யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/3/17

சாம்சங் உடன் இணைந்து 5ஜி சேவை. ஜியோவின் அடுத்த அதிரடி..

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி இலவச சேவையால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் ஏர்டெல் உள்பட பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டு வரவில்லை.
இந்நிலையில் ஜியோவின் அடுத்த அதிரடியாக அதிவிரைவில் 5ஜி சேவை தொடங்கவுள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கதிகலங்கி உள்ளன.
ஜியோவின் 4ஜி இலவச சேவையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புதுப்புது வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில் ஜியோ நிறுவனம், உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் உடன் இணைந்து, 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க முடிவு செய்துள்ளது.

இந்த முடிவின்படி 5ஜி சேவைக்குத் தேவையான ஸ்மார்ட்ஃபோன்களை சாம்சங் தயாரித்து வழங்கவுள்ளதாகவும், மற்ற சேவைப் பணிகளை ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை ஜியோ நிறுவனம் அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளதால் ஜியோ வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

முந்தைய TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணி நியமனம்! - பள்ளி கல்வி அமைச்சர்

காலி ஏற்படும் 3 ஆயிரம் ஆசிரிய பணியிடங்களில், முந்தைய TNTET  தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணி நியமனம் செய்யமுதல் அமைச்சரிடம் கலந்து முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்தார்

கற்றல் கையேடு +12

2/3/17

ஊதியக் குழு; விரிவான விளக்கம்...

ஆண்டுதோறும் நம்மிடையே வந்து, நம்மை அமைதிப்படுத்தி, அலங்கரித்து, அழகு பார்க்கும் கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளைப் போல், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து அரசு ஊழியர்களை அடுத்த தளத்துக்கு இட்டுச்செல்ல அமைக்கப்படும் வைபவம் தான் ஊதியக்குழு!

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை குறித்து ஓரிரு நாளில்
நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

TRB - TET - 2017 : விண்ணப்பங்களை விற்பனை செய்தல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெறும் நாட்கள் தொடர்பான தருமபுரி CEO செய்தி வெளியீடு.

TRB - TET - 2017 : விண்ணப்பங்களை விற்பனை செய்தல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெறும் நாட்கள் தொடர்பான திண்டுக்கல் மாவட்ட CEO செய்தி வெளியீடு.



ஏடிஎம்களில் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று HDFC, ICICI வங்கிகள் அறிவிப்பு...

டெல்லி: ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம் வசூலிக்க
ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகள் முடிவு செய்துள்ளன.

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே பணப் பரிவர்த்தனைகள் இலவசம் என்றும், அதில் பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வது மற்றும் எடுப்பது என இரண்டும் அடங்கும் என்றும் அதற்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் தொகையைப் பொருத்துக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் ஐசிஐசிஐ வங்கியும் ஐந்தாவது பணப் பரிவர்த்தனையில் இருந்து 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அதிகபட்ச பணப் பரிவர்த்தனை வரம்பு எதையும் அந்த வங்கி குறிப்பிடவில்லை. இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல்

அமலுக்கு வந்துவிட்டதாக ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அறிவித்துள்ளன.


இந்த2 வங்கிகளும் ஏற்கனவே 5 முறைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.100 கட்டணம் வசூலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்ஜினியரிங் நுழைவு தேர்வு 2018ல் நாடு முழுவதும் அமல்

இன்ஜினியரிங் படிப்பில் சேர, 2018ல், பொது நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்
கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுத வேண்டியதில்லை. மருத்துவ படிப்பில் சேர, இந்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு தமிழக அரசின் சார்பில், விலக்கு கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டு முதல், நாடு முழுவதும், இன்ஜினியரிங் படிப்புக்கு, பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென்னை வந்துள்ள, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே, இதுகுறித்து கூறியதாவது:

மாநில அரசு கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகள் என, பல சேர்க்கை முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதனால், மாணவர்கள் பல்வேறு நுழைவு தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது.

