யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/9/16

சட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட, கலெக்டர் முதல், கடைநிலை ஊழியர்களுக்கு, மதிப்பூதியமாக, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

உத்தரவு : 
தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்காக பணியாற்றிய, கலெக்டரில் துவங்கி, கடைநிலை ஊழியர்கள் வரை, மதிப்பூதியம் வழங்க, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, 21ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல்நடத்தும் அலுவலர்களான கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ., ஆகியோருக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய்.தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லாத, தேர்தல் சார்ந்த பிற பணிகளில் ஈடுபட்ட, டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., தாசில்தார், துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அலுவலர்களுக்கு, 22 ஆயிரம் ரூபாய். மேலும், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாகஅலுவலர், கிராம உதவியாளர் ஆகியோ ருக்கு, 15 ஆயிரம் ரூபாய்; டேட்டா ஆபரேட்டர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, 6,000 ரூபாய்; கீழ் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு, 4,000 ரூபாய் வீதம் மதிப்பூதியம் வழங்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் மே, 1ம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு, அவர்களுடைய அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு, அதன்படி, மதிப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்துக்கு, 3.76 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக, அரியலுார் மாவட்டத்துக்கு, 48.36 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும், 2017 ஜன., 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாவோரின் பெயர் சேர்ப்பதற்காக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கிறது. வாக்காளர்கள் வசதிக்காக, இரண்டு சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. 
அதன்படி, செப்., 11ல், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது; ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாவது சிறப்பு முகாம், இன்று நடைபெற உள்ளது.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, சிறப்பு முகாம் நடைபெறும்; பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.

இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும், 2017 ஜன., 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாவோரின் பெயர் சேர்ப்பதற்காக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கிறது. வாக்காளர்கள் வசதிக்காக, இரண்டு சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. 
அதன்படி, செப்., 11ல், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது; ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாவது சிறப்பு முகாம், இன்று நடைபெற உள்ளது.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, சிறப்பு முகாம் நடைபெறும்; பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.

வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை

அடுத்த மாதம், பொதுத் துறை வங்கிகள், ஐந்து நாட்கள் இயங்காது. வங்கிகளுக்கு,ஒவ்வொரு மாதமும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை தினம்.
அந்த வகையில், வரும் அக்., 8ம் தேதி, வங்கிகளுக்கு விடுமுறை; மறுநாள், ஞாயிற்றுக்கிழமை. 10ல்,ஆயுத பூஜை; 11ல், விஜயதசமி; 12ல், மொகரம் வருகிறது. அதனால், அக்., 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு வங்கிகள் தொடர்ச்சியாக இயங்காது.

தனியார் பள்ளி வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்

மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு, கிடுக்கிப்பிடி விதிமுறைகள் கொண்டு வர, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 5,500 தொடக்கப் பள்ளிகள்; 3,700 மெட்ரிக்; 5,000 மழலையர்; 660 சி.பி.எஸ்.இ., உட்பட மொத்தம், 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. 
இவற்றில் படிக்கும், 50 லட்சம் பேரில் பெரும்பாலான மாணவர்களை, தனியார் வாடகை வாகனங்களே, பள்ளிக்கு அழைத்து வருகின்றன.இதற்காக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வேன் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. காவிரி பிரச்னைக்காக, செப்., 16ல் நடந்த வேலை நிறுத்தத்தில், தனியார் பள்ளி வாகன சங்கத்தினர் பங்கேற்றனர்.அதனால், தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் பள்ளி வாகனங்களை கட்டுப்படுத்த, கல்வி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 போலீசாருடன் இணைந்து, கண்காணிப்பு கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: தனியார் பள்ளி மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களை, பள்ளி வாகனங்கள் எனகூற முடியாது; அவை வாடகை வாகனங்கள். அரசு உருவாக்கிய, பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகளை, இந்த வாகனங்கள் பின்பற்றவில்லை.எனவே, இந்த வாகனங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டிய அவசியம் வந்துள்ளது.அதன்படி, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பொருட்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வேண்டும். அவசர வழி, 'சீட் பெல்ட்' அமைக்க வேண்டும். பள்ளி வேலை நாட்களில் கண்டிப்பாக வாகனங்களை இயக்க வேண்டும். மஞ்சள் வண்ணம் பூச வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தனியார் வாகனங்களுக்கு, பாதுகாப்பு விதிகளை அமல்படுத்தி, தடையில்லா சான்றிதழ் பெற உத்தரவிட வேண்டும்.

இந்த சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளே, பாதுகாப்பு விதிகளுக்கு பொறுப்பு என உத்தரவிட வேண்டும்.எஸ்.அருமைநாதன் , மாநில தலைவர், தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம்.பள்ளி வாகன விதிகளை அப்படியே, தனியார் வாகனங்களுக்கும் கொண்டு வர வேண்டும். இதேபோல், இலவச பஸ் பாஸ் வழங்கும் தமிழக அரசு, மற்ற மாநிலங்களை போல், பாதுகாப்பு விதிகளை கொண்ட வாகனங்களை மட்டுமே, மாணவர்களுக்காக இயக்க வேண்டும்.கே.ஆர்.நந்தகுமார், பொதுச்செயலர், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகள் சங்கம்.மஞ்சள் வண்ணத்தை தவிர, மற்ற விதிகளை பின்பற்றி வருகிறோம். ஆட்டோக்களுக்கு, அரசே இன்னும் விதிகளை ஏற்படுத்தவில்லை. பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்களை போல், விதிகளை கொண்டு வந்தாலும், அதை மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பின்பற்றதயாராக உள்ளோம்.

