தமிழக கல்வித்துறை என்பதுவணிகமயமாக மாறி வருவதாக தமிழககாங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டஅறிக்கையில், ''6 முதல் 14
வயது நிரம்பிய அனைவருக்கும்நாடு முழுவதும் கட்டாயக் கல்வி உரிமை வழங்கும்சட்டத்தை கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 2006-ல்நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அனைத்து தனியார் பள்ளிகளும்ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களில் ஏழைமாணவர்களை சேர்க்க வேண்டுமென ஆணைபிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2013-14-ம் கல்வி ஆண்டில்25 சதவீத ஒதுக்கீட்டின்படி, தமிழகத்தில் மொத்தம் ஒதுக்கப்பட வேண்டியஇடங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம். ஆனால், 16 ஆயிரத்து194 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 25 சதவீத ஒதுக்கீடுவழங்க வேண்டிய தனியார் பள்ளிகள்8.8 சதவீதம்தான் ஒதுக்கியிருந்தன.
எல்லாவற்றையும்மிஞ்சுகிற கொடுமை என்னவெனில், தமிழகத்தில்உள்ள 10,758 தனியார் பள்ளிகளில் 25 சதவீதஒதுக்கீட்டின் படி சேர்க்க வேண்டியமாணவர்களில் ஒரே ஒரு மாணவர்தான்சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், 2015-16-ம் கல்வியாண்டில் மாணவர்கள்சேர்க்கை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக கல்வியமைச்சர் கூறியிருக்கிறார். எனவே, கல்வி உரிமைச் சட்டப்படிஎவ்வளவு மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்என்ற விவரத்தை கல்வியமைச்சர் வெளியிட வேண்டும்.
மேலும், தமிழகத்தில் படிக்கிற மாணவர்களின் தரம் குறித்து செய்யப்பட்டஆய்வறிக்கை மிகுந்த அதிர்ச்சியை தரும்வகையில் உள்ளது. இந்த அறிக்கையின்படிகிராமப்புற பள்ளிகளில் முதல் வகுப்பு முதல்எட்டாம் வகுப்புவரை படிக்கிற மாணவர்களில் 21 சதவீதத்தினர்தான் முதல் வகுப்பு பாடங்களையேபடிக்க திறனுள்ளவர்களாகவும், இரண்டாம் வகுப்பு பாடத்தை 30 சதவீதமாணவர்கள்தான் படிக்க முடிகிறது என்கிறஆய்வறிக்கையின் கூற்றை கண்டு அதிர்ச்சியடையாதவர்கள்இருக்க முடியாது.
ஆனால், மத்திய பாடத்திட்டம், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களின் கல்வித்திறன், அரசு பள்ளிகளில் படிக்கிறமாணவர்களைவிட மிகுந்ததாக இருப்பதால், தமிழக மாணவர்களிடையே கல்வியறிவில்மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவாகி வருகிறது. இந்நிலையின்காரணமாக தமிழக கல்வித்துறை என்பதுவணிகமயமாக மாறி வருகிறது.
அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததால்தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் படையெடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதைஉடனடியாக தடுத்து நிறுத்த தமிழகஅரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களின் தரம்உயர்த்தப்பட்டு, கற்பிக்கும் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.