யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/5/17

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிலை பற்றி தொடக்க கல்வித்துறையின் பணிவிதிகளில் திருத்தத்தினை செய்ய அரசுக்கு உத்தரவு..*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*

28.04.2017 அன்று பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவிஉயர்வு தடையாணை பெற்றதை ஊடகத்தில் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வெளியிட்டு 02.05.2017 அன்று பள்ளிக்கல்வி அமைச்சர்
தலைமையிலான ஆசிரியர் பிரதிநிதிகள் கூட்டத்தில் அனைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.*_

✍ *பின் 05.05.2017 அன்று அத்தடையாணை மற்றும் AFFIDAVIT இரண்டினை பெற்று தொடக்ககல்வி இணை இயக்குனர் , பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோரிடம் வழங்கி தடையாணை நீக்க நடவடிக்கை எடுக்க  செய்தோம்.*

✍ _*தொடக்க கல்வி இணைஇயக்குனர் அவர்களும்  17.05.2017 அன்று வழக்குரிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு  தடையாணை நீக்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டது என்றும் நீதிமன்றத்தில் தடையாணை ரத்து செய்யப்பட்டுவிடும் என நமது மாநில பொறுப்பாளர்களிடம் 15.05.2017 அன்று கூறினார்.*_

✍ _*16.05.2016 அன்று நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு ஆனந்த கணேஷ் அவர்கள் தொடக்க கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து வழக்கின் நிலை பற்றி தெரிவித்த போதும் இயக்குனர் அவர்கள் அரசு தரப்பில் தடையாணை விலக்க பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 17.05.2017 அன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது தடையாணை விலக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.*_

✍  *18.06.2017 இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசின் பதில்மனு ஏற்று உயர்நீதிமன்ற கிளை கீழ்கண்ட உத்தரவினை பிறப்பித்துள்ளார்.*

1. மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் ஒன்றியம் தவிர மற்ற இடங்களில் கலந்தாய்வுக்கு நடைபெற தடையில்லை.

2. திருப்பரங்குன்ற ஆசிரியர் தொடத்துள்ள இந்த வழக்கு தனிவழக்காக தொடர்ந்து நடக்கும்.

3. பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணி நிலை பற்றி தொடக்க கல்வித்துறையின் பணிவிதிகளில்  திருத்தத்தினை செய்ய அரசுக்கு உத்தரவு..

*தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி, பாதுகாப்பில் என்றென்றும் முனைந்து செயல்படும் இயக்கம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.*

தொடர் முயற்சி செய்த மாநில தலைவர் திரு. ஆனந்தகணேஷ்.
மாநில பொதுச்செயலாளர்
முனைவர். பேட்ரிக் ரெய்மாண்ட்.
மாநில பொருளாளர்.
திரு.செல்லையா

அனைவருக்கும்


பாராட்டுக்கள்.

FLASH NEWS:தொடக்கக் கல்வி துறை நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டிருந்த தடையை நீங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தொடக்கக் கல்வி துறையின் சார்பில் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் தடையை நீக்கியது.

அனைத்து சங்கங்களும் தடையை நீக்கக்கோரி வைத்த கோரிக்கையினை

தொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில்
தடையை நீக்கக்கோரி வழக்கு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டு

தடையை விலக்கியது.

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரம் கீழ்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும்  காலிப்பணியிடங்களின்
விவரங்களை http://www.deetn.com என்ற  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது

TET - சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை | RTI

TET - அனைத்துவகை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் - NCTED | RTI

அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டம் - 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்க 26.05.2017 கால அவகாசம் நீட்டிப்பு.

மாணவர்கள் குறைந்தாலும் பள்ளிக்கு 3 ஆண்டு 'கிரேஸ்'

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3
ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.
ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் ஆசிரியர்களுக்கு அழைப்பு - ஆசிரியர் அதிருப்தி

