யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/9/16

சத்துணவுக்கான பயறு வகைகள் தரமானதாக வழங்க கோரிக்கை

தரமான பயறு வகைகளை, வாணிபக் கழகம் சப்ளை செய்ய வேண்டும்' என, சத்துணவு மைய ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில், மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள், வேக வைத்த கருப்பு கொண்டை கடலை அல்லது பச்சை பயறு வழங்கப்படுகிறது.
இதற்காக, ஏழு கோடி ரூபாய்க்கு, 700 டன் கருப்பு கொண்டை கடலை; மூன்று கோடி ரூபாய்க்கு, 400 டன் பச்சை பயறு வாங்க, வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது. அதை, தரமானதாக வாங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, சத்துணவு மைய ஊழியர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க, வேக வைத்த பயறு வகைகளை வழங்க வேண்டும்; இதற்காக, அரசு வழங்கும் பயறு வகைகளின் தரம் மோசமாக உள்ளது. வாணிபக் கழக அதிகாரிகளிடம், பலமுறை தெரிவித்தும், தீர்வு கிடைக்கவில்லை. இந்த முறையாவது, தரமான பயறு வாங்கி சப்ளை செய்ய, புதிதாக பொறுப்பேற்றுள்ள, வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் கோபால், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எம்.பி.பி.எஸ்., 'அட்மிஷன்:' யு.ஜி.சி., எச்சரிக்கை

அனைத்து நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், 'நீட்' மதிப்பெண்படியே, மாணவர்களை சேர்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள எச்சரிக்கை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, 'நீட்' எனும் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு உள்ளது; இதில் எடுத்த மதிப்பெண்படி, மாணவர் சேர்க்கை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், யு.ஜி.சி., யின் விதிகளை பின்பற்ற வேண்டும். இந்த பல்கலைகள், அந்தந்த மாநில பொது கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். பொது கவுன்சிலிங் நடத்தப்படாவிட்டால், 'நீட்' தேர்வு அடிப்படை யில் தான், மாணவர்களை சேர்க்க வேண்டும்; அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 'அட்மிஷன்' மறுக்கப்பட்டால், பல்கலை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பி.எட்., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்

சென்னை: பி.எட்., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை, செப்., 16ல் முடிக்க, தனியார் கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டது.

'சேர்க்கையை திடீரென நிறுத்துவதால், பல ஆயிரம் இடங்கள் காலியாகும்' என, கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. உயர் கல்வி அதிகாரி கள் அவசர ஆலோசனை நடத்தி, தனியார் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, வரும், 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்துள்ளனர்.'செப்., 30க்கு பின், மாணவர்களை சேர்த்தால், அதற்கு அங்கீகாரம் கிடைக்காது' என, பல்கலை பதிவாளர் தெரிவித்து உள்ளார்.

அரசு உதவி பள்ளிகளில் 3,000 உபரி ஆசிரியர்கள்

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள, 45 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 31 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன; 6,500 பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்; மற்றவை தனியார் பள்ளிகள். இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 11.50 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, 36 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், மத்திய அரசின் சட்டப்படி, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் வீதம், 33 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக பணியாற்றுகின்றனர். அதிலும், குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும், இத்தகையை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். அதேநேரத்தில், பல மாவட்டங்களில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.
எனவே, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள், இந்த பள்ளிகளை ஆய்வு செய்து, கூடுதல் ஆசிரியர்களை, தேவைப்படும் மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்!

மாநில கல்வி இயக்குனரின்,&'ரகசிய கண்காணிப்பு குழு&' அமைக்கும் அறிவிப்பால், ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சமவெளி பிரதேசங்களை ஒப்பிடுகையில், நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் செயல்படும் பல ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், சொற்ப அளவிலான ஆசிரியர்களே உள்ளனர்.


ஓபி அடிக்கும் ஆசிரியர்கள்

பள்ளிகள் மற்றும் மாணவர்களின் மீது தனி அக்கறை, ஆர்வம், நேரம் கருதாமல் பணியாற்றுவது போன்ற சேவை மனப்பான்மை கொண்ட தலைமையாசிரியர், ஆசிரியர்களால் மட்டுமே, சில ஊராட்சிப் பள்ளிகள் &'பெயர் சொல்லும்&' பள்ளிகளாக உள்ளன. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் கணக்கு காண்பிக்கவே, ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்; வெறுமனே &'ஓபி&' அடித்தும் செல்கின்றனர்.ஊராட்சி ஒன்றிய, அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரம், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே செய்து வரும் நிலையில், அவர்களதுசெயல்பாடுகளிலும் திருப்தியில்லை என்ற புகார், அரசின் கவனத்துக்கு சென்றிருக்கிறது.

