- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
8/11/16
7/11/16
புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது - எந்தவித அரசியலும் இல்லை: ஜாவடேகர்
புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இதில் எந்தவித அரசியலும் இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசினார். சென்னையில் பாரதிய ஜெயின் சங்காதனா (Bharatiya jain sanghatana) அமைப்பின் சார்பில், -இந்தியாவின் பள்ளி கல்வியில் உள்ள சவால்கள்- என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: நமது நாட்டின் கல்வி முறையில் புதுமையான முறைகள் அவசியமாகும். எல்லா துறைகளிலும், தரமான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே பிரதமரின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, நமது நாட்டின் கல்வி முறையை மேலும் சிறப்பானதாக உருவாக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது.
அரசியல் இல்லை...
கல்வியை அடுத்த நிலைக்கு முன்னெடுத்து செல்லும் நோக்கில், புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இவற்றில் எந்தவித அரசியலும் இல்லை. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக, புதிய கல்விக் கொள்கையின் அவசியம் ஏற்பட்டுள்ளது.
எந்த விதத்திலும் அரசியலமைப்பு சட்டத்தில், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட உரிமைகள் சிதைக்கப்படாது. கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கையில், ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது, இறுதியானது அல்ல.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், பல்வேறு தரப்பினருடன் விவாதிக்கப்பட்டு, அவர்கள் அளிக்கும் கருத்துகளையும் கவனத்தில் கொண்டே இறுதி செய்யப்படும். ஆனால், தமிழகம், கேரளத்தில் சரியான புரிதல் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவசியமற்றது.
நவம்பர் 10-ஆம் தேதி அனைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைத்து மாநிலத்திலுள்ள நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
ஜாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, நல்ல மனித நேயத்தை வளர்க்கவும், புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும். மேலும் சக மனிதர்களை, மனிதர்களாக மதிக்கவும் பயன்படும் என்றார்.

புதிய விதிப்படி ஐ.ஐ.டி., 'அட்மிஷன்' மாணவர் சேர்க்கை கமிட்டி அமைப்பு
புதிய விதிப்படி, உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது.
மத்திய அரசின், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவு தேர்வுப்படி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை, இத்தேர்வில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரும் பங்கேற்கலாம் என்ற முறை இருந்தது.
இந்த ஆண்டு முதல், புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, பிளஸ் 2 பொதுத்தேர்வில், குறைந்த பட்சம், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, ஜே.இ.இ., தேர்வில் பங்கேற்க முடியும். பட்டியலின தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், 65 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல, ஜே.இ.இ., தேர்வு முடிந்து, அதன் தரவரிசை பட்டியலில், ஏற்கனவே இருந்தது போல், பிளஸ் 2 மதிப்பெண்ணை, வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக சேர்க்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. அத்துடன், புதிய முறைப்படி மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான கமிட்டியையும்,
மத்திய அரசு அமைத்துள்ளது.
கமிட்டியில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, என்.ஐ.டி.,க்கள் மற்றும் ஐ.ஐ.டி.,க்களுக்கான இயக்குனர்கள், தேசிய தகவல் மைய உறுப்பினர், மத்திய இடை நிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில் ஒருவர், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் வுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரி உள்ளிட்டோர் இடம் பெறுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது

கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்குமா?
ஆசிரியர் பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்காமல், கணினி அறிவியல் பட்டதாரிகள், வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுகின்றனர்.தமிழக அரசு பள்ளிகளில், 1992ல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், கணினி அறிவியல் பாடங்கள் அறிமுகமாகின. அப்போது, கணினி பட்டப்படிப்பு இல்லாததால், கணினி பற்றி அடிப்படை தகவல்கள் தெரிந்தவர்களை ஆசிரியர்களாக அரசு நியமித்தது. பின், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி., - எம்.எஸ்சி., மற்றும் பி.எட்., படிப்புகள் துவங்கப்பட்டன. இதில், இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பி.எஸ்சி., - பி.எட்., பட்டம் பெற்று, ஆசிரியர் வேலை இன்றி, திணறி வருகின்றனர்.
கணினி அறிவியல் படிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதனால், 'டெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல், ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாமல், கணினி பட்டதாரிகள் தவிக்கின்றனர்.'அரசு விரைந்து முடிவு எடுத்து, கணினி பட்டதாரிகளுக்கு, அரசு பணி வழங்க முன்வர வேண்டும்' என, கணினி பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பல்கலை சிண்டிகேட் தேர்தல்:கல்வி துறை இயக்குனர்கள் புறக்கணிப்பு
சென்னை பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில், வரலாற்று துறை பேராசிரியர் சுந்தரம் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஓட்டளிக்காமல், அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர்.சென்னை பல்கலையின் நிர்வாக பணிகளை முடிவு செய்யும், உயர்ந்த அதிகார அமைப்பாக, சிண்டிகேட் செயல்படுகிறது. இதில், செனட் உறுப்பினர்கள் ஆறு பேர், பல்கலை இணைப்பு கல்லுாரிகள் அங்கம் வகிக்கும், அகாடமிக் கவுன்சில் சார்பில், நான்கு கல்லுாரி முதல்வர்களும் உறுப்பினர்களாக இருப்பர்.
மூன்று இடம் காலி
மேலும், சென்னை பல்கலையில் பணியாற்றுவோரில், மூத்த உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர்களில் தலா, ஒருவர், சென்னை பல்கலை துறைத் தலைவர்களில், மூத்தவர்களில் தலா, மூன்று பேர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் எட்டு பேரும் உறுப்பினர்களாக இருப்பர். இதில், துறை தலைவர்களுக்கான மூன்று இடங்கள் காலியாக உள்ளன.
செனட் பிரதிநிதிகளில் ஒருவரான பேராசிரியர் ஸ்ரீமன் நாராயணன், ஜூனில் ஓய்வு பெற்றார். அந்த காலியிடத்திற்கு, பல்கலை செனட் கூட்டத்தில், நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. சென்னை பல்கலை ஆங்கில துறை தலைவர், ஆர்ம்ஸ்ட்ராங், வரலாற்று துறை தலைவர்எஸ்.எஸ்.சுந்தரம் இருவரும் போட்டியிட்டனர்.
பதிவான, 114 ஓட்டுகளில், 74 ஓட்டுகள் பெற்று, பேராசிரியர் சுந்தரம் வெற்றி பெற்றார். புதிய சிண்டிகேட் உறுப்பினரின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள். சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில் ஓட்டளிக்க, 128 செனட் உறுப்பினர்கள் தகுதி பெற்றனர். ஆனால், 114 ஓட்டுகளே பதிவாகின.
ஓட்டளிக்கவில்லை
இதில், செனட் உறுப்பினர்களான, உயர் கல்வி செயலர் கார்த்திக், கல்லுாரி கல்வி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சட்டப்படிப்புகள் துறை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர் உள்ளிட்ட, எட்டு அரசு உயர் அதிகாரிகள் ஓட்டளிக்கவில்லை. அரசு அதிகாரிகளே தேர்தலை புறக்கணித்தது, மாணவர்கள் மத்தியில் தேர்தல் மீதான நம்பிக்கையை குறைப்பதாக உள்ளது

5,451 அரசு வேலைக்கு 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்கள்... 12.60 லட்சம் பேர்!:10ம் வகுப்பு முதல் இன்ஜி., படித்தவர்கள் வரை பங்கேற்பு;ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு
5,451 அரசு வேலைக்கு 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்கள்... 12.60 லட்சம் பேர்!:10ம் வகுப்பு முதல் இன்ஜி., படித்தவர்கள் வரை பங்கேற்பு;ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்புசெப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, நேற்று காலையில், எழுத்துத் தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு முதல், பட்டப் படிப்பு, பிஎச்.டி., மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை, மொத்தம், 15.64 லட்சம் பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்; அவர்களில், 80.5 சதவீதமாக, 12.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
* சென்னை உட்பட, 301தாலுகாக்களில், 5,296 தேர்வு அறைகளில் தேர்வு நடந்தது. முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வுக்கூட ஆய்வு அதிகாரிகள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் என, மொத்தம், 88 ஆயிரத்து, 810 பேரும்; பறக் கும் படை அதிகாரிகள், 218 பேரும், தேர்வை நடத்தும் பணியில் ஈடுபட்டனர்
* தேர்வுக்கு வந்தவர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், கைப்பை உள்ளிட் டவை, தேர்வறையில் அனுமதிக்கப் படவில்லை.
