யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/10/16

ஆசிரியர் தகுதித்தேர்வு எதிர்பார்ப்பு அதிகரிப்பு

பிளஸ்2 தேர்வில் 75 சதவீதம் மார்க் எடுத்தால் மட்டுமே என்.ஐ.டி.யில் இடம்: புதிய நடைமுறை அமுல்

மத்திய அரசு நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியதொழில்நுட்ப கல்லூரிகளை நடத்தி வருகிறது. இதில், ஐ.ஐ.டி. முதன்மை கல்லூரியாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் என்.ஐ.டி. கல்லூரிகள் உள்ளன.நாடு முழுவதும் 31 என்.ஐ.டி. கல்லூரிகள் இருக்கின்றன. இதில், ஒவ்வொரு ஆண்டும் 18 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்படுகின்றனர்.


அவர்களுக்கு ஜே.இ.இ. என்ற பெயரில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்கள் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.இதுவரை நுழைவு தேர்வு எழுதும் மாணவர்கள் பொது பிரிவினர் பிளஸ்-2 வில் 70 சதவீத மார்க்கும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 65 சதவீத மார்க்கும் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் இருந்தன.ஆனால், இப்போது இதில், மாற்றத்தை கொண்டு வர மத்திய மனிதவள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்த கல்லூரியில் சேர பொது பிரிவினர் பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 70 சதவீதமும் மார்க் பெற்று இருக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான சிபாரிசுகளை மத்திய இடஒதுக்கீட்டு வாரியத்துக்கு அனுப்பி உள்ளனர். அவர்கள் இறுதி முடிவு எடுத்த பிறகு இது நடைமுறைக்கு வரும்.ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சத்தில் இருந்து 13 லட்சம் மாணவர்கள் வரை ஜே.இ.இ. நுழைவு தேர்வு எழுதுகின்றனர். புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் நுழைவு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 2 லட்சம் வரையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் இன்று வெளியீடு

மின் வாரியம், ஊழியர்கள் நியமனத்துக்கு நடத்திய, எழுத்து தேர்வு மதிப்பெண்ணை, இன்று வெளியிடுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: மின் வாரியத்தில், இளநிலை உதவியாளர், ஸ்டெனோ, வேதியர், டைப்பிஸ்ட், உதவி வரைவாளர் என, 750 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூன், 19 மற்றும் ஆக., 27, 28ல், அண்ணா பல்கலை மூலம், எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

இதன் மதிப்பெண்கள், இன்று வெளியிடப்பட உள்ளன. தேர்வர்கள், www.tangedcodirectrecruitment.in என்ற இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். அரசு நிர்ணயம் செய்துள்ள இன,இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். 

நவ., 2 முதல் நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேதி, இடம், நேரம் போன்ற விபரங்கள், பின்னர் இணையதளத்தில் தெரிவிக்கப்படும். 

எழுத்து தேர்வுக்கு, 85 சதவீதம்; நேர்முக தேர்வுக்கு, 15 சதவீதம்; அதாவது, 10 மதிப்பெண் நேர்காணலுக்கு, 5மதிப்பெண் கல்வி தகுதிக்கு என, கணக்கீடு செய்து, நியமனம் செய்யப்படுவர். மதிப்பெண் குறித்த விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின், இடைக்கால தடை உத்தரவு நீக்கம் செய்யப்பட்ட பின், 525 தொழில்நுட்ப உதவியாளர்கள்; 900 கள உதவியாளர் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏழு மாவட்ட ஆசிரியர்க்கு மூன்று நாள் பயிற்சி முகாம்

சென்னை உள்ளிட்ட, ஏழு மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, சென்னை அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகத்தில், மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து, மண்டல அளவிலான, பள்ளிகளுக்கான தர மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்தி வருகின்றன.

மூன்று நாள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமை, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா துவக்கி வைத்தார்.

இப்பயிற்சியில், உதவி கல்வி அலுவலர், ஆசிரிய பயிற்றுனர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தவும், மதிப்பீட்டு முறைகள் சார்ந்த புதிய அணுகுமுறைகளை தெரிந்து கொள்ளவும் இந்த பயிற்சி நடந்தது. இன்றுடன், நிறைவுபெறும் இந்த பயிற்சி முகாமில், சென்னை,காஞ்சிபுரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த, 143 பேர் பங்கேற்றனர்.

முன் அரையாண்டு தேர்வால் பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

தமிழக தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் போதே, பிளஸ் 2 பாடங்கள் நடத்தி முடிக்கப்படுகின்றன. பின், பிளஸ் 2வில் மீண்டும், ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளில்,பிளஸ் 2 வகுப்பு துவங்கும் போது மட்டுமே,பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுகின்றன. 

இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கு முன்,அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதே நேரம், அரையாண்டு தேர்வுக்கு முன், நவ., 15 முதல், 25க்குள், முன் அரையாண்டு தேர்வு என்ற புதிய தேர்வை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 

இதற்கு, ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரையாண்டு தேர்வுக்கு முன், பாடங்களை நடத்தவே நாட்கள் இல்லை; மழைக் காலமும் வருகிறது. இந்நிலையில், இன்னொரு தேர்வு வைத்தால்,அதற்கு, 10 நாட்களாகும். அதனால், பாடம் நடத்துவது பாதிக்கப்படும்&' என, தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி இளங்கோ கூறியதாவது: 

ஏற்கனவே, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர். அதில் பங்கேற்பதால், ஐந்து நாட்கள் பாடம் நடத்த முடிவதில்லை. 

பண்டிகை விடுமுறைகள் வருகின்றன; அதை ஈடுகட்டவே திணறும் சூழலில், முன் அரையாண்டு தேர்வு நடத்தினால், உரிய காலத்தில் பாடங்களை முடிக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

கலங்க வைக்கும் குழந்தைக் கடத்தல்! (அவசியம் அனைவரும் படிக்கவும்) நன்றி:விகடன்

குழந்தைக் கடத்தல்... எங்கோ, யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘திருச்சியில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது, திருச்சியளவில் அடங்கக்கூடிய ஒரு குற்றச்செய்தி அல்ல. உண்மையில், அது மாநிலம், தேசம், சர்வதேசம் என்று சங்கிலித் தொடராக இயங்கும் ஒரு மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க்!

உடற்கல்வி ஆசிரியர்களின் 21 ஆண்டுகள் சிக்கலுக்கு விடிவு.

அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களின், ஊக்க ஊதியத்திற்கான, 21 ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்கும் போது, அதற்கு இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படும்.

ஆனால், இந்த ஊக்க ஊதியம் வழங்குவதில், 21 ஆண்டுகளாக பிரச்னை நீடித்தது; பலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆசிரியர் சங்கங்களும், அரசுக்கு, பலமுறை கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. இதில், சான்றிதழ் படிப்பு முடித்தோர், 1992க்கு முன், பி.எட்., படிப்பை முடித்திருந்தால், ஊக்க ஊதியம் தரப்படும். மற்றவர்களுக்கு, பி.பி.எட்., - பி.பி.இ.எஸ்., அல்லது பி.எம்.எஸ்., எம்.பி.எட்., - எம்.பி.இ.எஸ்., மற்றும் யோகாவில் முதுநிலை டிப்ளமோ முடித்தால், இரண்டு ஊக்க ஊதியம் தரப்படும்.

இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும்உடற்கல்வி இயக்குனர்கள் சங்க, மாநில பொதுச் செயலர், டி.தேவி செல்வம் கூறுகையில், ''21 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திய, அரசுக்கு நன்றி. ஆசிரியர்கள், உயர் கல்வி தகுதி பெற்ற நாள் முதல் கணக்கிட்டு, இந்த சலுகையை வழங்க வேண் டும்,'' என்றார்.

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட செலவு அனைத்தும்"ஆன்லைன்' மயம் : மத்திய அரசு முடிவு

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், (ஆர்.எம்.எஸ்.ஏ.,) அனைத்து செலவினங்களை ஆன்லைன் கணக்கில் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் எஸ்.எஸ்.ஏ.,வை தொடர்ந்து, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்க்கும் வகையில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் 2009 முதல் அமலில் உள்ளது.


இதன் மூலம் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், நுாலகம், கணினி அறை, கழிப்பறை, குடிநீர் வசதி, பள்ளி மானியம் மற்றும் பணியிடை பயிற்சிகள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் சார்பில் 60:40 என்ற விகிதத்தில் நிதிஒதுக்கீடு செய்கின்றன.தமிழகத்தில் ஆண்டிற்கு 2 ஆயிரம் கோடிக்கு மேல், இத்திட்டம் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்காக, ஒப்பந்ததாரர் உள்ளிட்டோருக்கு முடிந்த பணிகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் ரசீதுகள் அடிப்படையில்பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் எழுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் திட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், அனைத்துபண பரிவர்த்தனைகளையும், ஆன்லைன் கணக்கு எண்களில் மட்டும் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

இதனால் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் பொது நிதிமேலாண்மை திட்டம் (பி.எப்.எம்.எஸ்.,) மூலம் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், பள்ளிகளுக்கு வெள்ளை அடித்தால் கூட ஆன்லைன் கணக்கு மூலம் தான் ஊழியருக்கு சம்பளம் வழங்கும் நிலை ஏற்படும்.இதனால் செய்யாத திட்டப் பணிகளுக்காக போலி 'பில்'கள் மூலம் பணம் பெறுவது போன்ற முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

