யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/4/17

உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்

'ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 'சீனியாரிட்டி' படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது.தற்போது 2017 க்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில சீனியாரிட்டி பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது.

இதில், 2010 டிச.31 வரை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான பரிந்துரைகளை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் இயக்குனரகத்திற்கு அனுப்ப உள்ளனர்.பட்டியலில் இடம் பெறுவோர் 2016 டிச.31க்குள் பள்ளி துணை ஆய்வாளர், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு, மாவட்ட அலுவலக நடைமுறை உள்ளிட்ட 5 துறை மற்றும் சிறப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அன்றைய தேதியில் 57 வயது பூர்த்தி அடைந்தோராக இருக்க கூடாது. குற்றவழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்க கூடாது என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.இந்த 5 தேர்வுகளில் தேர்ச்சி பெறாதோரை பரிந்துரை செய்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும்?- மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆலோசனை

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கும் அவர் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

*பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதை முன்னி லைப்படுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்த வேண்டியது அவசியம்.

*அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க் கையை அதிகப்படுத்துவது தொடர்பாக உதவி மற்றும் கூடு தல் தொடக்கக் கல்வி அதிகாரி களுடன் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் கலந்தாலோசனை செய்ய வேண்டும்.

*அங்கன்வாடிகளில் படிக்கும் குழந் தைகளைக் கண்டறிந்து அவர் களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி, வீடு வீடாகச் சென்று, பள்ளி செல்லக்கூடிய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

*பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

*அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா நலத்திட்டங்களான புத்தகம், பாடக் குறிப்பேடு, சீருடை, காலணி, கணித உபகரணப் பெட்டி, கிரையான், வண்ண பென்சில்கள், அட்லஸ், ஸ்கூல் பேக் ஆகிய அனைத்தும் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்ற விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

*அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களின் உதவியுடன் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

*மாணவர்களுக்கு வசதியான, காற்றோட்டமான கட்டிடங்கள், மதிய உணவு, பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி, தகுதி படைத்த நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இருப்பதை பெற்றோருக்கு எடுத்துக்கூற வேண்டும்.

*குழந்தை தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*அரசு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி அளிக்கப்படுகிறது என்றும், அந்த வகுப்புகளில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான ஆங்கிலவழிக் கல்வி வழங்கப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் மற்று மாணவர்கள் மூலம் பேரணி நடத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

*இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு.

ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி உள்ளது. அரசு பள்ளிகளில், ஒரு சிலரை தவிர, மற்ற ஆசிரியர்கள், ஆங்கில மொழி திறனின்றி உள்ளனர்.இதற்காக, ஆங்கில மொழி அறிவு உடைய ஆசிரியர்களை, புதிதாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, ஆங்கில திறன் கொண்டவர்களை, ஆசிரியர்களாக தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு முறை மாற்றப்பட உள்ளது. முதலில் போட்டி தேர்வுகளுக்கான, விண்ணப்ப பதிவு, 'ஆன்லைனில்' மேற்கொள்ளும் திட்டம் அறிமுகமாகிறது.

அதேபோல், வரும் காலங்களில் ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வையும், கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக, மற்ற துறைகளுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளை, கணினி வழி தேர்வாக மாற்ற, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும்: உயர் நீதிமன்றம்

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய அளித்திருந்த தளர்வை ரத்து செய்து முன்பு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொது நல மனு ஒன்றினை தொடர்ந்தார். அதில் அவர் தெரிவித்திருந்தாவது:

விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு சட்டத்தில் முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி  விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.

இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும் பாதித்துள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக -லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று தடை விதித்து உத்தரவிட்டது.

பின்னர் இந்த வழக்கில் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த தமிழக அரசு மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்  சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க 2016-ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதிக்கு முன் வாங்கியிருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தி : உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது

இந்நிலையில் இந்த மனு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றம் தெரிவித்ததாவது:

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக இந்த நீதிமன்றம் அளித்திருந்த தளர்வு ஆணை ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பான வரைவு சட்டத்தை தமிழக அரசு தயார் செய்யும் வரை, அந்த சட்டமானது தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் வரை இந்த தடை தொடரும்.

