யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/1/17

NEET Exam:நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்:தமிழக அரசு தகவல்.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க 2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
எம்.பி.பி.எஸ் மற்றும் மேற்படிப்புக்கென தனித்தனியாக இரு சட்டங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீட் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது.

இதனால் தமிழக மாணவர்களை காக்கும் வகையில் இரு சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.எனவே நீட் தேர்வின்றி, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக இச்சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பதால் இச்சட்டங்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுதலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு இச்சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற பேரவை கூட்டத் தொடர் ஓரிரு நாள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23 கடைசி

அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனமான, எய்ம்ஸ் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, பிப்., 23 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு கட்டுப்பாட்டில், டில்லி உட்பட, நாடு முழுவதும் ஏழு இடங்களில், எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

வரும் கல்வி ஆண்டிற்கு, மே, 28ல், 'ஆன்லைன்' வழியில் நுழைவு தேர்வு நடக்கும் என, எய்ம்ஸ் அறிவித்து உள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, ஜன., 24ல் துவங்கியது. பிப்., 23 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை, http://www.aiimsexams.org/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னுரிமை

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தேர்வு வந்தாலும், 85 சதவீத, அரசு இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படும்,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர்தெரிவித்தார்.


சென்னையில், 'தினமலர்' நடத்திய, 'நீட்' தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சியில், சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் பேசியதாவது: 'நீட்' தேர்வில், கடந்த ஆண்டு விதிமுறைகளில், இந்த ஆண்டு மாற்றம் வர வாய்ப்புள்ளது. 15 ஆண்டு களாக, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை படிப்பு மட்டுமின்றி, முதுநிலை படிப்புக்கும், 'நீட்' தேர்வு உண்டு. கடந்த ஆண்டு முதல், இந்த நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வு கட்டாயமாகும் என, தெரிகிறது. ஆனாலும், மாநில அரசின் இட ஒதுக்கீடுகளில் பெரிய அளவில் மாற்றம் வராது. மத்திய அரசின், 15 சதவீத இடங்களுக்கு, 'நீட்' மதிப்பெண்ணின் படி, அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

மற்ற, 85 சதவீத மாநில இடங்களில், 'நீட்' தேர்வு மதிப்பெண் படி, அந்தந்த மாநில அரசுகளே, மாநில மாணவர்களுக்கு, 'அட்மிஷன்' வழங்கும். வெளிநாட்டு மாணவர் கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, 'நீட்' தேர்வு கிடையாது; மாணவர் சேர்க்கையும் கிடையாது. அதேபோல், வெளிநாடுகளில், 'நீட்' தேர்வு மையமும் கிடையாது.

'எய்ம்ஸ்' எனப்படும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜிப்மர் எனப்படும், ஜவஹர்லால் நேரு மருத்துவ உயர்கல்வி நிறுவனத்தில் சேர, 'நீட்' மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது. அவற்றுக்கென தனியாக தேர்வு நடத்தப்படுகிறது. ஜிப்மர் தேர்வில், புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டும், மதிப்பெண்ணில் சலுகை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

விதிமுறைகள் மாற வாய்ப்பு

வரும் ஆண்டில், 'நீட்' விதிமுறைகளில், மாற்றங்கள் வரலாம். பிப்., முதல் வாரத்தில், அதிகாரபூர்வமாக, 'நீட்' தேர்வு தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்வில், தவறான விடைகளுக்கு, நான்கில் ஒரு பங்கு மதிப்பெண், மைனஸ் மதிப்பெண்ணாக கழிக்கப்படும். அதேபோல், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண், கட்டாயம் வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்தினாலும், மத்திய அரசு அங்கீகரித்த, அனைத்து மாநில பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து தான், வினாத்தாள் அமைக்கப்படும். தேர்வு எழுத செல்லும் மாணவர்கள், ஆடைகள், ஆபரணங்கள் அணிவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறினால், தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடைக்காது.

NEET EXAM:விரைவில் மாதிரி நுழைவு தேர்வு

தமிழக மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வில் வெற்றி பெறும் வகையில், விரைவில், 'தினமலர்' சார்பில், மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது.
'தினமலர்' சார்பில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கான வழிகாட்டி கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், ஏராளமான மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்

ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்நிலையில், மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு வழிகாட்டும் வகையிலும், 'நீட்' தேர்வு குறித்த மாதிரி நுழைவு தேர்வை, 'தினமலர்' நடத்த உள்ளது. இந்த தேர்வு, எங்கே, எப்போது நடத்தப்படும் என்ற விபரங்கள், 'தினமலர்' நாளிதழில், விரைவில் அறிவிக்கப்படும்.

29/1/17

ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறைப்படுத்துக: வாசன் கோரிக்கை.

ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் உள்ள முறைகளை மாற்றி பயனுள்ள முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமாகா
தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டில் ஆசிரியர்களின் பணி இன்றியமையாதது. மாணவர்களை நல்ல முறையில் உருவாக்குவதற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியது. பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால் அவற்றை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் நிரப்ப வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.

தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்தவர்களின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. இருப்பினும் தற்போது ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இம்முறையில் மொத்தமுள்ள 100 சதவீதத்தில் தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60 சதவீதமும், மீதமுள்ள 40 சதவீத மதிப்பெண்ணை +2, பட்டப்படிப்பு, பி.எட். ஆகிய படிப்புகளில் பெற்ற மதிப்பெண்ணைச் சேர்த்தும் மதிப்பிட இருக்கிறார்கள். இம்முறையினால் ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டப் படிப்புகளையும், ஆசிரியர் தகுதிக்கானப் படிப்புகளையும் முடித்துவிட்டு வேலையில்லாமல், பதிவு செய்து காத்திருப்போர்களே பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

தகுதித் தேர்வு முறையில் +2, பட்டப்படிப்பு, பி.எட். ஆகிய படிப்புகளில் பெற்ற மதிப்பெண்ணில் 40 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொண்டால், பல ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பை முடித்தவர்களுக்கும், தற்போதைய கல்வி முறையில் மதிப்பெண் பெறுபவர்களுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும்.
எனவேஆசிரியர் தகுதிக்கான படிப்புகள் முடித்தவர்கள் அனைவரின் நலனில், ஒத்தக் கருத்தின் அடிப்படையில், ஏற்றத்தாழ்வற்ற நிலையை உருவாக்கும் விதமாக தற்போதுள்ள தகுதித் தேர்வு முறையில் உள்ள முறைகளை மாற்றி பயனுள்ள முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.


எனவேஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும், தற்போது தனியார் கல்வி நிலையங்களில் அரசுப் பணியல்லாத பகுதி நேர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பாகுபாடு ஏற்படாத வகையில் அரசு ஆசிரியர் பணி வழங்கிட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

பணிபுரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பது எப்படி?

How to prepare for competitive exams while doing a job

தனியார் துறையில் வேலை, ஓய்வில்லாத உழைப்பு, சனி- ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லை, தினமும் கூடுதல் நேர வேலை, என்னதான் உழைத்தாலும் அதேற்கேற்ற அங்கீகாரம் இல்லை, ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கினால் கூட எப்போது வீட்டுக்கு
அனுப்புவார்களோ என்ற கவலை, பணி நிரந்தரம் இன்மையால் மன அமைதியில் குழப்பம், அலுவலக அரசியல்.
இவற்றை எல்லாம் மனதில் வைத்து ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற கனவுடனும், அதே நேரம் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கிற வேலையை விட முடியாமலும் பல்வேறு சகோதர/சகோதரிகள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கானது என்னுடைய இந்தப் பதிவு.

1. முதலில் வேலைபார்த்துக் கொன்டே போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால், படிப்பதற்கு போதுமான நேரம் இல்லாமை. வீட்டில் இருந்து முழு நேரம் இத் தேர்வுகளுக்கு படிப்பவர்களுடன் போட்டி போட வேண்டிய நிலைமை. அவர்கள் ஒரு நாளில் படிக்கும் பாடத்தை படிக்க நமக்கு 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம்.
எனவே, நீங்கள் எந்த எந்த வழிகளில் உங்கள் பொன்னான நேரம் செலவாகிறது என்பதனை கண்டறிந்து குறைக்க வேண்டும். டிவி பார்ப்பது, அடிக்கடி அவசியம் இன்றி வெளியே போவது, பொழுது போக்கில் அதிக நேரம் போன்ற அனாவசிய நேர செலவுகளை குறைத்துக் கொண்டு அந்த நேரங்களில் படிக்கலாம். குறைந்த பட்சம் உங்களால் நாள் ஒன்றிற்கு 4 மணி வரை படிக்க முடியும்.

2. சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை போன்ற விடுமுறை நாட்களை முழுவதுமாக பயன்படுத்தி நீண்ட நேரம் படிக்கலாம்.

3. உங்களுக்கு CL, PL போன்ற விடுமுறை வாய்ப்புகள் இருந்தால் தேவை இல்லாமல் பயன்படுத்த வேண்டாம். தேர்வு நேரங்களில் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு படிக்கலாம்.

4. அலுவலகத்தில் வேலை ஏதும் இன்றி, சும்மா இருப்பதாக நீங்கள் கருதினால், கைக்கு அடக்கமான பேப்பர்களில் (பிட்டு பேப்பர் போன்று) பாடக் குறிப்புகளை உங்களுக்கு புரியுமாறு எழுதி வைத்துக் கொண்டு நினைவு படுத்தலாம். ஆனால் இதனை அலுவலகத்தில் வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.

