ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீண் பி.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அதிகாரியாக இருந்த டி.என்.பத்மஜாதேவி திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் கடிதத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் சனிக்கிழமை
வெளியிட்ட உத்தரவு: பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையாளராக (வடக்கு) இருப்பவர் பிரவீண் பி.நாயர். அவர் ஆதிதிராவிடர் நலத் துறையின் இணை இயக்குநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார். ஆதிதிராவிடர் நலத் துறையின் இணை இயக்குநர் பொறுப்பை வகித்து வந்த டி.என்.பத்மஜாதேவி, தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் பொறுப்பை வகிப்பார் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணியும் மாற்றம்: ஆதிதிராவிடர் நலத் துறையின் இணை இயக்குநர் பொறுப்புடன், ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் பத்மஜாதேவி செயல்பட்டு வந்தார். இப்போது, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மருத்துவக் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால், ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீண் பி.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட வருவாய் அலுவலர் நிலையை வகிக்கக் கூடிய அதிகாரிகளே, சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் பொது அல்லது இடைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருப்பர். ஆனால், இப்போது நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நடத்தும் பொறுப்பு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல்: இடைத் தேர்தலில் போட்டியிட மனு செய்பவர்களின் வேட்புமனுக்களை பரிசீலிப்பது, அவற்றை ஏற்றுக் கொள்வது, நிராகரிப்பது போன்ற பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொள்வர். கடந்த 16-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, இரண்டு நாள்கள் ஆகியுள்ளன. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலால் தேர்தல் நடத்தும் அதிகாரியான பத்மஜாதேவி திடீரென மாற்றப்பட்டுள்ளார். இது ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை: ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பத்மஜாதேவி இருந்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலும், இப்போது அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலிலும் அவரே தேர்தல் நடத்தும் அதிகாரியாகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை மாற்ற வேண்டுமென திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பான புகார் மனுவை தேர்தல் ஆணையத்திடமும் அளித்தன.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் அதன் மீது இப்போது நடவடிக்கை எடுத்துள்ளது.