தளர்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்  சங்கத்தினரின் வேண்டுகோள் தள்ளுபடி செய்யபப்டுகிறது. இது தொடர்பாக குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த முன்னேற்றமும் நடக்காத பொழுது என் தளர்வை ரத்து செய்யக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கை மே மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆசிரியைகள் அடிதடி மோதல் : 5 பேர் அதிரடி 'சஸ்பெண்ட்'

ஊத்தங்கரை அருகே, ஆசிரியைகள் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. தலைமை ஆசிரியை உட்பட ஐந்து பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், லக்கம்பட்டி நடுநிலை பள்ளியில், 61 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 
தலைமை ஆசிரியை நிர்மலா, 42, உதயசிவசங்கரி, 28, உட்பட மூன்று பெண் ஆசிரியைகள், ஒரு ஆண் ஆசிரியர் பணிபுரிந்தனர். உதயசிவசங்கரி, நிர்மலா இடையே சுமுக உறவு இல்லை.
பள்ளியில் நேற்று, இறுதித்தேர்வு நடந்தது. உதயசிவசங்கரி, தாமதமாக வந்ததால், தலைமை ஆசிரியை நிர்மலா, எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வினாத்தாள்களை வழங்கி, தேர்வு எழுத ஏற்பாடு செய்தார்.
இதனால், ஆத்திரமடைந்த உதயசிவசங்கரி, 'நான் இல்லாமல், என் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி தேர்வு நடத்தலாம்' என, வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர்.

சமாதானம் செய்ய வந்த இதர ஆசிரியைகளையும் உதயசிவசங்கரி தாக்கினார். இதனால், உதயசிவசங்கரியை மற்ற ஆசிரியர், ஆசிரியைகள் சேர்ந்து தாக்கினர்.
இவர்களின் மல்லுக்கட்டு சண்டையை பார்த்த மாணவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த கிராம மக்கள், பள்ளியில் குவிந்தனர். ஜாதி பெயரை சொல்லி தன்னை அடிப்பதாக, உதயசிவசங்கரி, பொதுமக்களிடம் கூறினார்.

இதனால், நான்கு பேரையும் அறையில் அடைத்து விட்டு, உதயசிவசங்கரியை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.
ஊத்தங்கரை டி.எஸ்.பி., அர்ஜுனன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாபு, ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தலைமை ஆசிரியை நிர்மலா, உதயசிவசங்கரி உட்பட, ஐந்து பேரையும், 'சஸ்பெண்ட்' செய்து, பாபு உத்தரவிட்டார்.
நிர்மலா, உதயசிவசங்கரி தனித்தனியே அளித்த புகாரை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அங்கீகார விதிகளை மீறிய 13 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ.,நோட்டீஸ்

அங்கீகார விதிகளை மீறி, தில்லுமுல்லு செய்த 13 பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., கண்டுபிடித்துள்ளது. தமிழகத்தில், ஒரு பள்ளி சிக்கியுள்ளது. சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்று, தமிழகத்தில், ௬௬௦ பள்ளிகள் உட்பட, நாடு முழுவதும், 18 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன.

அதிக கட்டணம் : மேலும், பல பள்ளிகள், மெட்ரிக்கில் இருந்து, சி.பி.எஸ்.இ.,க்கு மாற தயாராகி வருகின்றன. இவ்வாறு மாறும் பள்ளிகள், எதற்கும் கட்டுப்படாமல், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் உள்ளன. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியம், ஒவ்வொரு மாநிலத்திலும், சில பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தியது. அப்போது, பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்தது தெரிய வந்துள்ளது.