5. கூடுமான வரை அடிக்கடி நீண்ட தூர பயணங்களை தவிருங்கள், அவ்வாறு தவிர்க்க இயலாது செல்ல வேண்டி இருப்பின் அந்த பயண நேரங்களை படிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. உங்களது சிறு சிறு வேலைகளை பகிர்ந்து கொள்ள நல்ல நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இருப்பின் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு படிக்கலாம்.

7. கல்யாணம் ஆகாமல் தனியாக அறையில் தங்கி இருப்பவர் என்றால், சமைக்க, துணி துவைக்க என்று நேரம் செலவிடாமல் மாற்று ஏற்படுகளை செய்து விட்டு அந்த நேரத்தில் படிக்கலாம்.

8. எக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் அரசு வேலைக்கு முயன்று கொண்டு இருப்பதை அலுவலகத்தில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். நீங்கள் தற்செயலாக விடுப்பு எடுத்தாலும் படிப்பதற்கு லீவு போட்டு விட்டார் என்று கதையை கிளப்புவார்கள்.

9. உங்கள் மேலாளர், உங்கள் அணி தலைவர் என்று எவரிடமும் நீங்கள் படிப்பதனை சொல்லக் கூடாது. அவர்களுக்கு தெரிந்தால் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உங்களை வேறு விதமாக நடத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேண்டும் என்றே விடுமுறை தர மறுப்பது, நீண்ட நேரம் அலுவலகத்தில் இருக்க வைப்பது, நீங்கள் வேலையில் ஏதேனும் தவறு செய்து விட்டால் நீங்கள் படிப்பதனை காரணம் காட்டி, உங்கள் கவனம் அலுவலகத்தில் இல்லை இன்று கூறுவது இப்படி உங்களை மறைமுகமாக தாக்கலாம்.

10. ஆயிரம் பொய் என்பது திருமணத்திற்க்காக மட்டும் அல்ல, அரசு வேலைக்காகவும் சொல்லலாம். தேர்வு நேரங்களில் விபத்து, டைபாய்டு காய்ச்சல் என்று எதையாவது கூறி குறைந்தது ஒரு 10 நாட்கள் விடுமுறை எடுத்து விடுங்கள். ஏனென்றால், படிப்பதற்கு - பரீட்சைக்கு என்று நீங்கள் விடுமுறை கேட்டால் எந்த அலுவலகத்திலும் தர மாட்டார்கள். சம்பளம் குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை. நிம்மதியாக இறுதிக் கட்டத்தில் படிக்கலாம்.

11. ஒரு அலுவலகத்தில் இருந்து நீங்கள் வேறு ஒரு அலுவலகத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை இருப்பின், உடனடியாக புதிய அலுவலகத்தில் சேர்ந்து விடாதீர்கள். அதிகமாக ஒரு 20 முதல் 30 நாட்கள் வரை கழித்து புதிய அலுவலக பணியில் சேருங்கள். இந்த பொன்னான நாட்களை நன்கு படிக்க பயன்படுத்தலாம்.

12. அலுவலக ரீதியாக வெளி ஊர்களுக்குச் செல்ல வேண்டி இருப்பின், அல்லது அங்கு தங்க வேண்டி இருப்பின் பாடப் புத்தகங்களை படிப்பதற்கு உடன் எடுத்துச் செல்லலாம்.

13. TNPSC யைப் பொறுத்த வரை, நீங்கள் வேலைபார்த்துக் கொண்டே உங்களது மொழி பாடத்தில் 90+ வாங்க முடிகிறது என்றால், உங்கள் வருமானத்தை நம்பி உங்கள் குடும்பம் இல்லை என்றால், உங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்ய மனிதர்கள் இருப்பின் முக்கியமான தேர்வு அறிவிப்பிற்கு முன்பு குறைந்த பட்சம் ஒரு 6 மாதத்திற்கு முன்பு வேலையை விட்டு விட்டு தன் நம்பிக்கையுடன் படிக்கலாம். வெற்றி நிச்சயம்.

14. உங்களது சம்பளத்தில் கொஞ்சம் சேமித்து வைத்துக் கொண்டு ராஜினாமா செய்து விட்டு படிக்கும் கால கட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

15. வேலையை எந்த தேர்விற்க்காக விட போகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

TNTET 2017 & PG TRB தேர்வுகள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் மிக மிக விரைவில்..

TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 - போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று
காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.

TNTET – 2017 Tamil Nadu Teacher Eligibility Test – 2017 is going to be conducted in the last week of April.

Separate Application Forms are designed for TNTET Paper I and Paper II.

Application Forms allocated to each Revenue District will be delivered to the Chief Educational Officers on or before 
10.02.2017.

 CEO has to allot to each DEO and then to each school.

