யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/12/16

Central Teacher Eligibility Test - CTET Sep 2016 Answer Key Published

CCE -THIRD WEEK MATHS TENTATIVE ANSWER KEY - 1 to 8th Std

CCE-WORKSHEET -SCIENCE KEY ANSWER

ஜியோ சிம் இலவச சேவை வரும் மார்ச் 31 வரை நீடிப்பு..?

ரிலையன்ஸ்ஜியோ-வின் 4 ஜி ஆஃபர்மார்ச் 2017- வரை நீட்டிக்கப்படு இருப்பதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ்நிறுவனம்ஜியோ சிம்மின் 4 ஜி அறிமுகச் சலுகைஆஃபரை
டிசம்பர் மூன்றாம் தேதி வரை அறிவித்திருந்தது. இதன்படி அளவற்ற டேட்டா மற்றும்
அளவற்றஅழைப்புகளை ஜியோ 4ஜி சிம்பயனர்கள் இலவசமாக பெறுகிறார்கள். இந்நிலையில்100 மில்லியன் பயனாளர்களை அடைவதற்காக இந்த சலுகையினை மார்ச்2017 வரை நீட்டிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்ட மிட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபிஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றுகூறப்படுகிறது.

இந்நிலையில்தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராயின் விதிகளின்படி, ஜியோ உள்பட எந்ததொலை தொடர்பு நிறுவனமும் தாங்கள்வழங்கும் சலுகையை 90 நாட்களுக்கு நீட்டிக்கக் கூடாது.

அதனால்ஜியோ வின் இந்த ஆஃபர்நடைமுறைபடுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால்ஜியோ ‘வெல்கம் ஆஃபர் ’ எனபெயரை மாற்றி இந்த சலுகைகளைமீண்டும் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது

IAS தேர்வு என்றால் என்ன?

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

அன்னை தெரேசாவின் வரிகள்

அறிவியல்

இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள்

இந்து மதத்தில் காகத்திற்கு உணவிடுவது ஏன்

இரத்தம் பற்றிய அறிய பயனுள்ள தகவல்கள்

உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களை அடையாளம் காட்டுகிறதா

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும்

உண்மையா?

உமிழ்நீர்

30/11/16

நமது SPD மேடம் அவா்களின் ஆனைப்படி அனைத்துப் பள்ளிகளிலும் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு 8.12.2016 அன்று கீழ்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.


நாளை முதல் கனமழை பெய்யும், ஆனா, வெள்ளம்லாம் வராது... நம்பிக்கை தரும் "வெதர்மேன்"

சென்னை: கடந்தாண்டைப் போலவே நாளை பெய்ய இருக்கும் கனமழையால் வெள்ளம் வரலாம் என யாரும் அஞ்சத் தேவையில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மழை என்று வந்து விட்டாலே பலருக்கும் ரமணன் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சமூக வலைத்தளவாசிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் போடும் பதிவுகள்தான் நினைவுக்கு வரும். கடந்தாண்டு சென்னை வெள்ளம் வந்த போது அவர் போட்ட பதிவுகள் பலருக்கும் உதவி செய்தது. எனவே, இந்தாண்டும் இவரது பேஸ்பும் பக்கத்தை பலரும் கவனித்து வருகின்றன.
இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்தாண்டும் இதே டிசம்பர் 1ம் தேதி கனமழை பெய்ததால் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆண்டும் அதே நாள் கனமழை பெய்ய இருப்பதால் மக்கள் மத்தியில் வெள்ளம் குறித்த பீதி அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த பீதி தேவையற்றது, தேவையற்ற புரளிகளைப் பரப்ப வேண்டாம் என தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பிறகு தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் முதல் காற்றழுத்த தாழ்வு நிலை இதுதான். முன்பு உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகளும் வேறு திசையில் நகர்ந்ததால், தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவியது.
தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, டிசம்பர் 1ம் தேதி தமிழ்நாடு கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது டிசம்பர் 1 அல்லது 2ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்கலாம். அப்போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும்.
சென்னை வரலாற்றில், இந்த நவம்பர் மாதம்தான் மிகவும் வறட்சியான மாதமாக பதிவாகியுள்ளது. ஆனால், அதே சமயம், இந்த டிசம்பர் 1ம் தேதி பெய்யும் கன மழை காரணமாக நிச்சயம் வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. கடந்த ஆண்டைப் போல வெள்ளம் ஏற்படும் என்று புரளியை நம்ப வேண்டாம்.
அதே சமயம், சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும். கடலூர் முதல் புதுசேரி வரையில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்.
டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். படிப்படியாக அடுத்தடுத்து நாட்களில் மழை குறையும். 2 மற்றும் 3ம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMHJbWiuAbLSvmsFvCjXuLxHaQ9hc4bgKkJOVQI4QSJyWBJaw_RG6tVCo03A4S7nNKuUM_B-ONnXkgZh3mtD-FjMAXaWSa_jcfI7n6WGzZgi37jJws9jUD-k6f_l05dWbQ9rggOZemV48/s320/IMG-20161129-WA0365.jpg

டெல்லி ஜந்தர்மந்தரில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்

செல்லாத ரூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது

புதுடில்லி:'வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம், போதிய பண இருப்பு உள்ளதால், செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின், நீட்டிக்கப்படாது' என, மத்திய அரசு கூறியுள்ளது. 
ராஜ்யசபாவில் நேற்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால்எழுத்து மூலம் அளித்த பதில்:வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுகள் இருப்புள்ளன. 100 ரூபாய்நோட்டுகளை வினியோகிக்கும் பணிகள், ஏற்கனவே துவங்கிவிட்டன. வங்கிகளில் செல்லாத நோட்டுளை டிபாசிட் செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின் நீட்டிக்கப்படாது. 


சிறிய தொகை

கிராமப் பகுதிகளின் தேவைகளுக்காக, 100ரூபாய் போன்ற சிறிய தொகை நோட்டுகளை சப்ளை செய்யும்படி, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், ராஜ்யசபாவில் அளித்த மற்றொரு பதிலில், ''வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவைக்கேற்ப அதிகரிக்கும்படி, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது,'' என்றார்.

பஸ் ஊழியர் சம்பளத்தில் ரூபாய் 3,000 ரொக்கம்

சென்னை: அரசு பஸ் ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாயை, ரொக்கமாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. 
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகத்தில், 1.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காரணமாக, இந்த மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும்
என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாய் மட்டும் ரொக்கமாக வழங்க, போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதில், மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும், 22 ஆயிரத்து, 400 ஊழியர்கள் பயனடைவர். அவர்கள், ஒரு வாரத்திற்கு, ஏ.டி.எம்.,களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்