எச்சரிக்கை : இதனால், தமிழகத்தில், திண்டிவனத்தில் உள்ள, தாகூர் சீனியர் செகண்டரி பள்ளி உட்பட, 13 பள்ளிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என, கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், 'நோட்டீஸ் கிடைத்த, 30 நாட்களுக்குள் சரியான பதில் தராவிட்டால், சி.பி.எஸ்.இ., வாரியம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

கண்டறியப்பட்ட முறைகேடுகள்?

l பல பள்ளிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், முதல்வர், நுாலகர், ஆய்வகப் பணியாளர்
இல்லை

l தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தவில்லை

l நுாலகம், ஆய்வகம், போதிய உட்கட்டமைப்பு வசதி இல்லை. பள்ளி அமைந்திருக்கும் நிலம், இரண்டு பிரிவுகளாக உள்ளது; போதிய
பாதுகாப்பு வசதிகள் இல்லை

l ஆசிரியர்கள் முறையாக தேர்வு செய்யப்படவோ, நியமனம் செய்யப்படவோ இல்லை. அரசு
விதிகளின்படி, ஊதியம் வழங்கப்படவில்லை

l மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படவில்லை

l ஆசிரியர்களின் எண்ணிக்கை போலியாக, சி.பி.எஸ்.இ.,க்கு வழங்கப்பட்டுள்ளது

l சில பள்ளிகளில், அனுமதியின்றி, மாணவியருக்கு தனிப்பிரிவு வகுப்புகள் நடத்தப்படுகின்றன

l நடுநிலைப் பள்ளி அங்கீகாரம் பெற்று, பிளஸ் 2 வரை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்

l போதிய விளையாட்டு மைதானம் இல்லை; தரமான குடிநீர், தீ தடுப்பு, சுகாதார வசதிகள்
செய்யவில்லை. இது போன்று பல தில்லுமுல்லுகள் தெரிய வந்துள்ளன.

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 703 சிறப்பு அதிகாரி வேலை

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான 703 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வணிகவியல் துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: Bank of India (BOI)
மொத்த காலியிடங்கள்: 702
பணியிடம்: இந்தியாவில் எங்கும்

 பணி - காலியிடங்கள் விவரம்:
1. Officer (Credit) - 270
2. Manager - 400
3. Security Officer - 17
4. Technical (Appraisal) - 10
5. Technical (Premises) - 05

வயதுவரம்பு: 10.04.2017 தேதியின்படி 21 - 30, 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. Junior Management Grade Scale - I (JMGS I) பிரிவினருக்கு ரூ.23700-42020, Middle Management Grade Scale - II (MMGS II) பிரிவினருக்கும் ரூ.31705-45950

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2017
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: May/June 2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofindia.co.in/pdf/BOI-ADVT-GBO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

TNTET - 2017 தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், ஏப்., 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்., 29ல், 2.37 லட்சம் பேர்; 30ல், ஐந்து லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும், 1,861 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள் கட்டுகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன; துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட உள்ளனர்.

பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா, நேற்று கூட்டம் நடத்தினார்.

அதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:

● டெட் தேர்வில் எந்த குளறு படியும் இல்லாமல், தேர்வை நடத்த வேண்டும்

● யாரும் காப்பி அடிக்காமல், கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்

● வினாத்தாள், 'லீக்' ஆகாமல், தேர்வு துவங்கும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும்

● தேர்வு அறைகளில், போதிய அளவுக்கு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

● அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு என்றால், தனியார் பள்ளி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்

● தேர்வு மையங்களில் கடிகாரம், குடிநீர், மின் வசதி, மின் விசிறி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

● தாமதமாக வரும் தேர்வர்களை, அறைக்குள் அனுமதிக்கக் கூடாது

● பறக்கும் படை அமைத்து, தேர்வு நாளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு போல், இந்த தேர்வை நடத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

சம வேலைக்கு சம ஊதியம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- !!!

சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறை அனைத்து பணி மற்றும் பணியாளர்களுக்குப் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பில் தினசரி ஊதியம், தற் காலிக பணியாளர், ஒப்பந்த ஊழி யர் ஆகியோருக்கு நிரந்தர பணி யாளர்களுக்கு அளிக்கப்படும் அதே அளவுக்கு ஊதியம் வழங்கப் பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.