இந்தநிலையை மாற்ற, இன்ஜினியரிங் படிப்பில், அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரி, பல்கலைகளை இணைத்து, அவற்றில் சேர்வதற்கு, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்த உள்ளோம். இதற்காக, மாநில அரசுகள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம். வரும், 2018 - 19ம் கல்வி ஆண்டில், இந்த நுழைவு தேர்வு நடத்தப்படும்.

அதேபோல், கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

தமிழக பாடத்திட்டம் சரியில்லை முன்னாள் முதல்வர் பன்னீர் ஆதங்கம்

தமிழக பாடத்திட்டம், மத்திய அரசுக்கு இணை யாக இல்லை' என,
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மாணவ, மாணவியருக்கு இலவச கல்வி சேவை அளிக்கும், 'அம்மா கல்வியகம்' எனும் புதிய இணையதள துவக்க விழா, நேற்று நடந்தது. அதை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.விழாவில் பேசியதாவது:

அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு முன்னாள் செயலர், அஸ்பயர் சுவாமிநாதன்: இந்த இணையதளத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்பு சேரவும், நுழைவுத் தேர்வு எழுதவும், இலவச பயிற்சி பெறலாம். திறமை வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படும். அத்துடன், வேலைவாய்ப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்: ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதற்கு பயிற்சி பெற, 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தற்போது துவக்கப்பட்டுள்ள இணையதளத்தில், இலவசமாக பயிற்சி பெறலாம்.

மேலும், ஐ.ஏ.எஸ்., தேர்வு, வங்கித் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு போன்றவற்றுக்கும், இணையதளம் மூலம் இலவச பயிற்சி அளிக்க உள்ளோம்.

முன்னாள் அமைச்சர் பொன்னையன்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தரமான பாடத்திட்டம் உள்ளது. ஆனால், மாநில அரசு பள்ளிகளில், நல்ல பாடத்திட்டம் இல்லை. தரமான பாடத்திட்டத்தை, அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஜெ., ஆட்சியில், மாநில வருவாயில்,

நான்கில் ஒரு பங்கு கல்விக்கு ஒதுக்கப்பட்டது. மாணவர் களுக்கு, 16 வகையான கல்வி உபகரணங்களை, இலவசமாக வழங்கினார்.
ஐ.ஐ.டி., போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்கப்படுகிறது. இதனால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை. தமிழக பாடத்திட்டம், மத்திய அரசு பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் இல்லை.

இந்நிலையில், தற்போது துவக்கப்பட்டுள்ள, இலவச இணையதள சேவை, மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். கிராமப்புற மாணவர்கள், நேரடியாக பயிற்சி பெறும் சூழலை, இந்த இணையதளம் ஏற்படுத்தி உள்ளது.


நீட்' தேர்வுக்கும், இந்த இணையதளம் மூலம் பயிற்சி பெறலாம். வேலைவாய்ப்பு பெறவும் கல்வியகம் உதவும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

இணையதள முகவரி


இலவசகல்வி சேவைக்காக துவக்கப்பட்டுள்ள, 'அம்மா' கல்வியகத்தின் இணையதள முகவரி, www.ammakalviyagam.in இந்த இணையதளத்தில், முதலில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். நுழைவுத் தேர்வு பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவற்றுக்கு தனித்தனியே, பதிவு செய்ய வேண்டும்.

ஓட்டுச்சாவடிகளை தயார் செய்ய தேர்தல் பிரிவினருக்கு உத்தரவு

ஜன., 5ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக
கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தல்: கடந்தாண்டு, அக்., 17, 19ல் இரு கட்டங்களாக, உள்ளாட்சி தேர்தல் நடக்க இருந்தது. இதை எதிர்த்து, தி.மு.க., தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. தற்போது, 'மே 14க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஜன., 5ல் மத்திய தேர்தல் கமிஷன் வெளியிட்ட, இறுதி வாக்காளர் பட்டியலின் நகல் பெற்று, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
ஓட்டுச்சாவடிகள்: அடுத்த கட்டமாக, ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்துதல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: புறநகர் பகுதியில், 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி, நகர் பகுதியில், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் தயார்படுத்தப்படும். புதிதாக வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் என, இரண்டும் இருப்பதால், ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். வார்டு வாரியாக பட்டியல் தயாரித்து முடித்ததும், தேவையான ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் : அடுத்த வாரம்

