யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/10/16

சி.பி.எஸ்.இ., 10 ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு

கிராமமா, நகரமா? கல்வி அதிகாரிகள் குழப்பம்

அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு

முன் அரையாண்டுத் தேர்வால் பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

வினாவங்கி புத்தகம் வினியோகம்

22/10/16

முடக்கப்பட்ட டெபிட் கார்டு: புதிய அட்டை எப்போது கிடைக்கும்? எஸ்பிஐ பதில்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காக அதனுடைய ஏடிஎம்களை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் எஸ்பிஐ வங்கியின் 6 லட்சம் டெபிட் கார்டுகள் உட்பட 30 லட்சத்துக்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டன்.


இது குறித்து எஸ்பிஐ வங்கி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது, வங்கி வாடிக்கையாளர்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காக, பணம் எடுத்தல் மற்றும் பண பரிவர்த்தனைகளை, அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் மட்டும் மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் முடக்கப்பட்ட 6 லட்சம் டெபிட் கார்டுகளுக்கு பதிலாக புதிய டெபிட் கார்டுகள் இன்னும் 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை கோரி ஆன்லைன் விண்ணப்பம்!

தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடுமப அட்டை கோரி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது விநியோகத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:


கடந்த சில வருடங்களாக புதிய குடும்ப அட்டைகள் வழங்க இயலாத நிலையில் உள்தாள் ஒட்டப்பட்டு பொருட்கள் வழங்கப் படுகின்றன.இவ்வாறு கால நீட்டிப்பு செய்யப் பட்ட குடும்ப அட்டை கள் மூலம் டிசம்பர் மாதம் வரை மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.

இனி கையடக்கமான புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்க அரசு திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரி மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்க அனைத்து ரேஷன் கடை களிலும் நவீன எலக்ட்ரானிக் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதற்குரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து விண் ணப்பிக்க வேண்டும்.

பொது விநியோகத்துறை அதிகாரிகள் வீடுகளில் கள ஆய்வு செய்து, புதிய குடும்ப அட்டை 2 மாதத்தில் வழங்கப்படும். குடும்ப அட்டை வழங்கும் போது ஒரிஜினல் சான்று கள் சேகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பான பணிகளும் இனி ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும்

டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி: ட்ராய் அறிவிப்பு.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி என்று, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.


ஜியோ வழங்கும் இலவச அழைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று, இந்திய தொலைத்தொடர்பு சேவை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ட்ராய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: - தொலைத்தொடர்புச் சேவை விதிமுறைகளை மீறும் வகையில் ஜியோ செயல்படுவதால், அதனை 90 நாள் சலுகை அறிவிப்பு என்ற காலத்தை கடந்து, அனுமதிக்க முடியாது.

ஜியோ நிறுவனம், தனது 4ஜி இலவச சேவைகளை நீட்டிப்பதற்கான பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், டிராய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

710 (210 BTs AND 500 PGs) POST PAY AUTHORIZATION




சி.பி.எஸ்.இ வகுத்துள்ள விதிகள் அனைத்தும் மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் ?

தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவர் நீதிபதி சிங்காரவேலு ஓய்வு பெற்று 10 மாதங்களாகியும் புதிய தலைவரை நியமிப்பதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. புதிய தலைவரை நியமிப்பதில் தாமதம் அரசு நிர்வாக முடக்கத்தையே உணர்த்துகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.


108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு அழைப்பு

பெரியார் மன்றத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு, பி.எஸ்ஸி நர்சிங், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் அல்லது செவிலியர் படிப்புகள், மருந்தாளுநர், பரிசோதனை நுட்புநர் உள்ளிட்ட படிப்புகளை முடித்த ஆண், பெண் இரு பாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.


எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், மனிதவளத் துறை நேர்முகம் ஆகியவற்றின்படி தேர்வு செய்யப்படுவோருக்கு 50 நாள்கள் முழுமையான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுப் படியாக ரூ. 100 வழங்கப்படும்.

ஓட்டுநர் பணியிடத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தவறியவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் 23 முதல் 35 வயதுக்கு மிகாத ஆண்கள் தேர்வு செய்யப்படுவர். 162.5 செ.மீ. உயரம், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தகுதிகளைக் கொண்டோர் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். மாத ஊதியம் ரூ. 11,100. தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றைக்கே பணிநியமன ஆணை வழங்கப்படும்.

