யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/9/16

இனி திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்பு படிக்கலாம்

நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது.
 இது தொடர்பாக நாட்டின் 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி கடந்த வாரம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் கடந்த 2009 முதல் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாகக் கூறியுள்ளது. என்றாலும் இந்த ஆய்வுப் படிப்பு களில் மற்ற முழுநேரப் பல்கலைக் கழகங்கள் கடைபிடிக்கும் விதி முறைகளில் சிலவற்றைப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

உதாரணமாக, இந்த ஆய்வுப் படிப்புகளுக்குத் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்யவேண்டும். இது வன்றி, மாணவர்கள் ஆய்வு செய் யும் பாடங்களை ஒட்டி மூன்று யூனிட் அளவிலாக பாட வகுப்பு களும் அவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். இதில் தேர்வு நடத்தி அதில் வெற்றி பின்னரே ஆய்வு களை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிடெக், எம்டெக் படித்த மாணவர் களுக்கான ஆய்வு மற்றும் தொழில் வகுப்புகள் கொண்ட பாடங்களில் மாணவர் சேர்க்கை கூடாது என்றும் உறுதியாகக் கூறியுள்ளது.
இந்த உத்தரவால், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகளில் அடுத்த ஆண்டு முதல், மொழிப் பாடங்கள் மற்றும் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல், சமூகவியல் உள்ளிட்ட இதர பாடங் களில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களில் பல்வேறு பாடப்பிரிவு களில் பட்டம் மற்றும் பட்டமேற் படிப்புகள் உள்ளன. இதில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாகவும், இதனால் அதில் தவறுகள் நடப்பதாகவும் மத்திய அரசுக்குப் புகார்கள் வந்தன.
அப்போது திறந்தநிலை பல் கலைக்கழகங்களை மத்திய தொலைதூரக் கல்வி கவுன்சில் நிர்வகித்து வந்தது. இந்தப் புகார் களை ஆராய்ந்த கவுன்சில் திறந்தநிலை பல்கலைக்கழகங் களில் ஆய்வுப் படிப்புகளுக்கு 2009-ம் ஆண்டு தடை விதித்தது. எனினும், மத்திய அரசின் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மட்டும் ஆய்வுப் படிப்புகளை நடத்தி வந்தது. 2012-ல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களும் யுஜிசி வழிகாட்டுதலின் கீழ் கொண்டு வரப்பட்ட பின் இது முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்களின் கல்விச் சட்டப்படியே தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருவதாகவும், இதனால் முன்புபோல் ஆய்வுப் படிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தற்போது ஏற்கப்பட்டு ஆய்வுப் படிப்புகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வை எவ்வாறு நடத்திட வேண்டும் ?

ஆழ்வார்கள்

அஷ்டமி, நவமி என்றால் என்ன?

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை

அர்த்த சாஸ்திரம்

Today useful news TET TNPSC

TNPSC STUDY MATERIAL

How to Improve Fath

Block list SMS

200 வருடத்துக்கு எந்த தேதிக்கும் நீங்களே எளிமையாக கிழமை காணலாம் தேதி எண்ணிக்கை

பொது அறிவு

தமிழக அரசு - விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அறிந்து கொள்ள...



பயனாளி விவரம் அறிய:-http://www.svnimaging.org/cooperative
தள்ளுபடி தொடர்பான அரசு ஆணைகள் :-http://cms.tn.gov.in/sit…/default/files/…/cfcp_e_59_2016.pdf http://cms.tn.gov.in/sit…/default/files/…/cfcp_e_50_2016.pdf

'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கு 6ம் தேதி முதல்விண்ணப்பம்

டிப்ளமோ நர்சிங்' என்ற, இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. 
இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.அரசு மருத்துவ கல்லுாரிகள், நர்சிங் பயிற்சி பள்ளிகள்உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், வரும், 15ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 16ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை,www.tnhealth.orgஎன்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

CPS - திட்டத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு ..ந.க.எண் .3/2016./அந2/37356/நாள் .10.08.2016..

ஒரு நாள் ஆசிரியராக பிரணாப்!

ஆசிரியர் தினத்தன்று (செப்.5) குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளியில் ஒரு நாள் ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாடம் நடத்த உள்ளதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
கடந்த ஆண்டைப் போல், இந்த ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அந்த வேண்டுகோளை ஏற்று, அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்த சம்மதம் தெரிவித்தார். அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு "இந்திய அரசியலின் பரணாம வளர்ச்சி' என்ற தலைப்பில் அவர் பாடம் நடத்த உள்ளார் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்தார். மாணவர்களுக்கு பாடம் நடத்த ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Annamalai University Results DDE 2016 published

காலாண்டு தேர்வை எவ்வாறு நடத்திட வேண்டும் ?

ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும்: ஜெயலலிதா ஆசிரியர் தின வாழ்த்து!

சென்னை:ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும், அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது’’ என உரைத்து, அகத்தில் உள்ள வறுமையைப் போக்கும் உன்னதமான ஆசிரியர் பணியைத் தொடங்கி,இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, தமது அறிவுத் திறனால், சிந்தனை வளத்தால் உலகம் போற்றும் தத்துவ மேதையாக விளங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‘‘கல்வி சிறந்த தமிழ்நாடு’’ என்ற பாரதியாரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் தரமான கல்வி கிடைத்திட வேண்டுமென்ற நோக்கில் பள்ளிக் குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்திடும் அதே வேளையில் ஆசிரியர் நலன் காக்கும் வகையிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

74,316 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது; ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் 6 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்பட்டது; மதுரை மற்றும் கோயம்புத்தூரில் ஆசிரியர் இல்லங்கள் அமைத்திட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம்; ஆசிரியர் இடமாற்றலில் வெளிப்படையான கலந்தாய்வு என ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை,விடாமுயற்சி, பொது அறிவு ஆகியவற்றை போதிக்கும் ஆசிரியப்பெருமக்களின் பணியினை பாராட்டி ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

சிறந்த கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அழிவில்லா கல்வி செல்வத்தை தேசத்தின் வருங்கால தூண்களாம் மாணவச் செல்வங்களுக்கு புகட்டி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் அரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை ஆசிரியர் தின நல் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

4/9/16

முதலில் Cps ல் சேர்ந்தவர்களுக்கு Cps Number Allotment Letter தந்திருக்கமாட்டார்கள். அவர்கள் தற்போது Cps கணக்கில் login செய்து   Allotment letter  என்பதை click செய்து download செய்துகொள்ளுங்கள். உங்கள் கணக்குத்தாளையும் download செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்..
இதனை கிளிக் செய்து login செய்யுங்கள்.
 http://cps.tn.gov.in/public/