Chief Educational Officers should handover the Application Forms to the District Educational Officers in their jurisdiction and coordinate with the sale of Application Forms.

This time also like the previous TNTET, it is decided to sell the TNTET Application forms through selected Hr. Sec. Schools.

 Application Forms should be shared between schools as and when there is necessity.

 A Coordinator can be appointed for 10 schools each with the officers like the District Elementary Education Officers, Personal Assistants and Deputy Inspectors with the work of sending the Application Forms to needy schools from the Chief Educational Offices.

TNTET Application Forms should be sold in the selected Hr. Sec. Schools from 9.00 AM to 6.00 PM from mid February'2017 to end of February'2017 tentatively 27.02.2017.

 Selected Hr. Sec. School should sell the Application Forms from 09.00 AM to 06.00 PM on all working days (including Saturdays) with at least two staff members on duty.

It is strictly instructed that only ONE Application Form should be sold to each candidate.

 Announcements may be made on the notice boards of Hr. Sec. Schools about the separate application forms for Paper I and Paper II and about the submission of filled-in Application Forms only in the District Educational Offices.

 Chief Educational Officers should take personal care on the sale and receipt of Application Forms. II. Receipt of Filled-in Application Forms in the District Educational Offices. 1. At least 13 Teams (6+7 Teams for Paper I and Paper II) or more as per need may be formed for the receipt of Filled-in Application Forms in the District Educational Offices.

 These Teams should check the filled-in Application Forms to ensure whether all the particulars are filled-in and the Challan for the payment of examination fee is attached.

 The Teams should issue an acknowledgement on the xerox copy of the Application Form as prescribed by the TRB (in Annexure III) and it should be duly signed by the head of the Team without fail.

 Last date for Sale of Application Forms tentatively 27-02- 2017 and receipt of Filled-in Application forms in the District Educational Offices on 28.02.2017 should be closed at 05.00 PM without fail.

TNTET - 2017 

 விண்ணப்பங்களின் விற்பனை துவக்கம் - 15.02.2017

விண்ணப்பங்களின் விற்பனை முடிவு - 08.03.2017

 TNTET Paper 1 தேர்வு - 29.04.2017

 TNTET Paper 2 தேர்வு - 30.04.2017

PG TRB தேர்வு - 20.04.2017

தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்க... திட்டம் ஆதாயத்துடன் செயல்படும் அதிகாரிகளை மாற்ற முடிவு

தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்கும் வகையில், உயர் அதிகாரிகளை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது;
இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி செயலக கட்டுப்பாட்டில், பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, தேர்வுத் துறை, மெட்ரிக் இயக்குனர் போன்ற, பல துறைகள் உள்ளன. இவற்றுக்கு, தனி இயக்குனர்கள் உள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் அனுபவம் மிக்கவர்கள் என்றாலும், செயலகத்தில் உள்ள அதிகாரிகள், அவர்களைச் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என, புகார்கள் உள்ளன. பணி நியமனம், பணியிட மாற்றம், நிதி ஒதுக்குதல் போன்றவற்றில், செயலக அதிகாரிகளின் தலையீடு இல்லாமல், எந்த கோப்பும் நகர்வதில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இயக்குனரகத்துக்கு தெரியாமல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை, செயலக அதிகாரிகளே நேரடியாக தொடர்பு கொண்டு, பரிந்துரைகள் செய்கின்றனர். இதனால், நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுவதாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் தலைமையில் உள்ள அரசு நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இயக்குனர்களுக்கு நெருக்கடி கொடுத்து, ஆதாயத்துடன் செயல்படும், உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பள்ளிக்கல்வியை, மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு நிகராக கொண்டு வர, மறைந்த முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அதற்கேற்ப, துறையில் மாற்றம் கொண்டு வரவும், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் பதவியேற்றபோது, அவருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.


  ஆனால், தற்போதைய உயர் அதிகாரிகள், பாடத்திட்டத்தை கூட மாற்ற, தயக்கம் காட்டுகின்றனர். மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன் தயாரித்த பாடத்திட்டத்தை மாற்றவும், புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கவும், குழு அமைக்கவில்லை.மத்திய அரசும், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களும், மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்துகிறது. ஆனால், தமிழக மாணவர்கள், இந்த நுழைவு தேர்வுக்கு தகுதி பெற முடியாததால், வெளிமாநில மாணவர்களுக்கு, அதிக வாய்ப்புகள்

கிடைக்கின்றன.இதுபோன்ற பல்வேறு விஷயங்களை மையப்படுத்தி, கல்வித் துறையை சீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வி செயலகத்தில் மாற்றம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல், தலைமை செயலரின் நேரடி பரிசீலனைக்கு பின் வெளியிடப்படும்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அமைச்சரின் அறிவிப்பு - தேர்வர்கள் குழப்பம்-அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஆண்டுக்கு இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.அதன்படி பார்த்தால் தமிழகத்தில் இதுவரை பத்து தேர்வுகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் நாட்டில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால்
2012-ல் நடைபெற்ற தேர்வில் இருந்தே பல்வேறு குழப்பங்கள் அதனை தொடர்ந்து 2013 தகுதித் தேர்வில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வந்தநிலையில்,

தற்போது வழக்குகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அடுத்து எப்போது பணிநியமன அறிவிப்பு வரும்?  தேர்வு வரும் என ஆவலுடன் தேர்வர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் தற்போது கல்வி அமைச்சர் தினந்தோறும் அறிவித்து வரும் தகவலால் தேர்வர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.


