அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 3 நிறங்களில் சீருடைகள் அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 635 தனியார் மெட்ரிக். பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.இதற்கான சான்றிதழ்களை வழங்கி, செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் மூன்று நிறங்களில் சீருடைகள் வழங்கப்படும். இதனால், அரசு, தனியார் பள்ளி மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்காது.
எந்தவித அழுத்தமும் இன்றி தேர்வுகள்: 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் முடிவு மாணவர்களுக்கு கடினமாக இருக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. எந்தவித அழுத்தமும் இன்றி தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,
11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அரியர்ஸ் முறையில் 12-ஆம் வகுப்பில் தேர்வு எழுதலாம்.
ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி மையங்கள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வு எழுத பயிற்சி வழங்குவதற்காக மாவட்டங்கள்தோறும் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். ஆறாம் வகுப்பு முதல் கணினி வழியாக பாடங்கள் போதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
"நீட்' தேர்வை தமிழகத்துக்குக் கொண்டு வரக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு நடத்தும் பல்வேறு தேர்வுகளைச் சந்திப்பதற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வி வல்லுநர்களைக் கொண்டு வாரத்தில் மூன்று நாள்கள் பயிற்சி வழங்கப்படும்.
கல்வித் துறையில் விரைவில் மாற்றம்: ஆசிரியர் பற்றாக்குறை என்பது இல்லை. தென் மாவட்டங்களில் கூடுதலாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதுகுறித்து பட்டியல் தயாரிக்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து உயர்நிலைக் குழு கலந்து ஆலோசித்து, இன்னும் இரண்டு தினங்களில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா, மின் துறை அமைச்சர் பி.தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.