யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/4/17

மனித உடல் பற்றிய சுவாரஸ்யமான

மனைவியாக ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம்

முருங்கைக்காயை விட இந்த காயில் தான் அதிகமா இருக்காம்

வாயுப் பிரச்சனை எதனால்

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா

100ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபிடியுங்கள்

6B43~1கணினி என்றால் என்ன?

Get Your Bank Mini Statements on Your Mobile Without the Internet

MOBILE

அறிந்துகொள்ளுவேம்

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

ஆசிரியர்களை பற்றி தவறாகவோ

ஆண்ட்ராய்ட் போனில் பேட்டரி பராமரிப்பு

ஆன்மீகத்தில்பெண்கள் தெரிந்துக்கொள்ளவேண்டிய சில விஷயங்கள்

இஞ்சிப் பால்

இருவகையான இருள்

1/4/17

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு; நாளை முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு.

TRB : அடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்

அடிப்படையான எந்த தகவலும் இல்லாமல், மொட்டை கடிதம் போல, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் செயல்படுவதால், பணி நியமன தகவல்கள் கிடைக்காமல், பட்டதாரிகளும், ஆசிரியர்களும், அவதிக்கு ஆளாகின்றனர். 

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. பதினோரு அடுக்கு மாடி கட்டடத்தில், பயன்படுத்தப்படாத கிடங்கு போல, ஆள் அரவமற்ற நிலையில், இந்த அலுவலகம் செயல்படுகிறது. இங்கு செல்லும் பட்டதாரிகள், எந்த தகவல்களை கேட்டாலும், 'இணையதளத்தை பாருங்கள்; பத்திரிகைகளை பாருங்கள்' எனக்கூறி அனுப்பி விடுகின்றனர். இணையதளமோ, மொட்டை கடிதம் போல, அடிப்படை தகவல்கள் ஏதுமின்றி, வெறும் அறிவிப்புகள் மட்டுமே, ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன.

டி.ஆர்.பி., வரலாறு, செயல்பாடு, அதிகாரிகள், உறுப்பினர்கள் விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் யாரை அணுக வேண்டும், அவர்களின் பெயர் மற்றும் முகவரி, 'டெட்' தேர்வை அறிமுகம் செய்த அரசாணை, 'டெட்' தேர்வின் முந்தைய அறிவிப்புகள், வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியல் போன்ற விபரங்கள் இல்லை. பொது அலுவலருக்கான தொடர்பு எண், செய்தி தொடர்பாளர் யார், அவரது தொலைபேசி எண்ணும் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, ஒரு இணையதளத்தில், எந்தெந்த அடிப்படை தகவல்கள் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும், இதில் இல்லை.விதிகளின் படி, இணையதளத்தையே பராமரிக்க தெரியாத, டி.ஆர்.பி., அதிகாரிகள், வருங்கால சந்ததிகளை உருவாக்கும், ஆசிரியர்களின் பணி நியமனத்தை எந்த அளவுக்கு தரமாக நடத்த முடியும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழை மறந்த அவலம் : தமிழகத்தில், அரசாணை மற்றும் அறிவிப்புகளை, தமிழில் வெளியிடுவது கட்டாயமாகும். ஆனால், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில், தமிழ் மொழி மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பல ஆயிரம் பேரை பணி நியமனம் செய்யும், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தை பார்த்தாவது, டி.ஆர்.பி., கற்றுக்கொள்வது நல்லது.

TET தேர்வுக்கு படிப்பது எப்படி? - TIPS

√.முதலில் சூழலை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

√.தேர்வு நாள் வரை பொழுதுபோக்குகளைத் தவிருங்கள்

√.உறவினர் வீட்டு விசேஷங்களை தவிருங்கள்


√.செல்போன் பயன்பாட்டை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்துங்கள்.

√.ஒரு நாளைக்கு ஒரு சப்ஜெக்ட் அல்லது மணிக் கணக்கில் ஒவ்வொரு சப்ஜெக்ட் என அட்டவணைப் படுத்திக் கொள்ளுங்கள்

√.இப்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் புரியாத பகுதிகளில் தேங்கிக் கிடக்காதீர்கள். பாடங்களைக் கடந்து சென்று கொண்டேயிருங்கள். அப்போது தான் படித்த திருப்தி ஏற்படும்.
√.நீங்கள் பலவீனமாக இருப்பதாக கருதும் பாடத்தில் சற்றே கூடுதல் நேரமும், பலமாக இருப்பதாக நினைக்கும் பாடத்தில் சற்று குறைவான நேரமும் செலவிடுங்கள்

√.வேலைக்கு எதுவும் போகாமல் இருப்பவர்கள் இந்த நேரத்தில் தான் படிக்கவேண்டும், இந்த நேரத்தில் படிக்கக் கூடாது என்றில்லை. தூக்கம் வரும்போது தூங்கிவிடலாம், விழிப்புடன் இருக்கும் தருணங்களில் தெளிவான மனநிலையுடன் படிக்கலாம்

√.முதலில் நம்மிடம் இருக்கும் பாடக்குறிப்புகள், மெட்டீரியல்களை முழுமையாக படித்து முடியுங்கள். புதிய மெட்டீரியல் தேடி நேரத்தை வீணாக்காதீர்.

√.உற்சாகமான மனிதர்களுடன் உரையாடுங்கள். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடமிருந்து விலகியிருங்கள்.

√.நேரம் கிடைத்தால் உங்கள் அளவிற்கு படித்து தயார் செய்தவர்களுடன் குழு உரையாடல் மேற்கொள்ளுங்கள்.

√.தூக்கம் வராதவர்கள் படுக்கைக்கு சென்ற பின்பு படித்தவற்றை நினைவுபடுத்திப் பாருங்கள். அப்படியே தூங்கிவிடுவீர்கள்.

√.நேரம் வாய்த்தால் படித்தவற்றை ஒரு எக்ஸ்பிரஸ் ரிவிஷன் செய்யுங்கள்.

√.இதற்குப்பிறகு மாதிரித் தேர்வை எழுதிப் பாருங்கள்.

√உங்களுக்கு மதிப்பெண்கள் மத்தாப்புகளாகும்
வானம் வசப்படும். வாத்தியார் கனவும் மெய்ப்படும்.

BREAKINGNEWS | *ஜியோ ப்ரைம் உறுப்பினராவதற்கு ரூ.99 கட்டணம் செலுத்த ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு...