யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/2/17

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக  கியூப்பா அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 
 இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டம் 2014ம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது அதைப் பற்றி பேசவே கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அதனை மீறி தமிழகத்தில் எவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதித்தது ஏன். மேலும் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த சட்ட ரீதியான பதில்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க மத்திய அரசு முடிவு.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு இலவச வைபை ஹாட்ஸ்பாட் வழங்க திட்டமிட்டுள்ளது.

அதன் படி சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க முடிவு செய்துள்ளது. 
 இந்த திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கென இண்டர்நெட் வழங்க சிறப்பு டவர்கள் கட்டமைக்கப்படுகின்றன.

இதனை பயன்படுத்தி கிராம வாசிகள் தங்களது மொபைல் போன்களில் இண்டர்நெட் வசதியை பெற முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் வில்லேஜ் திட்டம் சுமார் 62 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. 

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து மத்திய அரசும் இலவச வைபை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

NEET EXAM - மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு

மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் 80 இடங்களில் இந்த நீட் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மருத்துவச் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. நீட் தேர்வு எழுதுவோர்  இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்திற்கு நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நீட் தேர்வு எழுதாமல் பழைய முறைப்படி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வழிவகை செய்யும் சட்டமுன்வடிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

31/1/17

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும் -முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை

எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் படிப்புகளுக்கான “டான் செட்” பொது நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக துறைசார் பொறியியல் கல் லூரிகள், உறுப்புக்கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான். எம்.ஆர்க். இடங்கள் “டான்செட்” பொதுநுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 2017-18-ம் கல்வி ஆண்டில் எம்சிஏ, எம்பிஏ படிப்புக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 25-ம் தேதியும், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான்.

 படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 26-ம் தேதியும் நடைபெற உள்ளன.இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.annauniv.edu/tancet2017) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதி ஆகும். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் போன்ற விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டையும் இணைய தளத்தில் இருந்துதான் பதிவிறக் கம் செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.annauniv.edu/tancet2017) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதி ஆகும். ஹால்டிக்கெட்டையும் இணையதளத்தில் இருந்துதான் பதிவிறக் கம் செய்ய வேண்டும்.

TNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும்,பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுத்தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது. தமிழகத் தில் டெட் தேர்வு நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) விதிமுறை. ஆனால், நீதிமன்ற வழக்குகள் காரண மாக தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

தற்போது வழக்குகள் முடிவடைந்து விட்டதால் டெட் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும் அதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

டெட்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர் பாக பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்துமாறு பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தேர்வுக் கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 8-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் ஏப்ரல் மாதம் நடத்தப் படவுள்ள டெட் தேர்வு 3-வது டெட் தேர்வாகும். தமிழகத்தில் முதலாவது டெட் தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதமும், அந்த தேர்வில் நேரக்குறைவு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கைமிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் நேரத்தை அதிகரித்து அதே ஆண்டு அக்டோ பர் மாதம் துணை தேர்வாக இன்னொரு தேர்வும், அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் என 3 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக் கென சிறப்பு டெட் தேர்வு 2014-ம்ஆண்டு மே மாதம் நடந்தது. பொதுவான டெட் தேர்வு என்று பார்த் தால் இதுவரை 3 டெட் தேர்வுகள் நடத்தப்பட்டுள் ளன. ஏற்கெனவே நடத்தப்பட்ட டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

7 ஆண்டுகள் செல்லத்தக்கது

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் உடனடியாக ஆசிரியர் வேலை கொடுக்கப்படுவதில்லை. வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில்தான் ஆசிரியர் கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, டெட் தேர்வு மதிப்பெண் 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் படிப்பு மதிப்பெண்) கணக்கில் எடுக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. .டெட் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும். எனினும் தேர் வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் மதிப் பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் டெட் தேர்வு எழுதலாம்.

HSC Feb 2017 Practical Exam Batch Allotement & Aural / Oral Mark Sheet Preparation

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  கால அவகாசம் அளித்துள்ளது.


விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதை எதிர்த்து வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அதுவரை விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகப் பத்திரப் பதிவு செய்ய தடை நீடிக்கிறது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த தடை உத்தரவால் மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து அரசுதான் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டனர்.

ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி அளிக்க வகை செய்ய தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்க வகை செய்யும் அவசரச்சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவரின் அனுமதியையும் பெற்றது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, உடனடியாக அவசரச் சட்டம் சட்டமாக ஒப்புதல் பெறப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த சட்டத்தில் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டு, தமிழக மக்களின் போராட்டத்துக்கு முழு வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் கையெழுத்துப் பெறப்பட்டதை அடுத்து, இந்த சட்டம், இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜல்லிக்கட்டு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அரசியல் சாசனத்தில் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக விரைவாக தீர்ப்பளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வைத்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு எழுதப்பட்டுவருவதாகக் கூறியிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் போராட்டம் வெடித்ததை அடுத்து, ஒரு வார காலத்துக்கு ஜல்லிக்கட்டுத் தொடர்பாக தீர்ப்பளிக்கக் கூடாது என்று தடை பெற்றது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது - தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகே நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த அவசர சட்ட முன்வடிவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில், உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாகவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் ஏப்ரல் மாதம் பள்ளி தேர்வுப் பணியில் ஈடுபடுவதால் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்த சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை 10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே, பல அரசுப் பள்ளிகளையும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 8300 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

மத்திய அரசில் காலியாக இருக்கும் 8300 பல் செயல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜன.30) கடைசி நாளாகும்.


மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பல் செயல் உதவியாளர் பணிக்கு 8300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 முதல் 25 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 வழங்கப்படும்.

ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கான எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் உண்டு. இப்பணிக்கு இணையதளம் மூலம் இன்று ஜன.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விபரங்களை http://ssconline.nic.in  அல்லது http://164.100.129.99/mts/html/mtsfinalnotice301216.pdf  என்ற இணையதள லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்.

ATM - ல் 24,000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை பிப்  .1 முதல் தளர்த்த முடிவு செய்துள்ளது.
இது நடப்பு கணக்குகளுக்கு (Current Account)மட்டுமே பொருந்தும். சேமிப்பு கணக்குகளுக்கு (SB Account) கட்டுப்பாடு தொடரும். விரைவில் இக்கட்டுப்பாடும் தளர்த்தப்படும் என தெரிகிறது.

Whatsappல் புதிய வசதிகள்!






வாட்ஸ்அப் நிறுவனம், அதன் செயலிக்கு தொடர்ச்சியாக புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சீக்கிரமே இந்த வசதியெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை தன் நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் 'லொகேஷன் ஷேரிங்' வசதி வர உள்ளதாம். அதே போல, நண்பர்கள் புது ஸ்டேட்டஸ் போட்டால் தெரியப்படுத்தும் வகையிலும் ஒரு வசதி வர உள்ளதாம்.

மேலும், வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கு கால் செய்யும்போது பேட்டரி தீர்ந்துபோகும் நிலை வந்தால், அதற்கு நோட்டிஃபிக்கேஷன் அனுப்பப்படுமாம். மேலும் இதைப்போன்ற பல வசதிகள் சீக்கிரமே வாட்ஸ்அப்பில் வரும் என்று கூறப்படுகிறது. புதிய வசதிகளை அனுபவிக்க, போனில் இருக்கும் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்தாலே போதும்.

IT CALCULATION FORM 2016-17 [New]

TNOU B.Ed Entrance Exam Result - Published...

TNPSC: அடுத்த வாரம் முதல் பல தேர்வுகளுக்கு தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்.

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர்,ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்.
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர், உதவி ஜியாலஜிஸ்ட் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி விரைவில் தேர்வு நடத்தவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் அடுத்த வாரம் முதல் வெளியிடப்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். தேர்வுக்கு தயாராவோரின்வசதியைக் கருத்தில்கொண்டு டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும்கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

 அந்த அடிப்படையில், கடந்த 2016-17 தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள குரூப்-2, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.இதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில், கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அடுத்த வாரம் முதல் வெளியிட டிஎன்பிஎஸ்சி முடிவுசெய்துள்ளது. அவற்றின் மூலமாக உதவி ஜியாலஜிஸ்ட் பதவியில் 55 காலியிடங்களும், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர் பதவி யில் 25 காலியிடங்களும், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவியில் 3 இடங்களும் நிரப்பப்படும்.

