யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/16

தவறாக கணக்கிடப்படும் EL விடுப்பு !!

ஈட்டிய விடுப்பிலிருந்து மருத்துவ விடுப்பை கழித்தலில் குறைபாடுகளும்.... ஆசிரியர்களுக்கு ஏற்படுகிற இழப்புகளும்..,ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் 365 நாட்கள்(365/21.47=17days)அதற்கு 17 நாட்கள் EL வழங்கப்படுகின்றது தற்போது ஒரு கல்வியாண்டில் 21 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்திருந்தால் (365-21=344,344/21.47=16days)16 நாட்கள் EL வழங்கப்படுகின்றது அதே சமயத்தில் 
ஒரு கல்வியாண்டில் வெறும் 3 நாட்கள் மட்டுமே ML எடுத்தவர்களுக்கும்(365-3=362,362/21.47=16.86)16.86 என்பதில் தசம இலக்கம் கணக்கில் கொள்ளப்படாமல் 16 நாட்கள் மட்டுமே EL வரவு வைக்கப்படுகின்றது,...3 நாள் Ml க்கு 1 நாள் EL கழிக்கலாமா?இதே போல் ஒவ்வொரு கல்வியாண்டிலும் குறைவான மருத்துவ விடுப்பிற்கெல்லாம் (2முதல் 10நாட்கள்)1நாள் ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட்டு அதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 3முதல் 10 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பு இழப்பு ஏற்படுகிறது.....21நாட்கள் மருத்துவ விடுப்புக்கு மட்டுமே 1ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு சார்ந்த ஆசிரியர் கணக்கில் மீள வரவு வைக்கப்படல் வேண்டும்....

கடைசி நேரத்தில் ரயில் பயணம் மேற்கொள்பவரா நீங்கள்? சலுகை விலையில் பயணச்சீட்டு !!

கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடிப் போய் ரயிலில் ஏறிப் பயணிப்பவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்துள்ளது.

கடைசி நேரத்தில் பயணிப்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கும் போது படுக்கை வசதி 
கொண்ட ரிசர்வேஷன் டிக்கெட் இருக்கிறதா என்று கேட்க வேண்டும். ரிசர்வேஷன் கோச்சில் காலி இடம் இருக்கும் பட்சத்தில் அதற்கான டிக்கெட்டை வாங்கி படுக்கை வசதி கொண்ட ரிசர்வேஷன் கோச்சில் பயணிக்கலாம். இவ்வாறு டிக்கெட் வாங்கும்போது பத்து சதவீத தள்ளுபடியும் உண்டு என்பது தான் முக்கியமான விஷயம்.

கடைசி நேரத்தில் அட்டவணை (சார்ட்) தயாரான பின்பு தான் இந்தச் சலுகையினை பெற முடியும் என்பதால் ரயில் புறப்படுவதற்கு இரண்டரை மணி நேரத்துக்குள் டிக்கெட் வாங்குபவர்கள் இந்தச் சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனை அடுத்த ஆறு மாதத்துக்குப் பரிசோதனை முறையில் வைத்திருப்பார்கள். அதிகளவில் வரவேற்பு இருக்கும் பட்சத்தில் இதனைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள்.

கடைசி நேரத்தில் வாங்கும் தள்ளுபடி டிக்கெட்டுக்கு மற்ற டிக்கெட்டில் உள்ளது போன்ற ரிசர்வேஷன் கட்டணம், அதிகவேக ரயில் கட்டணம், சேவை வரி போன்றவை எல்லாம் இருக்கும். அடிப்படை பயண கட்டணத்தில் மட்டும் பத்து சதவீத தள்ளுபடி என்பதை நினைவில் கொள்ளவும். ஏற்கெனவே இன்டர்நெட்டில் ரயில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு சேவை வரி தள்ளுபடி செய்திருந்தது நினைவில் கொள்ளவும்.

கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டோ ரயில்களில் கடைசி நேரத்தில் பயணித்தால் சீட்டு வாங்கும்போது டிமாண்ட் அதிகளவில் இருந்தால் 50% வரை டிக்கெட் உயர்த்தப்பட்டது. ஆனால் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இதனை அறிவித்த பின்பு ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டே ரயில்களில் அதிக காலியிடங்கள் இருந்திருக்கின்றன. தக்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதும் குறைந்திருக்கிறது. இதனால் இப்போது தக்கலில் பதிவு செய்யும் டிக்கெட்டின் எண்ணிக்கையை 10% சதவீத இடத்தைக் குறைத்து இருக்கிறார்கள்.