பள்ளி பாடத் திட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள். மாணவர்கள், நம்பிக்கையோடும், தளராத மனதோடும், தேர்வை எதிர்கொள்ள வேண்டும். கல்வியிலும், சமூக விழிப்புணர்ச்சியிலும், தமிழகம் முதல் மாநிலமாக வருவதற்கு, ஜெ., காட்டிய நல்வழியில், அரசு பாடுபடும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியர், எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பதை அறிந்து கொள்ள, 'கேரியர் கைடன்ஸ் கவுன்சிலிங்' என்ற பெயரில், வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மேற்கொண்டு என்ன படிக்கலாம் என, ஆலோசனை வழங்கப்படும். 32 மாவட்டத் தலைநகரங்கள்; 124 நகராட்சிகள்; 385 ஊராட்சி ஒன்றியங்கள் என, 541 இடங்களில் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும்.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு, உணவு, குடிநீர் வசதி செய்து தரப்படும். ஏப்., 6, 7 ஆகிய நாட்களில், ஏதேனும் ஒரு நாளில் நிகழ்ச்சி நடத்தப்படும்.
மருத்துவம், பொறியியல், அறிவியல் பிரிவுகள் குறித்தும், போட்டித்தேர்வு குறித்தும், மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆலோசனைகள் வழங்கப்படும்.அரசை பொறுத்தவரை, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழகம் திகழ வேண்டும் என்பதற்காக, ஜெ., ஆட்சியில் சிறப்பான முறையில், பல்வேறு திட்டங்களை அறிவித்தோம். தமிழகம், கல்வித் துறையில், இந்தியாவில் முதன் மாநிலமாக திகழ்வதற்காக, புதிய திட்டங்களை அறிவித்துள்ளோம்.பாடத்திட்டங்களை மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒருவாரத்திற்குள் அறிவிப்பு வெளியாகும். தேர்வுத் துறையில் காலியிடங்களை நிரப்புவது குறித்து, பரிசீலனை செய்யப்படும்.மாணவ, மாணவியர் எதிர்காலத்திற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கிறோம். ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணியிடங்கள், நிதி நிலைக்கேற்ப நிரப்பப்படும்.

டெட்' தேர்வு விண்ணப்பம்: ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும் ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும், பூர்த்தி செய்து தரலாம் டி.ஆர்.பி., புதிய கட்டுப்பாடு

ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வில், ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,
அறிவித்துள்ளது. இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'டெட்' தேர்வின் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு, ஏப்., 29, 30ல், தேர்வு நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட மையங்களில், மார்ச், 6 முதல், 22 காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பெறப்படும்.மையங்கள் குறித்த விபரங்கள், www.trb.tn.nic.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும். விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு தாள் தேர்வுக்கும், தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும், பூர்த்தி செய்து தரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FLASH NEWS-TET- Notification and Syllabus Application Sales Centres, &Application Receiving Centres and Prospectus

மார்ச் 31-க்குப் பிறகு புதிய பேக்குகள்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட JIO

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், இலவச சேவை வரும் மார்ச் 31-ம்
தேதியுடன் நிறைவடைகிறது. இதற்குப் பிறகு, மற்ற நிறுவனங்கள் போல பணம் செலுத்திதான் ஜியோ சேவையை அனுபவிக்க முடியும்.
தையடுத்து, ஜியோ நிறுவனம் தனது கட்டண சேவை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் 99 ரூபாய் கட்டணம் செலுத்தி 'ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் சப்ஸ்கிரிப்ஷன்' செய்ய வேண்டும். இந்த சப்ஸ்கிரிப்ஷன் வேலிடிட்டி 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இருக்கும்.