வருகிறது கண்காணிப்பு குழு

இதன் விளைவாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள், நர்சரி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுனர்களை உள்ளடக்கி குழு அமைக்க, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஒரு குழுவில், இரு உறுப்பினர்கள் உள்ளவாறு பிரித்துக் கொண்டு, முன்னறிவிப்பின்றி, பள்ளிகளை பார்வையிட வேண்டும். தொடர்ந்து புகாருக்கு உள்ளாகும் பள்ளிகள், கல்வித் தரத்தில்பின்தங்கிய பள்ளிகளை கண்காணிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பணிகள் வரையறை

ஆசிரியர்கள், குறித்த நேரத்திற்கு வந்து, பணி நேரம் முழுக்க பள்ளிகளில் உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வாசிப்பு, எழுதும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து சோதித்தறிய வேண்டும். குறிப்பாக, 6, 8 படிக்கும் மாணவ, மாணவியரின் தமிழ், ஆங்கில, கணக்குப் புலமையை பரிசோதிக்க வேண்டும்.

பள்ளி நுாலக செயல்பாடுகளை கண்காணித்து, மாணவர்களை, துணைப்பாட புத்தகங்களை வாசிக்கச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுப்புத்தகம், காலனி, புத்தகப்பை, கிரையான், கலர் பென்சில், கணக்கு உபகரணப் பெட்டி,கம்பளிச் சட்டை, பஸ் பாஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், ஆங்கில உச்சரிப்பு சார்ந்த சிடிக்கள், லேப்டாப் மற்றும் கணக்கு உபகரணப் பெட்டி போன்றவை, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

பள்ளியில் உள்ள கழிப்பறை, தண்ணீர் வசதி; மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பராமரிப்பு உள்ளதா என, உறுதி செய்ய வேண்டும் என்பன, போன்ற பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.ஆய்வில் குறை தென்பட்டால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின்மூலம், எஸ்.எஸ்.ஏ., முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம், துவக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் உயருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு !

 மூன்றாவது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட நான்கு நகரங்கள் தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளன.
.
பிரதமர் மோடி நாடு முழுவதும் ‘100 ஸ்மார்ட் சிட்டி’க்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். நாடு முழுவதுமிருந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் உலகத்தரத்திற்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஏற்கனவே இரண்டு கட்டமாக நாடு முழுவதுமிருந்து 33 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 3-வது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலை நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டார்.
இந்த பட்டியல் குறித்து மந்திரி வெங்கையா நாயுடு கூறுகையில் ''3-வது ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு இந்தியா முழுவதுமிருந்து 63 நகரங்கள் போட்டியிட்டதில் 27 நகரங்கள் தேர்வாகியுள்ளன.
தமிழகத்திலிருந்து வேலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 27 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.66,833 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது'' என்றார்.
தானே, நாசிக், நாக்பூர், அவுரங்காபாத், ஆக்ரா, அஜ்மீர், அமிர்தசரஸ், மங்களூர், வதோதரா, வாரணாசி, திருப்பதி, மங்களூர், அமிர்தசரஸ் நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன.

50 நாட்களில் 6 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' :தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை

தேனி மாவட்டதொடக்க கல்வி அலுவலர் மொக்கத்துரை, தான் பொறுப்பேற்ற, 50 நாட்களில் புகாரில் சிக்கிய, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளார். மேலும் பலருக்கு 'மெமோ' வழங்கியுள்ள இவரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக மொக்கத்துரை ஆக., 2ல் பொறுப்பேற்றார். பள்ளிகளுக்கு திடீர்,'விசிட்' செய்வது; ஆசிரியர்கள் குறித்து வரும் புகார்கள் மீது விசாரித்து, 'மெமோ' கொடுப்பது; பாலியல் புகாருக்கு உட்பட்டவர்களை உடனே, 'சஸ்பெண்ட்' செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

உரிய நேரத்தில் பள்ளிக்கு வராத மேலப்பட்டி ஆசிரியர் ராஜேந்திரன், ஆண்டிபட்டி குமரகுருபரன், கம்பத்தை சேர்ந்த ராஜன்; பாலியல் புகாரில், ஜி.கல்லுப்பட்டி லாசர், கடமலைக்குண்டு கோகுல்பாண்டியன் மற்றும் ரவீந்திரன் என, ஆறு ஆசிரியர்கள் இவரால்,'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இது தவிர ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக, 13 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' அனுப்பி உள்ளார்.

அங்கீகாரம் பெறாத 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலர் ஆஜராக உத்தரவு.

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக "மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் ஏ.நாராயணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் உள்ள 746 பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக் கூட கடைபிடிக்காத நிலையில், 2004-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தாற்காலிக அங்கீகாரத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்கி வருகிறது.இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மே 31-ஆம் தேதி வரை ஒரே ஒரு முறை என்ற அடிப்படையில் தாற்காலிக அங்கீகாரம்வழங்கப்பட்டுள்ளது என்றும், இனி நிலம் உள்ளிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என்றும் தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.இந்த நிலையில், தகுதிகளை பூர்த்தி செய்யாமல் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரத்தை நீட்டிக்காமல் மூடுவதற்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பள்ளிகள் குறித்து மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், மீண்டும் அதே அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித் துறை இணைச் செயலர் கே.ரவிசந்திரன் தாக்கல் செய்த பதில் மனுவில், "சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றதால், இந்த விவகாரத்தில் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் மீது இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. இறுதி முடிவு எடுக்க மேலும் 2 மாதம் கால அவகாசம் வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

பின்னர்இரு தரப்பு வாதங்களை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-வழக்கில் இதுவரை ஒரு முடிவு எட்டப்படாமல் தொடர்கிறது.அரசு சார்பில் கோரியதால், அக்டோபர் 31-ஆம் தேதி வரை இறுதி கால அவகாசம் அளிக்கப்படுகிறது.அடுத்த விசாரணையின்போது, எடுக்கப்பட்ட நடவடிக்கையை உரிய ஆவணங்களுடன் பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றனர்.இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 7-க்கு ஒத்தி வைத்திவைக்கப்பட்டது.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2,500 பேராசிரியர் இடங்கள் காலி.

அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு, வகுப்புகள் முடங்கி உள்ளன. தமிழகத்தில், 80 அரசு கல்லுாரிகளும், 162 அரசு உதவிபெறும் கல்லுாரிகளும், 1,178 சுயநிதி கல்லுாரிகளும் உள்ளன. இவற்றில், இரண்டு லட்சம் பேர் படிக்கின்றனர். 
அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள், இரு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன.அரசியல்வாதிகள், உயரதிகாரிகளின் தலையீடுகளால், நேர்மையாக இந்த இடங்களை நிரப்ப முடியவில்லை என, கல்லுாரிகள் தரப்பில் கூறப்படுகின்றன. இதனால், பல கல்லுாரிகளில், பாடம் நடத்த ஆளின்றி வகுப்புகள் முடங்கி, மாணவர்கள் நேரத்தை வீணடிக்கும் நிலை உள்ளது. எனவே, தமிழக உயர் கல்வித் துறை தாமதிக்காமல், பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, 'நெட், செட்' சங்க தலைவர் தங்கமுனியாண்டி கூறியதாவது: ஒவ்வொரு கல்லுாரியும், அந்தந்த மாவட்டங்களில் அறிவிப்பு செய்து, அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரை, பேராசிரியர் பதவியில் நியமிக்க வேண்டும்.பல லட்சம் பேராசிரியர்கள், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர்; அவர்களின் பதிவு மூப்பு அடிப்படையில், பேராசிரியர்களை நேரடி நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் பள்ளி துவங்க தடை : அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனு.

அனைத்து அரசு பள்ளிகளிலும், 'வை - பை' வசதியுடன் கணினி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனிடம், தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்சங்கத்தின் சார்பில், அதன் தலைவர், சாமி.சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், நேற்று அமைச்சரை சந்தித்து, மனு அளித்தனர்.மனு விபரம்:

 தமிழக மாணவர்கள், உயர்கல்வியில் அனைத்து வாய்ப்புகளையும் பெற, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், சி.பி.எஸ்.இ.,க்கு இணையான பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும். அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளிலும், வகுப்புகள் முறையாக நடக்கிறதா என்பதை, தனி அதிகாரிகள்நியமித்து, கண்காணிக்க வேண்டும். அரசு நலத்திட்ட பணிகளில், ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிடுவதால், கற்பித்தல் பணிகள் பாதிக்கின்றன. எனவே, 10 பள்ளிகளுக்கு, ஒரு தொடர்பு அலுவலர் நியமித்து, நலத் திட்ட பணிகளை ஒப்படைக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 4,250 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி வசதி இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, வை - பை வசதியுடன் கூடிய கணினி மற்றும் இணையதள வகுப்புகள் துவங்க வேண்டும். அரசு பள்ளிகளை சிறப்பாக செயல்பட வைப்பதுடன், வருங்காலத்தில் புதிதாகதனியார் பள்ளிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறுமனுவில் கூறப்பட்டுள்ளது.

7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!

7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும்.இது நாம் இந்த கிராஜுவிட்டி மூலம் பெற இருக்கும் தொகையை எங்கு முதலீடு செய்து என்பதைப் பார்க்கும் முன்பு கிராஜுவிட்டி என்றால் என்ன? என்று பார்ப்போம்.
கிராஜுவிட்டி என்றால் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் அந்நிறுவனத்தால் பணி ஓய்வின் போது அளிப்பதாகும். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஏதேனும் காரணங்களுக்காக பணி ஓய்வு பெறலாம். அப்போது அந்த ஊழியர் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலாகப் பணி புரிந்திருந்தால் வருமான வரி சட்டத்தின் படி நிறுவனம் கிராஜுவிட்டி அளிக்க வேண்டும்.அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது ஊழியர்களுக்கு அவரின் பணியை பாராட்டும் விதமாகஒரு ஒட்டுமொத்த தொகையை கிராஜூவிட்டியாக வழங்கப்படும்.இதுவரை பணி செய்த மொத்த ஆண்டிற்கும் அரை மாத ஊதியம் விதம் எனக் குறைந்தபட்சம் இரண்டரை மாத ஊதியம் முதல் அதிகபட்சமாக பதினாறரை மாத ஊதியம் கிராஜுவிட்டியாக வழங்கப்படும்.

இந்த கிராஜுவிட்டி தொகையின் அதிகபட்ச வரம்பாக ரூ.10லட்சம் என்று இருந்தது. இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி 20 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பணியில் சேர்ந்த ஓர் ஆண்டில் காலமான ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச பணிக்காலம் கணக்கிடப்படாமல் இரண்டு மாத சம்பளமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டிற்குள் இறந்தால் 6 மாத சம்பளமும், 5 முதல் 20 ஆண்டு பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத சம்பளமும், 20 வருடத்திற்கும் மேலாகப் பணியில் இருந்த ஊழியர்களுக்கு ஆண்டுக்கு அரை மாத சம்பளமும் கணக்கிடப்பட்டு கிராஜுவிட்டி வழங்க வேண்டும்.இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ள நிலையில் இந்தத் தொகையை எப்படி முதலீடு செய்து தொடர்ந்து வருமானம் பெறலாம் என்பதை நாம் இங்குப் பார்ப்போம்

B.Ed. படிப்பு: உயர்த்தப்பட்ட கட்டணம் – தவிக்கும் பெற்றோர்!

தனியார் கல்லூரிகளுக்கான பி.எட். படிப்புக்குப் புதிய கல்விக் கட்டணம் மிக அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதிய கட்டண நிர்ணயத்தால் மாணவர்கள் கடந்த ஆண்டு செலுத்தியதைவிட கூடுதல்கட்டணம் செலுத்த வேண்டும்.
பி.எட். கல்லூரிகளுக்கு, கடந்த 2014 - 15 வரை மூன்று கல்வி ஆண்டுகளுக்கும் நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு சார்பில் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.ஆனால், இப்போது இந்தக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பி.எட். படிப்புக்கு, ரூபாய் 37,500 ஆகவும், பி.ஏ. - பி.எட். நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கு ரூபாய் 22,500 ஆகவும், பி.எஸ்சி. - பி.எட். நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கு ரூபாய் 25,000 ஆகவும் மற்றும் எம்.எட். படிப்புக்கு ரூபாய் 38,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் ஓர் ஆண்டுகான கல்விக்கட்டணம். மேலும், கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன், பி.எட். படிப்புக்கு ரூபாய் 41,500 ஆக கல்விக் கட்டணம் இருந்தது. அப்போது பி.எட். படிப்பு ஓராண்டாக இருந்தது. எனவே, அந்தக் கட்டணத்தில் படிப்பை முடித்து விடலாம். ஆனால், இப்போது பி.எட். படிப்பு, இரண்டாண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது.இதனால், 2015 – 16ஆம் ஆண்டு பி.எட். படிப்பில் சேர்ந்தவர்கள் முதலாம் ஆண்டு ரூபாய் 41,500 செலுத்தி உள்ளனர். இந்த ஆண்டு, ரூபாய் 37,500 செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டு படிப்புக்கு மொத்தமாக ரூபாய் 79,000 செலவிடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு பி.எட். படிப்பில் சேர்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, ரூபாய் 75,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, விடுதிக் கட்டணம் தனி என்பதால்ஏழை மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து, அரசும் உயர் கல்வித்துறையும் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா?

வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, ஊரக உள்ளாட்சி தேர்தலை, இரு கட்டங்களாக நடத்த வேண்டும்' என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்பு கள் செயல்படுகின்றன.
ஊரக உள்ளாட்சியில், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் நான்கு ஓட்டுகளை அளித்து, பிரதிநிதிகளை தேர்வுசெய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சிகளில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது. நகர்ப்புற வாக்காளர்கள், ஒரு ஓட்டு போட்டால் போதும் என்பதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்,ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படும். மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டுமே, கட்சி ரீதியான தேர்தல் நடக்கும். ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, சுயேச்சை சின்னங்கள் தான். நான்கு ஓட்டுகளை பதிவு செய்யும் போது, வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க, ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை ஒரு நாளும், ஒன்றிய கவுன்சிலர், மாவட்டகவுன்சிலர் பதவிகளுக் கான தேர்தலை மற்றொரு நாளும் நடத்த வேண்டும் என, சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, தேர்தலில் போட்டியிட உள்ள சுயேச்சை ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்த, 183 கோடி ரூபாயை அரசுஒதுக்கி உள்ளது. மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கான நேரடி தேர்தல் ரத்தால், அரசு ஒதுக்கிய நிதி மிச்சமாகும். எஞ்சிய நிதியை பயன்படுத்தி, ஊரக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த வேண்டும்; அப்படி செய்தால், சின்னங்கள் தொடர்பான குழப்பம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்

’பார்கோடு’ முறை; மாணவர்கள் அதிர்ச்சி!

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பார்கோடு விடைத்தாள் வழங்குவது குறித்த ஆலோசனையை தேர்வுத்துறை துவக்கி உள்ளது.பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வை, ஒவ்வொரு ஆண்டும், 18 லட்சம் மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். 
ஒரு மதிப்பெண் வினாக்கள் திருத்தும் போது, தவறுகள் ஏற்படுவதாக மாணவர், பெற்றோர் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால், பிளஸ் 2 பொதுத்தேர்வு கணிணி அறிவியல் வினாத்தாளின் ஒரு மதிப்பெண் வினாவுக்கு பார்கேடு சீட் வழங்கப்பட்டது.தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் பார்கோடில் விடைகளை எழுத வேண்டும். இதனால், தவறாக எழுதினாலும், திருத்த முடியாத சூழல்ஏற்பட்டது.

இம்முறையில், விடைத்தாளை ஆசிரியர் திருத்த தேவையில்லை என்பதால், நேரம் விரயமாவது தவிர்க்கப்படுகிறது. இதனால், மற்றபாடங்களுக்கும், ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு, பார்கோடு முறை கொண்டு வருவது குறித்தான, ஆலோசனையை தேர்வுத்துறை துவக்கியுள்ளது.நடப்பு கல்வியாண்டு, பொதுத் தேர்வில், இந்த நடைமுறை அமலுக்குவர உள்ளது. இதனால், பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்!