தொடக்க கல்வி மாணவருக்கான நோட்டு, புத்தகம் பெற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர் சாக்கு பைகளுடன் 'நோடல்'
அலுவலகம் வரவேண்டும்,' என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டு முதல் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்குவதில் ஆசிரியர்களை அலைக்கழிக்காமல் நேரடியாக பள்ளிகளுக்கே வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன்படி தற்போது சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் கல்வித்துறை சார்பில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மதுரையில் 15 ஒன்றியங்களுக்கு உட்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோட்டுக்களும் வந்து இறங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வைக்க போதிய இடவசதி இல்லாததால் பல உதவி பெறும் பள்ளிகளில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது 'நோடல்' மையங்களில் இருந்து சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்கள் கையிலும் புத்தகம், நோட்டு இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 'புத்தகங்கள் எடுத்து செல்ல தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட ஏ.இ.ஓ., அலுவலக 'நோடல்' மையங்களுக்கு மறக்காமல் சாக்கு பைகளுடன் வர வேண்டும்,' என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தொடக்க கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் 15 ஏ.இ.ஓ., அலுவலகங்களுக்கும் தனித்தனியே 'நோடல்' மையங்கள் உள்ளன. ஏ.இ.ஓ.,க்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்கள் இங்கு தான் உள்ளன. ஓரிரு நாங்களில் இவை பள்ளிகளுக்கே கொண்டு செல்லப்படும். ஒரு பள்ளிக்கு எத்தனை நோட்டு, புத்தகம் தேவை குறித்து அலுவலகம் வந்து தலைமையாசிரியர் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வரும்போது சாக்கு பைகளுடன் வந்து தேவையான புத்தகம், நோட்டுக்களை பெற்று பள்ளி முகவரியை எழுதி வைத்தால் அந்தந்த பள்ளிகளுக்கே கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

ஆசிரியர் அதிருப்தி
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: புத்தகம், நோட்டுக்களை சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களே ஆட்டோ அல்லது வேன் மூலம் பள்ளிகளுக்கு எடுத்து சென்றனர். ஆனால் இந்தாண்டு முதல் கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்கின்றனர்.


ஆனால் உதவிபெறும் பள்ளிகளில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சிலர் 'ஆப் தி ரெக்கார்டு' என கூறி ஆசிரியர்களையே புத்தகம், நோட்டுக்களை எடுத்து செல்ல வற்புறுத்துகின்றனர் அல்லது அதற்காகும் செலவை பள்ளி நிர்வாகங்கள் தலையில் கட்ட பேசி வருகின்றனர். எனவே இப்பணிகளை கலெக்டர் வீரராகவராவ் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்," என்றனர்.

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்....ஆனால்..ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது..மேலும்தெரிந்து கொள்ள .....

தெரிந்து கொள்ள .....

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க
வேண்டும்..ஆனால்..ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது...

மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார்...ஆனால் அது தேவையில்லை...1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ...தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால்....சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்..

அவர்உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார்...எ.கா. 005/w/ 33657778 என்ற எண்ணை சொல்லவும்..

பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார் ..அதையும் தெரிவிக்க வேண்டும்... நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்...

இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம்..அல்லது நம்பரை மாற்றலாம் ...அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்..

இதற்காக வேகாத வெயிலில் மண்டல அலுவலகம் சென்று நிற்க வேண்டாம்....இதை தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்..

இதேபோல, ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் அட்டை மட்டும்தான் பதிவு செய்திருப்பீர்கள்.....ஆனால் போட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள்....அதனால் உங்களுக்கு ஸ்மார் கார்டு வராது..

போட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ....அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே அப்லோடு செய்ய முடியும்...அதன் பிறகுதான் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வார்கள்...

தெரியாதவர்களுக்கு இந்த மெசேஜை பகிரவும்...

புதிதாகவும் ஸ்மார்ட் கார்டு ஆன் லைனில் அப்ளை செய்ய முடியும்...நன்றி


சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்...99419 61802

வங்கியை போல் ஒரே படிவத்தில் பி.எப்., பணத்தை எடுக்கலாம்

வங்கிகளைப் போல், ஒரே படிவத்தை பூர்த்தி செய்து, பி.எப்., சந்தாதாரர்கள்
பணத்தை எடுத்துக் கொள்ள, புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை மண்டல மத்திய, பி.எப்., கூடுதல் கமிஷனர் வர்கீஸ் கூறியதாவது:
வருங்கால வைப்பு நிதி எனும், பி.எப்., திட்டத்தில், நாடு முழுவதும், 17 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். முன்பணம், திரும்பப் பெறுதல், பென்ஷன் என மூன்று பிரிவுகளில், சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். முன், பலவகை படிவங்கள் நடைமுறையில் இருந்தன. தற்போது, ஒரே படிவத்தில் மேற்குறிப்பிட்ட, மூன்று பிரிவுகளிலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பி.எப்., அலுவலக உதவி மையத்தில், படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

தங்களின் வங்கி பாஸ்புக் முன்பக்க நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை சமர்ப்பிக்க வேண்டும். இந்த மூன்று பிரிவுகளில், எந்த பிரிவுக்கு பணம் கேட்டு விண்ணப்பித்துள்ளனரோ, 20 நாட்களில், அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். சந்தாதாரர்கள், சிரமமின்றி தங்களின் பணத்தை எடுத்துக் கொள்ள உதவுவதே, இத்திட்டத்தின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

தடை நீக்கி நீதிமன்றம் உத்தரவு : தொடக்க கல்வி கவுன்சலிங் திட்டமிட்டபடி நடக்கும் : கல்வித்துறை அறிவிப்பு

அரசுதொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு
பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது.

