யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/4/17

ஆய்வக உதவியாளர் தேர்வு பெயர்பட்டியல்கள் வெளியீடு.

பள்ளிகளுக்கான ஆய்வ உதவியாளர் தேர்வில் தேர்ச்சியடைந்தோர் மதிப்பெண் விவரங்களுடன் மதுரையில் 4 இடங்களில் பட்டியல்கள் சனிக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பள்ளி ஆய்வக உதவியாளர்கள் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டு சில நாள்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் தேர்வானவர்களின் சான்று சரிபார்க்கும் பணிகள் வரும் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மதுரை ஓ.சி.பி.எம்.பள்ளியில் நடைபெறவுள்ளன. இதில் 267 பேருக்கு தற்போது அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 சான்று சரிபார்ப்புக்காக வருவோருக்கு மதிப்பெண்களுடனான பெயர்ப்பட்டியல் சனிக்கிழமை காலையில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், மாவட்டக் கல்வி அலுவலக வளாகங்கள் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக வளாகம் ஆகியவற்றில் ஒட்டப்பட்டன. பெயர்ப் பட்டியல்களை ஏராளமானோர் வந்து பார்த்துச்சென்றனர்.

ஓ.சி.பி.எம்.பள்ளியில் நடைபெறும் சான்று சரிபார்க்கும் பணியை எளிதில் செயல்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி, நேர்முக உதவியாளர் ஆதிராமசுப்பு ஆகியோர் செய்துள்ளனர். 

Certificate Verification List for the Direct Recruitment Of Lab Assistant

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியீடு.







ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு !!



ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில் 
வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும்  அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5  விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் பள்ளிகளின் விவரம்:

1. கோ.து.வ.ச.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001.

2. புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடலூர்.

3. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி..

4. புனித லூர்தன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

5. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பார்க் அருகில், ஈரோடு  638 001. 

6. எஸ்.எஸ்.கே.வி. (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.  .

7. எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில். கன்னியாகுமரி   

8. சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணெய்மலை, கரூர். 

9. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கூட்டரங்கம்,கிருஷ்ணகிரி.    

10. ஓ.சி.பி.எம். (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி, மதுரை  625 002.
   
11. இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில், நாகப்பட்டினம். - 611 003.

12. அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (தெற்கு), மோகனூர் ரோடு, நாமக்கல்  637 001,

13. தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, துறையூர் ரோடு, பெரம்பலூர்.

14. ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை  622 001.     

15. சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம். இராமநாதபுரம்    

16. புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரிசிபாளையம், சேலம் - 636 009.   

17. செயிண்ட் ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை.

18. தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, மேரிஸ் கார்னர், தஞ்சாவூர்     

19. புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உதகமண்டலம் - 643 001.   

20. நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி  625 531.   

21. காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் மெயின் ரோடு, சோ.கீழ்நாச்சிப்பட்டு, திருவண்ணாமலை - 606 611.    

22. ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.

23. டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி, மோதிலால் தெரு, திருவள்ளூர் - 602 001.      

24. ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரயில் நிலையம் அருகில், திருப்பூர் - 641 601.    

25. பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், திருச்சி  620 002.    

26. சாரா தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி  - 627 002.

27. விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.     

28. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி, வேலூர்                                                        
29. தூய  இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு பாண்டி சாலை, விழுப்புரம்    

30. சத்ரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி விருதுநகர். விருதுநகர்.     

31. நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி மெயின் ரோடு, அரியலூர்.
   
சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும்.  சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது

சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள்  ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுகதகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 21

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு - மே 22

* அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 23

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 24

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 25

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு - மே 26

* உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 27

* உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 28

* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 29

* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 30

* இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பா சிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - மே 31

உத்தேச காலஅட்டவணையின் படி, இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகளை மே 31-ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

முக்கிய செய்தி:

ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP (state government salary package ) கணக்காக மாற்றி தர
AEEO அலுவலகத்தில் இருந்து மொத்தமாக பட்டியல் தயார் செய்து விரைவாக அளிக்குமாறு வங்கி கிளைகள் கோரியுள்ளன.
எந்தெந்த வங்கியில் ஆசிரியர்களின் சம்பள கணக்கு உள்ளதோ அக்கிளைக்கு சார்ந்த AEEO க்கள் விண்ணப்பம் அளிக்கும் படி கூறியுள்ளனர்.
மேலும் பணியாளர் பெயர்,கணக்கு எண்,ஆதார் எண்,பான் எண்,வங்கி MCIR எண் ஆகிய விவரங்களை இணைத்து முகப்பு கடிதம் அளிக்க கூறியுள்ளனர்.
ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் நேரடியாக விண்ணப்பிக்க தேவையில்லை.
AEEO க்கள் விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி படிவம்

உன் வாழ்க்கையை நீ வாழ்

உளுந்து

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி

எல்லாம் விதியின்படிதான்நடக்கும்.

ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஒரு குட்டி கதை

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா

கடவுளை பற்றி காமராசர்

கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால்

கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்

கர்மா

கொசுக்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதில் ஒருசில செடிகளுக்கு முக்கிய பங்குண்டு

சிறந்த 25 பொன்மொழிகள்

சுவைகளின் பலன்கள்

தமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா