யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/11/16

குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்

சித்தர்கள் சமாதியான இடம்

சின்ன சின்ன கை வைத்தியங்கள்

சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா?

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வைத்தியம் செய்யும் முறை

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ

நடைப்பயிற்சியின் நன்மைகள்

நாம் - முதல் தலைமுறை,

படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள்

படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்!

மனம் கலங்காதிருக்க

மேட்டுர் அணை வரலாறு

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வைத்தியம் செய்யும் முறை

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா

ஹெல்மெட்டின் பணி என்ன?

7/11/16

பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவது தவிர்த்தல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள்

புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது - எந்தவித அரசியலும் இல்லை: ஜாவடேகர்

புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இதில் எந்தவித அரசியலும் இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசினார். சென்னையில் பாரதிய ஜெயின் சங்காதனா (Bharatiya jain sanghatana) அமைப்பின் சார்பில், -இந்தியாவின் பள்ளி கல்வியில் உள்ள சவால்கள்- என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: நமது நாட்டின் கல்வி முறையில் புதுமையான முறைகள் அவசியமாகும். எல்லா துறைகளிலும், தரமான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே பிரதமரின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, நமது நாட்டின் கல்வி முறையை மேலும் சிறப்பானதாக உருவாக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது.
அரசியல் இல்லை...
கல்வியை அடுத்த நிலைக்கு முன்னெடுத்து செல்லும் நோக்கில், புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இவற்றில் எந்தவித அரசியலும் இல்லை. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக, புதிய கல்விக் கொள்கையின் அவசியம் ஏற்பட்டுள்ளது.
எந்த விதத்திலும் அரசியலமைப்பு சட்டத்தில், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட உரிமைகள் சிதைக்கப்படாது. கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கையில், ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது, இறுதியானது அல்ல.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், பல்வேறு தரப்பினருடன் விவாதிக்கப்பட்டு, அவர்கள் அளிக்கும் கருத்துகளையும் கவனத்தில் கொண்டே இறுதி செய்யப்படும். ஆனால், தமிழகம், கேரளத்தில் சரியான புரிதல் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவசியமற்றது.
நவம்பர் 10-ஆம் தேதி அனைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைத்து மாநிலத்திலுள்ள நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
ஜாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, நல்ல மனித நேயத்தை வளர்க்கவும், புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும். மேலும் சக மனிதர்களை, மனிதர்களாக மதிக்கவும் பயன்படும் என்றார்.

புதிய விதிப்படி ஐ.ஐ.டி., 'அட்மிஷன்' மாணவர் சேர்க்கை கமிட்டி அமைப்பு

புதிய விதிப்படி, உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது.

மத்திய அரசின், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவு தேர்வுப்படி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை, இத்தேர்வில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரும் பங்கேற்கலாம் என்ற முறை இருந்தது.


இந்த ஆண்டு முதல், புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, பிளஸ் 2 பொதுத்தேர்வில், குறைந்த பட்சம், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, ஜே.இ.இ., தேர்வில் பங்கேற்க முடியும். பட்டியலின தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், 65 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல, ஜே.இ.இ., தேர்வு முடிந்து, அதன் தரவரிசை பட்டியலில், ஏற்கனவே இருந்தது போல், பிளஸ் 2 மதிப்பெண்ணை, வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக சேர்க்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. அத்துடன், புதிய முறைப்படி மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான கமிட்டியையும், 
மத்திய அரசு அமைத்துள்ளது. 

கமிட்டியில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, என்.ஐ.டி.,க்கள் மற்றும் ஐ.ஐ.டி.,க்களுக்கான இயக்குனர்கள், தேசிய தகவல் மைய உறுப்பினர், மத்திய இடை நிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில் ஒருவர், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் வுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரி உள்ளிட்டோர் இடம் பெறுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது

கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்குமா?

ஆசிரியர் பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்காமல், கணினி அறிவியல் பட்டதாரிகள், வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுகின்றனர்.தமிழக அரசு பள்ளிகளில், 1992ல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், கணினி அறிவியல் பாடங்கள் அறிமுகமாகின. அப்போது, கணினி பட்டப்படிப்பு இல்லாததால், கணினி பற்றி அடிப்படை தகவல்கள் தெரிந்தவர்களை ஆசிரியர்களாக அரசு நியமித்தது. பின், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி., - எம்.எஸ்சி., மற்றும் பி.எட்., படிப்புகள் துவங்கப்பட்டன. இதில், இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பி.எஸ்சி., - பி.எட்., பட்டம் பெற்று, ஆசிரியர் வேலை இன்றி, திணறி வருகின்றனர்.

கணினி அறிவியல் படிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதனால், 'டெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல், ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாமல், கணினி பட்டதாரிகள் தவிக்கின்றனர்.'அரசு விரைந்து முடிவு எடுத்து, கணினி பட்டதாரிகளுக்கு, அரசு பணி வழங்க முன்வர வேண்டும்' என, கணினி பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.