10 நாட்களில் 'செட்' தேர்வு முடிவு

கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவை, 10 நாட்களுக்குள் வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்கலை மற்றும்கல்லுாரிகளில், பேராசிரியராக சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

சில மாநிலங்களில், கல்லுாரி, பல்கலைகளில், பேராசிரியராக சேர, மாநில அளவிலான, செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழக அரசு சார்பில், செட் தேர்வு, பிப்., மாதம் நடந்தது; இதில், 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வை நடத்திய, முன்னாள் உயர் கல்வி செயலர் அபூர்வா, வேறு துறைக்கு மாற்றப்பட்டதால், தேர்வு முடிவு வெளியிடப்படாமல், கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசின் நெட் தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, அக்., 17ல் துவங்கியது.

செட் தேர்வு முடிவை வெளியிட்டால், அதில் தேர்ச்சி பெறாதோர்,நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம். அதற்கு வசதியாக, செட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. செட் தேர்வு முடிவு வெளியான பின், நெட் தேர்வை நடத்த வேண்டும் என, வழக்கு தொடர, நெட், செட் சங்கத்தினர் முடிவு செய்தனர். இதனால், 10 நாட்களுக்குள், செட் தேர்வு முடிவை வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்து உள்ளது; அதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

பள்ளிகளில் 4ஆயிரம் லேப் அசிஸ்டென்ட் நவம்பரில் நியமிக்க கல்வித்துறை முடிவு.

CPS- Double number- Old Number CPS Amount transfer to New CPS Number



19/10/16

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும் முறை 7-ந் தேதி முதல்

 ...

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை வருகிற (நவம்பர்) 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

பொம்மலாட்டம் முறை

தமிழ்நாட்டில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பொம்மலாட்டம் மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்து உள்ளது.

இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சார்பில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

இதில் பொம்மலாட்டத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் எஸ்.வி.மாணிக்கம், சுகந்தி டெய்சி ராணி உள்பட பலர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகுழு இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இணை இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பயிற்சி குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட சீனியர் ஆலோசகர் ஆர்.மாலதி கூறியதாவது:-

7-ந் தேதி முதல்...

தமிழ் உள்பட அனைத்து பாடங்களையும் பொம்மலாட்டம் மூலமாக நடத்தி காண்பித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். அதற்காக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு கற்பிப்பார்கள். பின்னர் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வருகிற (நவம்பர்) 5-ந் தேதி முதல் நடத்தப்படும்.

பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் கையேடு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி தங்கள் வகுப்பில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு பொம்மலாட்டம் மூலம் பாடங்களை கதைகளாக கூறி நடத்துவார்கள். இந்த புதிய கற்பிக்கும் முறை வருகிற 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு மாலதி தெரிவித்தார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான தொலைநிலைக் கல்வி இரண்டாண்டு  பி.எட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை முதல் வழங்கப் பட்டு வருகிறது.
   இடைநிலை ஆசிரியர் பயிற்சி பட்டயம் முடித்து ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
   விண்ணப்பத்தை ரூ.600 செலுத்தி நேரிலோ அல்லது www.tamilunivercity.ac.in. என்ற இணைய தள முகவரியிலோ  பெற்றுக் கொள்ளலாம்.
   விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் நவம்பர் 30 ஆண் தேதியாகும்.

பள்ளிக்கல்வி - உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் சார்பான ஆணை வெளியீடு






Honourable CM Released Learning Materials for 10th and 12th Standard

Download Study Materials
12th Standard
SubjectTamil
Medium
English
Medium
Tamil
Download
English
Download
Mathematics
Download
Download
Physics
Download
Download
Chemistry
Download
Download
Biology
Download
Download
Bio-Botany
Download
Download
Bio-Zoology
Download
Download
Accountancy
Download
Download
Commerce
Download
Download
Economics
Download
Download
History
Download
Download
Geography
Download
Download

வெற்றிக்கு தேவை 5 ‘சி’!

வெற்றி என்பது தானாக வருவதல்ல; தானமாகவும் கிடைப்பதல்ல. அது வியர்வைத் துளிகளின் விளைச்சல்! படுத்துக் கிடக்கும் சோம்பேறிக்கு பகல்கூட இரவுதான்; ஆனால், எழுந்து உழைப்பவனுக்குத் திரும்பும் திசையெங்கும் வெற்றிதான்!