மாநில கல்வி இயக்குனரின்,&'ரகசிய கண்காணிப்பு குழு&' அமைக்கும் அறிவிப்பால், ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சமவெளி பிரதேசங்களை ஒப்பிடுகையில், நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் செயல்படும் பல ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், சொற்ப அளவிலான ஆசிரியர்களே உள்ளனர்.
ஓபி அடிக்கும் ஆசிரியர்கள்

பள்ளிகள் மற்றும் மாணவர்களின் மீது தனி அக்கறை, ஆர்வம், நேரம் கருதாமல் பணியாற்றுவது போன்ற சேவை மனப்பான்மை கொண்ட தலைமையாசிரியர், ஆசிரியர்களால் மட்டுமே, சில ஊராட்சிப் பள்ளிகள் &'பெயர் சொல்லும்&' பள்ளிகளாக உள்ளன. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் கணக்கு காண்பிக்கவே, ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்; வெறுமனே &'ஓபி&' அடித்தும் செல்கின்றனர்.ஊராட்சி ஒன்றிய, அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரம், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே செய்து வரும் நிலையில், அவர்களதுசெயல்பாடுகளிலும் திருப்தியில்லை என்ற புகார், அரசின் கவனத்துக்கு சென்றிருக்கிறது.

வருகிறது கண்காணிப்பு குழு

இதன் விளைவாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள், நர்சரி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுனர்களை உள்ளடக்கி குழு அமைக்க, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஒரு குழுவில், இரு உறுப்பினர்கள் உள்ளவாறு பிரித்துக் கொண்டு, முன்னறிவிப்பின்றி, பள்ளிகளை பார்வையிட வேண்டும். தொடர்ந்து புகாருக்கு உள்ளாகும் பள்ளிகள், கல்வித் தரத்தில்பின்தங்கிய பள்ளிகளை கண்காணிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பணிகள் வரையறை

ஆசிரியர்கள், குறித்த நேரத்திற்கு வந்து, பணி நேரம் முழுக்க பள்ளிகளில் உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வாசிப்பு, எழுதும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து சோதித்தறிய வேண்டும். குறிப்பாக, 6, 8 படிக்கும் மாணவ, மாணவியரின் தமிழ், ஆங்கில, கணக்குப் புலமையை பரிசோதிக்க வேண்டும்.பள்ளி நுாலக செயல்பாடுகளை கண்காணித்து, மாணவர்களை, துணைப்பாட புத்தகங்களை வாசிக்கச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுப்புத்தகம், காலனி, புத்தகப்பை, கிரையான், கலர் பென்சில், கணக்கு உபகரணப் பெட்டி,கம்பளிச் சட்டை, பஸ் பாஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், ஆங்கில உச்சரிப்பு சார்ந்த சிடிக்கள், லேப்டாப் மற்றும் கணக்கு உபகரணப் பெட்டி போன்றவை, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.பள்ளியில் உள்ள கழிப்பறை, தண்ணீர் வசதி; மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பராமரிப்பு உள்ளதா என, உறுதி செய்ய வேண்டும் என்பன, போன்ற பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.ஆய்வில் குறை தென்பட்டால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின்மூலம், எஸ்.எஸ்.ஏ., முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம், துவக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் உயருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விரிவுரையாளர் நியமனம் - மறுதேர்வு நடத்த முடிவு?

விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்' வலைதளத்தில் வெளியானதால், மறுதேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், ஆசிரியர் பயிற்சி வழங்க, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்; இதற்கான எழுத்துத்தேர்வு, 17ல் நடந்தது.
மதுரையில், ஒரு தேர்வு மையத்தில், ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு தேர்வு எழுதிய, தேனியைச் சேர்ந்த பெண், வினாத்தாளை படம் பிடித்து, 'வாட்ஸ் ஆப் குரூப்'பில் அனுப்பியுள்ளார்; தேர்வு கண்காணிப்பாளரால், அவர் பிடிக்கப்பட்டார்.இதையடுத்து,ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர் குப்புசாமி ஆகியோர், மற்ற தேர்வு மையங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளதா என, விசாரித்து வருகின்றனர்.மற்ற இடங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருந்தால், தேர்வை ரத்து செய்து விட்டு, மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.

டிசம்பர்-2016 துறை தேர்வுகள் அறிவிப்பு வெளியீடு : ஒரு நினைவூட்டல்.

பட்டதாாி மற்றும் முதுகலை பட்டதாாி ஆசிரியர்கள்

1.Account test for Executive officer(or)
2.Account test for Subordinate off part-Iமற்றும்
3.Tamil Nadu Office Manual


இடைநிலை ஆசிாியா்கள் மேற்கண்டவற்றுடன்

4) Deputy Ins Part-1
5) Deputy Ins Part-II
6) Educational Statistics
ஆகிய தேர்வுகள் எழுதவேண்டும்.

