சென்னை, கம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மாணவர்கள் மதிப்பெண்களை பார்க்கும் முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.
சென்னை பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் 129 உள்ளன. இதில் தன்னாட்சி கல்லூரிகள் 23 உள்ளன. இந்த கல்லூரிகளில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 512 மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.
இந்த கல்லூரிகள் தவிர தொலை தூரக்கல்வி நிறுவனமும் உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் இந்தியா உள்பட 80 நாடுகளில் உள்ள மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.
தேர்வில் சீர்த்திருத்தம்
சென்னை பல்கலைக்கழக தேர்வில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுகிறதா? என்று சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் எஸ்.திருமகனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தொலை தூரகல்வி நிறுவனத்தில் படித்தால் நல்ல பெயர் உள்ளது. குறிப்பாக எம்.பி.ஏ. படிப்பை தொலை தூரக்கல்வியில் படித்தாலும் நல்ல வரவேற்பு இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உள்ளது.
வெளிநாடுகளில் சென்னை பல்கலைக்கழகதொலை தூரக்கல்வி நிறுவனத்தில் படிப்போருக்கு தேர்வு நடத்தும்போது வினாத்தாள்கள் ஆன்லைன் மூலம் தான் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டு பல்கலைக்கழகத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்திற்கு வினாக்கள் ஆன்லைன் மூலம் அனுப்பப்படும். அவர்கள் அதை ஜெராக்ஸ் எடுத்து மாணவ–மாணவிகளிடம் வழங்குவார்கள்.
தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுவதில்லை. அவர்கள் தாளில்தான் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதி ஒப்படைத்த விடைத்தாள்கள் ஒரு வாரத்திற்குள் கூரியர் மூலம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்கிறது.
ஆன்லைன் மூலம் தேர்வு
இப்போது சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
அவ்வாறு ஆன்லைனில் முதல் கட்டமாக 2 தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அவை ஆப்ஜெக்டிவ் டைப் ஆக இருக்கும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில்கள் இருக்கும். 4 பதிலில் ஒன்று சரியாக இருக்கும். 3 தவறாக இருக்கும். மாணவ–மாணவிகள் காப்பி அடிக்காமல் இருக்க கேள்விகளின் நம்பரில் மாற்றம் இருக்கும். ஆனால் கேள்விகள் ஒன்றாக தான் இருக்கும்.
உடனடியாக மதிப்பெண் தெரியும் முறை
2 மணி 45 மணிக்கு குறைவாக எந்த ஒரு மாணவரும் தேர்வு எழுத முடியாது. ஆன்லைனில் தேர்வு எழுதி முடிக்கும் போது அவர்கள் எழுதிய தேர்வு கம்ப்யூட்டரில் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் உடனடியாக தெரியும்.
அதாவது தேர்வு எழுதி முடிக்கும்போது மதிப்பெண் தெரிந்து விடும். இந்த புதிய முறை அடுத்த கல்வி ஆண்டில் (2017–2018–ம் ஆண்டு) சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த முறை நன்றாக இருந்தால் தொலை தூரக்கல்வியிலும் அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய முறை செனட், சிண்டிகேட் கூட்டத்தின் அனுமதி பெற்று பின்னர் கொண்டுவரப்படுகிறது. ஆன்லைனில் கம்ப்யூட்டரில் தேர்வு நடத்தும்போது எந்த கல்லூரியிலாவது கம்ப்யூட்டர் வசதி இல்லாவிட்டால் பல்கலைக்கழகம் மூலம் கம்ப்யூட்டர் கொடுக்கப்படும். இந்த முறையில் விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் தேவை இல்லை. இவ்வாறு எஸ்.திருமகன் தெரிவித்தார்.