இதுதவிர, வேண்டிய மாதாந்திர பேக்குகளை பயன்படுத்தி ஜியோ சேவையை தொடரலாம். தற்போது, 303 ரூபாய்க்கு ஜியோ வெளியிட்டுள்ள பேக்கிலேயே 28 நாட்களுக்கு இன்டர்நெட் முதல் அனைத்து சேவைகளும் அன்லிமிடெடில் கிடைக்கிறது. இந்த பேக்கின் மூலம் 1GB இன்டர்நெட் பயன்படுத்திய பிறகு, பேண்ட்வித் வேகம் குறைக்கப்படும். மேலும், விபரங்களை ஜியோ இணையதளத்தின் மூலம் அறியலாம்.

1/3/17

DTED Exam: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில், தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு
எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டுவிண்ணப்பித்தனர்.
அவர்கள், மார்ச், 1 முதல், 3 வரை, www.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலைபதிவிறக்கம் செய்யலாம். பின், மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, மார்ச், 6 முதல், 8 வரை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற நடைமுறைகள் எதுவும் 2018-19- ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது - NCERT.

ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற
நடைமுறைகள் எதுவும் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது.


  என தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிவித்துள்ளது. ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு
அங்கீகாரம், அனுமதி நீட்டிப்பு வழங்குவது, புதிய படிப்புகள்- இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திகொள்ள அனுமதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்.சி.டி.இ. மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக என்.சி.டி.இ. உறுப்பினர் செயலர் சஞ்சய் அவஸ்தி வெளியிடப்பட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், வரும் காலங்களில் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்ணப்பங்களைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்

மார்ச் 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்? அரசுஊழியர்கள்ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு


இலவச 'லேப் - டாப்' இந்த ஆண்டில் இல்லை

பள்ளி மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இலவச, 'லேப் - டாப்' கிடைக்காது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்; அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் பயின்ற, 40 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இதுவரை இலவச, லேப் - டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, 4,331 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசு துவங்கிய, இந்த முன்னோடி திட்டத்தை, பல மாநிலங் கள் பின்பற்ற துவங்கியுள்ளன. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இலவச லேப் - டாப் திட்டத்தைத் தொடரப் போவதாக, அ.தி.மு.க., அரசு தெரிவித்தது; சட்டசபையிலும் அறிவிக்கப்பட்டது.


கோடைவிடுமுறை

ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை செயலருக்கு, மற்ற துறைகளின் பொறுப்பு தரப்பட்டதால், லேப் - டாப் வழங்கும் பணியில், அவர் தீவிரம் காட்டவில்லை.
பள்ளி தேர்வுகள் முடிவதற்குள், லேப் - டாப் தந்துவிட்டால், அது, கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க உதவியாக இருக்கும் என, மாணவர்களும், பெற்றோரும்
எதிர்பார்க்கின்றனர். ஆனால், அது சாத்தியம் இல்லை என, தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது:
இருவாரங்களுக்கு முன் தான், லேப் - டாப் கொள்முதலுக்கான, 'டெண்டர்' விண்ணப்பங்களை பெறும் தேதி நிறைவடைந்தது. அதை, தற்போது பரிசீலிக்க துவங்கியிருக்கிறோம். இதில், அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. அதனால், தேர்வு துவங்கு வதற்குள், டெண்டரை இறுதி செய்வதற்கு வாய்ப்பு இல்லை.


அவகாசம்

அதைஇறுதி செய்தாலும், கொள்முதல் செய்ய, அவகாசம் தேவை. பின், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்; அதற்கும் கால அவகாசம் வேண்டும். அதனால், இந்த ஆண்டில் லேப் - டாப் வழங்குவது சிரமம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வி : 3,000 ஆசிரியர் பணியிடங்கள் காலி : விரைவில் நிரப்ப வலியுறுத்தல்

*பள்ளிக்கல்வியில் காலியாக உள்ள, 3,000 ஆசிரியர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில், 30 கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகள்; 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங் களும் காலியாக உள்ளன. அதனால், பொதுத் தேர்வு பணிகளை ஒருங்கிணைப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.


  தமிழகத்தில், 145 இடங்களில் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில், பொறுப்பு பணிகளில் நியமிக்க, 100 அதிகாரிகளே உள்ளனர்; 45 அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல், காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிக்கல்வியில், 3,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும் தாமதமின்றி நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.