 முன்பு அறிவிக்கப்பட்டிருந்த காலியிடங்களைக் காட்டிலும் காலியிடங்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. உதவி ஜியாலஜிஸ்ட் தேர்வுக்கு எம்.எஸ்சி. (ஜியாலஜி) படித்தவர்களும், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர் பதவிக்கு உடற்கல்வியில் டிப்ளமோ முடித்தவர்களும், உதவி ஆணையர் பதவிக்கு பி.எல். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். முதலில் உடற்கல்வி பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பும் அதைத் தொடர்ந்து, எஞ்சிய 2 தேர்வுகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இதற்கிடையே நடப்பு ஆண்டுக்கான (2017-18) தேர்வு காலஅட்டவணை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு நிரப்பப்படாமல் இருக்கும் குரூப்-2, குரூப்-2-ஏ காலிப் பணியிடங்கள் புதிய தேர்வு கால அட்டவணையுடன் சேர்க்கப்பட இருப்பதால் அந்த பணிகளுக்கான காலியிடங்கள் மேலும் அதிகரிக்கும்.

30/1/17

உயருமா? வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி விட்டது பட்ஜெட் பரபரப்பு

பிப்., 1ல், மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. முதன்முறையாக, ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் ஆகிய இரண்டும் கலந்த ஒருங் கிணைந்த பட்ஜெட், தாக்கலாக உள்ளது; இதில், வருமான வரி விலக்கு
உச்சவரம்பு உயர்த்தப் படுமா என்ற எதிர்பார்ப்பு, மாத ஊதியதாரர் களிடையே ஏற்பட்டுள்ளது.பட்ஜெட்டில், என்னென்ன விஷயங்கள் இடம் பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு, இப்போதே துவங்கி விட்டது. வழக்கம் போல், மாத ஊதிய தாரர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட, பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள், இந்த பட்ஜெட்டில், தங்களுக்கு சாதகமான அம்சங்கள் வந்துவிடாதா என, ஆவலுடன் காத்திருக்கின் றனர். கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டு வருமான வரி உச்சவரம்பு, 2.5 லட்சம் ரூபாயை தாண்ட மறுக்கிறது. கடந்த ஆண்டும், ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், இந்த ஆண்டு, அது நிச்சயம் உயரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாதவருவாயும், கடந்த சில ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வரு கிறது. அதனால், குறைந்தபட்சம், 4.5 லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை யாவது, வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இன்சூரன்சுக்கு தனி கழிவு?


மாதஊதியதாரர்கள்,80 - சி பிரிவில், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ செலவு, வீட்டுக் கடன் மாதத் தவணை, எல்.ஐ.சி., உள்ளிட் டவை, வரிக்கழிவிற்கு உதவுகின்றன. இதில் அதிகபட்சம், 1.5 லட்சம் ரூபாய் மட்டும் கழிக்க முடியும். இதை, 2.5 லட்சம் முதல், மூன்று லட்சம் ரூபாய் வரை உயர்த்தினால், மக்கள் சேமிப்பில் ஆர்வம் காட்டுவர்.

குறிப்பாக,இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு தனிக் கழிவு, 1 லட்சம் ரூபாய் வரை கொடுத்தால், சேமிக் கும் வழக்கம் மக்களிடம் அதிகரிக்கும்; சமூக பாது காப்பும் கிடைக்கும்.

இந்த பிரிவில், மருத்துவ செலவுகளுக்காக கழிக்கப்படும் தொகை, 15 ஆயிரம் ரூபாயாக, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது; அது, 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும். இது போல், மற்றோர் பிரிவான, 80 டிடிஏ - வில், வங்கி சேமிப்பு மீதான வட்டிக்கான வரி விதிப்பு குறைக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அப்படி செய்தால், 'செட்டில்மென்ட்' பணத்தின் மீதான வட்டியை நம்பியிருக்கும், 60 வயதிற்கு, மேற்பட்டோர் பயனடைவர்.

