யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/11/16

ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெறுபவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேருவதை பெருமையாக கருதுகிறார்கள். தற்போது 37-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (‘டி.இ.எஸ்’-37, ஜூலை 2017) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 37-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேருவதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-1-1998 மற்றும் 1-1-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. கல்வித்தகுதி: பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். நாளை (8-11-2016) முதல் இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டிற்கு வரும். 7-12-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

சென்னை, தனியார் பள்ளிகளுக்கு நிலம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் 3 கல்வியாளர்களை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் ஏ.நாராயணன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–


தற்காலிக அங்கீகாரம்
தமிழகத்தில் உள்ள 746 பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள எந்தவொரு அடிப்படை தகுதிகளையும் கடை பிடிக்காமல், கடந்த 2004–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு தமிழக அரசும், ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக அங்கீகாரத்தை வழங்கி வருகின்றன.

இறுதியாக கடந்த மே மாதம் 31–ந்தேதி வரை ஒரே ஒருமுறை என்ற அடிப்படையில் தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

அதன்பிறகு பல பள்ளிகள் தேவையான நிலம் உள்ளிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை நீட்டிக்க கூடாது.

செயலாளர் ஆஜர்
சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடவும், அங்கீகாரம் பெறாத இந்த பள்ளிகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக விளம்பரப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா நேரில் ஆஜரானார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ஒரு வகுப்புக்கு எவ்வளவு நிலம் தேவை? என்பது தொடர்பான ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

கால அவகாசம்
பின்னர் அவர், ‘ஒரு வகுப்பிற்கு தேவைப்படும் நிலத்தின் அளவை தீர்மானித்து, இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 5 பிரிவுகள் வரை உள்ளன. இந்த பள்ளிகளுக்கு எவ்வளவு நிலம் தேவைப்படும்? என்பதையும் கணக்கிட்டுள்ளோம். இந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் குழு முன்பு வைத்து, ஒப்புதல் பெற்ற பின் உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்கு கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.

கல்வியாளர் நியமனம்
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

அரசு அமைத்த நிபுணர்கள் குழுவில் கல்வியாளர்கள் யாரும் இல்லை. அரசு அதிகாரிகள் தான் உள்ளனர். கல்வியாளர்களை நியமித்தால் மட்டுமே குழுவின் நோக்கம் நிறைவேறும். எனவே கல்வியாளர்கள் எஸ்.எல்.சிட்டிபாபு, லலிதா, எஸ்.எஸ்.ராஜகோபால் ஆகியோரை அரசு நியமித்த நிபுணர்கள் குழுவில் சேர்த்து உத்தரவிடுகிறோம்.

இந்த குழுவில் உள்ளவர்கள், கும்பகோணம் கோர விபத்து சம்பவம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை மனதில் வைத்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆலோசிக்கவேண்டும்
நிலம் தொடர்பான விதிமுறைகளை சரியாக கணிக்க வேண்டும். இந்த குழுவில் இடம் பெற்ற நிபுணர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து 4 வாரத்தில் தகுந்த முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 20–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பிளஸ்-2 படித்தவர்கள் ராணுவத்தில் சேர்ப்பு

ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெறுபவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேருவதை பெருமையாக கருதுகிறார்கள்.


தற்போது 37-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (‘டி.இ.எஸ்’-37, ஜூலை 2017) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 37-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேருவதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-1-1998 மற்றும் 1-1-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

கல்வித்தகுதி:

பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். நாளை (8-11-2016) முதல் இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டிற்கு வரும். 7-12-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

பட்டதாரிகளுக்கு மத்திய அமைச்சரவை செயலகத்தில் பணி

மத்திய அமைச்சரவை செயகத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 11 Despatch Officer, Attache பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 11

பணியிடம்: புதுதில்லி
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Director - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100/- + தர ஊதியம் ரூ.7600/5400
பணி: Joint Deputy Director - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Senior Para Despatch Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Para Despatch Officer - 02
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Junior Para Despatch Officer - 03
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Assistant Fire Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Attache (Junior Time Scale) - 02
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
தகுதி: அரசு அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:   அதிகாரப்பூர்வ இணையதளமான www.cabsec.nic.in-ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant Director (Pers B), Post Box no. 3003, Lodhi Road Post Office, New Delhi - 110003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_58101_47_1617b.pdf, http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_58101_45_1617b.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - SEP 2016 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - தேர்வு முடிவு வெளீயீடு ( Result Announced CTET-SEP 2016 )

ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் எப்போது?