சம வேலைக்கு சம ஊதியம் மறுக்கப்படுவதானது, அடிமைத் தனமாகக் கருதப்படும். அடக்கு முறை, அடக்கி ஆளுதல், சிறுமைப் படுத்தல் ஆகியவை போலத்தான் கருதப்படும். தொழிலாளர் நலன் விரும்பும் மாநிலங்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அனைத்து துறையிலும் கடைப் பிடிக்க வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில தற்காலிக பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதிய மானது குறைந்தபட்ச ஊதிய விதி யைக் கூட பூர்த்தி செய்யவில்லை என வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மாநில அரசுக்கு சாதகமாக அம்மாநில நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தற்காலிக பணியாளர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர்.

ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை அளிக்காம லிருக்க பல்வேறு செயற்கையான காரணங்கள் கூறப்படுவதாக தாங்கள் கருதுவதாக நீதிபதிகள் ஜே.எஸ்.காதர், எஸ்.ஏ. போப்டே ஆகியோரடங்கிய அமர்வு தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது. ஒரு பணிக்காக தேர்வு செய்யப் படும் ஊழியருக்கு அதே பணியைச் செய்யும் நிரந்தர பணியாளருக்கு அளிக்கப்படும் அளவுக்கு ஊதியம் வழங்கப்படும். இதில் மாற்று கருத்துகளுக்கு இடமிருக்க முடி யாது. வேலை நிறுத்தம் போராட்டங்கள் மேற்கொள்வதன் முக்கிய காரணமே தாங்கள் கவுரமிக்கவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்து வதற்காகத்தான் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறைந்த ஊதியத்திற்காக யாருமே பணியாற்ற முன் வருவ தில்லை. ஆனால் அவ்விதம் நிர் பந்திக்கப்படுகின்றனர். அந்த குறைந்தபட்ச ஊதியத்தின் மூலம் தானும் தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளதுதான் நிதர்சனம். இதனாலேயே தங்களது சுயமரி யாதை மற்றும் சுய கவுரவத்தை இழந்து குறைந்த ஊதியத்தில் பணி புரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார உரிமை தொடர்பாக 1966-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதியில் இந்தியாவும் கையெழுத் திட்டுள்ளது. இதன் விதிமுறைகள் ஏப்ரல் 10, 1979 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்ட விதிகளில் பல்வேறு விளக் கங்கள் இருந்தாலும் இந்திய அரசி யலமைப்பு விதி 141-ல் சம வேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமே இல்லை. ஊழியர் நிரந் தரப் பணியாளரா அல்லது தற் காலிக பணியாளரா என்ற பேதம் கிடையாது. ஊதியம் அனை வருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறை: இன்று இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் ??

பள்ளிக்கல்வி துறை: இன்று இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் மதுரை கள்ளர் சீர்மரபினர் இணை இயக்குனர் பொன். குமார் சென்னை மாநிலஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி
( SCERT)இயக்கத்திற்கும், மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி  (SCERT)  இயக்குனரக இணை இயக்குனர் திரு. குப்புசாமி மதுரை கள்ளர் சீர்மரபினர் இணை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!!!

தவறான தகவல்கள், மோசமான வீடியோக்களை வாட்ஸ்-அப் அல்லது ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில் தண்டனை வழங்கலாம் என்று வாரணாசியின் மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.



இந்த விஷயம் குறித்து அந்த அறிக்கையில், 'பல வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில் உண்மை இல்லாத பல செய்திகள் பரவவிடப்படுகின்றன. இந்த மாதிரி தகவல்கள் சரியாகத்தான் இருக்கிறதா என்று பார்க்கமாலேயே பகிரப்படுகின்றன.

 அப்படிப்பட்ட தகவல்களை பரவவிடும் குரூப்பில் இருக்கும் நபரை குரூப் அட்மின் நீக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நபர் பற்றி அருகில் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்.


குரூப் அட்மின் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்-அப் குரூப்பில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் மோசமான வீடியோக்களால் பல பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந்தியாவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்-அப் பயனர்கள் இருக்கின்றனர்.