அவர்வெளியிட்ட அறிவிப்புகள்:


Nov 10, 2016
TNTET-2016:ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? -கல்வி அமைச்சர் விளக்கம்.


Nov 21,2016
TET தேர்வு மூலம் விரைவில் 4500 பணியிடம் வரைநிரப்பப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி


Jan 11, 2017
புதிதாக TET தேர்வு கிடையாது - ஏற்கனவே TET தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு 8000 பணியிடங்கள் நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.


Jan 26, 2017
TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்


Jan 27, 2017
TNTET: ஏப்ரல் 30க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர்


இதில் தேர்வர்களின் குழப்பம் என்னவென்றால் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற தேர்வர்களை கொண்டு தற்போதுள்ள பணியிடம் நிரப்பப்படுமா?  அல்லது புதிய தேர்வு வைத்து நிரப்பப்படுமா என்பதை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.


ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பு வரவுள்ளது.அதை மட்டுமே அமைச்சர் உறுதி செய்துள்ளார்.(அறிவிப்பு நிஜமாகுமா?)


அடுத்து PGTRB தேர்வு வருவதாக 6 மாதத்திற்கு மேல் பல்வேறு ஊடகங்களில் செய்திவரும் நிலையில் தாமதத்திற்கான காரணத்தையும் தேர்வு எப்போது என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தி தேர்வர்களின் குழப்பத்தை நிவர்த்தி செய்யவேண்டும்.


முன்ஏற்பட்ட குழப்பங்கள் போல் இல்லாமல் சரியான திட்டமிடலுடன் இனிவரும் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்வர்களின் எதிர்பார்ப்பு.

NMMS-2017- MAT, SAT TENTATIVE ANSWER KEY IN PDF FILE

தமிழக உள்ளாட்சித் தேர்தல் பள்ளி கோடை விடுமுறை நேரத்தில் தானா..?

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் இத்தருணத்தில், மாநில தேர்தல் கமிஷனர் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.


 உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட, ஆளும் தலைமை விரும்புகிறது. மேலும் பள்ளித் தேர்வுகள் நெருங்கி விட்டதால் தேர்தலை நடத்த முடியாத நிலை, மாநில தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டு உள்ளது. பள்ளி கோடை விடுமுறை நேரத்தில் தான், உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என கூறப்படுகிறது.
தற்போது, தனி அதிகாரிகளால், உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மாநில தேர்தல் கமிஷனர் சீதாராமனின் பதவிக்காலம், மார்ச் 21ல் முடிகிறது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
கடந்த, 2011ல், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், சோ.அய்யர், மாநில தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்; அதே ஆண்டு, தேர்தலை நடத்தி முடித்தார். அவரது பதவிக் காலம், 2013ல் முடிந்த பின், இரண்டு ஆண்டுகள் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இது, 2015 மார்ச்சில் முடிவுக்கு வந்ததால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், புதிய தேர்தல் கமிஷனராக சீதாராமன் நியமிக்கப்
பட்டார். அவர், இரண்டு ஆண்டு பதவியில் தொடர்வார் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, அவரது பதவிக்காலம், வரும் மார்ச் 21ல் முடிகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்துள்ளார். வழக்கு விவகாரங்களையும் கவனித்து
வருகிறார்.
எனவே, தேர்தல் நடத்தப்படும் வரை அவரே பதவியில் நீடிப்பாார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கமிஷனர் பதவியை பிடிக்க, சில ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், போயஸ் தோட்டத்தில் காய் நகர்த்த துவங்கி விட்டனர்.

இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FLASH NEWS-TNTET-2017 -TET தேர்வுக்கான-TRB CHAIRMAN- ன் கடிதம்

விண்ணப்பங்களின் விற்பனை துவக்கம் - 15.02.2017

விண்ணப்பங்களின் விற்பனை முடிவு - 08.03.2017

TNTET Paper 1 தேர்வு - 29.04.2017


TNTET Paper 2 தேர்வு - 30.04.2017

PG TRB தேர்வு - 20.04.2017

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்!: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை மறுநாள் தொடங்குகிறது.  மத்திய 
அரசின் பொது நிதிநிலை அறிக்கையும், தொடர்வண்டித்துறை நிநிதிலை அறிக்கையும் 92 ஆண்டுகளுக்குப் பிறகு இணைத்து தாக்கல் செய்யப்படுவதால், இதில் வெளியாகவிருக்கும் அறிவிப்புகள் குறித்து பொதுமக்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

வருமானவரி விலக்குக்கான வருவாய் உச்சவரம்பு கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை  மாத ஊதியம் பெறுவோரிடமிடருந்து நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், வருமானவரி  உச்சவரம்பு உயர்வு என்பது அவ்வப்போது பெயரளவில் செய்யப்படுகிறதே தவிர, கள யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் இல்லை. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக, பாரதிய ஜனதாக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,‘‘ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வரித் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் பாதகமற்ற, சாதகமான வரிச்சூழல் ஏற்படுத்தப்படும். வரிவிதிப்பு முறை எளிமைப்படுத்தப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.  ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் இவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு, அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் இன்று வரை வருமானவரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. அதன்பின் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துவிட்டது. மேலும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதால் மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசு ஊழியர்களின் ஊதியம் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கு இணையாக  வருமானவரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் மாத ஊதியம் பெறுவோரில் பெரும்பான்மையினர் தங்களது ஊதியத்தின் பெரும்பகுதியை வருமானவரியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மக்களிடையே வரி மீது வெறுப்பையே ஏற்படுத்தும்.

இவைஒருபுறமிருக்க வருமானவரியின் அளவை குறைத்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தான் வரி வருவாயை அதிகரிக்க முடியும். வருமானவரியின் அளவு அதிகமாக இருப்பதாலும், வரி விலக்குக்கான உச்சவரம்பு மிகவும் குறைவாக இருப்பதாலும் அதிக அளவு  வருவாய் ஈட்டுபவர்கள் கூட வருமான வரி செலுத்தத் தயங்குகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் வரி விதிப்பு முறை எளிமைப்படுத்தப்படுவதுடன், வருமான வரிவிலக்கு வரம்பும் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, வருமானவரி விலக்கு வரம்பை இப்போதுள்ள ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். அத்துடன் வருமானவரி அளவை ரூ.10 லட்சம் வரை 10% ஆகவும், ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை 20% ஆகவும், அதற்கு மேல் 30% ஆகவும் மாற்றியமைக்க அரசு முன்வர வேண்டும். அதேபோல், மூத்த குடிமக்களின் ஓய்வூதியத்திற்கு முழுமையான  வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மாற்றியமைக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். கடந்த 2012-13 ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து  தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் நோக்குடன் 2% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக 10% ஆக அதிகரிக்கப்பட்டது. அதன்பின் தங்கத்தின் இறக்குமதி குறைந்து விட்ட பிறகும், அதன்மீதான வரி குறைக்கப்படவோ, ரத்து செய்யப்படவோ இல்லை. இறக்குமதி வரி விதிப்பால் அரசுக்கு கிடைத்த லாபத்தை விட இழப்புகள் தான் அதிகமாகும். இறக்குமதி வரியால் முறைப்படியான இறக்குமதி குறைந்தாலும், தங்கம் கடத்தி வரப்படுவது பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இதனால் மத்திய அரசுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சுங்க வரி வருவாய் பெருமளவில் குறைந்திருக்கிறது.

அதேநேரத்தில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்காக ஒரு குடும்பத்தினர் ரூ.5 லட்சத்திற்கு தங்கம் வாங்க வேண்டுமானால் ரூ.50,000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கிறது. இது ஏழை மக்கள் மீது கடுமையான சுமையை சுமத்தும். எனவே, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்யவோ, அது சாத்தியமாகாத நிலையில் 5% ஆக குறைக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தொடர்வண்டித்துறையை பொறுத்தவரை தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஏராளமானவை  நிதி இல்லாமல் முடங்கிக் கிடப்பதால், அத்திட்டங்களை அடுத்த இரு ஆண்டுகளில் நிறைவேற்றி முடிக்கும் வகையில் அவற்றுக்கு நிதிநிலை அறிக்கையில் போதிய நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.’’

நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்:தமிழக அரசு தகவல்

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க 2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக
தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.பி.எஸ் மற்றும் மேற்படிப்புக்கென தனித்தனியாக இரு சட்டங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீட் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் தமிழக மாணவர்களை காக்கும் வகையில் இரு சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.