புதிய 'பென்ஷன்' திட்டம்


புதிய,'பென்ஷன்' திட்டத்தில் சேர்ந்தால்,ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, 80 சிசிடி (1பி) பிரிவின் கீழ், வருமான வரி கழியும். இந்த பட்ஜெட்டில், முதலீடு தொகை முழுவதற்கும், நிதியமைச்சர் ஜெட்லி, விலக்களிக்க முயற்சிப்பார் என, தெரிகிறது.

வீட்டுக்கடன்வட்டிக்கான உச்சவரம்ரபு, பிரிவு 24 - ன் கீழ், 2 லட்சம் ரூபாயாக உள்ளது. வீடு விலை ராக் கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது; எனவே, அதை உயர்த்த வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.


50 கோடி பேர் 'எஸ்கேப்'


நாட்டில், நான்கு கோடிக்கும் குறைவானவர் களே, குறிப்பாக, மாத வருமானம் பெறுவோர் தான், வரி செலுத்துகின்றனர். வருமான வரி வரம்பிற்குள்
வரக்கூடிய, மருத்துவர், வியாபாரிகள், சுய தொழில் வருவாய் மற்றும் வீட்டு வாடகை வருவாய் ஈட்டுவோர் உட்பட, 50 கோடிக்கும் அதிகமானோர், வருமான வரித்துறை வளையத்திற்குள் இன்னும் வரவில்லை.

அவர்களையும், வரிவிதிப்பு முறையின் கீழ் கொண்டு வர வேண்டும். அதற்கு, வரி விதிப்பு முறை எளிதாக வேண்டும். அதாவது, வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும்.

மேலும், ஐந்து லட்சத்திற்குள் வருமானம் இருந்தால், 10 சதவீத வரி விதிப்பு; ஐந்து லட்சத் திற்கு மேல், 20 சதவீதம்; 10 லட்சத்திற்கு மேல், 30 சதவீதம், வரி என்பதை குறைக்க வேண்டும். அப்போது தான், குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படும் நிலை உருவாகும்.

ஊக்கம் கிடைக்குமா?


பண மதிப்பிழப்பிற்கு பின், ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாற, அரசு ஊக்குவிப்பதால், 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்' உள்ளிட்டவை போன்ற பரிவர்த்தனைக்கு, அரசு அதிக சலுகை அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

- நமது நிருபர் -

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு !!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன் லைன்
விண்ணப்பம் பெற மார்ச் 27-ம் தேதி

முதல் விநியோகம் என ஜிப்மர் கல்லூரி அறிவித்துள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு கிடையாது என முதல்வர் சுவாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

TET-கேள்விகள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கனவே வெற்றி பெற்று பணி
கிடைக்காமல் போன நண்பர்கள் சிலர் தற்போது அறிவிக்கப்பட உள்ள டெட் தேர்வை நாங்களும் எழுத வேண்டுமா என கேட்கின்றனர்.

பதில்:

எழுதலாம். கடந்த முறை நீங்கள் எடுத்த மதிப்பெண்ணை விட தற்போது அதிக மதிப்பெண் எடுக்க விரும்பினால் இம்ப்ரூவ்மெண்ட் எழுதலாம். இந்த நடைமுறை NCTE வழிகாட்டு நெறிமுறைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதைக் கொண்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்ல முடியும். 

TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 11-லட்சம் விண்ணப்பங்கள் அச்சிட ஏற்பாடு

-Today Tamil Hindu


ஏப்29,30 ல் ஆசிரியர் தகுதித்தேர்வு
#ஏப் 29ல் தாள் 1
#ஏப் 30ல் தாள் 2
#தேர்வுக்கான விண்ணப்பங்கள் பிப் 15முதல் மார்ச் 8வரை விற்பனை செய்யக்கூடும்
#கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர் 30000 என்பது குறிப்பிடத்தக்கது
#7 ஆண்டு செல்லத்தக்கது
#டெட் மதிப்பெண்-60
ப்ளஸ் 2,பட்டப்படிப்பு,பி.எட் படிப்பு 40
#இடைநிலை ஆசிரியர் எனில் ப்ளஸ் 2,இடைநிலை ஆசிரியர் படிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
#ஒருவர் தன் மதிப்பெண்ணை அதிகப்படுத்த எத்தனை முறை வேண்டுமானாலும் டெட் தேர்வு எழுதலாம்