வெற்றி பெற விரும்புகிறவர்கள், அதற்கு மூலாதாரமாக விளங்கும் 5‘சி’களை வளர்த்துக் கொண்டு, அவற்றைச் செதுக்கிச் செம்மை படுத்திக் கொண்டால் நொடிதோறும் வெல்லலாம். வாழ்க்கையை வரலாறாக்கி சாதனைச் சரித்திரத்தில் நிரந்தர இடம் பிடிக்கலாம்.

அது என்ன 5‘சி’ என்றுதானே கேட்கிறீர்கள். இதோ

1. ஒழுங்கு நெறிமுறைகள் - Character

திறமை இருந்தால் ஒருவனால் வெற்றி சிகரத்தை அடைய முடியும்; ஆனால் ஒழுக்கம் இல்லை என்றால் அங்கு நிலைத்து நிற்கமுடியாது. ஆகவே எல்லாவற்றுக்கும் நன்னடத்தையே அஸ்திவாரம்.

2. துணிச்சல் - Courage

நன்னடத்தையுடன் தொடர்ந்து நடந்து கொள்வதற்கு நெஞ்சில் துணிச்சல் வேண்டும். சூழ்நிலைகளுக்குள்ளாக கரைந்து போகாமல், தனது ஒழுக்க நெறியில் நின்று, நேர்மையான முறையில் செயல்படுவதற்கும், அப்பளுக்கற்ற நெறியில் செல்வதற்கும் துணிச்சலே துணை நிற்கிறது.

3. அறிவாக்கத்திறன் - Compentency

இனிப்பு இருந்தால் தான் அது கரும்பு; இல்லாவிட்டால் அது மூங்கலின் தம்பி! காரம்  இருந்தால் தான் அது மிளகாய் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை! அதுபோல தான் அறிவாக்கத் திறன் இருந்தால் தான் ஒருவனால் செயல் வீரனாக முடியும். அறிவு மட்டும் போதாது, அந்த அறிவைச் செயலாக்கும் திறனும் வேண்டும். இதை தான் அறிவாக்கத் திறன் என்று சொல்கிறார்கள்.

4. உள்ளார்ந்த செயலுறுதி - Commitment

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும், எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவதும் திட்டமிட்டவாறு செயலாற்றி வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு நெஞ்சில் உறுதி இருக்க வேண்டும்.

5. படைப்பாற்றல் திறன் - Creativity

எந்தச் செயலையும் மேன்மையாகவும், சுலபமாகவும், சிக்கனமாகவும் செய்ய உதவுவது தான் படைப்பாற்றல் திறன். எதையும் வித்தியாசமாச் சிந்தித்து கற்பனை நளத்துடன் உயர்வாகச் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். எதையும் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற தீவிர எண்ணமே படைப்பாற்றலைத் தோற்றுவிக்கிறது.

-முனைவர் கவிதாசன்.

மாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்ட “ஆட்சியர்”- தினம் ஒரு அதிரடியால் 'பொதுமக்கள் நெகிழ்ச்சி'.

திருவண்ணாமாலை மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்காக சமைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.கடந்த 11ம் தேதி திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம், தண்டராம்பட்டு மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில்சென்ற ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் காரிலிருந்து இறங்கி கீழே விழுந்த அந்த வாலிபரை தனதுகாரிலேயே அழைத்து சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதித்ததார்.நேற்று மதிய உணவு வேளையின் போது,   பூங்கா பகுதி ஒன்றின் புல் தரையின் மீது சக ஊழியர்களுடன் அமர்ந்துசகஜமாக ஆட்சியர் பிரசாந்த் மதிய உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்தது.  இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் சத்துணவு தரமாக சமைத்து கொடுப்பது இல்லை என புகார் எழுந்தது.

இதையடுத்து அந்த பள்ளியில் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாணவர்களுக்ககாக சமைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதனை பள்ளி மாணவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.பிரசாந்த் தான் ஆட்சியர் என பெரிதாக நினைக்காமால் நாளுக்கு நாள் அவர் மிக எளிமையாக நடந்து கொள்ளும் இது போன்ற விஷயங்கள் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் 2017 ஜனவரியில் நடத்தப்பட உள்ள அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Computer on Office Automation) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, இந்த சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண் ணப்பிக்கலாம்.ஒருவேளை, பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டால் தகுதி காண் பருவத்துக்குள் கண் டிப்பாக தேர்ச்சி பெற்றாக வேண்டும்.

அரசு கணினி சான்றிதழ் தேர்வை தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு 2 முறை நடத்து கிறது. 2016 டிசம்பரில் நடத்தப் பட வேண்டிய சான்றிதழ் தேர்வு 2017 ஜனவரி 7, 8 தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் (www.tndote. org) நவம்பர் 11-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ள லாம். பூர்த்தி செய்த விண்ணப் பங்களை, உரிய சான்றிதழ் களுடன் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு நவம்பர் 18-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.