யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/3/17

பள்ளிக்கல்வி - அ.இ.க.திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 2064 பட்டதாரி ஆசிரியர், 344 உடற்கல்வி ஆசிரியர், 344 இளநிலை உதவியாளர் மற்றும் 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 01.03.2017 முதல் 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம்?

தகுதித்தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் என்பது குறித்து நாம் ஆலோசனை கேட்டது – கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள்,
பேரறிஞர்கள், ஐ.ஏ.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தும் விரிவுரையாளர்கள் போன்றோர்களிடம் அல்ல.

தமிழக இந்திய ஆட்சி பணியை சார்ந்த அதிகாரிகள் மாற்றம்-அரசாணை 790-நாள்-06.03.2017

TNPSC தேர்வுக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஆன்-லைன் முன்பதிவுக் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டண விகிதங்கள் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளன.ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒரு முறை ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:

நேரடி எழுத்துத் தேர்வுகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அரசுத் துறைகளுக்கு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி, நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படும் தமிழ்நாடு மாநிலப் பணிகளுக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் இப்போது ரூ.125-ஆக உள்ளது. இது, ரூ.200-ஆக உயர்த்தப்படுகிறது.
சார்புப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சார்புப் பணிகள், அமைச்சுப் பணிகள், நீதி அமைச்சுப் பணிகள், தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி ஆகியவற்றுக்கான எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வு: அனைத்து வகையான பணிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒருமுறை ஆன்-லைன் பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பட்டப் படிப்புப் படித்திருந்தால், அவர்களுக்கு மூன்று முறை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

மார்ச் 1 முதல்....இந்தப் புதிய கட்டண மாற்றங்கள் அனைத்தும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஆங்கிலம் முதல்தாள் வினாக்களில் குளறுபடி

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆங்கிலம் முதல்தாளில் 3 மதிப்பெண் வினாக்களில் குளறுபடி இருந்ததால் விடை எழுத முடியாமல்
மாணவர்கள் குழப்பமடைந்தனர். தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஆங்கிலம் முதல்தாள் தேர்வு நடந்தது. தேர்வு அறையில் வினாத்தாள்களை மாணவர்களுக்கு கொடுத்தவுடன் விடை எழுத தொடங்கினர்.

இதில் எளிமையான கேள்விகளை மாணவர்கள் முதலில் எழுத தொடங்கினர். கேட்கப்பட்ட கேள்விகளில் வினாத்தாளில் 8வது பக்கம் (B) read the following sets lines and answer the questions given below என்ற பிரிவில் கேள்வி எண் 61, 62, 63 என்ற ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

வழக்கமாக இந்த கேள்விகளுக்கு விடை எழுத போயம் லைன் கொடுத்துவிட்டு, அதற்கான பதிலை எழுத சொல்வார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கான வினாத்தாளில் 61வது கேள்விக்கு மட்டுமே போயம் லைன் கொடுத்துள்ளனர். 62வது கேள்விக்கு தரவில்லை. இதனால் மாணவர்கள் விடை எழுத முடியாமல் குழப்பமடைந்தனர். இதுகுறித்து ஆங்கில ஆசிரியரிடம் கேட்டபோது, `61வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கப்பட்டது. 62வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கவில்லை. இதையடுத்து 63வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கப்பட்டது. இந்த போயம் லைன் 62வது கேள்விக்கா அல்லது 63வது கேள்விக்கா என தெரியாமல் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

வழக்கமாக இந்த இலக்கியத்திற்கான கேள்விகள் எளிமையாக இருக்கும். இதற்கு மாணவர்கள் விடை எழுதி முழுமையாக 3 மதிப்பெண்களை பெற்றுவிடுவர். இந்த ஆண்டு இந்த கேள்விகளில் குளறுபடி உள்ளது. இதற்கு தேர்வுத்துறை மதிப்பெண் அளிக்குமா என்று தெரியவில்லை'' என்றார்.

39ஆயிரம் கம்ப்யூட்டர் சய்ன்ஸ் பி.எட் பட்டதாரிகள் வேலையின்றி தவிப்பு:

No automatic alt text available.