போர் அடிக்குது என்று சொல்லும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம் – கோடை விடுமுறை டிப்ஸ் !!

கோடை விடுமுறையில் மீண்டும் இந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ், அபாகஸ், கையெழுத்து, கணிதம், கம்ப்யூட்டர் என பல பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புவதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மூளைப் பகுதியில் உள்ள ஹிப்போ 
கேம்பஸ் பகுதியில் காணப்படும் நரம்பு செல்கள் அழிந்து, நினைவாற்றல், கற்றல் திறன்களை பாதிக்கின்றன. மாறாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்:

• அவர்களிடம் அதிகமாகப் பேசுங்கள், இதனால் அவர்கள் நண்பர்கள் சொல்வதைக் கேட்பதை விட நீங்கள் சொல்வதை நம்புவார்கள்.
• கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, ஜூ, பறவைகளுக்கு உணவளிக்க, மீன்களுக்கு உணவளிக்க, குழந்தைகள் காப்பகம், மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவு, முதியோர் இல்லம், அரசாங்க அலுவலகங்கள் என வித்தியாசமான இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
• சிறிய தோட்டம் போட்டு, பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வையுங்கள். பறவைகளின் வாழ்க்கையை அமைதியாக நோட்டமிட வையுங்கள்.
• அன்பு, கருணை, பிரியம் போன்றவற்றை பணத்தால் வாங்க முடியாது அதைக் கொடுத்தால் தான் நமக்கு அவை திரும்பக் கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.
• கம்ப்யூட்டர் மற்றும் தொலைக் காட்சி முன்பு இருப்பதை விட நண்பர்களுடன் இணைந்து விளையாடுவதை ஊக்குவியுங்கள்.
• வீட்டில் சிறிய பொறுப்புகளைக் கொடுத்து முடிக்கச் செய்யுங்கள்.
• எளிதான ஆரோக்கியமான சமையல் செய்ய சொல்லிக் கொடுங்கள்.
• உறவினர் வீட்டிற்கு செல்லும் போது, அவர்கள் கையால் செய்த சிறிய பரிசை கொடுக்கச் சொல்லுங்கள்.
• உடற்பயிற்சியை அவர்களுடன் இணைந்து செய்து கொண்டாடுங்கள்.
• சிறிது பணத்தைக் கொடுத்து, மினி பட்ஜெட் போட்டு செலவளிக்கவும், சேமிக்கவும் கற்றுக் கொடுங்கள்.
• கூட்டாக விளையாடும் விளையாட்டு பயிற்சிக்கு அனுப்பி, கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள்.
• புத்தகம் வாசிக்கப் பழக்குங்கள்.
• சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், வளமாவும் வைத்துக் கொள்ள நண்பர்களுடன் இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்.

மாணவர்களின் வருகை சதவீதம் கணக்கிட பட்டுள்ளது. உங்களின் பணி எளிமையாக்க !!

வருகை சதவீதம்

214-100%.
213-99.5%.
212-99%.
211-98.5%.
210-98%.
209-97.6%.
208-97.%.
207-96.7%.
206-96%.
205-95.8%.

204-95.3%.
203-94.8%.
202-94.3%.
201-93.9%.
200-93.5%.
199-92.99%.
198-92.5%.
197-92%.
196-91.6%.
195-91%.
194-90.7%.
193-90%.
192-89.7%.
191-89.2%.
190-88.8%.
189-88%.
188-87.9%
187-87.3%.
186-86..9%.
185-86.5%.
184-86%.
183-85.5%.
182-85%.
181-84.5%.
180-84%.

