யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/1/17

Breaking News: ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்

ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கோள்ளபட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

 உள்ளாட்சித் தேர்தலில் சரியாக இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என
திமுக வழக்கு தாக்கல் செய்திருந்தது.

 வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வேட்பாளருக்கு இடஒதுக்கீடு பின்பற்றவில்லை எனக் கூறி கடந்த அக்டோபர் மாதம் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்தது.

 இந்நிலையில் இது தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

அப்போது தேர்தல் நடத்த எவ்வளவு காலம் தான் தாமதிப்பீர்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 மேலும் 5 வார கால அவகாசம் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

 இதேபோல் உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் செவ்வாய்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 தேர்தல் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.


இந்நிலையில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது சிரமம் என தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

ரூபெல்லா தடுப்பூசி போடக் கூடாதா? வாட்ஸ் அப்பில் பகிரும் முன் படிக்க வேண்டியவை

மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி குறித்து சமீபத்தில் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகும் மிக அவசரச் செய்தி மக்களை
குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, தமிழகப் பள்ளிகளில் வெளிநாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு ஊசி என்று சொல்லி நம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு வற்புறுத்துகிறது.
இதனைஅனைவருக்கும் ஷேர் செய்யவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அரசு வருகிற பிப்ரவரி மாதம் 6 முதல் 28 தேதி வரை 9 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் மீசில்ஸ் (தட்டம்மை) மற்றும் ரூபெல்லா நோய் தடுப்பூசியை இலவசமாக போட திட்டம் கொணர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தஊசிக்கு எதிராகத்தான் சமூக ஊடகங்களில் ஒரு புரளி வெகு வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. அது பற்றிய உண்மை நிலை குறித்து அறியாமல், அதனை ஏராளாமனோர் மற்றவர்களுக்கும் ஷேர் செய்துவருகிறார்.
ஆனால், இந்த ஊசி பாதுகாப்பானதுதான். இந்த ஊசியின் மூலம் மீசில்ஸ் எனும் தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை நமது குழந்தைகளுக்கு வராமல் தடுக்கலாம்.
மீசில்ஸ் எனும் தட்டம்மை நோய் பிற அம்மை நோய்களைப் போலவே காய்ச்சல், உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுத்தும். இந்த நோய் எளிதில் உடலில் பரவி நியுமோனியா / உறுப்பு செயலிழப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகளை தோற்றுவிக்கவல்லது. இந்த நோயினால் குழந்தைகள் இறக்கும் அபாயமும் அதிகம்.
ரூபெல்லா எனும் நோய் கர்ப்பிணி பெண்களுக்கு வந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவி ஊனங்கள் வரும் வாய்ப்பு அதிகம். மேலும் ரூபெல்லா நோய் அதிக கருக்கலைப்புகளை ஏற்படுத்துகின்றது.
மீசில்ஸ் நோய்க்கு எதிராக நமது தடுப்பூசி திட்டத்தில் 9 மாதம் நிறைவான குழந்தைகளுக்கும் ஒன்றரை வயதான குழந்தைகளுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்ததடுப்பூசியை தற்போது மீசில்ஸ் மற்றும் ரூபெல்லாவிற்கு எதிரான இரு நோய் தடுப்பு ஊசியாக (measles rubella Vaccine ) அரசாங்கம் தரம் உயர்த்தியுள்ளது.
இந்தரூபெல்லாவிற்கு எதிரான தடுப்பூசி இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்பட்டு வந்தது. அதைத் தான் தற்போது இலவசமாக அரசு measles rubella vaccine என்று மாற்றியுள்ளது.
அந்தவாட்சப் செய்தி கூறுவது யாதெனில் இந்த தடுப்பூசி நல்லதல்ல. கேடு விளைவிப்பது. இதில் அரசியல் லாப உள்நோக்கம் உள்ளது என்பது போன்று அந்த ஆடியோ மெசேஜ் இருக்கிறது.
அரசுமருத்துவர்கள், அரசு சுகாதார ஊழியர்கள் ஏராளமானோர், இந்த தடுப்பூசி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக சென்று சேர வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.
ஆனால் உண்மையில்லாத ஒரு தகவல் எளிதில் வாட்சப்பில் பரப்பி விட முடிகிறது. இது தவறு.
Measles rubella vaccine ஏற்கனவே தனியார் மருத்துவமனைகள் போட்டு வரும் ஊசி தான். இதுவரை பணம்படைத்தவர்கள் மட்டும் இந்த ஊசியை போட்டு வந்தனர்.
தற்போது இந்தியா முழுவதும் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்பட இருக்கிறது. மேலும் , இந்த measles rubella vaccine தேசிய தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட இருக்கிறது. 9 மாதங்கள் நிறைவுற்ற குழந்தைகளும் ஒன்றரை வயது குழந்தைகளுக்கும் இந்த measles rubella தடுப்பூசி தான் இனி போடப்பட உள்ளது. வீண் புரளிகளை நம்ப வேண்டாம்.
தடுப்பூசிகள் கொடும் நோய்களுக்கு எதிராக செயல்படுபவை. ஏற்கனவே பலம் நல தடுப்பூசிகளைப் பயன்படுத்தி, மிகக் கொடூரமான நோய்களையும், தொற்று நோய்களையும் இந்தியாவில் இருந்து விரட்டியுள்ளோம். அதுபோல இந்த தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. தயவுசெய்து தவறான பதிவுகளை நம்பவேண்டாம்.
உங்கள் குழந்தைகளுக்கு பிப்ரவரி மாதம் மீசில்ஸ்- ரூபெல்லா நோய்க்கு எதிரான தடுப்பூசி கிடைத்து விட்டதா என்பதை உறுதிசெய்யுங்கள் என்பதே விவரம் அறிந்தவர்கள் சொல்லும் உண்மை.
இதேவிஷயத்தைத்தான், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அதாவது, மீசெல்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசியால் எந்த பிரச்னையும் குழந்தைகளுக்கு வராது. ரூபெல்லா எனும் கொடிய வியாதியில் இருந்து குழந்தைகளைக் காக்கவே இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து சிறார்களுக்கும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