TNTET - வெளியானது ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம்! பூர்த்தி செய்வோருக்கு சில டிப்ஸ்

நீண்ட நாளாக எதிர்பார்த்த ஆசிரியர் தகுதித்தேர்வு மூன்று வருடத்திற்குப் பிறகு கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
இன்று முதல் தேர்வுக்கான விண்ணப்பம் வழங்க ஆரம்பித்து
இருக்கிறது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணையம். தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 6-ம் தேதியில் இருந்து மார்ச் 22-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும். முதல் தாளுக்கான தேர்வு ஏப்ரல் 29 -ம் தேதியும், இரண்டாவது தாளுக்கான தேர்வு ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறும்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. எந்தெந்தப் பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்ற தகவலை ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் trb.tn.nic.in பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
50 ரூபாய் கொடுத்து விண்ணப்பத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்புவதற்குப் பதிலாக, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் அல்லது குறிப்பிட்ட பள்ளியில் வழங்க வேண்டும்.
விண்ணப்பத்தில் எந்தக் கல்வி மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி பிரிவைச் சார்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக்கட்டணமாக 250 ரூபாயும், பிற பிரிவினரைச் சேர்ந்தவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு விண்ணப்பத்தில் இணைப்புத்தாள் (சலான்) இருக்கும். தேர்வுக்கான கட்டணத்தை அருகில் உள்ள இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அல்லது கனரா வங்கியில் செலுத்தி சலான் சீட்டினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த கவனத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். சரியான கட்டத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தை மடிக்கக்கூடாது. தபால் வழியாக அனுப்பாமல் நேரடியாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் சேரும் வகையில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் போன்றவற்றை நினைவில் கொள்ளவும்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 1-ல் பட்டயப்படிப்பு படித்தவர்கள் எழுதலாம். இந்த ஆண்டு பட்டயப்படிப்பிற்கான தேர்வினை முடிக்க உள்ளவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பார்வைத் திறன் குறைந்தோர் முதல் தாள் விண்ணப்பிக்க முடியாது. இரண்டாவது தாளை ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து அதன் பின்பு பி.எட் படித்து முடித்தவர்கள் எழுதலாம். தற்போது பி.எட் முடிக்கும் தருவாயில் உள்ளவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டு தாளுக்கான தேர்வினையும் எழுத இருப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தாள்1 குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச்சுழல் அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாளில் குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் அல்லது சமூக அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரத் தேர்வாகவும், 150 கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையிலும் இருக்கும்.
மூன்று வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்கவில்லை என்பதால் போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், இன்னும் எவ்வளவு காலிப் பணியிடங்கள் இருக்கின்றன என்ற தகவலும் உறுதியாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் 4000த்துக்கு மேற்பட்ட காலி இடங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் தற்போது ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 3000 பணியிடங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், பள்ளிக் கல்வித்துறையில் ஐந்நூறு பணியிடங்கள் மட்டுமே காலியிடங்களாக இருக்கின்றன என்ற தகவலும் இருக்கிறது. ஆனால், ஒரு முறை தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால் ஏழு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால் அதனடிப்படையில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படும் என்பதால் 90 மதிப்பெண்ணைப் பெற வேண்டும். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு நாளுக்கும் குறைவான நாட்களே இருப்பதால் மிகுந்த திட்டமிட்டுப் படிப்பது அவசியம்.
வாழ்த்துகள் ஆசிரியர்களே!

- ஞா. சக்திவேல் முருகன்

EMIS-STUDENTS APPLICATION-NEW FORM

TNTET - 2017:ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்படவுள்ளனதமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, 
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவை, ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள்,  ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் திங்கள்கிழமை (மார்ச்6) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும்.ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின் 2014 -15ஆம் ஆண்டு பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாளை ஏப்ரல் மாதம் தான் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு.

👉 2014 -2015 கணக்கீட்டுத் தாள் ஏப்ரல் மாதத்தில் தான் வெளிவர வாய்ப்பு.
👉ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின் 2014 -15 ஆம்ஆண்டு பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாளை ஏப்ரல் மாதம் தான் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு.
👉 நகராட்சி /மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் GPF கணக்காணது AG ஆல் ஏற்கனவே பராமரிக்கப் பட்டு வருவதால் அவர்களின் எண்ணை தனியாக வகைப்படுத்த வேண்டியுள்ளதால் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலகங்களில் விபரம் கோரப் பட்டுள்ளது.
🌷 தற்போது மேல்நிலைத் தேர்வுகள் நடைபெறுவதால் ஏப்ரல் மாதம் தான் விபரம் கிடைக்கப் பெறும்.
🌲அதன் பின்பே NIC இல் பதிவேற்றம் செய்யப்படும்.அதன் பின்பே பதிவிறக்கம் செய்ய இயலும்..

தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்.

தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது.
அன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 1-ம்தேதி வரை நடைபெற்றது.

இதன் பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வரானார். புதிய அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 18-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2017-18 ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.  ஆனாலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்டப் பேரவை செயலகத்தில் இருந்து ஓரிரு நாளில் வெளியாகும்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக டி.உதய சந்திரன் நியமனம்

உயர்கல்வித்துறை செயலாளர் சபீதா சிமெண்ட் கழக எம்.டி.யாக மாற்றம்

உயர்கல்வித்துறை முதன்மைச் செயலராக சுனில் பாலிவல் நியமனம்

சிறுபான்மை நலத்துறை செயலாளராக வள்ளலார் நியமனம்



கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண்மை இயக்குநராக காமராஜ் நியமனம்

போக்குவரத்துத்துறை ஆணையராக தயானந்த கட்டாரியா நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பி.பொன்னையா நியமனம்

சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் நியமனம்

சென்னை ஆட்சியராக இருந்த மகேஸ்வரி , வணிக வரி இணை ஆணையராக நியமனம்

TNTET- 2017 : மாவட்ட வாரியாக விண்ணப்ப விநியோகம் மற்றும் பெற்றுக்கொள்ளும் மையங்கள்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், இன்று திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவை, ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள், சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும்.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.
இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட வாரியாக விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் இடம் மற்றும் பெற்றுக்கொள்ளும் மையங்கள் விவரங்கள்:
மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Application Sales Centres and Application Receiving Centres
Prospectus

பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபிதா மாற்றம் .


தமிழக அரசு அறிவித்துள்ள பணியிட மாற்ற அறிக்கையின் படி, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபிதா மாற்றம் செய்யப்பட்டு தமிழக சிமிண்ட் கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கு பதிலாக உதயச் சந்திரன் ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நீண்ட காலமாக பள்ளிக் கல்வித் துறையில் இருந்த சபிதா மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

பள்ளிகளை மூடிய செயலர்
இவர் கல்வித் துறைக்கு செயலாளராக பணியாற்றிய காலத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் பல மூடப்பட்டன என்றும், அரசு பள்ளிகள் பல மூடப்பட்டுள்ளன என்றும் ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டுக்களை வைத்தன. என்றாலும், யாராலும் அசைக்க முடியாத சக்தியாக சபிதா கல்வித்துறையில் விளங்கி வந்தார்.
  
மாற்றுத்திறனாளிகள் வயிற்றில்...
விரிவுரையாளர் பணிக்கு பார்வையற்றோரை நியமிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய வரலாறுக்கு சொந்தக்காரரும் இவர்தான். ஆசிரியர்கள் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்காக 6-10-2009 அன்று விளம்பரம் வெளியிட்டது. அதில் பார்வையிழந்த, காதுகேளாதவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  
நிபந்தனையற்ற மன்னிப்பு
இது தொடர்பாக தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், பார்வையற்றோருக்கான இடஒதுக்கீடுகளை முறையாக பின்பற்றுவதாக கோர்ட்டில் உறுதி அளித்த பெருமை மிக்கவர் சபிதா.
  
தப்பியது கல்வி
இவர் மீது இடமாற்றம், பணி நியமனம் உள்ளிட்ட செயல்பாடுகளில் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் இவர் மீது எடுக்கவில்லை. தற்போது இந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் நிம்மதியை அளித்துள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

6/3/17

ARN செய்திகள்:9094830243... மஃபா பாண்டியராஜன் அறிவிப்பு


இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் இல்லை…

Admission Help line – 9962814432
அட்மிஷன் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும்

தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு Engineering, கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.

170க்கு மேலே cutoff எடுக்கும் BC/MBC மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
விளையாட்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற SC/ST/SCA மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
BE சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை உள்ள பொறியியல் கல்லூரியில் படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
BE சேரும் முதல் பட்டதாரி இல்லாத மாணவர்களுக்கு ஒரு வருடம் கல்வி கட்டணம் ரூ.15,000 மட்டுமே
தொடர்புக்கு : 9962814432
.
1. B.E Mechanical Engineering,
2. B.E Electrical & Electronics Engineering
3. B.E Electronics & Communication Engineering
4. B.E Computer Science Engineering.
5. B.E Civil Engineering.
6. B.E Aeronautical Engineering
7. B.E Mechanical & Automation Engineering
8. B.E Electronic & Instrumentation Engineering
9. B.E Mechanical Engineering (Sandwich)
10. B.E Robotics
11. B.Tech Information Technology
.
இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே. Kindly forward to all groups
.
SUCCESS கல்வி அறக்கட்டளை
முன்பதிவிற்கு அழைக்கவும்,  📞 9962814432 / 8680048146. 
இதை அனைவர்க்கும் பகிருங்கள்

பள்ளியில் கூடுதல் வகுப்பறை வசதி செய்து தர கோரிக்கை விடுத்த ஆசிரியருக்குமெமோ கொடுத்த இணை இயக்குனர். அதிச்சியில் ஆசிரியர்கள்!!!

அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை பொதுத்தேர்வு எழுதும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் கொண்டுவந்த அத்தியாவசிய உணவுகளை சாப்பிடலாம்

ஏப்ரல் 2-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்
ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும்.ஆனால் இந்த ஆண்டு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதால், போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.5 வயதுக்குட்பட்டவர்கள்: தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக ஏப்ரல் 2-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.43 ஆயிரம் மையங்கள்: ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என முக்கியமான இடங்களில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படும். மேலும் முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சுமார் 1,500 நகரும் மையங்கள் நிறுவப்படும்.தொலை தூரம், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்படும். இந்தப் பணிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.


இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:தமிழகம் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். எனவே அனைத்து தாய்மார்களும் இந்த முகாமைபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் என்றார்.

பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி அறிமுகம் - நெட்வொர்க் இல்லாத இடத்திலும்செயல்படும்.

சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில்
பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால், நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட செல்போன் மூலம் பேசமுடியும்.
தனியார் தொலைபேசி நிறுவனங்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகள், சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வரிசையில், ‘எல்எஃப்எம்டி’ (Limited Fixed Mobile Telephony) என்ற புதிய சேவையைதற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி, கூறியதாவது:பிஎஸ்என்எல் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எல்எப்எம்டிசேவையைப் பயன்படுத்த வீட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரை வழி தொலைபேசி (லேண்ட்லைன்) இணைப்பு, பிராட் பேண்ட் இணைப்பு அவசியம் வைத் திருக்க வேண்டும். பிராட்பேண்டில் ஸ்டேடிக் ஐபி, டைனமிக் ஐபி என 2 வகை உள்ளது.

இதில் ஸ்டேடிக் ஐபி வைத்துள்ளவர்களுக்கு மட்டும் தற்போது இப்புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.இந்த புதிய வசதியைப் பெற விண்ணப்பித்தால் முதலில் அவர்களுக்கு ‘2999’ என்ற எண்ணில் தொடங்கும் ஒரு டம்மி எண் வழங்கப்படும். இதை ஏற்கெனவே உள்ள லேண்ட்லைன் தொலைபேசி எண்ணுடன் இணைக்க வேண்டும்.மேலும், ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ‘ஜொய்ப்பர்’ என்ற செயலியை (Zoiper App) பதிவிறக்கம் செய்ய வேண் டும். அதில் யூஸர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து இணைக்க வேண்டும். பிறகு, ‘அவுட்கோயிங்’, ‘இன்கமிங்’, டேட்டாசேவை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். செல் போனில் சிம் கார்டு இல்லாமல் மேற்கண்ட செயலி மூலம் ‘கால்’ செய்யலாம். இதுதான் இச்சேவையின் சிறப்பம்சம்.சிலர் வீடுகளில் வாய்ஸ்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்பார்கள். அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி ‘கால்’ செய்யலாம்.


இச்சேவையைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் கிடையாது. தற்போதைக்கு ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். செல்போன் சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் இச்சேவையைப் பயன்படுத்தி பேச முடியும். அத்துடன், குரல் அழைப்பும் (வாய்ஸ் கால்) நன்கு தெளிவாக கேட்கும்.இவ்வாறு கலாவதி கூறினார்.

டெட்' தேர்வு விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்

ஆசிரியர் பதவி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. மூன்று
ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., மூலம், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் குறிப்பிட்ட பள்ளிகளில் காலை 9மணி முதல் 5மணி வரை வழங்கப்படுகின்றன.

தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக, விண்ணப்பம் பெற வேண்டும். விண்ணப்பம் வழங்கும் இடங்கள், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு தேர்வுக்கு, ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது.வரும், 22 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அறிவித்துள்ள விண்ணப்பம் பெறும் மையங்களில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

வரும், 23க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.