இனி வரும் காலங்களில் அதிக பயணிகள் கொண்ட ரயில்களில் ஆர்ஏசி எண்ணிக்கையையும் ஒவ்வொரு ரயிலும் அதிகரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு இரண்டாவது படுத்துறங்கும் பெட்டியிலும் ஆர்ஏசி ஐந்தில் இருந்து ஏழாகவும் உயர்த்த உள்ளார்கள். இதன் மூலம் ஒரே கோச்சில் பதினான்கு பேர் ஆர்ஏசியில் இடம் பெறுவார்கள். இதைப்போலவே ஏசி கோச்சில் இரண்டிலிருந்து நான்காக உயர்த்த உள்ளார்கள். இதன் மூலம் ஒரு கோச்சில் எட்டு பேர் இடம்பிடிப்பார்கள். இதைப்போல இரண்டாம் வகுப்பு ஏசி வகுப்பில் இரண்டு பேருக்கு பதிலாக மூன்று பேர் என மொத்தம் 6 பேர் இடம்பிடிக்க உள்ளார்கள்.

ஆனால் இந்த முறை நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்குச் சிரமத்தையே தரும். டிடிஆர் எப்போது வருவார்? எப்போது நமக்கு ஒதுக்கீடு செய்வார்கள் என்ற காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதன் மூலம் ஒரு நபர் படுக்கும் வசதி கொண்ட சீட்டில் இரண்டு பேர் நீண்ட தூரம் அமர்ந்து செல்வார்கள். அதுவும் முழு கட்டணத்தையும் செலுத்தி இருப்பார்கள் என்பதால் ரயில்வேக்கு லாபம்.

ராஜஸ்தானி, டொரண்டோ, சதாப்தி ரயில்களில் தக்கல் அளவைக் குறைத்த அதே வேளையில், அதிகளவில் பயணிக்கும் ரயில்களில் எங்கு அதிகளவில் பயணிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இனி வரும் காலங்களில் இதர ரயில்களில் தக்கலின் அளவினை 30% வரை அதிகரிக்கவும் முடிவு செய்து இருக்கிறார்கள். இதன் மூலம், தக்கல் சீட்டு பெறும் கூடுதல் கட்டணத்தால் கணிசமான வருமானத்தை எதிர்பார்த்து இருக்கிறது ரயில்வே.

இந்த நடவடிக்கைகள் மூலம், ரயில்வே நிர்வாகம் எப்படி எல்லாம் வருமானத்தை உயர்த்துவது என நிறைய மெனக்கெட்டு யோசித்துக்கொண்டு இருக்கிறது என்றே தோன்றுகிறது. பயணிகளுக்கு நல்லது நடந்தால் சரி தான்.

காலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான, அரசு உத்தரவை வெளியிடாவிட்டால், ஜனவரியில் நடைபெறும் மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,'' என அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார்.


தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில் திருமங்கலத்தில் நடந்த ஓய்வூதியர் தின விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 2003ம் ஆண்டிற்கு பின்னர், அரசு ஊழியர் சங்க அமைப்புகளின் சார்பில் வலுவான போராட்டம் நடத்தப்படவில்லை. அரசு ஊழியர்களையும், பெண் ஊழியர்களையும், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களையும் ஒன்று திரட்டுவதில் பிரச்னையும், பலகீனமும் உள்ளது. அரசு நிர்வாக பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் உண்மை நிலை மற்றும் கோரிக்கை குறித்து முறையாக ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்வதில்லை. அவர்கள் ஆட்சியாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடைவெளி ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையை மாற்ற நாம் முன்பு போல் ஒன்று திரள வேண்டும். நமக்குள் கூட்டு சக்தியை உருவாக்க வேண்டும். பெண் ஊழியர்கள் உட்பட அத்தனை அரசு ஊழியர்களும் சென்னையில் ஒன்று திரண்டால், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து விடலாம். 3.5 லட்சம் தொகுப்பூதிய பணியாளர்களும் ஒன்று திரண்டால் தொகுப்பூதிய முறையை மாற்றி விடலாம். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் 20 சதவீதம் உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்குவது, தொகுப்பூதிய திட்டத்தை ஒழிப்பது, மீண்டும் நிர்வாக தீர்ப்பாய சிறப்பு குழு அமைப்பது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இவை நிறைவேறாவிட்டால், திருவண்ணாமலையில் ஜனவரி 6, 7, 8, தேதிகளில் நடக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பிளஸ் 2 தனித்தேர்வு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 தனித்தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புவோரிடம் இருந்து ‘ஆன்-லைனில்’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு சென்று வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.


தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ‘ஆன்-லைனில்’ பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ‘ஆன்லைனில்’ விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான அறிவுரை ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

ஒப்புகை சீட்டு

‘ஆன்-லைனில்’ விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வு துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே ஒப்புகைச் சீட்டை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.. வாழ்க்கைக்கு உதவும் கல்வியே சிறந்தது - ஜெர்மன் அறிஞர் பேச்சு

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர். வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்று கொண்டால் சிறப்பாக இருக்கும். மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை என ஜெர்மன் நாட்டை சேர்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர். நிகழ்வுக்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன்,எல்.ஐ.சி.வினை தீர்த்தான், அழகப்பா பல்கலைகழக அலுவலர் காளைராஜன், மணலூர் அழகு மலர் பள்ளி தாளாளர் யோகலேட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேசிய சுபாஷினி, நிறைய வாசித்தால் நல்ல குணங்கள் ஏற்படும்.வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்று கொண்டால் சிறப்பாக இருக்கும். மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.ஜெர்மானியர்கள் கடமை உணர்வு அதிகம் உள்ளவர்கள்.அங்கு இயற்கை சூழ்நிலை நன்கு பாதுகாக்கபட்டுள்ளது. இயந்திரவியல் கல்வி முறை அதிகம். அறிவை ஆக்க பூர்வமாக பயன்படுத்தும் நாடுகளில் ஜெர்மன் முன்னிலை வகிக்கிறது. jerman tamil marapu arakattalai president subhashini discussion with school student தமிழகத்தில் தொன்மையான விசயங்களான கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும். கற்கும் பருவத்தில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.கணிதம், கணிபொறி தொடர்பான அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் பெரிய வெற்றிகளை அடையலாம். புத்தகங்களை நிறைய வாசித்தல் நல்ல குணங்கள் உண்டாகும். இனத்தின் வரலாறை பாதுகாப்பதுதான் சந்திதியனரின் முக்கிய கடமை. ஜெர்மன் நாட்டில் அதிகமான வளர்ந்த தொழில்நுட்பம் பயன்படுவதால் அந்த நாட்டை தேர்ந்தெடுத்து அங்கு சென்று பணிபுரிந்து வருகின்றேன். எந்த விசயம் நமக்கு வரவேயில்லை என்று நினைக்கிறோமோ அதனை மீண்டும்,மீண்டும் முயற்சி செய்து அது நன்றாக வரும் வரை அதனை தொடர்ந்து செய்ய வேண்டும். நிச்சயம் நம்மால் அதனை அடைந்து விட முடியும். கணினி மூலமாக நல்ல கல்வியை பெற்று வாழ்க்கையில் சிறந்த வெற்றியை பெற முயற்சி செய்ய வேண்டும். அது உங்களால் முடியும். உங்களின் கேள்வி கேட்கும் ஆற்றல் என்னை வியக்க வைக்கிறது. அதற்கு என் பாராட்டுக்கள். தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக பள்ளியின் செயல்பாடுகளை பாராட்டி மாணவர்களுக்கு கணினி கற்கும் வகையில் கணினி வழி கல்விக்காக கணினி ஒன்றினை பரிசாக வழங்கினார். கல்வி கற்பது வாழ்வில் இன்றியமையாதது. கல்வி கற்பதன் மூலம் பல வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். சிறந்த கல்வியாளர்களாக வர வேண்டும். வாழ்க்கை முழுவதும் பல வழிகளிலும் கல்வி தான் சிறந்த, உற்ற நண்பனாக இருக்க முடியும். வீதிகளில் பல இடங்களிலும் பார்க்கும் போது ஆங்காங்கே குப்பை கிடக்கிறது. குப்பைகளை கொட்டக் கூடாது. அதற்கான இடங்களில் கொட்ட வேண்டும்.யாரேனும் குப்பையை கொட்டினால் அதைஎடுத்து தொட்டியில் போடவேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் போட்டால் ஏற்படும் கெடுதல்களை பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இளம் வயதிலேயே கீரை போன்ற சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாணவர்கள் காயத்ரி, செந்தில்குமார், தனலெட்சுமி, ராஜேஷ், அய்யப்பன், ராஜேஸ்வரி, ரஞ்சித், ஜெனிபர்,ராஜி உட்பட பலர் கேள்விகள் கேட்டனர். ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

20/12/16

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்துமறைந்துவிட்டால்

நகம் கடிப்பது மனநிலை பாதிப்பா

நகைச்சுவை

நன்றி மறந்த சிங்கம்

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள்

நாம் மாற வேண்டும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

பாதுகாப்பான இன்டெர்நெட் பேங்கிங் வழிமுறைகள்

புகழ்பெற்ற கல்லறை

புதினா ஒரு மருத்துவ மூலிகை

புதிய கல்விக்கொள்கை - ஒரு தேன் தடவிய விஷம்

பூண்டை வறுத்து சாப்பிட்டால்

மகிழ்வித்து மகிழ்

மனிதனின் சுயநலத்தால் 60

மனைவியை மடக்க சில யோசனைகள்