13/4/17

ESI,P.F நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டம்:ஊழியர்கள் கடும் திருப்தி

இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட 15 சமூக பாதுகாப்பு சட்டங்களை ஒருங்கிணைத்து புதிய தொழி லாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம்,
இஎஸ்ஐ, பிஎப் நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள் ளது. இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட 15 சமூக பாதுகாப்பு சட்டங்களை ஒருங்கிணைத்து புதிய தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், பிஎப், இஎஸ்ஐ நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக மாறி மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும். இதில், குரூப்-ஏ பணியிடங்கள் மத்திய அரசு வாரியம் மூலமும், குரூப்-பி, சி, டி ஊழியர்கள் மாநில அரசு வாரியம் மூலமும் தேர்வு செய்யப்படுவர். மத்திய, மாநில அரசுகளின் கீழ் உள்ள இந்த இரு வாரியமும் தேசிய கவுன்சிலின் கீழ் இயங்கும்.
இந்தமசோதாவை நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்து சட்டமாக இயற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுகுறித்து தற்போது பொதுமக்களிடமும் கருத்துக் கேட்கப்படுகிறது. இந்நிலையில், புதிய தொழிலாளர் கொள்கை மசோதாவுக்கு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழகம் மற்றும் புதுவைக்கான வருங்கால வைப்பு நிதி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.கிருபாகரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையின் மூலம், இபிஎப், இஎஸ்ஐ நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக மாறி மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும். குறிப்பாக, சந்தாதாரர்களிடம் இருந்து பிஎப் பணம் வசூலிப்பது, அவர்களுடைய ஆவணங்களை பாதுகாத்தல், அவர்களுக்கான சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட ஆறு வகையான பணிகள் தனியார் ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் மட்டும் 2 கோடி வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர் கள் உள்ளனர். அவர்கள் செலுத்தும் பிஎப் தொகையை இந்த தனியார் ஏஜென்சிகள் வசூலித்து பராமரிக்க உள்ளன. தனியார் ஏஜென்சிகள் சந்தாதாரர்களின் பணத்தை எந்தளவுக்கு பத்திரமாக கையாளுவார்கள் என்பது கேள்விக்குறியாகிவிடும்.
உதாரணமாக, போக்குவரத்து துறை பிஎப் நிறுவனத்திடமிருந்து பிரிந்து சென்று தனது ஊழியர் களுக்கு பிஎப் தொகையை அந்த நிர்வாகமே வசூலிக்கத் தொடங்கியது. ஆனால், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை சரியாக பராமரிக்கத் தெரியாததால் தற்போது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாமல் தவித்து வருகிறது.
மேலும், வருங்கால வைப்பு நிதி மத்திய, மாநில அரசின் வாரியத்தின் கீழ் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. இதன்படி, அதிகாரி பணியிடங்கள் மத்திய அரசும், குரூப் பி, சி, டி ஊழியர் களை மாநில அரசும் நியமிக்கும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி வாரியத்துக்கு முதலமைச்சர் தலைவராக இருப்பார்.
இவ்வாறு பிரிக்கும் போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. உதாரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. தமிழகத்தில் மாநில அரசு ஊழியர் களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக வும், கேரளாவில் ஓய்வு பெறும் வயது 56 ஆகவும் உள்ளது.
எனவேமத்திய அரசின் கீழ் உள்ள எங்கள் துறை மாநில அரசின் கீழ் வரும்போது ஊழியர்கள் ஓய்வு பெறுவது, பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இப்புதிய மசோதா மூலம் வீட்டில் ஒருவரை பணியமர்த்தினால் கூட அவர்களுக்கு அந்தக் குடும்பத் தலைவர் சமூக பாதுகாப்பு நிதி செலுத்த வேண்டும்.
இவ்வாறு கிருபாகரன் கூறினார்.

டெட் தேர்வில் வினா எவ்வாறு இடம் பெறும் ?

Image may contain: 1 person

40000பி.எட் கணினி ஆசிரியர்கள் வேலையின்றி தவிக்கின்றன...