எனவேநீட் தேர்வின்றி, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக இச்சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பதால் இச்சட்டங்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுதலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு இச்சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற பேரவை கூட்டத் தொடர் ஓரிரு நாள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்- மாணவர்கள் தேர்வைக் கண்டு அஞ்ச வேண்டாம். தேர்வு காலம் பண்டிகையை போல கொண்டாடப்பட வேண்டியவை.மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,

மன்கி பாத் நிகழ்ச்சியில் மோடி, 'காந்தி நினைவு நாளை முன்னிட்டு, நாளை அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். குடியரசு தின விழாவில் பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். மாணவர்கள் தேர்வைக் கண்டு
அஞ்ச வேண்டாம். தேர்வு காலம் பண்டிகையை போல கொண்டாடப்பட வேண்டியவை. பதற்றமின்றி இருந்தால்தான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும். யாருடனும் போட்டி போடாதீர்கள். உங்களுக்கு நீங்களே போட்டி. சச்சின் டெண்டுல்கர் அப்படிதான் தனது சாதனைகளை அவரே முறியடித்துள்ளார்.

வாழ்க்கையில் இடையூறுகள் வரதான் செய்யும். அப்துல்கலாம் அதுபோன்ற தடைகளை எல்லாம் எதிர் கொண்டதால்தான் வெற்றி பெற முடிந்தது. அவரைப் போன்ற ஒரு தலைவர் கிடைப்பது மிகவும் அரிது. நேற்றை விட இன்று சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய கடலோர காவல்படை வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதியுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாட்டுக்காக சேவை செய்த கடலோர காவல்படை வீரர்களுக்கு நன்றி' என்றார்.
புதுடில்லி: தேர்வை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அணுக வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.   

மவுனஅஞ்சலி:
மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: ஜனவரி 30ம் காலை11 மணியளில், மகாத்மா காந்தி மற்றும் மறைந்த ராணுவ வீரர்கள் நினைவாக வருடந்தோறும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். இது நமது ஒற்றுமையையும் காட்டுவதுடன், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை போற்றுவது போல் ஆகும். நமது நாடு ராணுவ வீரர்கள், பாதுகாப்புபடையினருக்கு சிறப்பு மரியாதை அளித்து வருகிறது .காஷ்மீரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நாம் போற்ற வேண்டும். இளைஞர்கள் அவர்களை முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும்.

மறுசீர்திருத்தம்:
மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் நெருக்கடி ஏற்படுகிறது. மாணவர்கள் தேர்வை மகிழ்ச்சியுடன் அணுக வேண்டும். திருவிழா போல் தேர்வை பார்க்க வேண்டும். கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். நல்ல மனநிலை தான் நல்ல மதிப்பெண்களை தரும். தேர்வின் போது அனைவரும் குழுவாக செயல்பட வேண்டும். சிறிது நேரம் ஓய்வெடுப்பது நினைவாற்றலுக்கு சிறந்த மருந்தாகும். இது எனது சொந்த அனுபவம். அனைத்து அறிவும், விஷயமும் உங்களுடன் உள்ளது. நீங்கள் கற்றறிந்ததை அறியவே தேர்வு நடத்தப்படுகிறது. வாழ்க்கையின் வெற்றிக்கு தேர்வு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. வாழ்க்கையின் வெற்றி தோல்விக்கு, தேர்வு சிறிதளவு உதவுகிறது.தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை மிக எளிதாக எதிர் கொள்ள வேண்டும். மகிழ்வோடு தேர்வை எழுதுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும் -முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை

28/1/17

Breaking News: ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்

ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கோள்ளபட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

 உள்ளாட்சித் தேர்தலில் சரியாக இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என
திமுக வழக்கு தாக்கல் செய்திருந்தது.

 வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வேட்பாளருக்கு இடஒதுக்கீடு பின்பற்றவில்லை எனக் கூறி கடந்த அக்டோபர் மாதம் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்தது.

 இந்நிலையில் இது தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

அப்போது தேர்தல் நடத்த எவ்வளவு காலம் தான் தாமதிப்பீர்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 மேலும் 5 வார கால அவகாசம் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

 இதேபோல் உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் செவ்வாய்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 தேர்தல் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.


இந்நிலையில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது சிரமம் என தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