2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம்  மூலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண் 447

அறிவிக்கை நாள் : 01.09.2016

விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 நேரம் 5.45 பி.ப. வரை

தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை.

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 7

1. காப்பி, தேநீரில் உள்ள ஊக்கம் தரும் பொருள் - காபின்
2. இதயத்திலிருந்து ரத்தத்தை வெளியே கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் - தமனிகள்
3. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக தேவைப்படுவது - இரும்பு
4. மாலுமிகளின் திசைக்காட்டியில் பயன்படுவது - காந்தமாக்கப்பட்ட இரும்பு

5. மிகப் பிரகாசமான கிரகம் - சுக்கிரன் (Venus)
6. நிக்கோடின் என்ற விஷப்பொருள் எதில் உள்ளது - புகையிலை
7. ஹீலியம் - உலோகமற்றப் பொருள்
8. கிட்டப்பார்வையை நிவர்த்தி செய்ய - குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது.
9. கண்ணுக்குள் செல்லும் ஒளி அளவை ஒழுங்குப்படுத்துவது - ஐரிஸ்
10. இடம் பெயர்தலை (Law of Motion) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார் - மூன்று விதிகளில்
11. ஸ்ட்ரெப்டோமைசினைக் கண்டுபிடித்தவர் - வாக்ஸ்மான்
12. திட கார்பன்-டை-ஆக்சைடு என்பது - உலர்ந்த ஐஸ்
13. பைசென்டினெரி என்பது - 200 ஆண்டு
14. பாம்பிற்கு காணப்படாதது - புற உறுப்புகள்
15. ஒரு குரோஸ் என்பது - 144 எண்ணிக்கை
16. திமிங்கலம் ஒரு - பாலூட்டி
17. டாலமைட் - மக்னீசியத்தின்  தாதுப்பொருள்
18. ஒலியைப் பரப்ப டேப்ரிகார்டரில் பயன்படுவது - மாக்னெடிக் நாடா
19. இரும்பு ஆணி எதில் மிதக்கிறது - பாதரசம்
20. கொய்னா எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது - சின்கோனா
21. காற்றில் தீப்பற்றக் கூடிய மூலகப் பொருள் - வெண்பாஸ்பரம்
22. எந்தச் செடி உணவை தண்டில் சேமிக்கிறது - இஞ்சி
23. வண்ணப்படுத்த பயன்படும் அமிலம் - அசிடிக் அமிலம்
24. பட்டுத் துணி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - ககூன்
25. இரு ஐஸ் கட்டிகள் ஒன்றோடொன்று அழுத்தப்படும் போது ஐஸில் - ஐஸின் உருகுநிலை அழுத்தம் மாறும்போது குறைகிறது.
26. வீட்டில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் சக்தியை எப்படி கண்க்கிடப்படுதல் வேண்டும் - கிலோவாட் மணிக்கு
27. வெங்காயத்தில் உண்ணக்கூடிய பகுதி - வேர்
28. வைட்டமின் கண்டுபிடித்தவர் - பங்ஸ் (Funks)
29. உடலில் உஷ்ணம் காண கிளினிகல் தர்மா மீட்டரில் கண்க்கிடுவது - சென்டிகிரேட்
30. காயம் நீல நிறமாக இருக்க காரணம் - காற்றின் மூலக்கூறுகள் சூரிய ஒளியைப் பரப்புகின்றன.
31. நம் கண்கள் - நிறங்களுக்கு மிகவும் நுட்பமாக உணவூட்டத் தக்கது. - சிகப்பு
32. ஒலியின் வேகம் மிக நீளமுடையது - காற்றில்
33. ஒரு லிட்டர் என்பது - 1000 மி.லி
34. ஹார்டுவேர் என்பது - கம்ப்யூட்டருடன் தொடர்புடையது
35. B.C.G எதனைத் தடுக்க உதவுகிறது - காசநோய்
36. மணலின் ரசாயனப் பெயர் - சிலிகன்-டை-ஆக்ஸைட்
37. சோனார் - நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டறிய பயன்படுகிறது.
38. உடல் வளர்ச்சிக்கு அதிக சக்தியை தருவது - புரதம்
39. பூச்சிகளைத் தின்னும் தாவரம் - ட்ரோசரா
40. பாலூட்டும் பிராணி எது - வெளவால்
41. இசைகள் பசுமையாக இருக்க காரணம் - பச்சையம்
42. வயிற்றில் சுரக்கும் இரப்பை நீரில் அடங்கியது - அமிலம்
43. வளிமண்டல தோற்றத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் அறிவியலின் பிரிவு - வானிலை ஆராய்ச்சி
44. நரம்பியலைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் அறிவியல் பிரிவு - நியூராலஜி
45. மிக எளிதில் பற்றாத வாயு - நைட்ரஜன்
46. நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள் - குரோமியம்
47. மந்த வாயுக்களை கண்டுபிடித்தவர் - ராம்சே
48. மனித உடலின் சராசரி வெப்பநிலை - 36.9 சி
49. உடல் வெப்பநிலை எதனால் சரி செய்யப்படுகிறது - மூளையின் ஒரு பகுதி.
50. வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர் - நோபல்