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் பதவிக்காலம், ஒரு வாரத்திற்கு முன் முடிந்து விட்டது. அதனால், குழுவினர் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், புதிதாக பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, மத்திய அரசு ஆலோசனைப்படி, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம், 2003ல் அமலுக்கு வந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


வல்லுனர் குழு : 'பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்' என, வலியுறுத்தி, பல போராட்டங்களையும் நடத்தினர். அரசு ஊழியர்களின் கோரிக்கையை சமாளிக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, சட்டசபை தேர்தலுக்கு முன், வல்லுனர் குழுவை தமிழக அரசு நியமித்தது. தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்ததும், வல்லுனர் குழுவின் செயல்பாடுகள் துவங்கின. செப்டம்பரில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், வல்லுனர் குழு கருத்து கேட்டது. அக்டோபர், 28ம் தேதியுடன், வல்லுனர் குழுவின் பதவிக்கலாம் முடிவடைந்து விட்டது. அதனால், குழுவினர் தங்களின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
ஆசிரியர்கள் உறுதி : இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு, இரண்டு மாதங்களாகிறது; இன்னும் குழுவின் முடிவு தெரியவில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடரக்கூடாது என்பதில், ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். அதற்கு முன், உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பத்திற்கு, இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

ஆசிரியர் பணியை உதறிவிட்டு விவசாயத்தில் சாதிக்கும் பெண்

ஆசிரியர் பணியை உதறிவிட்டு விவசாயத்தில் இளம்பெண் சாதனை நிகழ்த்தி வருகிறார்.சாயல்குடி அருகே குதிரைமொழி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி,28. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். 

இவரது கணவர் விவசாயி விக்னேஷ் ராம்,33. இவர்களுக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் விவசாயம் நிலம் உவர்ப்பு தன்மை உடையதாக உள்ளது.


இருந்தும் மனம் தளராத தம்பதியினர் இருவரும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறையினரிடம் ஆலோசனைகள் பெற்று அந்த நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளனர். மா, புளி, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, நார்த்தங்காய், கொடுக்காப்புளி, நாவல், தென்னை, தேக்கு உள்ளிட்ட பலன்தரும் மரங்களை நடவு செய்துள்ளனர். ஊடு பயிராக கால்நடைகளுக்கான கட்டைப்புல் சாகுபடி செய்துள்ளனர். பயிர்களுக்கு இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மரங்கள் பலனளிக்க துவங்கியுள்ளதால் தம்பதியினர் நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

விவசாயி ஸ்ரீதேவி கூறுகையில்,“ ஆசிரியர் பயிற்சி முடித்த பின்னர், கிடைத்த அரசு வேலையை உதறிவிட்டு கணவருடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் வகை, வகையான பலன்தரும் மரங்களை நட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டிவருகிறோம். விவசாயத்திற்கு பயன்படாத உவர் மண்ணை, மண் மாதிரி மூலம் ஆய்வு செய்து, அதிகளவில் மக்கிய இயற்கை உரங்களான கால்நடை கழிவுகள், மண்புழு உரம் இவற்றின் மூலம் நுண்ணுாட்டம் செய்து விவசாயத்திற்கு உகந்ததாக மாற்றியுள்ளோம். 

இங்கு 15 அடியில் நல்ல தண்ணீர் கிடைப்பதால், கிணற்று பாசனத்தில் மகசூல் ஈட்ட முடிகிறது. பெரும்பாலான நேரங்களை விவசாயத்தில் செலவிடுகிறேன். மாலையில் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுக்கிறேன். இதுவரை வேளாண்மைத்துறையின் மூலம் எந்தவித உதவிகளும், இலவச மின்சாரம், மானியமும் பெறவில்லை. அரசு ஊக்குவித்தால், என்னைப்போன்ற படித்த பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும்,” என்றார்.

1தண்ணீர் நிறைய குடியுங்கள்

SABL ஏற்கக் கூடிய ஒன்றா?

தீபாவளி

ஆதார் எண் வங்கியுடன் இணைத்து இருந்தால் இலவச இருப்பு தொகை அறியலாம் Get Your Bank Mini Statements on Your Mobile Without the Internet

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 அறிவியல் உண்மைகள்

இன்றைய மருத்துவ பலன்

ஈ. வெ. ராமசாமி

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சோதனை

ஒரு பகுத்தறிவுவாதிக்கும்

குங்குமப்பூ

குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்

சித்தர்கள் சமாதியான இடம்