வி.வைரசேகர், தமிழ்நாடு தனியார் பள்ளி வாகன கூட்டமைப்புநலச் சங்கம்

புதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எச்சரிக்கை.

புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.மதுரையில், அவர் அளித்த பேட்டி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்த பயனும் இல்லாத, புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்; பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும், இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒரு பணியாளர், மூன்று பேரின் பணிகளை செய்யும் நிலை உள்ளது. தொகுப்பூதியம், தினக்கூலி அடிப்படையில், பணி நியமனங்களை தவிர்த்து, காலமுறை சம்பளத்தில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அனைத்து துறை பணியாளர்களுடன் ஆலோசித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்.

மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்யமுடியாமல் தவிக்கின்றன. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆண்டுதோறும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'இன்ஸ்பையர்' விருதை வழங்குகிறது. 
இதற்கு, மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒன்று அல்லது இரண்டு மாணவர்களுக்கு, அறிவியல் திட்டங்கள் மேற்கொள்ள, 5,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான பதிவு, ஆக., 25ல் துவங்கியது.

வரும், 30ம் தேதிக்குள், ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே திட்டங்கள் ஏற்கப்படும். தமிழகத்தின்பெரும்பாலான மாவட்டங்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, இதுகுறித்த அறிவிப்பை, மாவட்டகல்வித் துறை வழங்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்தல், திட்டங்களை தேர்வு செய்தல் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கோ, பள்ளியின் பிற ஆசிரியர்களுக்கோ, உரிய வழிகாட்டுதலும் இல்லை; பயிற்சியும் இல்லை. தொடர்ச்சியாக, இரு ஆண்டுகள், அறிவியல் கண்காட்சிக்காக அனுமதிக்கப்பட்ட பள்ளிகள், மீண்டும் பதிய முடியவில்லை. இதுகுறித்து, கல்வித் துறைக்கும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கும், பலர் புகார் செய்தும், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால், விருதுக்கான பதிவில், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முன்னணியிலும், அரசு பள்ளிகள் பின்தங்கியும் உள்ளன.

டெங்கு, சிக் குன் குனியாவை தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.

பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:
l மாணவர்கள் உணவு உண்ணும் முன், இரு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.வகுப்பறை மற்றும் கழிவறையை சுற்றியோ, பள்ளி வளாகத்திலோ நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்; குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்கொசு உற்பத்தியாகும் குப்பை, பொருட்களை சேர்க்காமல், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்மாணவர்கள், காய்ச்சி வடி கட்டிய குடிநீரையே பருக அறிவுறுத்த வேண்டும்காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தாவுடன், ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது': கைவிரித்தது ஆணையம்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில்மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்.

இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர்.இவர்களிடம் இருந்து சந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38ஆயிரத்து 935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில் செலுத்தவில்லை. இதனால் பணியின் போது இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு, புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களில், பணியின் போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீத பணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீத பணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமே தரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1,000ரூபாய் கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் இதேநிலை தான்.

ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச் சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப் பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்த விபரம் இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது. 2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பி தருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு 9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட் தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வுபெறும்போது நுாறு சதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.

2,000 ஆசிரியர் இடம் காலி மத்திய அரசு பள்ளிகளில்: தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், 591 இடங்களில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன.
இங்கு, மாணவ, மாணவியர், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தங்கி படிக்கலாம். தமிழகத்தில், இந்தப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த பள்ளிகளில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில், 2,072 ஆசிரியர் உள்ளிட்ட, பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் அறிவிப்பை, மத்திய அரசு அமைப்பான, நவோதயா சமிதி வெளியிட்டு உள்ளது.

இப்பணியில் சேர, பட்டதாரி ஆசிரியர்கள், பட்டப்படிப்புடன், மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கில மொழிப் புலமையுடன், ஹிந்தி அல்லது ஏதாவது ஒரு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினிகளை இயக்க, அடிப்படை திறன்கள் இருக்க வேண்டும். பணிக்கான எழுத்துத்தேர்வு, நவ., அல்லது டிசம்பரில் நடத்தப்படும்; தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, www.nvshq.org மற்றும் www.mecbsegov.in ஆகிய இணையதளங்களில், செப்., 10ல் துவங்கியது. அக்., 9, நள்ளிரவு, 11:59 வரை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், தகுதியுள்ள பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலி இடங்கள் விபரம் : இரண்டு உதவி கமிஷனர்கள், 40 பள்ளிமுதல்வர்கள், 880 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 660 பட்டதாரி ஆசிரியர்கள், கலை, உடற்பயிற்சி போன்ற மற்ற துறைகளில், 255 ஆசிரியர்கள், தமிழில் ஒரு ஆசிரியர் உட்பட, மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு, 235 ஆசிரியர்கள் என, 2,072 காலியிடங்கள் உள்ளன.