Image may contain: 2 people

எல்நினோ’ எதிரொலி காரணமாக தமிழகத்தில் வெயில் 110 டிகிரியை தொடும்

பசிபிக் கடல் பகுதியில் நிலவி வரும் வெப்பம் காரணமாக
‘எல்நினோ’ என்கிற கால நிலையில் பருவ மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கத்ரி வெயில் துவங்குவதற்கு முன்பே தமிழகத்தின் பல பாகங்களில் 100 டிகிரி வெப்பம் விளாசுகிறது. இதனால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வறண்ட வானிலை காரணமாக மேகங்கள் இன்றி சூரியனின் ஒளிக்கதிர் நேரடியாக பூமியின் மீது விழுவதாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் அளவு அதிகரித்து அதிகபட்சமாக 109 டிகிரியை எட்டியது.
நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் நிலவியது. வேலூர், திருத்தணி, சேலம், பாளையங் கோட்டை, மதுரை, தர்மபுரி மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் நிலவியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 99 டிகிரி வெயில் நிலவியது. ஆனால், சராசரியாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் 106 முதல் 109 டிகிரி அளவுக்கு வெயில் மாறி மாறி தகித்து வருகிறது. இந்நிலையில், அது மேலும் அதிகரித்து 110 டிகிரியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் அட்டை பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் : கோடை விடுமுறையில் கல்வித்துறை ஏற்பாடு

ஆதார் அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரல்
மற்றும் மே மாதங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்ககத்தின்கீழ் 2016-17ம் கல்வியாண்டில் உயர், மேல்நிலை பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்கும் பணியை 100 சதவீதம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை பதிவு செய்யப்படாத மாணவர்களுக்காக 2017 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வட்ட அளவில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுசார்பாக தாலுகா அளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் அந்தந்த தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த விபரத்தை தெரிவித்து ஆதார் அட்டை பதிவு முகாமை பயன்படுத்திக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும்.

100 சதவீத ஆதார் பதிவை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 1-ஆம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம்: 5 நகரங்களில் அமலாகிறது

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலை நிர்ணயம்
செய்யும் நடைமுறை வரும் மே மாதம் 1-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இந்த புதிய நடைமுறை 5 நகரங்களில் முதல்கட்டமாக அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) தலைவர் பி. அசோக், தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது:
நாட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில், 95 சதவீத விற்பனை நிலையங்கள், அதாவது சுமார் 58 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மத்திய அரசுக்குச் சொந்தமான ஐஓசி, பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவைகளுக்குச் சொந்தமானவை ஆகும். தேர்வு செய்யப்பட்ட 5 முக்கிய நகரங்களில் மட்டும் வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல், நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறையை மேற்கண்ட நிறுவனங்கள் அமல்படுத்தவுள்ளன. இதையடுத்து, நாடு முழுமைக்கும் படிப்படியாக இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும்.
முதலில், புதுச்சேரி, ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ராஜஸ்தானின் உதய்ப்பூர், ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர், சண்டீகர் ஆகிய 5 நகரங்களில் நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது. நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயிப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமானதுதான். ஆனால், அதை முதலில் பரிசோதனை ரீதியில் செயல்படுத்த வேண்டியுள்ளது. பரிசோதனை முறையில், இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டதும், அப்போது அதன் தாக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
பிறகு, இந்த நடைமுறை நாடு முழுமைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் விரிவுபடுத்தும். பரிசோதனை முயற்சி, ஒரு மாதத்தில் தொடங்கி வைக்கப்படும் என்று பி.அசோக் கூறினார். ஆனால், பரிசோதனை முயற்சி எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது குறித்து பி.அசோக் தெரிவிக்கவில்லை. ஆனால், எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறியபோது, வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தன. இந்தியாவில் முன்பு பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசிடமே இருந்தது.
இந்நிலையில், பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனத்திடம் மத்திய அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு ஜுன் மாதம் அளித்தது. இதேபோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்படைத்தது. அதன்படி, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, இந்தியாவில் மாதந்தோறும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஆனால், விலையை மாற்றியமைப்பதற்கு முன்பு மத்திய அரசிடம் எண்ணெய் நிறுவனங்கள் கலந்தாலோசனை நடத்த வேண்டும்.