இந்தகவுன்சலிங்கில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வு தொடர்பாக சில ஆசிரியர் சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 6 வாரத்துக்கு தடை ஆணை பெற்றனர்.

இந்ததடையை நீக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை முறையீடு செய்தது. மேலும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உயர் நீதி மன்றம் தடை ஆணையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 30 மற்றும் 31ம் தேதிகளில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங் திட்டமிட்டபடி நடக்கும் என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இன்று 10ம் வகுப்பு தேர்வு 'ரிசல்ட்' : பள்ளி அளவிலும் 'ரேங்க்' கிடையாது

தமிழகத்தில், 10.38 லட்சம் பேர் பங்கேற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. மதிப்பெண் பட்டியல், மாணவர்களின் மொபைல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., ஆக வரும். பத்தாம் வகுப்பு 
மாணவர்களுக்கு, மார்ச்சில் நடந்த பொதுத் தேர்வில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவுகள், இன்று காலை, 10:00 மணிக்கு, வெளியாகின்றன. தேர்வு முடிவு களை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in போன்ற இணையதளங்களில், பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை குறிப்பிட்டு, தெரிந்து கொள்ளலாம்.
முடிவுகள் வெளியான சில நிமிடங்களில், மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரம், எஸ்.எம்.எஸ்., ஆக வரும். மாவட்ட கலெக்டர் அலுவலக, தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும், தேர்வு முடிவுகளை கட்டணமின்றி பார்க்கலாம். இன்றைய தேர்வு முடிவில், மாநில, மாவட்ட, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படாது. அதேபோல், பள்ளிகளும், மாணவர்களுக்கு, 'ரேங்க்' போடக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
'104'ல் சிறப்பு ஆலோசனை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாவதால், '104' மருத்துவ சேவை மையத்தில், மாணவர், பெற்றோருக்கு சிறப்பு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. இதையொட்டி, '௧௦௪' மருத்துவ தகவல் மையத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, சிறப்பு மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதாலும், தோல்வி காரணமாகவும், மன அழுத்தத்தால், தவறான முடிவுகளை, மாணவர்கள் எடுத்து விடுகின்றனர். இதை தவிக்கவே, '௧௦௪' சேவை மையத்தில், சிறப்பு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரும் ஆலோசனை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
25ல் மதிப்பெண் சான்றிதழ் : பத்தாம் வகுப்பு தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தேர்வுத்துறையின், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், வரும், 25ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். பள்ளிகளிலும், அன்றே சான்றிதழ் கிடைக்கும். தேர்வு முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதோர், மறுகூட்டல் தேவைப்பட்டால், இன்று முதல், வரும், 22 மாலை, 5:45 மணி வரை, பள்ளிகளிலும்; தனித்தேர்வர்கள், தேர்வு மையங்களிலும்
விண்ணப்பிக்கலாம்.

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3
ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.

ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2 செல்ல முடியும்!

பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல முடியும் என தமிழக பள்ளிக் கல்வி சீரமைப்புக் குழு வல்லுநர்கள் தெரிவித்தனர். புதிய சலுகை: பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வைப் போன்று, பிளஸ் 1 வகுப்புக்கும் நிகழாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை (மே 17) அறிவித்தார்.
எனினும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்கூட, பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லலாம் என்ற முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக கல்வி சீரமைப்புக் குழுவைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர் மேலும் கூறியது: தமிழகத்தில் ஆண்டுதோறும் பிளஸ் 1 தேர்வை எழுதும் சுமார் 9 லட்சம் மாணவர்களில், 50,000 முதல் 55,000 மாணவர்கள் வரையில் தேர்ச்சி பெறாத நிலை உள்ளது.
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். கல்லூரியைப் போன்று... பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் அனுமதிக்கப்பட்டாலும்கூட, கல்லூரிகளைப் போன்று தேர்ச்சி அடையாத பாடங்களுக்கு ஜூன், செப்டம்பர் மாதங்களில் தேர்வு எழுதுவது அவசியமாகும்.
அக மதிப்பீட்டு மதிப்பெண்: தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வில் வேதியியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்து பிரதான பாடங்களுக்கும் 10 சதவீத அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளன. இந்த மதிப்பெண்கள் செய்முறைப் பயிற்சி உள்ள பாடங்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் மாணவர்கள் பாடங்கள் குறித்த கூடுதல் திறனறிவைப் பெறுவதுடன், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறையும்.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள... ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எழுதும் நிலையில், பிளஸ் 1 பாடத் திட்டங்களின் அடிப்படையில்தான் அவற்றில் பெரும்பாலான கேள்விகள் அமைவதை கடந்த சில ஆண்டுகளாக கல்வியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில் மாணவர்களைத் தயார்படுத்தவும், பி.இ. படிப்புகளில் சேரும் நிலையில் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் இருப்பதைத் தவிர்க்கவுமே பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி-தமிழில் 69 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
வெளியிடப்படப்பட்டன; 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி

96.2% மாணவிகள் தேர்ச்சி

92.5% மாணவர்கள் தேர்ச்சி


*கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 0.8 சதவீதம் அதிகரிப்பு*


ரேங்க் முறை இல்லாமல் முதன்முறையாக முடிவுகள் வெளியீடு   


13, 500 பேர் கணக்கில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்   


10th Result -2017 :விருதுநகர் மாவட்டம் முதலிடம்
விருதுநகர் மாவட்டம் 98.55% பெற்று முதலிடம் பெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் இரண்டாவது இடம்

கடலூர் மாவட்டம் 84% பெற்று கடைசி இடம் பெற்றது.


தமிழில் 69 பேர்நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்     

18/5/17

10ம் வகுப்பு தேர்வில் 'ரேங்க்' அறிவிக்க தடை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நாளை மறுநாள் வெளியாகும் நிலையில், 'ரேங்க் அறிவிக்க கூடாது' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, 'ரேங்க்' முறை, இந்த ஆண்டு அதிரடியாக ஒழிக்கப்பட்டது. இதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர், செயலர் மற்றும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன. தனியார் பள்ளிகளும், தங்கள் பள்ளிகளின், 'டாப்பர்ஸ்' பட்டியலை வெளியிடவில்லை.

இந்நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை, நாளை மறுநாள் வெளியிடுகிறது. இதிலும், மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பட்டியல் முறை கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பள்ளிகள், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற மாணவர்களை, 'டாப்பர்ஸ்' ஆக அறிவிக்க, முடிவு செய்துள்ளன. இதற்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது. மெட்ரிக் பள்ளி இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கையில், 'எந்த தனியார் பள்ளியும், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறும், தங்கள் மாணவர்களுக்கு, முதல் மூன்று, 'ரேங்க்' வைத்து, அவர்களின் பட்டியலை பிரபலப்படுத்தக் கூடாது; அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு திடீர் உத்தரவு சித்தா, ஆயுர்வேத படிப்புக்கும் அடுத்த ஆண்டு நீட் கட்டாயம்

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இயற்ைக மருத்துவ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று ஆயுஸ் எனப்படும் மத்திய ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தாண்டு சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் ஆயுஸ் நடத்தும் பட்டப்படிப்புகள் சேர்க்கப்படவில்லை. மருத்துவக் கல்வியின் தரத்தை கருத்தில் கொண்டு ஆயுஸ் வழங்கும் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் ஏற்கனவே உள்ள இன சுழற்சியின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். எனினும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் இந்த ஆண்டு ஆயுஸ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அந்தந்த மாநில அரசே பொது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தலாம்.

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையிலேயே ஆயுஸ் வழங்கும் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் மாணவர்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த மாதம் 26ம் தேதியே அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாளையங்கோட்டை, சென்னையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த சித்தா, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் கூட்டம் சென்னையில் 22ம் தேதி நடக்கிறது. அந்த கூட்டத்தில் இந்த உத்தரவு குறித்து விவாதிக்கப்படுகிறது.

பொறியியல் கல்லூரிகளுக்கும் 'நீட்' : மத்திய அரசு ஆலோசனை

மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' கொண்டு வரப்பட்டதைபோல், பொறியியல் கல்லுாரிகளுக்கும் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, 'நீட்' எனப்படும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு இந்த நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது நாடு முழுவதும், 3,300க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு ஆண்டும், 16 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 

நீட் பாணியில், பொறியியல் கல்லுாரிகளுக்கும், பொது நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துஉள்ளது. இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மூன்றாண்டுகளை நிறைவு செய்வது குறித்து, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

நீட் தேர்வு என்பது, நுழைவுத் தேர்வை வெற்றிகரமாக நடத்தி, அதன் முடிவுகளை வெளியிடுவதுடன் முடிவடையாது. கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மாணவர்களின் திறமை வெல்கிறதா, பணம் வெல்கிறதா என்பதை, இந்த நுழைவுத் தேர்வு முடிவு செய்யும்.இதுபோலவே, பொறியியல் கல்லுாரிகளிலும், திறமையுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், பொது நுழைவுத் தேர்வு கொண்டு வர, ஏற்கனவே கொள்கை அளவில் தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும், மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கை முடிவடையும் வரை காத்திருக்க உள்ளோம். வரும், ஜூலைக்கு பிறகு, பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.