நீங்களும் வங்கி அதிகாரி ஆகலாம், கிராம வங்கிகளில் 16,615 காலிப் பணியிடங்கள்

தற்போது அரசு வங்கிகள், எழுத்தர், அதிகாரி பணியிடங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களைப் போட்டிபோட்டுக்கொண்டு தேர்வுசெய்து வருகின்றன. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நீங்கலாக மற்ற அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் தேவைப்படும் பணியாளர்களும் அலுவலர்களும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection-IBPS) என்ற தேர்வாணையம் நடத்துகின்ற போட்டித் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதேபோல், நாடு முழுவதும் இயங்கி வரும் மண்டலக் கிராம வங்கிகளுக்கான (Regional Rural Banks) பணியாளர்களும் ஐ.பி.பி.எஸ். தேர்வு மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுச்சேரியில் புதுவை பாரதியார் கிராம வங்கி ஆகியவைகிராம வங்கிகளாகச் செயல்படுகின்றன. கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்டவை இவை. இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் அலுவலக உதவியாளர், அதிகாரி, சிறப்பு அதிகாரி நிலைகளில் 16,615 காலிப்பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி

இதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு (அதிகாரி பணிக்கு மட்டும் கூடுதலாக நேர்முகத்தேர்வு) என இரு தேர்வுகள்இடம்பெற்றிருக்கும். அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். அடிப்படைக் கணினி அறிவு இருப்பது விரும்பத்தக்க தகுதி ஆகும். வயது 18 முதல் 28-க்குள்இருக்க வேண்டும். அதிகாரி நிலையிலான பணிகளில் பொதுவான பதவிகளைப் பொருத்தவரையில், பட்டப் படிப்புதான் கல்வித் தகுதி என்ற போதிலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம்.தொழில்நுட்பப் பதவிகளான சிறப்பு அதிகாரி பணிகளுக்குப் பணியின் தன்மைக்கேற்பக் கல்வித் தகுதி மாறுபடும். வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். ஒரு சில பணிகளுக்கு வயது வரம்பு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

என்ன செய்யலாம்?

உரிய கல்வித்தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் ஐ.பி.பி.எஸ். இணையதளத்தைப் (www.ibps.in) பயன்படுத்தி செப்டம்பர் 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியிலான முதல்நிலைத் தேர்வு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை அதிகாரி நிலையிலான தேர்வுக்கு அக்டோபர் மாதத்திலும், அலுவலக உதவியாளர் தேர்வுக்கு நவம்பர் மாதத்திலும் ஐ.பி.பி.எஸ். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தேர்வு முறை, பாடத்திட்டம், எந்தெந்த கிராம வங்கிகளில் எவ்வளவு காலியிடங்கள் என்ற விவரம் போன்றவற்றை ஐ.பி.பி.எஸ். இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள 61 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி தரத்திலான கிரெடிட் ஆபீசர், மற்றும் ரிஸ்க் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 30.09.2016 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கிரெடிட் ஆபீசர் பணிக்கும் விண்ணப்பிப்பவர்கள் நிதியியல் துறையில் எம்.பி.ஏ. படிப்புடன் நிதி சார்ந்த டிப்ளமோ மற்றும் சி.ஏ.முடித்திருக்க வேண்டும். பொறியியல் துறையில் பி.டெக், எம்.சி.ஏ, எம்.பி.ஏ.(நிதி), எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. புள்ளியியல் முடித்தவர்கள் ரிஸ்க் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www:centralbankofindia.co.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2016
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: உத்தேசிக்கமாக 04.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www:centralbankofindia.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.