அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு, வகுப்புகள் முடங்கி உள்ளன. தமிழகத்தில், 80 அரசு கல்லுாரிகளும், 162 அரசு உதவிபெறும் கல்லுாரிகளும், 1,178 சுயநிதி கல்லுாரிகளும் உள்ளன. இவற்றில், இரண்டு லட்சம் பேர் படிக்கின்றனர்.
அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள், இரு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன.அரசியல்வாதிகள், உயரதிகாரிகளின் தலையீடுகளால், நேர்மையாக இந்த இடங்களை நிரப்ப முடியவில்லை என, கல்லுாரிகள் தரப்பில் கூறப்படுகின்றன. இதனால், பல கல்லுாரிகளில், பாடம் நடத்த ஆளின்றி வகுப்புகள் முடங்கி, மாணவர்கள் நேரத்தை வீணடிக்கும் நிலை உள்ளது. எனவே, தமிழக உயர் கல்வித் துறை தாமதிக்காமல், பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, 'நெட், செட்' சங்க தலைவர் தங்கமுனியாண்டி கூறியதாவது: ஒவ்வொரு கல்லுாரியும், அந்தந்த மாவட்டங்களில் அறிவிப்பு செய்து, அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரை, பேராசிரியர் பதவியில் நியமிக்க வேண்டும்.பல லட்சம் பேராசிரியர்கள், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர்; அவர்களின் பதிவு மூப்பு அடிப்படையில், பேராசிரியர்களை நேரடி நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.