முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்ப தற்கான கால அவகாசம் மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 4-ஆம் தேதி கடைசித் தேதி என்றும், இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரின்ட் எடுத்து மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டிய கடைசித் தேதி ஏப்ரல் 5 கடைசித் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மிகவும் குறைவாக உள்ளது. அவற்றில் 3 நாள்கள் அரசு விடுமுறை நாள்கள் என்பதால், வங்கிகளில் கட்டணத்தைச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். எனவே, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து கால அவகாசம் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது: விண்ணப்பங்களை இணையத்தில் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 6 கடைசித் தேதி என்றும், இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரிண்ட் எடுத்து தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதற்கு ஏப்ரல் 7 கடைசித் தேதி என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இணையதளத்தில் விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் உள்ளது என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர். எனவே, இணையதளத்தில் பதிவு (ழ்ங்ஞ்ண்ள்ற்ங்ழ்) செய்துவிட்டு அதன் பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பிரின்ட் எடுத்து தபாலில் அனுப்புவதற்கு பதில், விண்ணப்பங்களை நேரடியாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபாலில் அனுப்பலாம்.
இரண்டு முறைகளில் விண்ணப்பித்தாலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.