முகாமில் பங்கேற்க வருவதற்கான படிகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 73974 44158, 73977 24804 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மீண்டும் போர்டு தேர்வு முறை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு, 2010ல் நீக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்துவது குறைந்துள்ளது.
அதே நேரத்தில், மாணவர்களின் கல்வித்திறன் குறைந்து வருவதாக பெற்றோரும், கல்வியாளர்களும் கூறி வந்தனர். இது தொடர்பாக, பல்வேறு தரப்பிடமிருந்து மத்திய அரசு கருத்து கேட்டது. '10ம் வகுப்புக்கு, பொது தேர்வை மீண்டும் அறிமுகம் செய்யலாம்' என, பலர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம், 25ல் டில்லியில் நடக்க உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த கூட்டத்துக்கு பின், 10ம் வகுப்புக்கு, பொது தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து, பிரகாஷ் ஜாவடேகர் அறிவிப்பார் என, எதிர் பார்க்கப்படுகிறது. வரும், 2018 முதல் பொதுத்தேர்வு நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிற வங்கி ஏ.டி.எம்., பயன்படுத்தாதீங்க!'

கோல்கட்டா: 'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு காரணம் கருதி, பிற வங்கி ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்' என, அந்த வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
வெளிநாட்டு மோசடி பேர்வழிகளின் கைவரிசையால், எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சில வங்கி வாடிக்கையாளர்களின், 'டெபிட்' கார்டுகளில் தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களின், 6.5 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மற்ற பொதுத் துறை வங்கிகளும், தங்கள், வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளை முடக்கி உள்ளன. அந்த வகையில், மொத்தம், 32 லட்சம் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, 'பின்' நம்பரை உடனடியாக மாற்றுமாறு, சில தனியார் வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எனினும், நாட்டில் பயன்பாட்டில் உள்ள மொத்த கார்டுகளில், 0.5 சதவீத கார்டுகளின் தகவல்கள் மட்டுமே திருடப்பட்டு உள்ளதாகவும், 99.5 சதவீத கார்டுகளின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், வங்கிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளன. இந்நிலையில், 'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பிற வங்கி, ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்; பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே, இந்த அறிவுரை வழங்கப்படுகிறது; வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்' என, அந்த வங்கியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மவுனம்! ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்தில் ஆர்.பி.ஐ. புலனாய்வு செய்யாததால் வாடிக்கையாளர்கள் கோபம்

சென்னை:பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த, 32 லட்சத்திற்கும் அதிகமான, ஏ.டி.எம்., கார்டு தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப் பட்டது குறித்து, ரிசர்வ் வங்கி மவுனம் காப்பது, 

வங்கி வாடிக்கையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம், சில வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் இருந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் பணம் எடுக்கப்பட்டதாக, புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் விசாரணை மேற்கொண்டது. 


அதில், யெஸ் பேங்கிற்கு, பணப் பட்டுவாடா சேவைகளை மேற்கொண்டு வரும், ஹிட்டாச்சி 
பேமன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின், 'சர்வர்' மூலம், வங்கி வாடிக்கையாளர்களின், ஏ.டி.எம்., கார்டு, ரகசிய, 'பின்' எண் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. 

யெஸ் பேங்கின், ஏ.டி.எம்.,மை பயன்படுத்திய, பிற வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களும் திருடப்பட்டு உள்ளன. இந்த வகையில், 19 வங்கிகளைச் சேர்ந்த, 32 லட்சம், ஏ.டி.எம்., கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. அவற்றில், 26 லட்சம், 'மாஸ்டர், விசா' கார்டுகள்; ஆறு லட்சம், 'ரூபே' கார்டுகள். திருடப் பட்ட, ஏ.டி.எம்., கார்டு விபரங்கள் மூலம், 641 வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆறு லட்சம், 'டெபிட்' கார்டுகளின் தகவல்கள் திருடப் பட்டதாக கூறியுள்ளது. அந்த கணக்கு களை உடனடியாக முடக்கி, வாடிக்கையாளர் களுக்கு புதிய கார்டுகள் வழங்குவதாக தெரிவித்து உள்ளது. 

தனியார் துறையைச் சேர்ந்த, ஆக்சிஸ் பேங்க், சில லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு, 'பின்' எண்களை மாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது. இதே போல, பல வங்கிகள், வாடிக்கையாளர் களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை அனுப்பியுள்ளன. 

இந்நிலையில், ஏ.டி.எம்., கார்டு தகவல் திருட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகளை,மாஸ்டர், விசா, ரூபே கார்டு நிறுவனங்கள் இணைந்து மேற் கொண்டு வருவதாக, என்.பி.சி.ஐ., தெரிவித்து உள்ளது.

ஆனால், இந்திய வங்கி வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் நடைபெற்றுள்ள தகவல் திருட்டு குறித்து, அனைத்து வங்கிகளை யும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரிசர்வ் வங்கி, எதுவும் கூறாமல் மவுனம் காப்பது,வங்கி வாடிக்கையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

'பலவங்கிகள், ஏ.டி.எம்., கார்டு தகவல் திருட்டு குறித்து, அதிகாரபூர்வமான எண்ணிக்கையை வெளியிடவில்லை. அவை வெளியானால், தகவல்கள் திருடப்பட்ட, ஏ.டி.எம்., கார்டுகளின் எண்ணிக்கை, மேலும் அதிகமாக இருக்கும்' என, வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


கண்காணிக்க வேண்டும்


ஏ.டி.எம்., கார்டு விபரம் திருடு போகும் சம்பவங் கள், வளர்ந்த நாடுகளிலும் நடக்கின்றன. இது, ஒரு குற்ற செயல்.வங்கிகளை நம்பி தான், வாடிக்கையாளர்கள் பணம், டெபாசிட் செய் கின்றனர். ஏ.டி.எம்., கார்டு விபரம் திருடு போவதால், வாடிக்கையாளர்கள், வங்கி மீது வைத்துள்ள நம்பிக்கையை இழப்பர். வங்கி களில், பணத்தை தொடர்ந்து டெபாசிட் செய்ய மாட்டர் என்பதால், அவற்றின் லாபமும் குறையும். 

எனவே, வாடிக்கையாளரின் விபரங்களை பாதுகாப்பதில், வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவற்றை, வங்கிகள் முறையாக செய்கின்றனவா என்பதை, ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் இணைந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். 

ஷியாம் சேகர் பொருளாதார நிபுணர்


விபரம் கேட்பு


ஏ.டி.எம்., கார்டு தகவல் திருடு குறித்த அனைத்து விபரங்களையும் வழங்குமாறு, மத்திய நிதி அமைச்சகம், அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இணையதளத்தில் கட்டண விபரம் : இன்ஜி., கல்லூரிகளுக்கு உத்தரவு

இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சுயநிதி பல்கலைகள், பாட வாரியான கட்டண விபரத்தை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.நாட்டில் பல மாநிலங்களில், இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி வசதிகள் இல்லை.
இந்த மாநில மாணவர்கள், மற்ற மாநில கல்லுாரி மற்றும் பல்கலைகளில் சேர்கின் றனர். சில நேரங்களில், படிப்பில் சேர வரும் மாணவர்களை, கட்டணம் தொடர்பான, அடிப்படையில்லாத காரணங்களை கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இது குறித்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், தொழில் நுட்பக் கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் உத்தரவு படி, அனைத்து கல்லுாரிகளும், முக்கிய பாடவாரியாக, மாணவர்களின் கட்டண பட்டியலை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அதே போல், சுயநிதி பல்கலைகளுக்கும், மத்திய அரசின் சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது

பொம்மலாட்டம் ஆடும் ஆசிரியர்கள் : அடிப்படை கல்விக்கு 'டாட்டா!'

அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் போன்ற நடனப் பயிற்சிகள் தரப்படுவதால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை கல்வியை வலுப்படுத்த வேண்டிய, எஸ்.எஸ்.ஏ., என்ற, மாநில திட்ட அமைப்பு, மத்திய அரசிடம் பெறும், பல கோடி ரூபாய் நிதியில், ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகளை அளிக்கிறது.
இதற்காக வரும் ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து செலவு, உபசாரம், விடுமுறை என, சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. சென்னையில், இரு நாட்களாக, நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் கற்பித்தல் பயிற்சி நடந்தது. பொம்மலாட்ட பயிற்சி முடித்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கும் முன், அடுத்த பயிற்சிக்கு அழைக்கப்படுகின்றனர். 'மாணவர்களுக்கு உதவாத, இது போன்ற ஆட்டம் காட்டும் பயிற்சி களை வைத்தே, பல ஆசிரியர்கள் பள்ளிகளில் இருப்பதில்லை' என, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., பாடம் நடத்துகிறது. பாடம் கற்க வேண்டிய மாணவர்களோ, வகுப்புகளில், ஆசிரியர்கள் இன்றி தடுமாறுகின்றனர் என, கல்வியாளர்கள் குமுறுகின்றனர்.
இது குறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறுகையில், 'பாடங்களை முறையாக நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். பின், இது போன்ற நடனங்களை கற்று தரலாம்.
'எஸ்.எஸ்.ஏ., நடத்தும் மதிப்பீட்டு தேர்வில், மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். அதன் பின்னும், இது போன்ற பயிற்சிகள் கைகொடுக்க வில்லை என்பதை, அவர்கள் உணரவில்லை' என்றனர். 

உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ணயித்தது அரசு

சென்னை: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான, கல்வி தகுதியை நிர்ணயம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. 'ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு முன் மற்றும் பின் பெறும் உயர்கல்வி தகுதிகளுக்கு ஏற்ப, இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம்' என, அரசு ஆணை உள்ளது. அதே போல், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க, அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

l உடற்கல்வி ஆசிரியர்கள், பி.பி.எட்., - பி.பி.எஸ்., - பி.எம்.எஸ்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு, முதலாவது ஊக்க ஊதிய உயர்வும், முதுகலை பட்டம் பெற்றால், இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும்l இந்த படிப்புகளை முடிந்து, உடற்கல்வி ஆசிரியர்களாக உள்ளோர், முதுகலை பட்டம் பெற்றால், முதலாவது ஊக்க ஊதிய உயர்வும், எம்.பில்., அல்லது பிஎச்.டி., படித்தால், இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும்l முதுகலை பட்டம் பெற்று, உடற்கல்வி ஆசிரியராக உள்ளோர், எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றால், தலா, ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும்.மேலும், யோகா டிப்ளமோ படிப்பு, உடற்கல்விக்கான படிப்பில் சேர்க்கப்பட்டு, ஊக்க ஊதியம் பெறும் வகையில், அரசாணை ெவளியிடப்பட்டு உள்ளது.

தீபாவளிக்கு முன் சம்பளம் : ஆசிரியர்கள் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை கொண்டாட, பொதுத்துறை ஊழியர்களுக்கு, போனஸ் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பண்டிகை முன்பணம் என்ற பெயரில், 5,000 ரூபாய் தரப்படும். இந்த ஆண்டு, பெரும்பாலான மாவட்டங்களில், முன்பணத்திற்கான விண்ணப்பமே பெறப்படவில்லை.
இந்நிலையில், தீபாவளி, 29ல் வருகிறது. எனவே, இம்மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர், சாமி.சத்திய மூர்த்தி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.

அரசு ஊழியர் அகவிலைப்படி தீபாவளிக்கு முன் அறிவிப்பு?

ஆண்டு அகவிலைப்படி உயர்வு, தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுமா' என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள், ஜூலையில் அமலுக்கு வந்தன; ஜனவரியிலிருந்து கணக்கிடப்பட்டு, பணப்பலன்கள் வழங்கப்பட்டன.
இதே போல், தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும், சம்பள குழு நியமிக்கப்பட வேண்டும்; ஆனால் இல்லை. ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலையில், 5 - 7 சதவீதத்திற்குள், அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். இந்த ஆண்டு, ஜனவரியில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது; ஜூலைக்கான உயர்வு இன்னும் வரவில்லை. தீபாவளி பண்டிகைக்கு முன், அறிவிப்பு வருமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இன்ஜி., கல்லூரி பேராசிரியர் பணிக்கு இன்று தேர்வு

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு, இன்று நடக்கிறது.அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடிகிறது. தேர்வுக்கு, 48 ஆயிரத்து, 286 பேர் விண்ணப்பித்தனர்; 2,336 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன; மீதமுள்ள, 45 ஆயிரத்து, 950 பேர், இன்று தேர்வில் பங்கேற்கின்றனர். 

தமிழகம் முழுவதும், 11 மாவட்டங்களில், 113 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு, 2014ம் ஆண்டு அறிவிக்கைபடி விண்ணப்பித்த பலருக்கு, 'ஹால் டிக்கெட்' வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஆனால், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தவிர, மற்ற அனைவருக்கும், ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.