இந்நிலையில், நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தால், சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலவரப்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையே பெட்ரோல்-டீசல் விலையில் சில காசுகள் ரீதியிலேயே வித்தியாசம் காணப்படுகிறது. நாள்தோறும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டால், இனி அதிக அளவுக்கு பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இருக்காது. சில காசுகள் மட்டுமே ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். வாகன ஓட்டிகள் மத்தியிலும் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது.

SBI வங்கியில் இந்த சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் குறைந்தபட்ச வைப்பு தொகை தேவையில்லை.!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அன்மையில் வெளியிட்ட அறிக்கையில் பின் வரும் சில சேமிப்புக் கணக்குகளுக்கு எல்லாம்
குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்று அறிவித்து இருக்கின்றது.

என்னடா இது எல்லாம் எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு 5000 ரூபாய் எனக் கூறுகின்றார்கள் இவன் என்ன இல்லை என்று கூறுகின்றான் என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கின்றது.

ஆம், எஸ்பிஐ வங்கியில் சிறு சேமிப்பு வங்கி கணக்கு, அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள், ஜன தண் கணக்குகள் உள்ளிட்ட சேமிப்பு வங்கி கணக்குகளுக்குக் குறைந்த பட்ச இருப்புத் தொகை தேவையில்லை.

இந்தஅறிவிப்பு எஸ்பிஐ வங்கியின் டிவிட் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்மையில் எஸ்பிஐ வங்கி ஐந்து துணை வங்கிகளுடன் இணைந்துள்ளது. எஸ்பிஐ வங்கி சாதாரணச் சேமிப்புக் கணக்குகள் மட்டும் இல்லாமல் கார்ப்ரேட் சம்பள கணக்குகளும் உள்ளன.

எஸ்பிஐ வங்கி ஏப்ரல் 1 முதல் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டும் என்று அறிவித்த போது அனைவரும் பயந்தனர். அந்தக் குறைந்தபட்ச இருப்புத் தொகை 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை இருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் மாதம் 20 ரூபாய் முதல் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத எஸ்பிஐ வங்கி கணக்குகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

சிறுசேமிப்பு வங்கி கணக்கு (Small savings bank account) சிறு சேமிப்பு வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரம் அதிகபட்சம் 50,000 ரூபாய் மட்டுமே சேமிப்புக் கணக்கில் வைத்து இருக்க முடிடும். வாடிக்கையாளர்களுக்கு எந்த ஆண்டுக் கட்டணமும் இல்லாமல் ஏடிஎம் கார்டு இலவசமாக வழங்கப்படும்.

அடிப்படை சேமிப்பு கணக்கு (Basic savings account) எஸ்பிஐ வங்கியின் அடிப்படை சேமிப்பு கணக்கிற்கு எந்தக் குறைந்தபட்ச வரம்பு மற்றும் அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. இந்தச் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கியில் பிற சேமிப்புக் கணக்குகள் துவங்க முடியாது. ஒரு வேலை எஸ்பிஐ வங்கியில் பிற சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் 30 நாட்களுக்குள் அந்தக் கணக்கை மூடிவிட வேண்டும்.

பெருநிறுவன சம்பளம் வங்கி கணக்கு (Corporate salary package) எஸ்பிஐ வங்கியில் பெருநிறுவன சம்பளம் வங்கி கணக்குகளும் உள்ளன, இந்த வங்கி கணக்குத் திட்டத்தைப் பயன்படுத்திச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு இலவசமாக இணையதள வங்கி சேவை கணக்கு, மொபைல் வங்கி சேவை கணக்கு, செக் புக் உள்ளிட்ட பிற நன்மைகள் அளிக்கப்படும். இந்த வங்கி கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் இன்றைய தேதியில் சேமிப்பு வங்கி கணக்குகள் திறப்பதற்கு, சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க வேண்டும். ஏன், அரசாங்கத்துக்குச் சொந்தமான வங்கிகளில் கூட இது தான் விதிமுறையாக உள்ளது. அதுவே தனியார் துறை வங்கிகள் அனைத்தும் குறைந்தபட்ச இருப்பு தொகையைக் கூடுதலாக நிர்ணயித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கை திறந்தால், குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்கத் தேவையில்லை