாதாரர்கள் பயன்பெறுவர்.நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின், சொந்த வீடு கனவை நனவாக்கும் திட்டம் குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா, சமீபத்தில் லோக்சபாவில் அறிவித்தார்.அப்போது, 'பி.எப்., சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்த விலை வீடு பெற்று தருவதற்கானசாத்தியக்கூறுகள்குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என்றார்; தற்போது, அந்த திட்டம் அமலாகும் சூழல் உருவாகி உள்ளது.முன்பணம்:

இதுகுறித்து, மத்திய தொழிலாளர் துறை செயலர் சங்கர் அகர்வால், நேற்று கூறியதாவது:பி.எப்., திட்டத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர் களுக்கு, வீட்டு வசதித் திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இத்திட்டப்படி, தொழிலாளர்கள் குறைந்த விலையில் வீடு வாங்க, பி.எப்., கணக்கிலிருந்து முன்பணம் பெறலாம்.மேலும், வருங்காலத்தில், தங்கள் பி.எப்., கணக் கில் சேரப்போகும் தொகையை, வங்கிகளுக்கு செலுத்தப்போகும் மாதத் தவணை களாக அடகு வைத்து,குறைந்த விலை வீடுகளை வாங்கலாம். இதன்படி, பி.எப்., சந்தாதாரர், வங்கி மற்றும் இ.பி.எப்.ஓ., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் ஆகிய மூவர் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
தலையிடாது:
சந்தாதாரர் கணக்கில், வருங்காலத்தில் மாதந் தோறும் சேரும் தொகை, வீடு வாங்குவதற்கு, வங்கிக் கடனாக அளிக்கும் பணத்துக்கு, மாதத்தவணையாகச்செலுத்தப்படும். பி.எப்.,சந்தாதாரர் வாங்கும் வீடு, கடன் செலுத்தி முடியும் வரை, வங்கியிடம் அடமானமாக இருக்கும்.இந்த திட்டம், அடுத்த மாதம் நடக்கும், இ.பி.எப்.ஓ.,வின் சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் முன்வைக்கப்படும்; இதில், ஒப்புதல் பெறப்பட்ட பின், நடைமுறைக்கு வரும். தொழிலாளர்கள், தாங்கள் விரும்பும் குறைந்த விலை வீடுகளை, அவர்களே வாங்கலாம்; இதில், இ.பி.எப்.ஓ., தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார்.
யாருக்காக இது?
தங்கள் சம்பளத்தில், வாழ் நாள் முழுவதும் வீடு வாங்க முடியாத, குறைந்த வருவாய் உள்ள தொழிலாளர்களுக்கென இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.தொழிலாளர்களின் வருங்கால, பி.எப்., பணத்தில், எந்த அளவுக்கு கடனாக பெறலாம் என்பது குறித்தும், குறைந்த விலை வீடு என்றால் என்ன என்பது குறித்தும், இன்னும் வரையறை செய்யப்படவில்லை. இது பற்றிய விபரங்கள், சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.

THANEE DISTRICT PG ASSISTANT VACANT LIST 2016:

தேனி மாவட்ட P.G.Vacancies list.
தேனி மாவட்ட P.G.Vacancies list.பொருளியல்
அரசு, மே. நி லைப்பள்ளி  ரெங்கசமுத்திரம்.
உயிரியல்
அரசு மேனிலைப்பள்ளி, தாமரைக்குளம்.
பண்ணைப்புரம்.
 வணிகவியல்
 காமயகவுண்டன் பட்டி.
வேதியியல்
வடுகபட்டி,
இயற்பியல்
பூதிப்புரம்
அல்லிநகரம்
 பெரியகுளம் boys,
 விலங்கியல்
பெரியகுளம் ஆண்கள்.

உத்தமபாளையம்.
சில்லமரத்துப்பட்டி.
கணிதம்
கண்டமனூர்.
புவியியல்
வடுகபட்டி.

MADURAI DISTRICT PG ASSISTANT VACANT LIST 2016:

மதுரை மாவட்டமுதுகலை ஆசிரியர்காலிப்பணியிடங்கள்
TAM
திருமங்கலம் (பெ)
சமயநல்லூர்

ENG
பாலமேடு
பரவை
CHE
கருங்காலகுடி(ஆ)
சோழவந்தான்(பெ)
BIO
பாண்டியராஜபுரம்
ZOO
ம.சத்திரப்பட்டி
திருமங்கலம் (ஆ)
திருவாதவூர்
MAT
திருமங்கலம் (பெ)
அலங்காநல்லூர் (ஆ)

ECO
அம்மாப்பட்டி
சமயநல்லூர்
பாலமேடு
வாடிப்பட்டி (பெ)
GEO
ம.சத்திரப்பட்டி
மேலூர் (ஆ)
HIS
தும்பைப்பட்டி

NAMAKKAL DISTRICT PG ASSISTANT VACANT LIST 2016:

*கோழிக்கால்நத்தம்
*அத்தனூர்ஆங்கிலம்
***********
கந்தம்பாளையம்
நாமக்கல் மகளிர்
(இரண்டு பணியிடம்)
இறைய மங்கலம்
நாமகிரிபேட்டை ஆண்கள்.
கணிதம்
*********
அரியூர் பதுவளவு

இயற்பியல்
************
ஜேடர்பாளையம்
அணியாபுரம்
TNHSPGTA NKL
*****************!
வேதியியல்
*************
இறையமங்கலம்
R.புதுப்பாளையம்
உயிரியல்
***********
பரமத்தி பெண்கள்
வெண்ணந்தூர் பெண்கள்
விலங்கியல்
**************
நாமகிரிபேட்டை ஆண்கள்.
வரலாறு
*********
உலகப்பம்பாளையம்
எளச்சிபாளையம்
எருமைப்பட்டி ஆண்கள்
நாமகிரிபேட்டை ஆண்கள்
பொருளியல்
***************
உடையார்பாளையம்
பரமத்தி ஆண்கள்
வணிகவியல்
**************
ஜேடர்பாளையம்
TNHSPGTA- NAMAKAL

சுதந்திர தினம்.. ---பொதுஅறிவுகட்டுரை,

1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! 

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு.

70-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியேற்றி முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.சுதந்திர போராட்ட வீரர்களை நினைத்துப் பார்க்கும் இந்த வேளையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 11,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகவும், அவர்களின்வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும், குடும்ப ஓய்வூதியம் 5,500 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

LIST OF DISTRICT NO SGT VACANT:

இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலி இல்லாத மாவட்டங்கள் !
*மதுரை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை*விருதுநகர் மாவட்டம், இடைநிலைஆசிரியர் காலிப் பணிஇடம இல்லை
*திருநெல்வேலி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை.
*தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை
*கோவை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை.

TN TET PAPER – II SOCIAL SCIENCE ANSWER KEY (REVISED) - TENTATIVE - VIDIYAL CENTRE -VELLORE

TN TET PAPER – II MATHS & SCIENCE ANSWER KEY (REVISED) - TENTATIVE-VIDIYAL CENTRE -VELLORE

Success Acadamy Coaching centre-keys Modified TNTET Paper I , Paper II (MS) & (SS) Question and Answer

Vidiyal vellore-TRB TET PAPER - I ANSWER KEYS (REVISED) - TENTATIVE