TNTET- கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும்.பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில்
வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த வழக்கில், கடந்தாண்டு தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. எனவே இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஒட்டுமொத்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30 தேதிக்குள் நடத்தப்படும். 
தகுதித்தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் களையப்படும். கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு வெற்றி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

5 மாநில தேர்தல்.. 10, 12 - ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு தேதியில் மாற்றம்

டெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுத் தேதி
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12ஆ-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 4-ந் தேதி முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், சில பாடங்களின் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 10-ல் நடைபெறவிருந்த 10-ம் வகுப்பு தமிழ் தேர்வு 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 23-ல் நடைபெறவிருந்த 10-ம் குருங் படத்தேர்வு மார்ச் 10-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 -ல் நடைபெறவிருந்த 10-ம் என்சிசி தேர்வு மார்ச் 23-க்கு மாற்றப்பட்டுள்ளது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்புக்கான தேர்வில் உடற்கல்விக்கான தேர்வு ஏப்ரல் 10-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிக்கும், சமூகவியல் தேர்வு ஏப்ரல் 12-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 20-ந்தேதிக்கும், திரையரங்கு ஆய்வு தேர்வு (Theatre Studies paper) ஏப்ரல் 20-ந்தேதிக்குப் பதில் ஏப்ரல் 10-ந்தேதியும், தங்குல் மொழிப்பாட தேர்வு மற்றும் உணவு சேவை தாள் தேர்வு (Food Service paper) ஏப்ரல் 29-ந்தேதிக்குப்பதில் ஏப்ரல் 26-ந்தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-18 பட்ஜெட்டில் என்ன மாற்றங்கள், அறிவிப்புகள், அம்சங்கள் இருக்கும்​ ? - படிக்க மிஸ் பண்ணிடாதீங்க...

பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பொது பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை,
ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் பாதிப்பு, வேலைவாய்ப்பு, வரி
உயர்வு, வரி குறைப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகளும், பலசலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் பல எதிர்ப்புகள் , விமர்சனங்கள் வெளியாகின. . அந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும், பணப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையிலும் சலுகைகள், அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள், மின்னனு பரிமாற்றம் ஆகியவைகள் மூலம் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க பலசலுகைகள், வரி குறைப்புகளை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஜி.எஸ்.டி. வரி(சரக்கு மற்றும் சேவை வரி)

வரும் ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநிலங்கள், மத்தியஅரசு இடையே சில விசயங்களில் கருத்து வேற்றுமை நிலவியதால், ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது. அது குறித்த வரி வீதம், மாநில அரசுகள் எவ்வளவு வரிவருவாயை பிரித்துக்கொள்ளும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம். நாடுமுழுவதும் ஒரே சீரான மறைமுக வரி அமலுக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

3. வருமான வரி

ஜி.எஸ்.டி. வரியைத் தொடர்ந்து, வருமானவரியில் மிகப்பெரிய அளவில் சீர்த்திருத்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைப்புத்தொகை, காப்பீடு ப்ரீமியம் எடுத்தல், பரஸ்பர நிதி ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் வரிச்சலுகை இருக்கும். வருமான வரி உச்சரவரம்பும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

4. கார்ப்பரேட் வரி

கார்ப்பரேட் வருமானவரியை பட்ஜெட்டில் 1.25 சதவீதம் முதல் 1.50 சதவீதம் வரை குறைத்து 28.50 சதவீதமாகக் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், புதிய நிறுவனங்களை சந்தைக்குள் கொண்டு வருவதற்கான சலுகை அறிவிப்புகளும் இருக்கும் எனத் தெரிகிறது.

5. ரெயில்வே

ரெயில்வே பட்ஜெட், பொதுபட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறையால், ரெயில்வேயின் தனித்தன்மை பாதிக்கப்படாது என்றபோதிலும், ஆண்டுக்கு ஈவுத்தொகையாக ரூ. 10 ஆயிரம் கோடி அரசுக்கு கொடுப்பதை ரெயில்வே கொடுக்கத் தேவையில்லை. பயணிகளின் வசதிக்கும், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பயணிகள் கட்டணம் உயர்த்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

6. விவசாயம்

ரூபாய் நோட்டு தடையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சுமையையும், வேதனையையும் குறைக்க நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பல சலுகைகளை அறிவிப்பார் எனத் தெரிகிறது. ஏற்கனவே நவம்பர்,டிசம்பர் மாத கடன் வட்டி தள்ளுபடி கொடுக்கப்பட்ட நிலையில், பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம் .

7. தொழில்துறை, உற்பத்திதுறை

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்வகையில் தொழில்துறைக்கும், வேலைவாய்ப்பை பெருக்கவும் அதிகமான சலுகைகள் அறிவிக்கப்படலாம். வேலைவாய்ப்பை அதிகரித்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க தனித்திட்டம் வகுக்கப்படலாம். சீனாவைப் போல், தொழிற்சாலைகளுடன், தொழிலாளர்களுக்கு தங்கும் இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகள், மால்கள் என அனைத்தும் ஒருங்கே இருக்கும் வகையில் திட்டம் அறிமுகமாகலாம்.

8. அன்னிய முதலீடு

வெளிநாடு வாழ் இந்தியர்கள், அன்னிய நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டங்கள், சலுகைகள் அளிக்கப்படலாம். அவர்கள் அதிகளவு முதலீடு செய்யும் வகையில், விதிகள் தளர்த்தப்படலாம்.

9. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.

புதிய தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும், வளர்ச்சிக்கு கொண்டு செல்லவும் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம். புதிய தொழில் தொடங்க விரும்பம் உள்ளவர்கள் அரசிடமிருந்து தேவையான உதவிகள், ஒப்புதல்களை வேகமாக பெறுதல், வரிச்சலுகையை 10. ஆண்டில இருந்து 5 ஆண்டாக அதிகரிப்பது உள்ளிட்ட பல விசயங்கள் இருக்கும்.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைச்சரை சந்தித்து மனு.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி அமைச்சர்
பாண்டியராஜன் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

இன்று கல்வித்துறை அமைச்சர் அவர்களிடமும், முதல்வர் தனிப்பிரிவிலும் இரு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
யாருக்கும் பாதிக்காத வண்ணம் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், 

 தகுதித் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் கூறினார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜனவரி 31 ஆம் நாள் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

ஆதார் எண் அடிப்படையில் பணபரிவர்த்தனைகளை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்.

 உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட பிறகு பணத்தட்டுப்பாடு உருவானதால் மக்கள் வேறு வழியின்றி கார்டு,
ஆன்லைன் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறினர்.


இதற்காக சமீபத்தில் கூட ஸ்மார்ட் போன்களுக்காக 'பீம்' என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

 இந்நிலையில், ஆதார் எண் அடிப்படையில் அனைத்து பரிவர்த்தனைகளையும் செயல்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது.

 ஆதார் அடிப்படையில் பணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 இதன்படி, வணிகர்களிடம் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் செலுத்த மொபைல் போன் கூட எடுத்துச்செல்ல வேண்டாம்.

💷 தங்களது ஆதார் எண்ணை கூறினால் போதும். பயோ மெட்ரிக் முறையில் பணத்தை செலுத்திவிடலாம்.

  தற்போது ஆதார் பேமன்ட் முறையில் 14 வங்கிகள் இணைந்துள்ளன.

 இந்த சேவைகள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

 பிற வங்கிகளிடமும் இந்த திட்டத்தில் இணைவது தொடர்பாக பேசி வருகிறோம்.

 பீம் ஆப், யுபிஐ ஆகியவையும் ஆதார் அடிப்படையில் இயங்குவதுதான்.

💷 நாடு முழுவதும் 111 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். 49 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

 மாதத்துக்கு 2 கோடி கணக்குகளில் ஆதார் எண் சேர்க்கப்பட்டு வருகிறது.

 எனவே, ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனை வெகு விரைவில் செயல்படுத்தப்படும்.


இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்

சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த காவல்துறை தடைவிதித்துள்ளது.

 சென்னை மெரீனா கடற்கரையில் பொழுது போக்கிற்காக அதிக மக்கள் கூடுவதால், கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள பகுதிகளில் போராட்டம் நடத்த தமிழக காவல் துறை
தடைவிதித்துள்ளது.



 இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த காவல் துறையே அனுமதி வழங்கும்.

சென்னையில் குறிப்பிட்ட இடத்தில் பொது மக்கள் போராட்டம் நடத்த காவல்துறையிடம் உரிய அனுமதி வாங்க வேண்டும்.

அமைதி நிலவ பொதுமக்கள், மாணவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

ஏற்கனவே முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த தடை உள்ளது.


மெரினாவில் சட்ட விரோதமாக கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' [SET Exam.] தகுதி தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

🌺 தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' [SET Exam.] தகுதி தேர்வை நடத்த, புதிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

🌺 அதன் தலைவராக, தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி
நியமிக்கப்பட்டு உள்ளார்.

🔶 அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேர, முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும்.

 🔷 இல்லையென்றால், மத்திய அரசின், 'நெட்' [NET Exam.] தகுதி தேர்வு அல்லது மாநில அரசுகள் நடத்தும், 'செட்' தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.

🔶 நெட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படுகிறது.

🔷 அதில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் உள்ள எந்த கல்லுாரி, பல்கலையிலும், உதவி பேராசிரியராக பணியில் சேரலாம்.

🔶 மாநில அரசு நடத்தும் செட் [SET Exam.] தேர்வு, ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் நடத்தப்படுகிறது.

🔷 அதில் தேர்ச்சி பெற்றால், அந்தந்த மாநிலங்களில் மட்டுமே உதவி பேராசிரியராக சேர முடியும்.

🔶 கடந்த ஆண்டு செட் தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா பல்கலைக்கழகம் நடத்தியது.

🔷 ஜனவரி 20ல் அறிவிப்பு வெளியிட்டு, பிப்ரவரி, 22ல் தேர்வு நடந்தது.

🔶 இதன் முடிவுகள், அக்டோபரில் வெளியிடப்பட்டன.

🔷 இந்த ஆண்டுக்கான (2017) செட் தேர்வை நடத்துவதற்கு, தெரசா பல்கலைக்கழக துணை வேந்தர் வள்ளி தலைமையில், புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

🔶 உறுப்பினர் செயலராக, தெரசா பல்கலைக்கழக பதிவாளர் கீதா, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக விமலா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

🔷 உறுப்பினர்களாக, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சுவாமிநாதன் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

📝 இந்த ஆண்டுக்கான (2017) செட் தேர்வு தேதி, பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,


*ஊதியப்பட்டியல் (Pay Slip)

*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


http://epayroll.tn.gov.in/epayslip/

இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *ஓய்வூதியக் கணக்கு எண் & பிறந்த தேதி*யைக் குறிப்பிட வேண்டும்.

கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு TPF-ம் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல் (SUFFIX) ஆகும். மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச் சொற்களை இடவும். தொடக்க கல்வி துறை PTPF என இடவும்

```🔹Pay Slip🔹```

*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத் தரவிறக்க இயலும்.


```🔹Annual income statement🔹```

*இதில், கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காது. ஆனால் ஊதியப் பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும்.

*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை, ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின் அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காண இயலாது.


எனவே, அதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும் இணைய இணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடு செய்து, தங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம்.

http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx

ஊதியஅலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்து முதலில் உள்ள இணைய இணைப்பிலேயே நமக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்து விடும்.வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!
     மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,

*ஊதியப்பட்டியல் (Pay Slip)

*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


http://epayroll.tn.gov.in/epayslip/

இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *ஓய்வூதியக் கணக்கு எண் & பிறந்த தேதி*யைக் குறிப்பிட வேண்டும்.

கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு TPF-ம் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல் (SUFFIX) ஆகும். மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச் சொற்களை இடவும். தொடக்க கல்வி துறை PTPF என இடவும்

```🔹Pay Slip🔹```

*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத் தரவிறக்க இயலும்.


```🔹Annual income statement🔹```

*இதில், கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காது. ஆனால் ஊதியப் பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும்.

*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை, ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின் அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காண இயலாது.


எனவே, அதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும் இணைய இணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடு செய்து, தங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம்.

http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx

ஊதியஅலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்து முதலில் உள்ள இணைய இணைப்பிலேயே நமக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்து விடும்.

TNTET 2017 : இன்று (சனிக்கிழமை ) அறிவிப்பு? இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விபு நயர் சனிக்கிழமை வெளியிடவுள்ளார்

ஆசிரியர்தகுதித் தேர்வு குறித்த முறையானஅறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
  ஆண்டுக்கு 2 முறை ஆசிரியர் தகுதித்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது தேசியஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையாகும். ஆனால், தமிழகத்தில் முதலாவதுதகுதித் தேர்வு 2012-ஆம் ஆண்டில் ஜூலை, அக்டோபர் மாதங்களிலும், 2013-ஆம் ஆண்டில் ஆகஸ்ட்மாதத்திலும் என 3 தகுதித் தேர்வுகள்நடத்தப்பட்டன.

        மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித் தேர்வு2014-ம் ஆண்டு மே மாதம்நடைபெற்றது. இந்த நிலையில், பாண்டியராஜன்கூறுகையில், "ஆசிரியர் தகுதித் தேர்வுவெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக நடைபெற்று வந்தவழக்கில் தமிழக அரசு வெளியிட்டுள்ளஅரசாணை செல்லும் என கடந்தசில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கானஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல்30-ஆம் தேதிக்குள் நடத்தப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்தின்தலைவர் விபு நயர் சனிக்கிழமைவெளியிடவுள்ளார் என்றார் அவர்.

தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ஆண்டில் 20ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்

கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை
மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறைகள் கொண்டு வருவது, கற்பித்தல் முறைகள் புகுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கி வந்தது. இந்நிலையில், 2010ம் ஆண்டு இந்த திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மேலும், அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில திட்ட இயக்ககம் சென்னை கல்லூரி சாலையில் டிபிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
தற்போது தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் இடையில் பள்ளியில் இருந்து நின்று விடுகின்றனர். இதை தடுக்க பல முயற்சிகள் நடக்கின்றன. மாணவர்கள் இடைநிற்றல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது குறித்த தகவல் மத்திய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் நிதியில் செய்யப்பட்ட பணிகள் என்ன, எவ்வளவு செலவானது என்பது குறித்தும் மத்திய அரசுக்கு விவரம் தர வேண்டும்.
அப்போதுதான் அடுத்த கல்வி ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு வழங்கும். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கணக்கெடுக்கெடுக்கப்படுகிறது. அதில் மாணவர்கள் பெயர், குடும்ப சூழல், பள்ளிக்கும் மாணவர் இருப்பிடத்துக்கும் உள்ள இடைவெளி, பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி பதிவு செய்ய வேண்டும். அந்த விவரங்கள் அனைத்தும் மாநில திட்ட இயக்குநருக்கு செல்லும். அவர் மத்திய அரசுக்கு அனுப்புவார்.
இந்தஆண்டுக்கான கணக்கெடுப்பு தற்போது முடிந்துள்ளன. இந்த வார இறுதிக்குள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இந்த பட்டியலை மாநில திட்ட இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.
இந்தகணக்கெடுப்பின்படி பார்த்தால் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 ஆயிரம் குழந்தைகள், மாணவ, மாணவியர் இடையில் நின்றுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
* ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 240 மாணவ, மாணவியர் இருப்பதற்கு பதிலாக 200 மாணவர்கள்தான் உள்ளனர்.

* ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 150 குழந்தைகளுக்கு பதிலாக 100 அல்லது 120 குழந்தைகள் உள்ளனர்.

SMC TRAINING POSTPONED

“SMC CRC LEVEL TRAINING POSTPONED TO FEB 13th TO 15th DUE TO DELAY OF 
SMC MOUDULES.......Dates will be informed later.

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை- சட்டமுன்வடிவு கொண்டுவந்து நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை” என்பதை நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்ட தொடரிலேயே சட்டமுன்வடிவு கொண்டு வந்து அதனை நிறைவேற்றி, ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் அவர்களின் ஒப்புதலை பெற
வேண்டும்”

தொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01.2017ம் நாளினை தீண்டாமை எதிர்ப்பு தினமாக அனுசரித்தல் சார்ந்த செயல்முறைகள்

அகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி விடுவித்தல் மற்றும் கட்டிடப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான இயக்குனரின் செயல்முறைகள்

27/1/17

உடல்திறன் சான்றிதழ் பெற மாணவர்கள் அலைக்கழிப்பு

அரசு பொதுத்தேர்வு எழுத, ஒரு மணி நேர சலுகை பெறும் மாணவர்கள், உடல்திறன் சான்றிதழ் பெற, கடுமையாக அலைக்கழிக்கப்படுகின்றனர். பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் 2 மற்றும் 8ம் தேதிகளில் துவங்குகின்றன. தமிழகம் முழுவதும், 7,000 மையங்களில் நடைபெறும் இத்தேர்வில், 20 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். பிளஸ் 2 தேர்வு, மூன்று மணி நேரமும்; 10ம் வகுப்பு தேர்வு, இரண்டரை மணி நேரமும் நடக்கும்.


இதில், சாதாரண மாணவர்கள் தவிர, 'டிஸ்லெக்சியா' என்ற கற்றல் திறன் குறைவான மாணவர்கள், மூளை வளர்ச்சி பாதிப்புள்ள சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் போன்றோருக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை அளிக்கப்படும்.

இந்த சலுகையை பெற, சம்பந்தப்பட்ட மாணவர்கள், தமிழக சுகாதாரத் துறையின் அரசு உடல்திறன் சோதனை கமிட்டியிடம் இருந்து சான்றிதழ் பெற்று, தேர்வுத் துறையிடம் வழங்க வேண்டும். 

இதற்கு பெரும்பாலான பள்ளிகள், மாணவர்களுக்கு உதவுவதில்லை. அதனால், சலுகை பெற விரும்பும் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், அரசு மருத்துவமனையில், பல நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. உடல்திறன் தேர்வு கமிட்டி, வாரம் ஒரு நாள் மட்டுமே கூடும் என்பதால் அதுவரை மாணவர்கள் அவதிப்பட வேண்டியுள்ளது.

மேலும் மருத்துவமனையில் மாணவர்கள் யாரை அணுக வேண்டும்; எந்தவிதமான ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டும்; உடல்திறன் ஆய்வு கமிட்டியினர் கூடுவது எப்போது என, மாணவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை. 
'உடலளவில் பாதிக்கப்பட்டோரை, பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத்துறையும் அலைக்கழிப்பதால் மனதளவில் மேலும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வாக, சுகாதாரத் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து, உடல்திறன் சான்றுக்கான சிறப்பு முகாம்களை நடத்தலாம்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.