யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/8/16

கூடுதல் ஆசிரியர்களை வடமாவட்டங்களுக்கு மாற்ற முடிவு ,ஆசிரியர்கள் பதற்றம் !

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.
கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள்
மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.

அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.
அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.

அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்து கண்டிப்பான உத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

Manonmaniam Sundaranar University Last date for remitting examination fee of DD&CE COURSES UG/PG/B.ED/ Diploma & Certificate Courses- December 2016

DEE:பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன் ஊதியச்சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தொடக்கக்கல்வி -பள்ளி ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் எவ்வாறு எழுத வேண்டும் என-காஞ்சிபுர மாவட்ட தொடக்கக் அலுவலரின் செயல்முறைகள்

தொடக்கக்கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்சமூகஅறிவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும்பதவி உயர்வு வழங்கப்படும் - பிற பாடங்கள் படித்தால் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க கூடாது - இயக்குனர் செயல்முறைகள் (நாள்: 24/08/2016)


மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.



நாமினி!

"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம்.  வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது  பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.

பென்ஷன்!

பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.

மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது  வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.

இடையில் பணம் எடுத்தல்!

பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும்.    இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின்   திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.

பிஎஃப் கணக்கை முடிப்பது!

பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.

இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)

பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.

அனைத்தும் ஆன்லைன்!

பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

எதற்கு எந்தப் படிவம்?

பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை http://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

புகார் தெரிவிக்க!

பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும். http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx?csession=2b4n9lQYhr1& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.

டிடிஎஸ்!

பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ்  (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில்  உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும்.
http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541

நிரந்தரக் கணக்கு எண்!

பிஎஃப் அமைப்பு UAN(Universal  Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.

இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே  வாங்க முடியும். இந்த எண்ணை http://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.

இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”

#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க

'டயட்' என்ற பெயரில் காலை உணவை தவிர்க்க வேண்டாம்!

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை

Cellphone Doubts Sensors!

PGTRB- TAMIL தேவாரத் திருமுறைகள்

TNPSC GROUP 4, TET எட்டாம் வகுப்பு தமிழ் பகுதி 2

TNPSC GROUP-4 பொதுத்தமிழ் பகுதி-3

TNPSC TET PDG TRB கம்பராமாயணம்

TNPSCGroup-IV பொதுத் தமிழ் - 10

TNPSCகுரூப்_4 பகுதி -5

TRB PG TAMIL திருநாவுக்கரசர்

ஆபத்தான உணவுக் குழாய் கேன்சர்

ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு

உங்களுக்கு என்ன நோய்?