24/9/16

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!



* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாகச் செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். 
மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதைத் தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. 
அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராகக் குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

சருமத்திற்கு கேடு விளைவிக்கும் கிரீம்களை தவிர்த்து இயற்கை அழகை பெற்றிட முயற்சி செய்யுங்கள்.


"அழகுடன் வாழ இயற்கையான பராமரிப்பு முறைகள் அவசியம்"

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்



1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது? 

7வது இடம்

2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 

23 வது இடம்

3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 

16வது இடம்

4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 

15வது இடம்

5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

14வது இடம்

6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது? 

மதுரை

7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

2004

8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?

72993

9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?

சென்னை

10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

1076 கி.மீ

11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது 

1986

12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?

கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்? 

சென்னை (23,23,454)

14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? 

சென்னை (46,81,087)

15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

68.45 ஆண்டுகள்

16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை? 

13 மாவட்டங்கள்

17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

234

18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

1

19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?

12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன

20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது? 

சென்னை

21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

71.54 ஆண்டுகள்

22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

15979

23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

561

24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

146

25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

18

26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

39

27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது? 

தர்மபுரி (64.71 சதவீதம்)

28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? 

பெரம்பலூர் 5,64,511

29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்? 

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது? 

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)

31) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?

32

32) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது? 

அரியலூர்

33) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது? 

திருப்பூர்

34 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம் 

80.33 சதவீதம்

35 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு? 

17.58 சதவீதம்

36 ) தமிழகததின் மாநில விலங்கு எது? 

வரையாடு

37 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?

சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

38 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது? 

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

39 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை 
2. கோவை 
3. மதுரை 
4. திருச்சி 
5 தூத்துக்குடி 
6 சேலம்

40 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?

999பெண்கள்(1000 ஆண்கள்)

41 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை? 

1. நீலகிரி 
2. சேலம் 
3. வேலூர் 
4. கன்னியாக்குமாரி

42 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை? 

1. திருவாரூர் 
2. இராமநாதபுரம் 
3. தூத்துக்குடி 
4. கடலூர்

43) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது? 

மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)

44) தமிழ்நாட்டின் இணைய தளம் எது? 

www.tn.gov.in

45) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

சென்னை

46 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு? 

ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

47 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?

திருவில்லிபுத்தூர் கோபுரம்

48 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?

கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

49 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?

நீராடும் கடலுடுத்த

50 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது? 

பரத நாட்டியம்

51 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது? 

மரகதப்புறா

52 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது? 

பனைமரம்

53 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது? 

செங்காந்தர் மலா்

54 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

கபடி

55 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?

1,30,058 ச.கி.மீ

56 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

7,21,38,958 

ஆண் 36158871  பெண் 35980087

30 ஹெல்த் டிப்ஸ்:



1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.          
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

CRC NEWS:​Primary CRC 15.10.16​​ | Upper primary 22.10.16​|Topic : ​கையெழுத்து மற்றும் ஓவியத் திறன் மேம்படுத்துதல்​

நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

இன்ஜினியரிங்மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம்அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து

உள்ளது. உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்தநுழைவுத்தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, பேராசிரியர்பணிக்கான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தேர்வுஉட்பட, பல தேர்வுகளை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.

'இது, கூடுதல் பணிச்சுமையாக உள்ளதால், நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம்ஏற்படுத்தலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து, கடிதம் அனுப்பி உள்ளது. எனவே, நுழைவுத்தேர்வுகளை நடத்த, அடுத்த ஆண்டில், தனி ஆணையம் அமைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தல் பணிபுரிந்த அலுவலர்களுக்கு மதிப்பூதியம் ஒப்பளிக்கப்பட்டு அரசாணை வெளியீடு. அரசாணை (நிலை) எண். 784. பொது (தேர்தல்கள் -3) துறை நாள். 21.09.2016.




ELECTION - மாற்று திறனாளி ஆசிரியர்களுக்காக- மாற்று திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல விதி விலக்கு உள்ளது... பயன்படுத்தி கொள்ளுங்கள்.

நீதிமன்ற ஆணை படி 2001 முதல் அரசு ஊதியம் பெறும் அரசு நிதி உதவி பெரும் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு pf புதிய எண் பெற படிவம்...


CPS MISSING CREDIT FORMAT - 2016 DOWNLOAD

புதிய கல்வி கொள்கை 7 நாள் மட்டுமே அவகாசம்

மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கடந்த, 1968ல் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு பதிலாக, மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தை சேர்ந்த,
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில், ஐந்து பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி பரிந்துரைப்படி, புதிய வரைவு கல்வி கொள்கையை, மத்திய அரசு உருவாக்கி, ஜூனில் வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்கள் குறித்து கருத்து கூற, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது; பல தரப்பிலும் கூடுதல் அவகாசம் கேட்டதால், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், nep.edu.@gov.in என்ற இ - மெயில் முகவரிக்கு, கருத்துக்களை அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.