'ரிசல்ட்' எப்போது?
சென்னையில் தேர்வு நடைபெற்ற மையங் களை,டி.என்.பி.எஸ்.சி.,தலைவர் அருள்மொழி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகி யோர் பார்வையிட்டனர். பின், அருள்மொழி அளித்த பேட்டி:
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஓராண்டில், 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வு களும் நடத்தப்பட்டு; 22 முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஜூன், 16 வரை நடந்த அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகளும்அறிவிக்கப்பட்டு விட்டன. மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு, வரும் வாரத்தில் வெளியாகும்.
சப் - கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, உயர் பதவிகளில் காலியாக உள்ள, 85 பணிஇடங் களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' தேர்வு, வரும், 9ல், அறிவிக்கப்படும். தேர்வாணையத் தின் திருத்தப்பட்ட அறிவுரைகள், இன்று வெளியிடப்படும். இந்த விதிகள், அடுத்து வரும் தேர்வுகள் அனைத்துக்கும் பொருந்தும். 'குரூப் - 4' தேர்வு முடிவுகள், ஆறு மாதங்களுக் குள் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
தேர்வில் புதுமண தம்பதி
தர்மபுரியைச் சேர்ந்த மணமக்கள் மணிமாறன் - சித்ரா ஆகியோர், நல்லம்பள்ளி அரசு பள்ளி மற்றும் தர்மபுரி குட்ஷெப்பர்டு மேல்நிலைப் பள்ளியில், மணக்கோலத்தில் தேர்வு எழுதினர்.
மணமகன் மணிமாறன் கூறியதாவது:
பி.இ., படித்த எனக்கும், எம்.எஸ்சி., - பி.எட்., படித்த சித்ராவுக்கும், திருமணம் நிச்சயம் செய்யும் முன்னரே, இருவரும், 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பித்துஇருந்தோம். தேர்வு நாளில், எங்கள் திருமணத்தை நடத்த, பெரியோர்கள் முடிவு செய்தனர்.
அதனால், அதிகாலை, 5:00 மணிக்கு திருமணம் முடிந்ததும்,இருவரும் அவரவர் தேர்வு மையத் தில், தேர்வில் பங்கேற்றோம்; தேர்ச்சி பெற்று, இருவரும் அரசு வேலையில் சேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி திட்டம்
அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், 100 சதவீதம் தேர்ச்சி அடையும் வகையில், சிறப்பு திட்டத்தை, தமிழக கல்வித்துறை மேற்கொண்டுஉள்ளது.
இதன்படி, பல்வேறு மாவட்டங்களில், மாவட்ட அதிகாரிகளின் தனிப்பட்ட முயற்சியில், பல முன்னோடி பயிற்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.சென்னையில், 'பெஸ்ட்;' சிவகங்கை, ராமநாதபுரத்தில்,'எலைட்' திட்டம் போன்றவை இவற்றில் அடங்கும். தர்மபுரி மாவட்டத்தில், காலாண்டு தேர்வில் தோல்வியடைந்த, 5,000 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, தனி பயிற்சி அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, அவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற பின், பாடங்கள் படிக்கும் முறை குறித்து கேட்டறிய, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்த நேரத்திலும், விளக்கம் கேட்கும் வகையில், ஆசிரியர்களின் மொபைல் போன் எண்கள் தரப்பட்டு உள்ளன

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)