ரூபெல்லா தடுப்பூசி போடக் கூடாதா? வாட்ஸ் அப்பில் பகிரும் முன் படிக்க வேண்டியவை

மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி குறித்து சமீபத்தில் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகும் மிக அவசரச் செய்தி மக்களை
குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, தமிழகப் பள்ளிகளில் வெளிநாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு ஊசி என்று சொல்லி நம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு வற்புறுத்துகிறது.
இதனைஅனைவருக்கும் ஷேர் செய்யவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அரசு வருகிற பிப்ரவரி மாதம் 6 முதல் 28 தேதி வரை 9 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் மீசில்ஸ் (தட்டம்மை) மற்றும் ரூபெல்லா நோய் தடுப்பூசியை இலவசமாக போட திட்டம் கொணர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தஊசிக்கு எதிராகத்தான் சமூக ஊடகங்களில் ஒரு புரளி வெகு வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. அது பற்றிய உண்மை நிலை குறித்து அறியாமல், அதனை ஏராளாமனோர் மற்றவர்களுக்கும் ஷேர் செய்துவருகிறார்.
ஆனால், இந்த ஊசி பாதுகாப்பானதுதான். இந்த ஊசியின் மூலம் மீசில்ஸ் எனும் தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை நமது குழந்தைகளுக்கு வராமல் தடுக்கலாம்.
மீசில்ஸ் எனும் தட்டம்மை நோய் பிற அம்மை நோய்களைப் போலவே காய்ச்சல், உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுத்தும். இந்த நோய் எளிதில் உடலில் பரவி நியுமோனியா / உறுப்பு செயலிழப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகளை தோற்றுவிக்கவல்லது. இந்த நோயினால் குழந்தைகள் இறக்கும் அபாயமும் அதிகம்.
ரூபெல்லா எனும் நோய் கர்ப்பிணி பெண்களுக்கு வந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவி ஊனங்கள் வரும் வாய்ப்பு அதிகம். மேலும் ரூபெல்லா நோய் அதிக கருக்கலைப்புகளை ஏற்படுத்துகின்றது.
மீசில்ஸ் நோய்க்கு எதிராக நமது தடுப்பூசி திட்டத்தில் 9 மாதம் நிறைவான குழந்தைகளுக்கும் ஒன்றரை வயதான குழந்தைகளுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்ததடுப்பூசியை தற்போது மீசில்ஸ் மற்றும் ரூபெல்லாவிற்கு எதிரான இரு நோய் தடுப்பு ஊசியாக (measles rubella Vaccine ) அரசாங்கம் தரம் உயர்த்தியுள்ளது.
இந்தரூபெல்லாவிற்கு எதிரான தடுப்பூசி இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்பட்டு வந்தது. அதைத் தான் தற்போது இலவசமாக அரசு measles rubella vaccine என்று மாற்றியுள்ளது.
அந்தவாட்சப் செய்தி கூறுவது யாதெனில் இந்த தடுப்பூசி நல்லதல்ல. கேடு விளைவிப்பது. இதில் அரசியல் லாப உள்நோக்கம் உள்ளது என்பது போன்று அந்த ஆடியோ மெசேஜ் இருக்கிறது.
அரசுமருத்துவர்கள், அரசு சுகாதார ஊழியர்கள் ஏராளமானோர், இந்த தடுப்பூசி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக சென்று சேர வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.
ஆனால் உண்மையில்லாத ஒரு தகவல் எளிதில் வாட்சப்பில் பரப்பி விட முடிகிறது. இது தவறு.
Measles rubella vaccine ஏற்கனவே தனியார் மருத்துவமனைகள் போட்டு வரும் ஊசி தான். இதுவரை பணம்படைத்தவர்கள் மட்டும் இந்த ஊசியை போட்டு வந்தனர்.
தற்போது இந்தியா முழுவதும் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்பட இருக்கிறது. மேலும் , இந்த measles rubella vaccine தேசிய தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட இருக்கிறது. 9 மாதங்கள் நிறைவுற்ற குழந்தைகளும் ஒன்றரை வயது குழந்தைகளுக்கும் இந்த measles rubella தடுப்பூசி தான் இனி போடப்பட உள்ளது. வீண் புரளிகளை நம்ப வேண்டாம்.
தடுப்பூசிகள் கொடும் நோய்களுக்கு எதிராக செயல்படுபவை. ஏற்கனவே பலம் நல தடுப்பூசிகளைப் பயன்படுத்தி, மிகக் கொடூரமான நோய்களையும், தொற்று நோய்களையும் இந்தியாவில் இருந்து விரட்டியுள்ளோம். அதுபோல இந்த தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. தயவுசெய்து தவறான பதிவுகளை நம்பவேண்டாம்.
உங்கள் குழந்தைகளுக்கு பிப்ரவரி மாதம் மீசில்ஸ்- ரூபெல்லா நோய்க்கு எதிரான தடுப்பூசி கிடைத்து விட்டதா என்பதை உறுதிசெய்யுங்கள் என்பதே விவரம் அறிந்தவர்கள் சொல்லும் உண்மை.
இதேவிஷயத்தைத்தான், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அதாவது, மீசெல்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசியால் எந்த பிரச்னையும் குழந்தைகளுக்கு வராது. ரூபெல்லா எனும் கொடிய வியாதியில் இருந்து குழந்தைகளைக் காக்கவே இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து சிறார்களுக்கும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

TNTET- கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும்.பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில்
வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த வழக்கில், கடந்தாண்டு தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. எனவே இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஒட்டுமொத்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30 தேதிக்குள் நடத்தப்படும். 
தகுதித்தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் களையப்படும். கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு வெற்றி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.